ZingTruyen.Xyz

கல்யாணம் டூ காதல்

7 விசித்திர நடவடிக்கை

NiranjanaNepol

7 விசித்திர நடவடிக்கை


மித்ராவையும் நேத்ராவையும் கூட உட்கார வச்சிக்கிட்டு, அவங்களைப் பத்திக் கேட்டு தெரிஞ்சுக்கிட்டா ஹாசினி. அவ போட்டிருந்த நகையை எல்லாம் தொட்டுப் பார்த்துக்கிட்டே அவகிட்ட பேசிகிட்டு இருந்தாங்க குழந்தைங்க. என்ன இருந்தாலும் கேர்ள்ஸ் தானே...!


திடீர்னு எங்க வீடு சூடேறிப் போச்சு. யூனிஃபார்ம் போட்ட சில லேடிஸ், பெரிய வெள்ளி தட்டை, கோல்டன் ஆர்கண்டி கிளாத்துல மூடி கொண்டு வந்தாங்க. அதுல ஏகப்பட்ட கிஃப்ட் இருந்தது. அது சேதுபதி குடும்பத்துல இருந்து வந்தது. அது அவங்க குடும்ப வழக்கமாம்.


யூனிஃபார்ம் போட்ட பொம்பளைங்க, மித்ரா, நேத்ரா கூட உட்கார்ந்து இருந்த ஹாசினியைப் பார்த்தாங்க. எல்லாரும் வரிசையா அவகிட்ட வந்து நின்னு லேசா முட்டியை மடக்கி, தலை குனிஞ்சி நின்னாங்க. லேசா தலையசைச்சி அவங்க மரியாதையை ஏத்துக்கிட்டா ஹாசினி.


அப்போ, எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்ச என் தங்கச்சி நந்தினியைப் பார்த்து எல்லாரும் திகைச்சிப் போய் நின்னாங்க. ஹாசினி போட்டிருந்த அதே டிரஸ், அதே நகை, எல்லாத்தையும் அவளும் போட்டிருந்தா. ஹாசினியோட முகம் மாறினதை நான் கவனிச்சேன். ஆனா அது நிச்சயமா பொறாமை இல்ல, வேற என்னவோ. ஹாசினி வேணும்னே தன்னை இறுக்கமா காட்டிக்கிறதா எனக்கு ஏன் தோணுது?


என் தங்கைக்கு அவங்க மாமியார் வீட்ல கிடைச்ச மரியாதையைப் பார்த்து என் குடும்பம் சந்தோஷ கடல்ல மிதந்துது. முக்கியமா என் அப்பா. சேதுபதி குடும்பம் அவங்க பொண்ணை மாதிரியே என் தங்கையையும் நடத்துவாங்கன்னு யாரும் எதிர்பார்க்கல. எல்லாரும் நந்தினியைக் கட்டிப்பிடிச்சு உணர்ச்சிவசப்பட்டு வரவேற்றாங்க, என்னமோ அவ எங்ககிட்ட இருந்து பிரிஞ்சு போய் பல வருஷம் ஆன மாதிரி... அதையெல்லாம், பேர் சொல்ல முடியாத ஒரு முகபாவத்தோட பார்த்துக்கிட்டிருந்தா ஹாசினி.


எல்லாம் முடிஞ்ச பிறகு ஹாசினி கிட்ட வந்தா நந்தினி. மென்மையா அவளை அணைச்சுக்கிட்டா ஹாசினி. எல்லாரோட பார்வையும் அவங்க மேல தான் இருந்தது. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும், என் தங்கச்சியை விட ஒருத்தி அழகுன்னு நான் ஏத்துக்கிட்டதே இல்ல. ஆனா இப்போ, ஹாசினி போட்டிருந்த அதே டிரஸ்ஸை என் தங்கச்சியும் போட்டிருந்தா. ஆனாலும் அவ ஹாசினிக்கு ஈடாகல. உண்மையை மறுக்க முடியாதே...


என்னை பார்த்து சிரிச்ச என் தங்கை,


"எப்படி இருக்க, அண்ணா?" ன்னு கேட்டா.


நல்லா இருக்கேன்னு தானே சொல்ல முடியும்? அதைத் தான் சொன்னேன்.ஹாசினியைப் பார்த்த நந்தினி,


"சூர்யா உங்க நம்பருக்கு ட்ரை பண்ணாரு. ஆனா உங்க ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது." ன்னு சொன்னா.


"நான் அவன்கிட்ட அப்புறம் பேசுறேன்." னு சொன்னா ஹாசினி.


ஸ்விட்ச் ஆஃப் பண்ணி இருக்காளா? ஏன்? அவ அப்பா அம்மா கிட்டயும் அண்ணன் கிட்டயும் பேச அவ விரும்பலையா? கட்டாயப்படுத்தி இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சதுக்காக அவங்க மேல அவ கோவமா இருக்கா போலருக்குன்னு நினைச்சேன்.


"நீங்க இங்க கம்ஃபர்டபிலா இருக்கீங்கல்ல?" ன்னு நந்தினி கேட்டா.

ஆமாம்னு சிரிச்சிட்டு,

"நீ எங்க அம்மாவை மாதிரி இருக்கிறதா சூர்யா சொன்னான். அவன் சொன்னது சரி தான். நீ எங்க அம்மா மாதிரி தான் இருக்க" ன்னு சொன்னது எனக்கு குழப்பத்தைத் தந்தது. என் தங்கச்சி அவங்க அம்மாவை மாதிரியா இருக்கா? சுத்தமா இல்ல. காதலுக்குக் கண்ணில்லன்னு சொல்லுவாங்களே, ஒருவேளை அந்த மாதிரி சூர்யா சொல்லி இருப்பானோ? ஆனா ஹாசினியும் அதையே தானே சொல்றா? அவளுக்குக் கூடவா வித்தியாசம் தெரியல? இந்த அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் கண்ணு தெரியலையோ?


"இப்போ நீங்க பேலஸ்க்குப் போறீங்க தானே?" ன்னு நந்தினி கேட்டதை அவசரமா மறுத்து,


"இல்ல, நான் அங்க போகல. மினி பேலசுக்குத் தான் போகப் போறேன்" னு சொன்னா ஹாசினி.


நந்தினி எதையோ யோசிச்சுகிட்டே நின்னா.


அப்போ தன்னோட ரூம்ல இருந்து வந்த அகிலா, நந்தினியைப் பார்த்து, ஓடி வந்து, அவளைக் கட்டிப்பிடிச்சி,


" ஐ மிஸ் யூ" ன்னு சொல்லி, அவ கன்னத்துல முத்தம் கொடுத்தா.

' அவ அவங்க வீட்டுக்குப் போய் ஒரு நாள் தான் ஆச்சு. அதுக்குள்ள நீ மிஸ் பண்றியா?" ன்னு அவளைக் கிண்டல் பண்ணான் சீலன்.

" உன் மனசைத் தொட்டு சொல்லு, நீ அவளை மிஸ் பண்ணலையா? " அவனைத் திருப்பி கேட்டா அகிலா.

"என்னால என் மனசைத் தொட்டு சொல்ல முடியாது. அதை நம்ம நந்தினி கொண்டு போயிட்டா." ன்னு தன் நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு உணர்ச்சிவசப்பட்டு சொன்னான் சீலன்.

சிரிச்சுக்கிட்டே அவனை ஒரு அடி போட்டா நந்தினி.

"நம்ம நந்தினி ரொம்ப அழகா இருக்கா இல்ல?" ன்னு அகிலா சொல்ல,

"அழகா தான் இருக்கா. ஆனா ஒரிஜினல் அளவுக்கு இல்ல" ன்னு, ஹாசினியைப் பார்த்தபடி சொன்னான் மாலன்.

"அஃப்கோர்ஸ் நான் ஒரிஜினல் இல்ல. இளவரசிக்கு யாரு ஈடாக முடியும்?" ன்னு உண்மையைச் சொன்னா நந்தினி .

அப்போ அங்க வந்த எங்க அம்மா நந்தினியோட கழுத்தைப் பார்த்து அவ நெக்லெஸை தூக்கி,

"எங்கடி உன் தாலி?" ன்னு பதட்டமா கேட்டாங்க.

"அதைப் போட்டிருந்தா இந்த டிரஸுக்கு சூட்டாகாதுன்னு ஆன்ட்டி தாம்மா கழட்டச் சொன்னாங்க." ன்னு சொன்னா நந்தினி.

எல்லாரோட பார்வையும் ஹாசினியோட கழுத்தைப் பார்த்தது, அவ தாலி போட்டிருக்காளா இல்லையான்னு பார்க்க. என்னையும் சேர்த்து தான். அவ அதை போட்டுக்கிட்டு இருந்தா. எனக்கு என்னமோ அது சூட் ஆகாத மாதிரி தோணல. அது அவளுக்கு அழகாக இருந்தது.

எங்க அம்மா ஒரு பழமைவாதி. இருந்தாலும் அவங்க ஒன்னும் சொல்லல. ஏன்னா அதைக் கழட்டச் சொன்னது நந்தினியோட மாமியார்.

அப்போ நந்தினியோட ஃபோன் ரிங் ஆச்சு. அந்த ஃபோனை பார்த்தா நந்தினி.

"வாவ்... புது ஐஃபோனா?" அகிலா சந்தோஷமா கேட்டா.

"ஆமாம். லேட்டஸ்ட் மாடல். ஆன்ட்டி கிஃப்டா கொடுத்தாங்க" ன்னு சொல்லிக்கிட்டு அந்தக் காலை அட்டென்ட் பண்ணா.

"ஹாய் சூர்யா... ஆமாம். இங்க தான் இருக்காங்க"

தன்னோட ஃபோனை ஹாசினி கிட்ட கொடுத்தா நந்தினி.

"சூர்யா உங்க கிட்ட பேசணுமாம். "

ஒரு நிமிஷம் திகைச்சி, அவகிட்ட இருந்து ஃபோனை வாங்கினா ஹாசினி. அவ பேசிக்கிட்டு இருந்தப்போ, அவளோட கண்ணு என் கசின்ஸ் மேல தான் இருந்தது. அவங்க ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணிக்கிட்டே இருந்தாங்க.

"சொல்லு சூர்யா... இல்ல... அப்படி ஒன்னும் இல்ல... நான் வரல... மினி பேலஸ்க்குப் போறேன்... உன்னை இன்னொரு நாள் மீட் பண்றேன்" சொல்லிட்டு, காலை கட் பண்ணிட்டு ஃபோனை நந்தினி கிட்ட கொடுத்தா.எனக்குப் புரிஞ்சு போச்சு. அவ அவங்க வீட்டுக்குப் போகப் போறதில்ல.கொஞ்ச நேரத்துல ஃபோனோட எங்க அப்பா அவர் ரூம்ல இருந்து வந்தாரு.

"கௌதம், சேதுபதி சார் ஃபோன் பண்ணாரு. ஹாசினியை அவங்க வீட்ல விட்டுடு. அவங்க காத்திருக்காங்க." ன்னு சொன்னாரு.

ஹாசினி முகத்தில எரிச்சல் தெரிஞ்சதை நான் கவனிச்சேன். இதை தவிர்க்க முடியாதுன்னு புரிஞ்சுகிட்ட அவ, எழுந்து நின்னு,

"வாங்க போகலாம்னு சொன்னா.

"ஒரு நிமிஷம் மா," எங்க அப்பா அவளைத் தடுத்தாரு.

"சகுந்தலா, மணி கிட்ட சொல்லி நம்ம வாங்கி வச்சிருக்கிற கிஃப்ட்டை கார்ல வைக்க சொல்லு." ன்னு சொன்னாரு.

அம்மா சரின்னு சொல்லி, கிஃப்ட் எல்லாம் கொண்டு போய் காரில் வைக்க சொன்னாங்க. ஹாசினியை அவங்க வீட்ல விட்டுட்டு வரச் சொன்னாங்க. அம்மாகிட்ட பை சொன்னதுக்குப் பிறகு, என் கசின்சைப் பார்த்து லேசா கையச்சா ஹாசினி. நாங்க கிளம்பினோம்.

சேதுபதி பேலசை நோக்கி நான் காரை ஓட்டினேன். முதன்முறை நான் அவங்க பேலசுக்குப் போறேன். ஹாசினி அமைதியா வெளிய பாத்துக்கிட்டு வந்தா.

"உன்னை கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணி வச்சதுக்காக நீ உங்க அப்பா அம்மா மேல கோவமா இருக்கேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. அதனால தான நீ அங்க போக மாட்டேங்குற? "

"உங்க அப்பா அம்மா மேல நீங்க கோவமா இல்லயா?" ன்னு அவ கேட்டா.

நானும் இந்தக் கல்யாணத்துக்குக் கட்டாயம் தானே படுத்தப்பட்டேன்!

"நான் அவங்க மேல கோவமா இல்ல. ஏன்னா ஐ லவ் மை ஃபேமிலி... "

"ஓ... தியாகமா?" ன்னு அவ கேட்டது சரியான நையாண்டி.

"என் குடும்பத்துக்காக நான் தியாகம் பண்ணதுல என்ன தப்பு? நமக்குப் பிடிச்சவங்களுக்காக தியாகம் பண்ணும் போது கிடைக்கிற சந்தோஷம் என்னன்னு உனக்குத் தெரியாது. " ன்னு சொன்னேன்.

"எத்தனை தடவை உங்க சந்தோஷத்தை நீங்க மத்தவங்களுக்காக தியாகம் பண்ணி இருக்கீங்க?" அவளோட கேள்வி அம்பு மாதிரி வந்தது.அவ எந்த அர்த்தத்துல அதை கேட்டான்னு எனக்குப் புரியல.

"மத்தவங்களுக்காக நீ எத்தனை தடவை உன் சந்தோஷத்தைத் தியாகம் பண்ணி இருக்க?" ன்னு கேட்டேன்.

அவ அதுக்குப் பதில் சொல்லல.

"என் தங்கச்சியோட சந்தோஷத்துக்காக இந்தக் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன்" ன்னு ரோட்டை பார்த்து வண்டி ஓட்டிகிட்டே சொன்னேன்.

"உங்க தங்கச்சியோட சந்தோஷத்துக்காக மட்டும் தானா?" ன்னு அவ என்னைப் பார்த்து கேட்டா.

அவ என்ன சொல்ல வரான்னு எனக்குப் புரிஞ்சிது. நான் எங்க பிசினஸை காப்பாத்திக்கவும் தானே அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்?

"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு அவ்வளவு பிரச்சனை இருந்தா நீ ஏன் இந்தக் கல்யாணத்தை நிறுத்தல?"

"அதே கேள்வியை நானும் கேட்கலாம் தானே?"

"நீ கேட்ட, உன்னை மாதிரி இல்லாம, நானும் பதில் சொல்லிட்டேன்..."

" ஆமாம். நீங்க பதில் சொன்னீங்க. ஏன்னா அது உங்க ஃபேமிலி, அண்ட் பிசினஸ் பத்தினது. "

"உன்னோட காரணம் எதைப் பத்தினது?"

அவள் பதில் சொல்லல.

"ஆமாம். எங்களுக்கு உங்க ஃபேமிலிகிட்ட இருந்து பிசினஸ் பெனிஃபிட் கிடைக்குது. என் இடத்துல யார் இருந்தாலும் அதைத் தான் செய்வாங்க. நானும் அதுக்கு விதிவிலக்கு இல்ல. நான் எங்க அம்மா அப்பாவையும் தங்கச்சியையும் ரொம்ப நேசிக்கிறேன்."

"நானும் என் அண்ணனை நேசிக்கிறேன்." ன்னு சொன்ன அவ வார்த்தையைப் புரிஞ்சுகிட்டு நான் அவளைப் பார்த்தேன். அவ அவங்க அண்ணனை மட்டும் தான் நேசிக்கிறா. அவங்க அப்பா அம்மாவை நேசிக்கல. ஆனா ஏன்? சூர்யா நந்தினியைக் காதலிச்சதால தான் அவளை இந்தக் கல்யாணத்துக்குக் கட்டாயப்படுத்தி இருக்காங்க. அப்படி இருக்கும்போது, அவளுக்கு சூர்யா மேல தானே நியாயமா கோபம் வரணும்? ஏன் வரல? அது தான் எனக்குப் புரியல.

அதுக்குப் பிறகு நாங்க பேசிக்கல. அவ கையில இருந்த பிரேஸ்லெட்டை அவ ரொம்ப நேரமா உருட்டிக்கிட்டே, என்னமோ யோசிச்சுகிட்டே இருந்தா. அது என்னன்னு எனக்குத் தெரியல. நான் கேட்டாலும் அவ சொல்ல மாட்டான்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் என்னால சும்மா இருக்க முடியல. ஏன்னா, அவளைப் பார்க்கும் போதெல்லாம் என் மனசுல ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. என்னை அவாய்ட் பண்ண அவளுக்கு ஒரு அழுத்தமான காரணம் இருக்கணும்னு தோணுச்சு.

நாங்க அவங்களோட பேலஸ்ஸை நெருங்கிக்கிட்டிருந்தோம்.

"நான் சொல்றதை நீ எப்படி எடுத்துக்குவேன்னு எனக்குத் தெரியல. நீ என்கிட்ட என்ன வேணாலும் கேட்கலாம். உனக்குத் தேவைப்பட்டா, நான் உதவ ரெடியா இருக்கேன். அது என்னவா இருந்தாலும் சரி... நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கிறதுக்காக இல்ல... ஏதோ சொல்லணும்னு தோணுச்சு. "

அவ கண்ணுல ஒரு பிரகாசத்தைப் பார்த்தேன்.

நாங்க அவங்க அரண்மனையைப் போய் சேர்ந்தோம். எங்க காரைப் பார்த்ததும் வாசல்ல இருந்த செக்யூரிட்டி சல்யூட் பண்ணாரு. அந்தப் பிரம்மாண்டமான அரண்மனை வாசலுக்கு முன்னால என் காரை நிறுத்தி, மரியாதை நிமித்தமா நானும் கீழே இறங்கினேன். எனக்கு அதிர்ச்சி கொடுக்கிற விதமா என்கிட்ட வந்த ஹாசினி, என் ஷோல்டரை ஜென்டிலா பிடிச்சி என்னை அவ பக்கம் திருப்பினா. நான் அவளோட கையையும் அவர் முகத்தையும் ஒன்னும் புரியாம பார்த்தேன். பேலஸ் என்னோட முதுகுக்கு பின்னால இருந்தது.

"நிஜமா தான் சொல்றீங்களா? உங்க கிட்ட இருந்து எனக்கு எந்த உதவி வேணாலும் கிடைக்குமா?" ன்னு கேட்டா.

அவளை அவ்வளவு க்ளோசா பார்த்ததுல, என் வாயில இருந்து வார்த்தையே வரல. அவ மேல வீசின வாசனை, என்னை மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி தலையசைக்க வச்சது.

"கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னைக் கூட்டிக்கிட்டு போக நீங்க வருவீங்களா? இல்ல, நானே வந்துடவா?" அழகா சிரிச்சபடி கேட்டா.

கண்ணை இமைக்காம நான் அவளையே பார்த்துகிட்டு இருந்தேன்.

"நம்ம வாழ்க்கையைத் தொடங்க, சாயங்காலம் மினி பேலஸ் போகலாம் ரெடியா இருங்க." என் ஷோல்டரை, தூசி தட்டுற மாதிரி, லேசா தட்டிவிட்டா.

நான் குழப்பத்தோட அவளைப் பாத்துக்கிட்டு இருந்தேன். அவ யாரையோ கூப்பிட்டா.

"ஃபிலோமினா..."

பேலஸ்குள்ள இருந்து ஒரு பொண்ணு ஓடி வந்தா.

"கார்ல இருக்கிற பேக்சையெல்லாம் எடுத்துக்கிட்டு போ," ன்னு ஆர்டர் பண்ணா.

"எஸ் யுவர் ஹைனஸ்..."ன்னு சொல்லிட்டு, ஹாசினி சொன்னதைச் செஞ்சா ஃபிலோமினா.

"லெட்ஸ் கோ..." ன்னு என்னை பார்த்து சொன்னா ஹாசினி.

"நா... னா?" நான் தடுமாறினேன்.

"யா... நீங்க தான்..."

என் கையைப் பிடிச்சுகிட்டு உள்ள நடந்தா. அந்த பேலஸ்க்குள்ள நான் போறது அது தான் ஃபர்ஸ்ட் டைம். அதோட பிரம்மாண்டத்தை வார்த்தையால அவ்வளவு சீக்கிரம் விளக்கிடவே முடியாது. அங்க இருந்த ஒவ்வொரு பொருளும் அவங்களோட வளத்தை சொல்லிக்கிட்டு இருந்துச்சு. ஆனா நான் அதையெல்லாம் பார்க்கிற நிலைமையில இல்ல. என் கண்ணு, என்னை உள்ள இழுத்துக்கிட்டு போய்கிட்டு இருந்த, 'நீங்க நீங்களா இருங்க, என்னை நானா இருக்க விடுங்க" ன்னு சொன்ன, என்னால புரிஞ்சுக்க முடியாததை செஞ்சுகிட்டு இருந்த என் வைஃப் மேல தான் இருந்தது. நான் ரொம்ப புத்திசாலி, அதனால ஒரு பெண்ணைப் புரிஞ்சிகிறது எனக்குக் கஷ்டமா இருக்காதுன்னு எங்க அம்மா சொன்னாங்க. என் ஒய்ஃபோட விசித்திரமான நடவடிக்கையைப் புரிஞ்சுக்க முடியாம நான் திணறிக்கிட்டு இருந்தேன். அது புதிரா இருந்தது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz