உறவு 9
அன்று காலை...
கனி உங்கிட்ட ஒன்னு பேசனும்.. என்றாள் தயக்கமாக..
என்ன சொல்லுங்க துளசி.. என்றாள் இழித்துக் கொண்டு
தயவுசெஞ்சு வாங்க போங்கனு பேசாதடி.. என்னமோ மாறி இருக்கு ன சோகமாக சொல்ல
சாரிங்க.. துளசி..
அந்த உரிமைய நீங்க எப்பவோ இழந்துட்டிங்க.. சரி சொல்லுங்க எனக்கு மார்னிங் டெஸ்ட் இருக்கு.. உங்கள மாறி நான் என்ன பெஸ்ட் ஸ்டூடன்டா.. ரீடெஸ்ட் இல்லாம பாஸ் பண்ண..
நான் தான் உனக்கு எப்பவும்போல சொல்லித் தரேன்னு சொன்னேன்ல.. ஆனா
நீ எங்கிட்ட பேசக்கூட மாட்டிங்கற..
சரி நைன்னைன்னு பேசாம மேட்டர சொல்லுங்க.. லேட் ஆகுது..என்றாள் கடுப்பாக
அவள் பேச ஆரம்பிக்குமுன்பே " கனிமொழி உன்னைப் பார்க்க விசிட்டர்ஸ் வந்திருக்காங்க.. " என்று ஒரு பெண் வந்து கூறினாள்..
' ஐஐஐ.. மாமா வந்திருக்கும்.. இந்த துளசி மாடு கூட என் பொறந்த நாள மறந்திடுச்சு.. ஆனா என் மாமா எப்பவும் மறக்காது.. இன்னைக்கு எப்படியாச்சு மேம்கிட்ட பர்மிசன் வாங்கி லீவ் போட்டறனும்.. ' என்ற எண்ணத்தில் கீழே வந்து பார்க்க,
அவள் எதிர்பார்த்ததை போலவே கதிர்தான் வந்திருந்தான்..அத்துடன் அபி அவனது அம்மா பார்வதி.
கனியின் அம்மா அப்பாவும் வந்திருந்தனர்..
கதிரிடம் சென்று " வா மாமா... எப்படி இருக்க " என்று கேட்டவள் பார்வதியிடம் " பாரூ.. என்னை பார்க்க இப்பதான் வருவியா.. எங்கிட்ட போன் கூட பேசாத அளவுக்கு பிசியாகிட்டல்ல.. " என்று அவரைக் கட்டிக் கொண்டாள்..
பெற்ற மகள் தங்களைக் காணாது வேறொருவரிடம் அங்கலாய்ப்பதைக் கண்டதும்தான் அவள் மனதை எவ்வாறு காயப்படுத்தி உள்ளோம் என்பதை நன்றாக அறிந்து கொண்டனர் கந்தனும் தேவியும்
" கனிம்மா.. "
" சொல்லு மாமா"
" அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க அவுங்க கிட்ட பேசு.. "
அவன் சொல்லிற்கிணங்க
" வாங்க அம்மா.. வாங்க அப்பா" என்று தலை குனிந்தவாறே கூற தேவி அவளை கட்டிக் கொண்டார்.
" அய்யோ. வாய் ஓயாம சண்டை போடற பொண்ண இப்படி எங்கள நேராப் பார்த்து பேசாதளவுக்கு நான் கொடுமை படுத்திட்டேனே..
கனி ஏன்டா எங்கள மன்னிக்க மாட்டியா.. நான் தான் ஆத்திரத்துல கூறுகெட்ட தனமா நடந்துகிட்டேன்.. நீயாச்சும் எப்பவும் போல எங்கள திட்டி இருக்கலாம்ல.. " என அவர் அழுக
அவரை விலக்கி விட்டவள் " ஏன் உங்க பொண்ணு இல்லைன்னு எங்கிட்ட பேச வந்திங்களா.. எப்பவும் அவதான முக்கியம்.. இன்னைக்கு என்ன புதுசா.."
" நாங்க பண்ணத உணர்ந்தி்ட்டோம்டா "
" இதே உங்க பொண்ணு உங்க கூடவே இருந்திருந்தா அப்பவும் என்னை நினைச்சு பார்த்திருப்பிங்களா. "
" கனிம்மா "
" மாமா நீ பேசாத.. அவுங்க கடைசி நாள் என்ன பேசுனாங்கன்னு உனக்கு தெரியாது.. நான் பொறக்காம இருந்திருந்தா சந்தோசமா இருந்திருப்பாங்கலாம்.. நான் அவுங்கள பொறுத்தவரை வேண்டாத ஜென்மமாம்.. "
" இல்ல கனி நான் அந்த அர்த்தத்துல சொல்லல.. அவளுக்கு உண்மை தெரிஞ்சிருச்சுனு ஆத்திரத்துல திட்டிட்டேன்டி.. எனக்கு நீங்க ரெண்டு பேரும் ரெண்டு கண்ணுங்கடி..
எங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணாம போனா தாயில்லாத பொண்ண கொடுமை படுத்துறவேன்னு யாராச்சும் சொல்லிருவாங்கன்னு தாண்டி உன்னை தண்டிப்போம்.. நீ என்னோட இரத்தம்டி.. உன்னை நாங்க வெறுப்போமோ.. " என தேவி முகத்தை மறைத்துக் கொண்டு அழுக
கந்தன் " நீயும் ஐசுவும் எப்போதும் சண்டை போட்டுக் கிட்டே இருக்கனால எங்க உனக்கு உண்மை தெரிஞ்சா எப்பவாச்சும் சண்டைல சொல்லிக் காமிச்சிருவின்னு தாம்மா உங்கிட்ட அதை மறைச்சோம் " என அவரும் சொல்ல..
" சரி அதெல்லாம் போகட்டும்.. ஏன் என் பேர்ல ஒரு சொத்து கூட இல்ல.. "
கதிர் இந்த நேரத்தில் இந்தக் கேள்வி அவசியமா என்று பார்க்க ' நீ சும்மா இரு ' என பார்வையாலே அடக்கினாள்..
" இல்லம்மா யாராச்சும் "
என கந்தன் ஆரம்பிக்கும் போதே
" சும்மா நிறுத்துங்க.. உண்மையாவே இந்த பதில்ல சொல்ல உங்களுக்கு உறுத்தல்ல? ச்சை.. "
" கனிம்மா.. அவுங்க பாவம்டா. உன்னோட அருமை இப்பதான். அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு.. மன்னிச்சிருடா.. எனக்காக " என கதிர் தனது அக்கா மாமாவிற்கு துணையாக பேச
" நான் என்ன தியாகியா மாமா.. எல்லாத்தையும் மன்னிக்க.. நான் பண்றதுதான் தப்பு. நான் மட்டும்தான் தப்பு பண்ணுவேன்னு என்னை மட்டுமே குறை சொன்னாங்களே.. ஒரு தடவ அவள திட்டிருக்காங்களா.. அவள என்னைக்காச்சும் அடிச்சிருக்காங்களா..எத்தனை நாள் எனக்குனு யாருமே இல்லைன்னு அழுதிருக்கேன் தெரியுமா.. எப்ப பாரு எல்லாம் பொண்ணு பொறந்த நேரம்னு அவளையே தலைல தூக்கி வெச்சு ஆடுனிங்க. கோயில்ல.. எங்காச்சும் விசேசத்துக்கு போனா கூட, அவதான் மகாலட்சுமின்னு நண்டு சிண்டுல இருந்து பல்லு போன கிழவி வரை சொல்லித் தந்தீங்க.. என்னை எப்பவாச்சும் அப்படி சொல்லிற்கிங்கிளா?
" என ஆத்திரத்தில் அவள் உரைக்க
அவள் சொல்வது மேலோட்டமாக பார்த்தால் குழந்தைத்தனமாக இருந்தாலும் அது அவளது நீண்ட நாள் ஆதங்கம் என்று அனைவருக்கும் தெரிந்தது..
இரு குழந்தைகள் இருக்கும் இடத்தில் ஒருவரை மட்டுமே உயர்த்திப் பேச அது மற்றொருவரை எவ்விதம் தாக்கும் என்பதை இன்று உணர்ந்துகொண்டனர்..
அனைவரும் அமைதியாக இருக்க
" அப்போ நீ தப்பே பண்ணிலயா.. நீதானடா அவகிட்ட பர்ஸ்ட் வம்புக்கு போவ " என்று கதிர் கேட்கவும்
' இப்ப இதை சொல்லிதான் ஆகனுமா ' என்பது போல் முரைத்தவள் " சரி இப்ப என்ன பண்ணனும்.. இவங்கள மன்னிக்கனுமா " என்றாள் கேள்வியாக, அவன் ஆமாம் என்று தலையாட்ட
" சரி.. மன்னிக்கிறேன்.. ஆனா " என அவள் இழுக்கவும்
" ஆனா " என அனைவரும் கோரசாக கேட்க,
" எல்லாரும் எனக்குதான் சப்போர்ட் எப்பவும் பண்ணனும்.. அவளப் பத்தி யாரும் உயர்வா எங்கிட்ட பேசக் கூடாது..நான் என்ன கேட்டாலும் உடனே சமச்சு தரனும்.. சரியா " என வில்லத்தனமாக தேவியைப் பார்த்து கேட்க,😀
அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.. அவள் இவ்வளவு நாள் போட்ட சண்டையெல்லாம் பொறாமையால் போடவில்லை.. மாறாக தனது உரிமையை நிலைநாட்டிக் கொள்ளத் தான் முயன்றிருக்கிறாள்.. இவர்கள் இவளிடமும் பாசத்தைக் காட்டியிருந்தால் மற்ற சகோதரிகளைப் போல கனியும் ஐசுவும் ஒற்றுமையாக இருந்திருப்பார்கள்.. குடும்பம் சிதைந்திருக்காது என்பதை இப்போது உணர்ந்து என்ன பலன் ?
அவரவர்கள் தங்கள் யோசனையில் இருக்க,
" எல்லாரும் சமாதனமாகிட்டிங்கனா கேக் கட் பண்ணிரலாம் " என்றவாரே துளசி கையில் கேக்குடன் சில விடுதி தோழிகளையும் அழைத்து வந்தாள்.
" அப்போ என் பர்த்டேவ மறக்கலியா நீ " என கனி சிரித்துக் கொண்டே கேட்கவும்
" எங்கள போன் பண்ணி வரச் சொல்லி நேரடியா அபிய விட்டு கூட்டிட்டு வரச் சொன்னதும் இந்த மேடம் தான் " என பார்வதி கூறினார் தனது மகன் அபியை பார்த்தவாறு..அவர் முகத்தில் எதையோ சாதித்துக் கொள்ளப் போகும் மகிழ்ச்சி தெரிந்தது..
ஆனால் கனியோ
" நீ எதுக்கு வர சொல்லி இருப்பன்னு எனக்கு நல்லா தெரியும்டி.. ஆனா நீ நினைக்கறது கண்டிப்பா நடக்காது " என்று யாருக்கும் கேட்காதவாறு துளசியின் காதில் சொன்னவளை துளசி சோகமாக பார்க்க ,
அதைப் புரிந்து கொண்ட அபி " ஹேய் சோத்து மூட்டை.. கட் பண்ணா நாங்க பங்குக்கு வருவோம்னு யோசிக்காத. சீக்கிரம் வெட்டு.. ஐயாவுக்கு நிறைய கமிட்மென்ட் இருக்கு. " என்று விளையாட்டாக சொன்னாலும் அவன் கண்களில் வடியும் சோகம் துளசிக்கு நன்றாக தெரிந்தது..
அதைக் கண்டும் காணாமல் கனி
' இங்க எல்லாரும் என்னை ரொம்ப நல்ல பொண்ணுன்னு இப்ப தான் நினைக்க ஆரம்பிச்சிருக்காங்க.. அதான் உன்னை சும்மா விட்றே.. நீ எங்கிட்ட தனியா சிக்குவல்ல.. அப்போ பார்த்துகிறேன் ' என பார்வையால் உணர்த்தியவள் சந்தோசமாக கேக்கை வெட்டி எப்போதும் போல முதலில் துளசிக்கே கொடுத்தாள்..
பின்பு அவரவர்கள் வாங்கி வந்த பரிசு பொருளைக் கொடுத்தனர்.
கதிர் லேவண்டர் நிற சுடிதாரும் கொலுசும் வாங்கிக் கொடுத்தான்..
" கனிம்மா.. இந்த வருசத்துல இருந்து நீ நினைச்சதெல்லா நடக்கும்டா ..எந்த சூழ்நிலையிலும் என் கனிம்மா கூடவே நான் இருப்பேன்டா.. அதை மட்டும் மறந்திடாத சரியா " என அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.. தற்போது அவன் வாழ்வதற்கு ஒரே ஆதாரம் கனி மட்டுமே.. அவள் மட்டும் இல்லெயென்றால் இன்றுவரை உயிருடன் பிணம் போன்றுதான் வாழ்ந்திருப்பான்..
" அதே தான் உனக்கும்.. எங்கயாச்சும் என்னை மறந்தேன்னு தெரிஞ்சுது அவ்ளோதான் பாத்துக்கோ " என்று அவனை அணைத்துக் கொண்டாள்..
அவனை பார்க்கும் போதெல்லாம் அவன் குடித்துவிட்டு சுயநினைவின்றி கிடந்ததுதான் நினைவிற்கு வந்தது.. பெற்றவர்கள் கண்ணீர் சிந்திய போது கூட சாதாரணமாக எடுத்துக் கொண்டவளின் கண்களில் அதை நினைக்கும் போதே தானாக கண்ணீர் பெருகியது.. அவனும் என்ன நினைத்தானோ தெரியவில்லை அவனும் அழுதுவி்ட்டான்.
" கனிம்மா காலேஜ்க்கு டைம் ஆச்சு போய்ட்டு வா.. அதுவரைக்கும் அம்மா அப்பா எங்க வீட்ல இருக்கட்டும்.. நீயும் துளசியும் ஹாஸ்டல்ல ரெண்டு நாள் லீவ் சொல்லிட்டு வந்துடுங்க..நாம வெளில எங்காச்சும் போலாம்.. "
" இன்னைக்கு தான் எனக்கு பர்த்டே.. நாளைக்கு இல்ல.. " என முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு சொல்ல..
" ஆனா இன்னைக்கு உனக்கு டெஸ்ட் இருக்குல.. நாளைக்கு சாட்டர்டே சன்டே தான.. சோ உனக்கு காலேஜ் லீவ்ல " என்று சொன்ன அபியை கொன்றுவிடுவது போல பார்த்தாள்..
என்ன முரைக்கிற.. இந்தா என்னோட கிப்ட்.. என்று பார்சல் ஒன்றை நீட்டினான். அதைக் கோபமாக வாங்கி பிரிக்க அதில் அபி மற்றும் கனி சிறு குழந்தைகளாக, அபியின் சைக்கிளில் கனி அமர்ந்து செல்வது போல ( இரண்டு நாய்கள் அவர்களை ஏக்கமாக பார்ப்பது போல ) வரைந்திருந்தது.
" ஹேப்பி பர்த்டே குண்டுபாப்பு " என்ற அபியை " போடா லூசு அண்ணா " என்று அடிக்க ஆரம்பித்தாள்..
அவனுக்கும் அது பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்த அடி என்பதால் தடுக்காமல் வாங்கிக் கொண்டான்..
" கனி டெஸ்ட்டுக்கு டைம் ஆச்சு " என ரதி அழைக்க..
" ம்ம்.. சீக்கிரம் நான் வந்திருவேன்.. எனக்கு பிடிச்சதெல்லாம் சமச்சு வைங்க... டாடா " என்று கூறியவள் பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்..
கதிர் வாங்கிக் கொடுத்த புதுத் துணியினை உடுத்தியவள் அனைவருக்கும் காண்பித்துவிட்டு வகுப்பறைக்கு சென்று விட்டாள்.
அப்பா அம்மா அண்ணா என்று அவளை விட்டு தள்ளியிருந்த அனைவரும் இன்று அருகில் இருக்க மிகவும் சந்தோசமாக இருந்தாள்..
அவள் நீண்ட நாட்களுக்கு பிறகு உற்சாகத்துடன் காணப்பட்டது அவளுடன் பழகிய அனைவருக்கும் நன்றாக தெரிந்தது.. அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போலவோ என்னவோ ?
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz