உறவு 10
கனி எட்டு மணிக்கே கல்லூரிக்கு சென்றிட, பெரியவர்கள் கதிருடன் வீட்டிற்கு சென்றிட, துளசி மட்டும் அபியுடன் பேசிக் கொண்டிருந்தாள்..
" எப்படியோ கனிய உங்கோட பேச வெச்சுட்ட... ம்ம்.. ஆனா இப்ப அவ எங்கிட்ட தான் சரியா பேச மாட்டிங்கறா " என்று அபியிடம் புலம்பிட,
" லூசு.. அவ உன்மேல கோபமா இருந்தால் கண்டிப்பா நீ இருக்க பக்கம் கூட தலை வெச்சிருக்க மாட்டா.. அவளுக்கு உன்மேல சின்ன வருத்தம்தான்.. நான் தான் சொன்னேன்ல நீ அவகிட்ட முன்னவே இந்த உண்மைய சொல்லிருந்தா இந்த பிரச்சினையே இல்ல.. " என அபியும் சளித்தவாறே பதிலளித்தான்..
" லூசாடா நீ.. நானே போய் அவகிட்ட உங்க மாமாவ நான் 3 வருசமா லவ் பண்றேன்..அதுனால உங்க மாமா கல்யாணத்த நிறுத்துனு சொன்னா..அவ என்ன நினைப்பானு சொல்லாம விட்டுட்டேன்.. அதும் அவரு ஐசுக்காவ விரும்பும்போது நான் என்னடா பண்ண முடியும்..
நான் என்ன வேணும்னா சொல்லாம மறைச்சேன்.. உனக்கே தெரியும்ல கல்யாண நாள் நெருங்க நெருங்க எவ்வளவு துடிச்சன்னு.. அந்த கல்யாணம் மட்டும் நடந்திருந்தா என்னோட நிலை இப்போ என்னவாகிருக்கும்னு கூட எனக்கு தெரியலடா..
அந்த டைம்ல நீ கூட நான் சின்ன பொண்ணு... அவர் என்னை விட ஏழு வயசு மூத்தவர்னு அப்போ சப்போர்ட் பண்ணுனியா?. இல்லையே அவர் மனசொடஞ்சு தனியா தவிக்கறப்ப தான எனக்கு உதவி பண்ணறேனு சொன்ன .. ஆனா யார்னால அவர விரும்ப ஆரம்பிச்சேனோ அவளே எனக்கு சப்போர்ட் பண்ணலயே.. பார்த்தல்ல அவ என்னை ஜாடை மாடையா திட்டிட்டு போனத.. " என முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ள..
" சரி கடைசில அவ என்னதான் சொல்றா ? அவளுக்கு உன்னை ஏத்துக்கறதுல என்ன பிரச்சனையாம் ? " என கேள்வியாக வினவினான்...
" அதான் எனக்கு தெரியலைடா.. ஒருவேளை நான் முன்னாடியே சொல்லாதது தான் காரணமா இருக்கும்..சரி அவர்கிட்ட என்னை பத்தி பெருமையா சொல்ல சொல்லி ஒரு நாளு பக்கம் எழுதிக் கொடுத்தனே.. அதை என்ன பண்ணுன " என உற்சாகத்துடன் கேட்க,
' ஹூக்கும்.. அதை அவன் நின்னு கேட்டுட்டு தான் மறுவேளை பார்த்தான்.. உன்பேர கேட்டாலே மனுசன் வெந்தண்ணிய கால்ல கொட்டுன மாறி ஓடிறான்.. அப்படி நீ என்ன பண்ணி வெச்சியோ.. இதுல சொந்த அண்ணாவ மாமா வேலை பார்க்க வைக்க பார்க்குற.. கதிர தவிர வேற யாரா இருந்தாலும் இங்க நடக்குற சீனே வேற.. ஹும் என்ன பண்றது.. அந்த வால்டர் வெற்றிவேலுக்கு இவதான் கரெக்டா இருப்பாங்கற ஒரு காரணத்துக்காக பொறுமையா போறேன் ' என இவளை மனதிற்குள் வசைபாடியவன்
" இஇஇஇ.. அதெல்லாம் ஒரு மாதிரியா சொல்லி வெச்சிருக்கேன்.. வேனும்னா அவங்கிட்டயே கேட்டுப் பாரேன்.. உன் அருமை பெருமை எல்லாம் ஒன்னுவிடாம சொல்லுவான் " என தலையை சொறிந்தவாரே கூற
அதை நம்பியவள் " அவ்வ்... அப்படியா.. சூப்பர் சூப்பர.. இதேமாறியே இன்னும் 4 வருசம் சொல்லிட்டே இரு.. நான் படிச்சு முடிச்ச உடனே மேரேஜ் பண்ணிக்கிறேன் சரியா " என்று அவன் கண்ணம் கிள்ள
அவளை பொய்யாக முரைத்தான்..
"சரி என் பிரச்சனைய விடு உன்னோட சோன்பப்டி பத்தி சொல்லு.. நான் இங்க இருக்கனால உன் டைரிய படிக்க முடியல" என்றதும் அவன் முகம் வெக்கத்தில் சிவக்க ஆரம்பித்தது.
அவள் ஆர்வமாய் பார்க்க அவனோ
" அப்படியா.. நான் என்ன உன்னை மாறி ஓட்டவாயின்னு நினைச்சியா தங்கச்சிகிட்டவே என் லவ் மேட்டர பத்தி சொல்ல..போடி.. போய் படிக்கற வழிய பாரு. அப்படியே என் குண்டுபாப்புவையும் பாஸ் பண்ண வை " என்று சொல்லி ஓடிவிட்டான்..
அவனுடன் பேசியதில் சற்று தெளிந்தவள் நிம்மதியாக கல்லூரிக்குச் சென்றாள்..
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
அதே நேரம் ...
செல்வராஜ் பேப்பர் படித்துக் கொண்டிருக்க, சாரதா தனது நகத்தினை பாலிஸ் செய்து கொண்டிருந்தார்.. அசோக் வெளியூரில் முக்கியமான வேலை இருந்ததால் அதிகாலையிலே சென்றுவிட்டான்..
வேலைகளை முடித்துவிட்டு
ஐசு கல்லூரிக்கு கிளம்பாமல் சோபாவில் வந்து அமர்ந்தாள்.
" என்ன ஐசு.. காலேஜ் போகலயாமா.. " என்று செல்வராஜ் கேட்க,
கனி பிறந்த நாள் அன்றாவது தன்னை பார்க்காமல் சந்தோசமாக இருக்கட்டும் என நினைத்து
" ஆமா மாமா.. ரொம்ப டயர்டா இருக்கு.. அதான் லீவ் போட்டுட்டேன்.. எங்க மாமா எழிலு.. அவன காலைல இருந்தே காணோம்.. இன்னும் எழுலயா " என மாடியைப் பார்க்க
" ஆமாடி.. அவன் நைட் ரொம்ப நேரம் யார்டயோ கோபமா பேசிட்டு இருந்தான்.. லேட்டாதான் தூங்கிருப்பான் போல.. நீ போய் எழுப்பி விடு.. " என சாரதா சொன்னார்.
" சாரதா.. அவதான் டயர்டா இருக்குனு சொல்றாள. நீ போலாம்ல சும்மாதான இருக்க.. " என்று செல்வராஜ் தனது மனைவியின் சோம்பேறித் தனத்தை கடிந்துகொள்ள அவரோ அதைக் கண்டுக்காமல் தன் வேலையைத் தொடர்ந்தார்.
ஐசுவிற்கு இதெல்லாம் பழகியதால்
" நானே போறேன் மாமா " என்று ஐசுவே காபி கலந்துகொண்டு மேலே சென்றாள்.
அவன் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க டேபிளில் காபியை வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.அப்போது தான் அவன் தலையணைக்கு அருகில் கடந்த பொருட்களைப் பார்த்து அதிர்ந்து எழுந்து நின்றாள்..
அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை.. உடல்கூச அங்கிருந்து வெளியேறிவிட்டாள்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz