உறவு 8
கனிச் செல்லம்..
.
.
அம்முக்குட்டி...
.
.
என் செல்ல பப்பி..
.
.
என் வைர ரொட்டி..
.
.
என் அழகு " என்று கொஞ்சிக் கொண்டிருந்த துளசியை " போதும் உங்கிட்ட பேசி தொலையிறேன்.. தயவுசெஞ்சு கேவலமா
கெஞ்சித் தொலையாதா.. " என கேவலமாக வாந்தி எடுப்பதை போல கனி முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல.. துளசியும சிரித்துவிட்டாள்.
சரி சொல்லு.
என்ன சொல்றது.
மரியாதையா எங்கிட்ட என்ன மறைச்சேனு சொல்லு..
அது. ப்ளீஸ்டி..கொஞ்ச நாள் போன பிறகு சொல்றேனே.
இ்ப்ப சொல்ல முடியமா.. முடியாதா..
ப்ளீஸ் டி...
அப்போ நீயும் மத்தவங்க மாறி நான் ராசியில்லாதவன்னு நினைக்கிறியா..
ச்சே பைத்தியமே.. என்ன வார்த்தை சொல்ற.. நீ என் லக்கி ஏஞ்சல்டி..
அப்பரோ என்ன..உண்மைய சொல்லு.
சொன்னா கோவிக்க மாட்டில்ல..
இப்போ தொடப்பக்கட்டை பி்ய்ய போகுது.. பாரு..
இஇஇஇஇ.. அதில்லடி.. நான் சொன்னா நீ என்னை விட்டு போயருவியோனு பயமா இருக்கு.. அதான்.
அதைக் கேட்டதும் கனிக்கு அழுகை வர..
அழாதடி.. ப்ளீஷ்.
போ.. நீ என்னை புரிஞ்சிட்டது அவ்ளோதான. எங்க அம்மா அப்பாவே என்னை வேண்டான்னு ஒதுக்கிட்டப்ப நீ மட்டும்தான் அவங்களோட சண்டை போட்ட..மாமாக்கூட எப்பவாச்சும் தா ஊருக்கு வரும்.. ஆனா நீ தான எங்கூட எப்பவும் இருக்க.. அப்படி நான் உன்னை விட்டு போனா நான் அநாதை டி.. எனக்கு உன்னை விட்டு போனா எனக்கு யாருமே இல்லடி...ஆனா நீ கூட எங்கிட்ட எல்லாத்தையும் மறைக்கிறல்ல..
ஹேய் விடுடி..நான் சொல்றேன்.. இதுக்காக அழாதடி. கஷ்டமா இருக்கு.ப்ளீஷ்
இதைக் கேட்டதும் கனி கண்களைத் துடைத்துக் கொண்டு " இஇஇஇ இப்போ சொல்லு " என இளித்தாள்.
கனியிடம் அந்த இரகசியத்தைக் கூறவும் அவளிடம் வந்த முதல் வார்த்தை
"உன்னோட குரங்கு நொன்னாவுக்கு இது தெரியுமா " என்பது தான்..
அவள் ஆமென்று தலையாட்ட.. " உங்க ரெண்டு பேரையும் பாராட்டியே ஆகனும்டி.. என்ன நடிப்பு. என்ன நடிப்பு.. நான் கூட இதெல்லாம் பாசம்னு நினைச்சு ஏமாந்துட்டேன்.. "
அய்யோ கனி..
பேசாத. உங்கண்ணன் கிட்ட பேசிட்டு உன்ன வெச்சிக்கிறேன்..
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
மன்னிப்பு என்னும் மந்திரத்தை ஐசு எவ்வளவு முறை கேட்டும் கனியின் மனம் இளகவே இல்லை.. அவளுக்காக மதிப்பெண்களை அள்ளிப் போடுவது.. அவளை வகுப்பு பிரதிநிதியாக்குவது என எவ்வளவோ நல்லதை செய்து பார்த்துவிட்டாள் இருப்பினும் அவள்மேல் இருந்த கோபத்தை கனியால் விட முடியவில்லை..
ஊரார் தனது குடும்பத்தை இழிவாக பேசியது, கதிர் கண் கலங்கி நின்றது, தனது அம்மா அப்பா வீட்டை விட்டு வெளியேராமல் அவமானத்தில் துடித்தது என எதையும் அவளால் மறக்க முடியவில்லை.. இத்தனைக்கும் அவளிடம் அனுமதி வாங்கிய பின்னரே திருமணம் ஏற்பாடு செய்யப் பட்டது. அவள் நினைத்தால் தாராளமாக மனதில் நினைத்தவனையே பெற்றோர் ஆசியுடன் மணந்திருக்கலாம்.. இருப்பினும் ஊர் போற்றும் குணம் கொண்ட அவள் இந்த இழி செயலை செயலை செய்ததை யார்தான் மன்னிப்பார்கள்..
கனியின் போதாத நேரமோ என்னவோ அவள் ஐசுவினைச் சந்திக்கும் அனைத்து நேரங்களிலும் பார்ப்போர் கண்களுக்கு ( யார்ன்னு உங்களுக்கேத் தெரியும் ) கனியே வில்லியாகத் தெரிந்தாள்.. அன்றும் அதேதான் நடந்தது..
" இப்போ எதுக்கு கண்ட கருமத்த என் பேக்ல வெச்ச " என ஸ்டாப் ரூமிற்குள் தனியாக இருந்த ஐசுவின் டேபிளில் ஒரு கலர் பாக்சை வைத்தாள் கனி..
அவள் கோபத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஐசு " ஏய். அது கருமமாடி.. உனக்கு பிடிக்கும்னு நான் செஞ்ச பால்கோவாடி.. நீதான் எப்பவும் நிறைய சாப்பிடுவல்ல.. அதான் 4 லிட்டர் பால்ல சுண்டக்காச்சி கை வலிக்க செஞ்சேன்" என்றதும் அழகாக ஒற்றைப் புருவத்தைத் தூக்கி முறைக்க,
" இல்ல குண்டு மாங்கா.. " என்று ஐசு அவள் கவனத்தை எப்போதும் திருப்ப உபயோகிக்கும் வார்த்தையை சொல்லி சமாளிக்க
" என்னை அப்படி கூப்பிடாத.. நான் ஒன்னு குண்டுல்ல.. அதை எனக்கு பிடிச்சவங்க மட்டுந்தான் கூப்பிடனும்" என கத்த..
" அச்சோ.. சாரிடி..குண்டுப்பன்னி.. போதுமா "
"ஹேய்.. நீ தான் குண்டு.நானில்ல. நான் 55 கேஜி தான் தெரியுமில்ல. "
நீயிருக்க ஹைட்டுக்கு அது ரொம்ப அதிகம்னு தெரியுமில்ல என அதே குரலில் கூற
" ச்சை.. உன் தொல்ல தாங்கல.. பேசாம காலேஜ விட்டே போயிரலாம் போல தோனுது.. ப்ளீஸ் என்னை அழ வைக்காத.. நான் உனக்கு என்னடி பண்ணேன்.. அதான் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுல.. அவுங்களோட சந்தோசமா இருக்க வேண்டியது தான.. ஏன் இங்க வந்த "
" எதுக்குனு உனக்கேத் தெரியும்.. எல்லாம் பாழாப்போன மன்னிப்புன்னு ஒரு வார்த்தைக்கு தான் "
" சரி மன்னிச்சிட்டேன் .. கிளம்பு "
" உன் மனசார சொல்லு "
"ச்சே.. அது இந்த ஜென்மத்துல நடக்காது.. "
" என்ன பண்ணா என்னை மன்னிப்ப "
என்று ஐசு கேட்க,
சிறிது யோசித்து " பர்ஸ்ட் இந்த வேலைய விட்ரு.. அப்ரோ உன் ஹஸ்பண்ட டிவோர்ஸ் பண்ணிட்டு என் மாமாவ கட்டிக்கோ.. " என்றாள் புன்னகையோடு
இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த ஐசு இதைக் கேட்டதும் கனியை ஓங்கி அரைந்தாள்.. " க...னி எ.ன்.ன பே.ச்சு பே.ச.ற.. அ.வர.ப் போய் ...
நான் அசோ.க்க விரு.ம்பிக் க.ல்யா.ணம் பண்ணு.வடி.. எங்கிட்ட எப்.படி பேச உன.க்கு மன.சு வந்.துச்சு.. " எனத் திக்கித் திணறி கூறினாள்...
அவள் அடிக்கத்தான் செய்வாள் என்பதால் அதை பொருட்படுத்தாதவள் " அப்போ என்னை இனித் தொல்லை பண்ணாத. சரியா..
அதேமாறி இனி என் பேக்ல எதாச்சும் வெச்ச.. பிரின்சி்ட்ட கம்ப்ளெயின் பண்ணிருவேன் பாத்துக்க " என்று சொல்லி விட்டு வெளியேறிவிட்டாள்..
இதைக் கேட்டதும் எழிலுக்கு கொலைவெறி உண்டானது.. ஏற்கனவே ஐசு அவளிடம் தானாக சென்று பேசுவதையே வெறுத்தவன் தற்போது டிவோர்ஸ் வாங்கு என்றெல்லாம் சொன்னதும் அவள் குடும்பப் பெண்தானா என்றே எண்ணிவிட்டான்..
எழிலைப் பொறுத்தவரை கனியின் மாமா சுமார் 40 50 வயதுள்ள கிழவன். அவனை திருமணம் செய்துகொள்ள சொல்ல எப்படி மனது வந்தது.. பார்க்க ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண் போல இருக்கும் இவளுக்குள் இவ்வளவு கொடூரமான எண்ணமா.. அண்ணியைப் பார்த்தால் கல்மனம் கூட உருகுமே.. அவள் இரக்கமே இல்லாமல் இப்படி பேசுகிறாளே என எண்ணி உறைந்து விட்டான்..
" மாப்ள.. என்னடா இவ நம்ப அண்ணிய பார்த்து இப்படி சொல்லிட்டு போறா. எனக்கே இரத்தம் கொதிக்குதே.. அவள சும்மாவா விடப் போற.. " என தேவா கோபத்தில் கேட்க
சிறிது யோசித்தவன் " இவள அழ வெச்சா போதும்னு நினைச்சேன்.. இப்போ அவள காலேஜ் விட்டு ஓட வைக்கிறேன்னு மட்டும் பாரு மச்சி.." என வில்லங்கமாக சிரித்தான்.
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
காலம் யார்க்கும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தது.. ஐசுவிற்கு கதிரிடமும் தன் தாய் தந்தையரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது.. ஆனால் அவர்களை சந்திக்கவே கூடாது என்ற அசோக்கின் கண்டிப்பால் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தாள். கனியாவது உதவுவாள் என நினைத்தால் முதலுக்கே மோசமாகி விடும் போலாகிவிட்டது..
அசோக் தன்னிடம் நன்றாக நடந்து கொண்டாலும் எழிலிடம் சற்று கடுகடுப்பது நன்றாகவே தெரிந்தது.
எழிலோ அண்ணாவின் மீது உள்ள பாசத்தால் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை.
எல்லார் வாழ்வையும் புரட்டிப் போடக்கூடிய அந்தக் கொடூர நாளும் வந்தது.
அன்று காலை...............
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz