ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 7

Nivethamagathi

இரவு உணவைக் கூட தவிர்த்த அசோக் தனது அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவன் மனதில் சந்தேகப் பேய் தலையை விரித்துக் கொண்டு ஆடியது.

அவனின் எண்ண ஓட்டத்தை அறியாத ஐசு எப்பொழுதையும் விட சந்தோசமாக கையில் பாலுடன் வந்து சேர்ந்தாள்..

அவன் கைப்பிடித்து
"அசோக் .. உங்கிட்ட இன்னைக்கு முக்கியமான ஒன்னு சொல்லனும்.. எழில் இருக்கான்ல.. " என ஆரம்பித்தாள்..

அது அவனது கோபத்தை பன்மடங்காக பெருக்கியது..

அவன் எரிச்சலுடன் " எழிலுக்கு என்ன " என்றான்..

" அவங்கிட்ட நம்ம ஹெச்.ஓ.டி.. என்னை காலேஜ்ல புரோபசரா ஜாயின்ட் பண்ணிக்க சொன்னாங்களாமாடா.. எனக்கும் வீட்ல ஒரே போரடிக்குது.. நான் வேலைக்கு போகவா " என கெஞ்சலாக கேட்டாள்..

அவன் யோசிக்கிறான் என நினைத்து " இதுல யோசிக்க ஒன்னுமில்லடா..எனக்கு ஒன்னுமாகாது.. பத்திரமா எழிலோட காலைல போயிட்டு ஈவ்னிங்கும் அவனோடவே வந்திரேன்.. " என்றாள்..

' ஒஓ.. அப்போதான 24 மணி நேரமும் அவங்கோடயே இருக்க முடியும் ' என மனதில் எண்ணிக் கொண்டான்.

" உன் தங்கச்சி கூட அந்தக் காலேஜ்ல தான் சேர்த்திருக்கா.. அவள ஃபேஸ் பண்ண தைரியமிருக்கா உனக்கு.. இல்ல உங்க ஊராளுங்களுக்கு தெரிஞ்சாலும் பிரச்சனை இல்லைனு நினைக்கிறியா.. " என அவளைத் தடுக்கும் நோக்கத்தில் சொல்ல,

" இல்ல அசோக் நான் அவளுக்கு நிறைய துரோகம் பண்ணிருக்கேன்.. அதை சரி செய்யனும்னு நினைக்கிறேன்.. முக்கியமா அதுக்குத்தான் நான் அங்க போறதே.. ஜஸ்ட் ஒன் மன்த் போயி பார்க்கிறேன்.. அதுக்கப்ரோ நீ என்ன சொன்னாலும் கேட்பேன்டா.. ப்ளீஸ் " என சோகமாக சொல்ல.. மனதில் ' ச்சே.. நம்ம ஐசு தப்பானவளா இருக்க மாட்டா..எழில் தான் இவளோட இளகின மனச தப்பா புரிஞ்சிக்கிட்டான் ' என தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.. அவன் மனதில் எழிலின் மீது வெறுப்பு பரவத் துவங்கியது..

மனதில் சந்தேக விதைப் பரவத் துவங்கினால் இப்படித்தான் தன்மீது அன்பு கொண்டவர், கூடப் பிறந்தவர் என எதையும் பாராது அவர்களின் அழகான உறவையே சிதைத்துவிடும்.. அதனால்
இந்தக் குடும்பத்துக்கு என்ன ஆபத்து வருமோ....

அடுத்த நாளே மாமனார் மாமியார் ஆசியுடன் எழிலுடன் கல்லூரிக்குச் சென்றாள் ஐசு..
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
காலையில் எழுந்தவுடன் அலைபேசியையே பார்த்தவண்ணம் இருந்த துளசியை தலையில் கொட்டி எட்டி எட்டிப் பார்த்தாள்.. அவளைக் கண்டதும் போனை அனைத்தவள் பதற்றமாக அதை உள்ளே வைத்தாள்..

" ஹேய் என்னடி மறைக்கிற.. போனக் கொடு.. " அவள் போனை வாங்க முயற்சிக்க

" ஒன்னுமில்லையே..சும்மா அபிக்கிட்ட சாட் பண்ணிட்டு இருந்தேன்.. நீ பார்த்தா கோபப்படுவல்ல.. அதான் " என சமாளித்தாள்..

" நிஜமா "

நிஜமாடி.

நான் நம்பமாட்ட.. போனக் கொடு...

" என்னடி நான் உங்கிட்ட பொய் சொல்றேனு நினைக்கிறியா.. " என கோபமாக கேட்டாள்..

சண்டையை வளர்க்காமல்
" சரி நம்பறேன் " 'என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்.

அவள் இதுவரை தான் தவறு செய்தால் கூட தன்னிடம் கோபப்பட்டது இல்லை..ஆனால் இன்று அவள் தவறேதும் செய்யவில்லையே.. அவளது நடவடிக்கை கனிக்கு ஆச்சர்யமாக இருந்தது.. இன்று
அவள் பொய் சொல்கிறாள் என அப்பட்டமாகத் தெரிந்தது.. அவள் எதையோ தன்னிடமிருந்து மறைக்குமளவிற்கு வந்துவிட்டாள்.. நான் அவளுக்கு நம்பிக்கைக்குரியவள் இல்லையா.. இல்லை இவளும் தன்னை மற்றவர்கள் போல வெறுக்க ஆரம்பித்துவிட்டாளோ என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினாள்..

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

காலையில் வழக்கம் போல கதிர் அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான்..

அப்போது அபியின் கைப்பேசி ஒலித்துக் கொண்டே இருந்தது..

" அபி போன் அடிக்குது.. இன்னும் எடுக்காம என்ன பண்ற "

" டேய் மாமா நான் பாத்ரூம்ல இருக்கேன்டா. அம்மா தான் பண்ணுவாங்க. அட்டென்ட் பண்ணி பேசு.. "

அதில் அரை மென்டல் என காண்பிக்க எடுத்துக் காதில் வைத்தான்..
எடுத்தவுடன்
" அபி கனிக்கு என்மேல சந்தேகம் வந்துருச்சுடா.. எனக்கு பயமா இருக்கு.. " என்று துளசியின் குரல் கலக்கத்துடன் எதிர்புறம் கேட்க கதிருக்கு கோபம் தலைக்கேறியது..

" துளசி " எனக் கோபத்துடன் அழைக்க, அந்தப்புறம் லைன் கட்டானது..

" யாரு போன்ல " என தலையைத் துவட்டியவாரே அபி கேட்க
" நீயும் மத்தவங்க மாறி கூட இருந்தே குழி பறிக்கரல்லடா.. கனி குழந்தைடா.. அவ உங்க ரெண்டு பேரதான நம்பி இருக்கா.. எப்படிடா உங்களுக்கு துரோகம் பண்ண மனசு வந்துச்சு.. "
என பொங்கிய உணர்வுகளை அடக்கிக் கொண்டு கேட்க இருவருக்கும் வாக்குவாதம் துவங்கியது..

10 நிமிடத்திற்கு பிறகு, நிலைமை கை மீறுவதை உணர்ந்த அபி " உனக்கு உண்மைதான தெரியனும் இப்ப.. வர சன்டே எல்லாத்தையும் சொல்றேன்.. இப்ப ஆள விடு " என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.. அவன் வாயிலிருந்து கடுகளவும் உண்மை வராது என்பதை உணராத கதிர் அமைதியாக அலுவலகத்திற்கு கிளம்பி சென்றான்..

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

" துளசி நமக்கு புது மேம் வரப் போறாங்களாமே டி " என ரதி சந்தோஷமாக கூற

" ஆமான்டி எனக்கு கூடத் தெரியும்.. அவுங்க தான் நமக்கு கிளாஸ் அட்வைசர்.. ரொம்ப அழகா இருந்தாங்க.. நான் ரெக்கார்ட் நோட் சப்மிட் பண்றப்ப பார்த்தேனே.. " என ரக்ஷ்னாவும் கூற " சூப்பர்டி.. லேடிஸ் ஸ்டாப்னா நம்மளும் நம்ம பிரச்சனைய ஈசியா சொல்லலாம்ல.. " என துளசியும் சொல்ல கனி முகத்தை சுளித்தாள்.. அவள் காலையிலிருந்து யாருடனும் பேசவில்லை..

இப்ப உனக்கு என்ன பிரச்சனை.. ஏன்
மூஞ்சிய இப்படி வெச்சிருக்க.. என ரதி கேட்க

அவளை அர்த்த பார்வையுடன் பார்த்த துளசி
" ஒன்னுமில்லைடி
போரடிக்குதாமா மேடம்க்கு.. ஹாஸ்டல் விட்டா காலேஜ்.. காலேஜ் விட்டா ஹாஸ்டல் .... இந்த 4 நாளுக்கே எனக்கு நாக்குத் தள்ளுதாம்..இதுல நாலு வருசம் எப்படி ஓட்டப் போறாங்கனு ஒரே கவலை அதான். " என சமாளித்தாள்.. ஆனால் அவளின் நடவடிக்கை இன்று வழக்கத்திற்கு மாறாக இருப்பது கனிக்கு இன்னும் சந்தேகத்தைக் கிளப்பியது..

' இருடி எங்கிட்டயே கோபமா பேசுறியா..உங்கிட்ட இருந்து அந்த மேட்டர எப்படி வாங்கறேன்னு மட்டும் பாரு ' என மனதில் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள்..

இதையறியாத துளசி
தன்னுடைய சுயநலத்திற்காக அவளை வருத்துகிறோமோ என்று குற்ற உணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் சரியாக ஐஸ்வர்யா உள்ளே வந்து " குட் மார்னிங் டு ஆல்.. ஐம் ஐஸ்வர்யா.. உங்க நியூ கிளாஸ் அட்வைசர்.. சரி பர்ஸ்ட் டே கிளாஸ் ஸ்டார்ட் பண்ணல. உங்களப் பத்தி சின்னதா இன்ட்ரோ மட்டும் கொடுங்க.. " என்று புன்னகையுடன் கூற ஒவ்வொருவராக சொல்ல ஆரம்பித்தனர்.. அவள் கனியைத் தேட அவள் அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள்..

அவளைப் பார்த்ததும் துளசிக்கு ஆத்திரம் பொங்க பென்ச்சை நன்றாக கொட்டினாள்.. ஆனால் கனிக்கோ அவளைப் பார்த்ததும் தனது சந்தோசத்தைக் கெடுக்க இங்கேயும் வந்து விட்டாளே என்று கண்ணீர் தேங்கி நின்றது..

' சுத்தம். இன்னைக்கு யார் மூஞ்சில முளிச்சேனேனு கூட தெரிலயே.. காலைல துளசியோட சண்டை.. இப்ப இந்த இரத்தக்காட்டேரி... வீட்லயே நல்லா படிக்கலைன்னு மாட்டிவிடுவா..இங்க என்ன பண்ணுவாளோ.. கடவுளே.. ப்ளீஸ் எனக்கு இதுக்காகவாது நல்ல படிப்பக் கொடு.. ஐயோ மாமாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்.. இப்பதான் அவர் நல்லார்க்கார்.. இவள சீக்கரமா இந்தக் காலேஜ விட்டு வெளிய அனுப்பனும்.. '
என நினைத்துக் கொண்டாள்.. அவளுக்கு தெரியவில்லை இதை எல்லாவற்றிற்கும் தயாராகித்தான் ஐசு இங்கே வந்திருப்பது..

துளசியின் முறை வந்ததும் ஐசுவின் முகத்தைப் பார்க்காமல் வெறும் பெயரை மட்டும் கூறி அமர்ந்துவிட்டாள்.. கனிக்கு வார்த்தை வரவில்லை.. ' அவளுக்கெல்லாம்
என்னால எந்திரிச்சு மரியாதை கொடுக்க முடியாது ' என அழுத்தமாக
எழாமல் அப்படியே அமர்ந்துவிட்டாள்.. துளசி ரதியை சைகை செய்ய அடுத்து அவள் எழுந்துவிட கனியை யாரும் அவ்வளவாக யாரும் கவனிக்கவில்லை.

யார் பெயரைக் கேட்டால் நடுங்குகிறாரோ அவள்முன்னே அண்ணியை தைரியமாக நடமாட வைத்தும் அண்ணியின் முன்னால் அவளை அவமானப்படுத்தவுமே
ஐசுவின் ஹெச்.ஓ.டியிடம் கெஞ்சிக் கூத்தாடி வேலை வாங்கிக் கொடுத்தான் எழில்.. தற்போதும் அவர்கள் வகுப்பில் என்ன நடக்கிறது என்பதையும் சன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தான்..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz