ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 43

Nivethamagathi


நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

துளசியை வீட்டில் விட்டவன் அவன் கூறியவாறே பார்வதியிடம் துளசியை திருமணம் செய்து கொள்வதாக கூறினான்.. ஆனால் துளசி தன்னை காதலித்ததை அவன் சொல்லவில்லை.. தன் மகள் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்க அவன் விரும்பவில்லை..

மூவரும் ஒருவேளை அவர் இருவரின் வயதை எண்ணி தட்டிக் கழித்து விடுவாரோ என்கிற பயத்துடன் பார்வதி என்ன சொல்வார் எனப் பார்த்திருக்க, அவர் " இப்போதான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு தம்பி..உன் கல்யாணம் நின்னப்பவே உனக்கு துளசிய கட்டி வெச்சிடலாம்னு ஆசை இருந்துச்சுதான்.. ஆனா நீ என்ன சொல்வியோன்னு தான் அமைதியா இருந்திட்டேன்..அபிக்கு நல்ல இடமா அமைஞ்ச மாறி என் துளசிக்கும் இப்போ நல்ல இடம் அமைஞ்சிருச்சு " என துளசியை உச்சி முகர்ந்தவர் தனது விருப்பத்தை தெரிவித்தார்.. கதிரைப் போன்ற குணசீலனை வேண்டாமென்று சொல்ல அவருக்கு மட்டும் மனம் வருமா என்ன?

" நான் இன்னொரு முடிவெடுத்திருக்கேன்.. என் கஸ்டமர் ஒருத்தர் பாரின் போறதால அவரோட ஸ்பேர்பார்ட்ஸ் கம்பெனிய என்னைய வாங்கி ரன் பண்ண சொல்லி ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தார்.. ஒரு 20  இலட்சம் பேங்க்ல இருக்கு..மீதி பணத்தை
பேங்க்ல  லோன் போட்டு கூட ஏற்பாடு பண்ணிக்கலாம்.. கஷ்டப்பட்டு உழைச்சோம்னா இன்னும் இரண்டு மூனு வருசத்துல போட்ட அசல எடுத்தரலாம்..செல்வா சார் ( அசோக்கின் தந்தை ) கூட முன்ன இருந்தே இதப்பத்தி சொல்லிட்டுதான் இருந்தார்.. ஒருத்தவுங்க கீழ வேலை செய்றத விட நம்மளே சொந்தமா பிஸ்னஸ் பண்லாம்னு தோனுது..அதுக்குள்ள துளசியும் படிப்பு முடிச்சிடுவா.. இதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்கக்கா " என்றதும்
அபி " சூப்பர்டா..உனக்கிருக்க திறமைக்கு சீக்கிரமா பெரிய ஆளாய்டுவ.. கன்கிராட்ஸ் " என அணைத்துக் கொண்டான்..

பார்வதி " அப்போ மறுபடியும் வெளிநாட்டுக்கு போக வேணாமா தம்பி "

" இல்லக்கா..இன்னும் ஆறு மாசம் அங்கிருக்க வேலையெல்லாம் மத்தவுங்களுக்கு டிரெனியிங் கொடுத்துட்டு அதுக்கு பிறகு தான் இங்க வேலையெலாம் ஸ்டார்ட் பண்ணனும் " என்றதும்
" சந்தோசமா போய்ட்டுவாடா.. உனக்கு தேவையான லோன் மத்தவிசயம்லா நான் பார்த்துக்கறேன் " என்று அபியும் உதவி செய்வதாக கூறினான்..

அவர்கள் பேசுவதை சந்தோசமாக கேட்டுக் கொண்டிருந்த துளசிக்கு அவன் மீண்டும் ஆறு மாதம் அங்கே சென்றிடுவான் என்றதும் முகம் வாடிப் போனது..  அவள் பாவனையை கண்டுகொண்டவனும் அவளிடம் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அபியுடன் பேசிவிட்டு  வளைகாப்பு ஏற்பாட்டை கவனிக்கச் சென்றான்.

அவளது அலைபேசி அழைக்க அதை வேண்டா வெறுப்பாய் காதில் வைக்க
" ஓய் பல்லி மிட்டாய்" என்ற கதிரின் குரலில் திகைத்தவள் " நீங்க என்னையவா சொல்றீங்க"
என்க,

" பின்ன நீதான பல்லி மிட்டாய் மாறி குட்டியா இருக்க "

அவளின் பட்டப்பெயரில் முகம் சுளித்தவள் " அதென்ன எல்லோரும் எவ்ளோ அழகா பேர் வைக்கிறாங்க.. எனக்கு மட்டும்..உவ்வே..பல்லி மிட்டாய்னு பேரா..எனக்குப் பிடிக்கல..வேற வைங்க " என சினுங்க,

" .. பட் உனக்கு அந்த பேர்தான சூட்டாகுது..ம்ம்..ஒன்னு பண்லாம்..உங்கிட்ட இருக்கிற இந்த ஆறு மாசத்துல நீயும் குறைஞ்சுது 50 கேஜியாச்சும் வந்துட்டினா இந்தப பேர வேனா வாப்பஸ் வாங்கிக்கலாம்..சரியா பல்லி மிட்டாய்"

" ஆனா நான் இப்போ 42 கேஜிதான இருக்கேன்..என்னால எப்படி அவ்ளோ கேஜி வர முடியும்"

" பல்லிச் செல்லம்... நீ ஆட்டைத் தின்பியோ முட்டைய குடிப்பியோ அது உன் இஸ்டம்..நமக்கு கேஜி தான் முக்கியம்..புரியுதா பல்லி "
" ஏங்க.ஏங்க.. அட்லீஸ்ட் ஒரு 5 கிலோ குறைக்க கூடாதா"

" ரொம்ப கெஞ்சற வேனா 49.8 கேஜிய பிக்ஸ் பண்ணிக்கலாம். உனக்கு ஓகே தான பல்லி"

பற்களை நறநற என்று கடித்தவள்"ம்ச்
அந்த மிட்டயயாச்சும் சேத்து சொல்லுங்க.. வெறும் பல்லின்னு சொன்னா ரொம்ப கேவலமா இருக்கு " என கெஞ்ச

அவன் வேண்டுமென்றே "ஹலோ பல்லி..பல்லி..சரியா கேட்கலாடா பல்லி " எனக் கத்த, அந்தப்புறம் கனி " மாமா யாரு மாமா பல்லி " என வினவுவதும் தெளிவாக கேட்டது.. அவளுக்குத் தெரிந்தால் ஊருக்கே தெரிந்த மாறி ஆச்சே என வருத்தப்பட்டவள் அணைப்பைத் துண்டித்துவிட்டு கண்ணாடியின் முன் நின்றாள்.. அவன் சொன்னது போல பல்லி மாதிரித் தான் அவளுக்கேத் தோன்றியது.. எப்படியாவது குண்டாக வேண்டுமென்று முடிவெடுத்தவள் சமையலறைக்குச் சென்று தட்டில் நிறைய சாதத்தை நிரப்பியவள் சாப்பிட ஆரம்பித்தாள்..

அவள் வயிறார சாப்பிடுவதை பார்த்து ஆனந்தமடைந்த அபி கதிரிடம் மனதுக்குள் நன்றியை தெரிவித்துவிட்டு இந்த சந்தோசத்தை சோன்பப்டியிடம் தெரிவிக்க அவளுக்கு அழைத்தான்..

" என்ன மூட்டைப்பூச்சி.. ஊருக்குப் போன உடனே என்னை மறந்துட்டனு நினைச்சேன்..பரவாலையே கால்லாம் பண்ற"

" ஹேய்.. ஆசையா பேச வரும்போது கடுப்பேத்தாதடி"

" அடடே.. நீங்க ஆசையா பேசற அழகுதான் தெரியுமே.. நானும் உங்கிட்ட எத்தனை நாளா என்னை சோன்பப்டின்னு கூப்டுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ கூப்டியா "

" என்னமா பண்றது உனக்கு வேலை கெடச்சு அதுக்கு நான்தான் காரணம்னு பேட்டி குடுக்கும்போது ஆசையா கூப்டலாம்னு நினைச்சேன்.. அதான் நடக்கலையே"

" டேய்..உட்ரா..உட்ரா.. ஆவுன்னா அங்கயே வந்து நிக்கறியே.. சரி போ..நீ ஒன்னும் என்னைக் கூப்பிட வேனா போ "

"ஹேய்..என்னடி கோச்சுகிட்டயா..மாமா சும்மா கிண்டல் பண்ணேன்டி.. "

"ஐயடா.. நீ எனக்கு மாமாவா "

" அப்போ இல்லைங்கறியா"

" சரி சரி  டென்சன் ஆகாத..எதுக்கு போன் பண்ண"

" உங்கிட்ட சொல்ல வந்தேன்னு பாரு என்னை சொல்னும் " என திட்டினாலும் கதிருடனான உரையாடலை கூற,

" சூப்பர் சூப்பர்..இப்போதான்டா எனக்கும் நிம்மதியா இருக்கு..லசி பேபிக்கு இனி எந்தக் கவலையும் இல்ல.. பாவம் பாரத்தை தான் ரொம்ப அவளப் பார்த்து பயந்துட்டாங்கள்ள.. ஆனா என்ன இருந்தாலும் எங்க பார் அத்தை மாறி யாராச்சும் இருப்பாங்களா...தம்பசங்களுக்கு எது பிடிக்குமோ அதையே தராங்களே"

" ஏன் எங்க விருமாண்டி மாமாக்கு மட்டும் என்ன குறைச்சல்..அவரும் உனக்காகத் தான எல்லாமே பண்றாரு"

" சரிங்க சார்....நீங்க சொல்றதும் உண்மைதான்..தர்ஷு பெஸ்ட்னா தர்ஷுவோட அப்பாவும் பெஸ்ட் தான "

" த்து..உன்னலா வாய் இல்லைனா...நாாாா "

" போதும்..போதும் நீ என்ன சொல்ல வரன்னு தெரியுது.. எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத.."

" போடி உன்ன முழுசா திட்ட கூட விட மாட்டியா"

" ஓய்..என்ன மிரட்டல்லாம் ஓவரா இருக்கு.. நாங்கல்லாம் ஆறாங்கிளாசுலயே எங்கிட்ட வம்பு பண்ண பையன் மண்டைய ஒடைச்சவுங்க தெரியும்ல.. ஜாக்கிரதை "

" ஆஹான்..நாங்கலாம் யார் தெரியுமா "

" யாரு 😏 "

" அந்த ரவுடி பேபிய லவ் பண்ண வெச்சு  பின்னாடி சுத்தவுட்டவுங்க " எனக் கெத்தாக சொல்ல அந்தப்புறம் லைன் கட்டானது.. ' நல்லாத்தான போயிட்டு இருந்துச்சு..அடேய் அபி உன் வாய்தாண்டா உனக்கு எதிரி' என நினைத்தவன் அவளுக்கு வீடியோ கால் செய்தான்..

மூன்று முறை கட் செய்து நான்காவது முறையாக அதனை ஏற்றவளின் கண்கள் சிவந்திருந்தது..

" லூசாடி நீ.. எதுக்குடி அழுகுற "

" "

" எம்மா தர்பூசனி.. கொஞ்சம் சிரிச்சாதான் என்னவாம்..
அட அங்க லைட்டா பல்லு தெரியுது.. கொஞ்சம் சிரிச்ச மாறி தெரியுதே.. " என அவளை சிரிக்க வைக்க முயற்சிக்க

" இப்போ மட்டும் நான் நேர்ல வந்தேன்..உன் மண்டை இன்னொருக்கா உடைக்கப் போறேன் பார்த்துக்க"

" 🙄 சாரிடி.. சும்மாதான் பேசுனே..அதுக்கே கோவிச்சிட்டா எப்புடி"

" உனக்கு அது சும்மா தான்டா தெரியும்.. நீ பாட்டுக்கு என்னைய விட்டுட்டு போயிட்ட ஆனா நான் உன்னையும் இழந்துட்டு உன்னோட நட்பையும் இழந்துட்டு பட்ட கஷ்டம் எனக்குத் தான தெரியும்.. அதும் அத்தனை வருசம் கழிச்சும் நானே தான உங்கிட்ட வழிய வழிய வந்து பேசுனேன்.. அப்பவும் நீ கல்லுளி மன்னன் மாறி எங்கிட்ட எதையும் சொல்லாம தான மறைச்ச.. ஏதோ எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலனா நீ வாயத் தொறந்துருப்பியா..உன்னைலாம் அப்ப உனக்கு ஓகே சொல்லாம இழுத்தடிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்.. சும்மா சொன்னானாம்..சும்மா " எனக் கடிப்புடன் கூற, அதில் தன் தவறும் உள்ளது என்பதை உணர்ந்தவன் அவளைப் பார்க்க, அவளோ கோபத்துடன் அவனைத் தான முறைத்துக் கொண்டிருந்தாள்..

அவள் கோபப்படும் போது எப்போதும் போல
அவளது கோழி முட்டைக் கண்கள் நாட்டியமாடிட, அதில் கரைந்தவன் தன்னை மறந்து
" சோன்பப்டி " என அழைத்துவிட்டான்..

அவள் கழுத்தில் தாலி கட்டும் தருவாயில்தான் அவளை எப்போதும் போல் சோன்பப்டி என அழைக்கலாம் என்றிருந்தான்.. ஆனால் இன்று அவளது விழிகளில் தொலைந்து தன்னை மறந்து கூறியவன் அதன்பின்னரே அவளைப் பார்க்க, அவள் கண்களில் கண்ணீர் முத்து முத்தாக உதிர்ந்து கொண்டிருந்தது..

" உனக்கு இப்பதான் சொல்னும்னு தோனுச்சா..நான் இத்தனை நாள் உன் வாய்ல இருந்து இந்த வார்த்தை வராதன்னு எப்படி ஏங்கிருக்க தெரியுமா" எனத் தேம்ப,

" ஹேய் என்னடி சின்னப்புள்ள மாறி அழுதுகிட்டு.. என் முன்னாடி இப்படி அழுகாதடி.. கஷ்டமா இருக்கு "
என்றதும் தன் கண்களைத் துடைத்தவள்

" உனக்குத் தெரியுமா.. நம்ம கல்யாணம் நடக்கப் போறதுங்கறத விட நீ என்னை சோன்பப்டின்னு கூப்டது தான் ரொம்ப சந்தோசமா இருக்கு.. இப்போதான் என் மேல உயிரையே வெச்சிருக்க என்னோட உயிர் நண்பன் மூட்டைப் பூச்சி எனக்கு கிடைச்ச மாறி இருக்கு.. என்னோட ஒரே பிரண்ட் பெஸ்ட் பிரண்ட் கிடைச்சது மாறி இருக்கு.. இத்தனை நாள் உங்கிட்ட காதலன விட என் நண்பனத்தான் தேடினேன்.நீ எங்கிட்ட எப்பவுமாறி பழகுனாலும் இந்த வார்த்தை இல்லாம அதுலாம் முழுமை ஆகாத  மாறி தான் தோனும்.. நௌ ஐ யம் வெரி ஹேப்பி மூட்டைப்பூச்சி... லவ் யூ சோ மச் " என்க, அவள் பேசுவதை அழுதுகொண்டே கேட்டுக் கொண்டிருந்தவனும் முதன்முறையாக " லவ் யூ டூ சோன்பப்டி " என்றான் காதலோடு..

அவர்களது திருமணத்திற்கு பெற்றவர்கள் சரி என்றதும் படிக்க ஆரம்பித்து விட உண்மையில் இதுவரை தங்களது காதல்கதையை பேசிக் கொள்ள இயலவில்லை.. இத்தனை நாள் கழித்து அவன் சொந்த ஊருக்கு வந்த சமயம்தான் காதலைச் சொல்ல வாய்ப்புக் கிடைத்தது.

இருவரும் மோனநிலையில் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க, ' டேய்.. அபி வேலை செய்யாம எங்கடா ஒளிஞ்சிட்டுருக்க ' என்ற பாருவின் குரலில் தெளிந்தவன் அவரிடம் வருவதாக கூறிய பின்

"அங்கிருந்து எத்தனை மணிக்கு கிளம்புறீங்க..பஸ் ஏறும்போது சொல்லு.. நானே வந்து கூட்டிட்டு போறேன் .. "

" ம்ம்.. இரண்டு நாள் கழிச்சு போன போதும்னு அப்பா சொல்றாரு.. பார்க்கலாம்..எதும் மாறுதல் இருக்கானு.." என்றவளுக்கு அழைப்பைத் துண்டிக்கவோ பேச்சை வளர்க்கவோ தோன்றவில்லை.. அப்படியே அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றிருந்தது..
அவனுக்கும் அவள் காதலைச் சொல்லும் அவளது கண்களிலிருந்து பார்வையை நகர்த்த மனம் வரவில்லை..

அவர்களது மோன நிலையை கலைக்க
அபி நின்றிருந்த இடத்திற்கு காபி டம்ளர் ஒன்று  பறந்துவர, வேறு வழியில்லாமல் இருவரும் அழைப்பைத் துண்டித்தனர்.
இங்கே இவர்கள் இப்படி இருக்க கதிரும் எழிலும்தான் கனியிடம் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருந்தனர்.

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz