உறவு 44
அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது..ஐசுவின் வளைகாப்பு ஊரே மெச்சும்படி சிறப்பாக நடைபெற்றது..கந்தனும் தேவியும் வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருக்க,
கதிரும் எழிலும் பந்தி பறிமாறிக் கொண்டிருந்தனர். கனியும் அசோக்கும் ஐசுவிற்கு துணையாக இருபுறமும் நின்று அவளை சோர்வடையா வண்ணம் ஏதேனும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
கந்தனுக்கும் தேவிக்கும் தற்போதுதான் ஏதோ நிம்மதியாக இருந்தது.. கடைசிவரை தங்கள் மகளுக்கு இந்தக் கடைமையினை செய்யும் பாக்கியம் கிடைக்காமலே போய்விடுமோ என்று தவித்தவர்களுக்கு இன்று தங்கள் சொந்த ஊரிலே விழாவை நடத்துவது பேரானந்தமாக இருந்தது..
விழாவிற்கு தாமதமாக பார்வதியுடன் வந்த துளசியை கடிந்து கொண்டே கனி, வீட்டின் பின்கட்டிலுள்ள உணவு பரிமாறும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்..
அவள் திட்டுவதையும் துளசியின் பாவமான முகத்தையும் பார்த்த கதிர் அவர்களிடம் நெருங்கி கனியிடம் என்ன என்பது போல புருவத்தை உயர்த்த,
" பின்ன என்ன மாமா.. பொண்ணோட தாய்மாமாதான் முன்னாடி நின்னு எல்லாத்தையும் செய்யனும்னா அந்த தாய்மாமாவோட பொண்டாட்டியும் முன்ன வந்து நிக்கனும்தான' என்றவள் அந்த தாய்மாமன் பொண்டாட்டி என்பதை சற்று அழுத்தித்தான் சொன்னாள்.
" இப்படி மூனாவது மனுசங்க மாறி கடைசியா வந்தா எப்படி.. அவதானே உங்களுக்கு துணையா நின்னுருக்கனும்..அதான் திட்டினேன்..உங்க பல்லிய.. ஐ மீன் உங்க பொண்டாட்டிய அதான் என்னோட அத்தைய நான் திட்டலாம்தான மாமோய்" என்று அவர்கள் இருவருக்கு மட்டும் கேட்கும்வண்ணம் கேலியாக கூற,
துளசிதான் ஏக போகத்துக்கு வெட்கப்பட்டாள்..
கனியின் கேலியையும் துளசியின் வெட்கத்தையும் தனக்குள் இரசித்தவன்
கனியை முறைத்தவாறே" கனிம்மா என்ன பேச்சு இது..
யாராச்சும் கேட்டா என்ன நினைப்பாங்க " என கதிர் கடிந்து கொண்டு " போ..உன் பிரண்ட சாப்பிட வை " என தனது வேலையை கவனிக்கச் சென்றான். ஆனால் கனி அவன் சொல்வதை கேட்காமல் அவனுக்கு அழகு காண்பித்துவிட்டு துளசியை மேலும் ஒருவழி ஆக்கி விட்டே ஐசுவிடம் சென்றாள்.
துளசி சாப்பிட்டுக் கொண்டிருக்க எழில் அவளது இலையில் பதார்த்தங்கள் காலியாக காலியாக நிரப்பிக் கொண்டிருந்தான்.. அவள் கோபமாக அவனைப் பார்க்க
" ஐயோ அண்ணியாரே திட்டிராதீங்க.. நான் வெறும் அம்பு மட்டுந்தான் ..எய்தவங்க எங்க கதிரண்ணா தான்.. நீங்க திட்டறதா இருந்தாலும் அடிக்கறதா இருந்தாலும் அவர்கிட்டயே வெச்சிக்கோங்க.. என்னை விட்ருங்க " என்றவன் உள்ளே சென்று விட்டான்.
கனியும் எழிலும் தன்னை வேண்டுமென்றே அத்தை, அண்ணி என்று கேலி செய்வது தெரிந்தாலும் அது தன்னவனின் மனைவியாகப் போகிறவளின் உரிமை என்பதால் உள்ளுக்குள் மகிழ்ந்து போனாள்.. ( ஆனா பாவம் புள்ள கனி அத்தை ன்னு சொன்னதுக்கு வயசான மாறி கொஞ்சம் பீல் பண்ணாதான்.. ஏதோ அவ விளையாட்டுக்கு தான அப்படி கூப்டா. எல்லோர் முன்னாடியும் அப்படி கூப்பிட மாட்டாங்கற நம்பிக்கைல மனச தேர்த்திக்கிட்டா 🤫)
துளசி சாப்பிட்டவாரே தனக்கு எதிர்வரிசையில் பரிமாறிக் கொண்டிருந்த கதிரை ஓரக் கண்ணால் பார்க்க, அவனோ அவள் சாப்பிடுகிறாளா இல்லையா என்பதை நேரடியாகவே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னைப் பார்க்கிறான் என்பதை அறிந்ததும் வேக வேகமாய் சாப்பாட்டை அள்ளி வாயில் தினிக்க ஆரம்பித்தாள்.. அவள் செய்கையில் முகம் மலர்ந்தவன் அடுத்த இலையை கவனிக்க சென்றான்.
அந்த சமயம் தேவியின் உறவுக்கார பாட்டி அருகில் உள்ள பெண்ணிடம் " அவந்தான் இந்த ஐசுப்பிள்ளைக்கு பார்த்த மாப்பிள்ளை பையன்.. .. போயும் போயும் அவங்கக்கா வயித்துல பெக்காத தூக்கி வளர்த்த சிறுக்கி மவளத்தான் கட்டிப்பேனு நின்னான்..ஆனா இப்போ அவனைய பொறந்தள்ளிப்புட்டு சீமைக்காரன முன்னாப்புல நிக்க வெச்சிருக்காவ..அந்தச் சிறுக்கிக்காக இவன் எச்செல எடுத்துட்டு இருக்கியேன்.. அவுங்கப்பாரு எப்பேர்பட்ட ரோசக்காரரு தெரியுமா.. இவனென்னடானா இப்படி பொசக்கெட்டத்தனமா இருக்கான்.... நாமளா இருந்தா இன்னேரம் பொண்ணு பிடிக்கலைன்னு விட்டுட்டு ஓடிருந்தா நாண்டுகிட்டு செத்திருப்போம்.. இல்லையினா அவள நாக்கப் புடிக்கறமாறி கேட்டுப்புட்டு உங்க சங்காத்தமே வேணாம்னு தலை முழுகிருப்போம்.. இவன் சுத்த மலுங்கா அல்ல இருக்கான்..இப்படி இருந்தனாலதான் அவன ஐசுப்புள்ள வேணாமுன்னு சொல்லிருக்கும்னு நினைக்கேன்.. இந்தமாறி இருந்தா எவதான் இவனைய கட்டிக்க நினைப்பாங்க
"எனக் கூறிக் கொண்டிருந்தார்..
அவர்கள் பேசியதைக் கேட்க கேட்க துளசிக்கு கத்தி ஆர்பாட்டம் பண்ணுமளவுக்கு ஆத்திரம் பொங்கியது..ஆயினும் இடம் பொருள் கருதி அமைதியானவள் கதிர் இதனைக் கேட்டிருக்க கூடாது என நினைத்து அவனைத் தேட, அவனோ சரியாக அவர்களுக்குப் பின் வரிசையில்தான் நின்று கொண்டிருந்தான்.. அவனது உணர்ச்சி துடைத்த முகமே அவன் கேட்டுவிட்டான் என்பதை கூறிட அதற்கு மேல் அவளுக்கு சாப்பாடு உள்ளே இறங்க மறுத்தது.. அவள் தாமதமாக வந்ததால் கடைசி பந்தியில்தான் அமர்ந்திருந்த காரணத்தால் ஒரு பத்து பதினைந்து பேர்தான் இருந்தனர்.. அவர் மெதுவாக பேசினாலும் அங்கிருந்த அனைவருக்கும் அது காதில் விழத்தான் செய்தது.. அதனை அறியாதவர் மேலும் அவனை இழிவாக கூறிக் கொண்டே போக, இதற்கு மேல் தாக்குப் பிடிக்காதவள் எங்கு இருக்கிறோம் என்பதனையும் மறந்து
" ஏய் கிழவி..உன்னோட திருவாய கொஞ்சம் மூடறியா..நானும் அப்பத்துல இருந்து பார்த்துட்டு இருக்கேன்.. உன்னோட இஷ்டத்துக்கு பேசிட்டே போற.. ஆமா நீ சொன்ன மாறி அந்தப் புள்ளை இவர வேணாண்ணுதான் இன்னொருத்தர கல்யாணம் பண்ணிக்கிச்சு..அதுனால என்ன வந்துச்சு உனக்கு..ஏன் நீ அதுனால ரெண்டு கிலோ குறைஞ்சிட்டியா.. இல்லையே நல்லா பொறனி பேசி பேசி ஆட்டாங்கல்லு மாறி உருண்டையாத்தான இருக்க..அப்ரோ என்ன? " எனக் கத்த, பதிலுக்கு அவரும் " எனைய சொல்றக்கு நீ யாருடி " என எகிற,
" ஓஒ..உனைய சொல்லும்போது மட்டும் உனக்கு ஜிவ்வுனு ஏறுதே..அதே மாறிதான எங்களுக்கும் இருந்துருக்கும்.. ஹூம்.. அவர சாக சொன்னியே இதே அவர பேசுனதுக்கு கோபப்பட்டு ,அவர் இருக்குற சைஷுக்கு உனைய ஒரு அடி அடிச்சிருந்தா இன்னேரம் நீதான் செத்துருக்கனும்.. இனுமேயாச்சும் போற வர இடத்துல வாயக்கொடுக்காம ஒழுங்கா இரு" என விரல் நீட்டி எச்சரித்தவள்
" ஆமா அவர யார் கட்டிப்பானு கேட்டியே அந்தக் கவலைலா இனி உனக்கு வேனா.. ஏன்னா அவர கட்டிக்கப் போறது வேற யாருமில்ல நான்தான்.. சந்தோசமா உனக்கு .. வந்துட்டாங்க.. நல்ல காரியம் நடக்கும்போது ஏதாச்சும் நொட்டம் சொல்றதுக்குனே " என பல்லை கடித்தவள் " யார்டி இவ பத்தூரு வாய் பேசறா " என தனக்குள் முனகியவாறே
எழப்போக, அவரை கைப்பிடித்து அமர வைத்தவள் " இலைல இருக்குற ஒரு பருக்கைய கீழ கொட்டுனாலும் நான் கட்டிக்கப்போறவர தரக்குறைவா பேசினேன்னு உம்மேல மான நஷ்ட வழக்கு போட்ருவேன்.. அப்ரோ உன்னோட குடிகார பையன் கள்ளச் சாரயம் காச்சி சம்பாரிச்ச பணமெல்லாம் அம்பேள்.. அந்தக் கோபத்துல உன் பையனே உன்னைக் கொன்னுடுவான் " என சிரித்த முகமாகவே கூற, அதனை உண்மையென நம்பி உள்ளுக்குள் நடுங்கியவர் கருவேப்பிலையையும் விட்டு வைக்காமல் சாப்பிட்ட பின்னரே இடத்தைக் காலி செய்தார்.. அவர்கள் உரையாடலைக் கேட்டவர்கள் தங்களுக்குள் முனுமுனுத்தவாரே சென்றுவிட, இவள் அந்தக் கிழவிக்கு பதிலடி கொடுத்த தைரியத்தில் ஆர அமர சாப்பிட்ட பின்னரே எழுந்தாள்.
கைக் கழுவி வந்தவள் கதிரைத் தேட, வீட்டை ஒட்டியிருந்த தென்னந்தோப்பினுள்ளே அவன் அணிந்திருந்த இளஞ்சிவப்பு வண்ண சட்டை அவன் இருப்பைச் சொல்லிட விரைந்து அவ்விடம் சென்றாள். அவன் எதையோ பறி கொடுத்தது போல அமர்ந்திருக்க, அவளுக்குத்தான் அவனை அந்நிலையில் பார்த்ததும்' நம்ம கிட்டயும் ஆபிசலயும் மட்டுந்தான் உறும வேண்டியது..ஆனா இந்த ஊர்க்காரங்கள பார்த்தா மட்டும் வாய் பேசத் தெரியாத குழந்தை மாதிரி முகத்தை வெச்சிக்கிறது.. இவர் மட்டும் எதிர்த்து பேசிருந்தா அந்த கிழவி சும்மா சும்மா வாயக் கொடுக்குமா ' என கோபப்பட்டவள் " ஹூக்கும் " என செறும,
யாரென்று திரும்பிப் பார்த்தவன் அவள்தான் எனத் தெரிந்ததும் மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டான்.
" என்மேல கோபமா இருக்கிங்களா.. நான் அவுங்கள அப்படி பேசுனதும் அவுங்க கிட்ட நம்ம கல்யாணத்த பத்தி சொன்னதும் தப்புதான்.. ஆனா அந்தக் கிழவி வாயை அடைக்கத்தான் சொன்னேன்..எனக்கு அது தப்பா தெரில..அதுனால மன்னிப்புலாம் கேட்க தோனல..ஒரு வேளை தப்பா தெரிஞ்சா எனக்கு என்ன தண்டனை வேணா கொடுங்க " என தலைகுனிந்தவாரே கூறி முடித்தாள்.
அவன் அப்போதும் அசையாமல் இருக்க, அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவனது உயிர் கொல்லும் வேதனை அப்பட்டமாக தெரிந்தது.. அவன் அமைதியாக இருந்தது தன்மேல் உள்ள கோபத்தினால் அல்ல..மாறாக அந்த மூதாட்டி சொன்ன வாரத்தையால்தான் என்பதை உணர்ந்தவளுக்கு அவனது வலி அவளிடமும் ஒட்டிக் கொண்டது..
அவனை என்ன சொல்லி சமாதனப்படுத்துவது என்று அவளுக்கும் தெரியவில்லை..
நேரம் கடக்க கடக்க அவன் நிலையை எண்ணி பயந்தான் அதிகரித்தது..
அவன் கோபமாக இருந்தால் கூட பேசி சமாளித்துவிடலாம்.. மாறாக அவனது அமைதி அவளுக்குள் கிலியை பரப்பியது.
" வீட்டுக்கு போ துளசி " என மென்மையாக அவன் குரல் ஒலித்திட
" உங்கள விட்டுட்டு நான் மட்டும் எப்படிங்க தனியா போறது .. " என அவளும் தயங்கிட
" சொன்னா கேளுமா" என விரக்தியாக பதிலளித்தான்..
அவனது வலக்கையைப் பற்றியவள்
" எல்லாத்தையும் மனசுக்குள்ளே பூட்டி வெச்சிட்டா எப்படிங்க.. ஒன்னு வாய் விட்டு அழுகுங்க.. இல்லையா கோபமாவாது அதை வெளிப்படுத்துங்க.. இன்னும் எத்தனை வருசந்தான் எல்லாத்தையும் உள்ளுக்குள்ளே புதைச்சிட்டு வெளிய தைரியமா இருக்குற மாறி நடிப்பீங்க.. எங்கிட்ட கூட அதை சொல்ல வேணா..உங்க மனசுக்கு புடிச்ச யாராவது ஒருத்தர் கிட்டவாச்சும் அதை சேர் பண்ணிடுங்க.. உங்க மனசுல இப்போ ஐசுக்கா இல்லைங்கறது எல்லாருக்குமே தெரியும்.. உங்க அக்கா பொண்ணோட வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்னு எந்தப பிரச்சனையும் பண்ணாம ஒதுங்கி இருக்கிங்கனு நல்ல மனசு உள்ளவங்களால புரிஞ்சிக்க முடியும்..நம்மமேல அக்கறை இருக்கவுங்களுக்காக ப்பீல் பண்ணுங்க..தப்புக் கிடையாது.. ஆனா நம்மள வேணுன்னே காயப்படுத்தி அதுல சுகங்காணற மனசாட்சியே இல்லாதவங்க பேச்ச கண்டுக்காதீங்க..யார் வேனா அட்வைஸ் பண்ணலாம்..ஆனா அந்த இடத்துல நின்னு வலிய அனுபவிக்குறவுங்களுக்குத தான் அந்த வலியோட வேதனை புரியும்னு தெரியுதுங்க..இதை உங்களுக்குலாம் நான் சொல்லி புரிய வைக்க அனுபவமில்லதான்.. " என்று இதுவரை பொறுமையாக பேசிக் கொண்டிருந்தவள் " ஆனா இப்படி இடிஞ்சு போற நிலைமைல உங்கள என்னால பார்க்க முடிலைங்க.. மனசு வலிக்குது.. உங்கள எப்பவும் கம்பீரமா நின்னுதான் பார்த்து பழகிருக்கேன்.. நீங்க அன்னைக்கு மாறி குடிச்சிட்டு புத்தி சூதானம் இல்லாம இருந்த மாறியோ.. இல்ல இப்போ இருக்கிங்களே இந்த மாறியோ பார்க்குற சக்தி சத்தியமா எனக்கு இல்லைங்க ஏதோ நெஞ்ச யாரோ கசக்கி பிழியற மாதிரி வலிக்குது " என அவன் தோள் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுக ஆரம்பித்தாள்..
அங்கு அவள் தனக்காக அத்தனை பேர் முன்னிலையில் சண்டை போட்டதும் இங்கே தனக்காக ஆறுதல் சொன்னதுமே அவன் நெஞ்சை நிறைத்து, அந்த மூதாட்டியின் வார்த்தைகளை செயலிழுக்கச் செய்திருக்க, கூடுதலான இவள் அழுகையும் அவள் தோள் சாய்ந்தலும் அவனை உள்ளுக்குள் இம்சிக்க துவங்கின..
அவள் அழுகையை காண சகியாதவன்
தனது மூளையின் கட்டுப்பாட்டை மீறி அவளை நெஞ்சில் சாய்த்து ஆதரவாக அவள் தலை கோதியவாறே
" நான் சரியாகிட்டேன்மா.. அழுகாத.. இங்கப்பாரு.. என் ஜான்சி ராணி இருக்குற வரைக்கும் இனி எதுக்கும் ப்பீல் பண்ண மாட்டேன்மா போதுமா.. " எனக் கெஞ்ச அவளது அழுகை நின்று வெறும் விசும்பல் சத்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது..
" அவுங்களை விட மோசமா கூட என் கல்யாணம் நின்னப்ப பேசுனாங்கடா.. ஆனா எனக்கு அந்த வலிய விட காதல்ல தோத்ததுதான் பெரிசா தெரிஞ்சது.. ஏன்னா ஐசுவ நான் அந்த அளவுக்கு விரும்புனேன்.. எங்கக்கா அடிக்கடி சொன்னதை வெச்சு அவதான் என் மனைவியாகப் போறான்னு மனசுல கோட்டை கட்ட ஆரம்பிச்சேன்..அவ நட்பா பழகுனதக் கூட காதல்னுதான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.. ஆனா அந்தத் தப்பால என் வாழ்க்கை திசை மாறும்னு நினைச்சுக் கூட பார்க்கல..
அவ முன்னாடியே உண்மைய சொல்லியிருந்தா இத்தனை ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியிருக்க அவசியமில்லை தான்.. அந்த வகையில நான் எப்பவும் மன்னிக்க போறது இல்ல.. நான் அந்த சோகத்துல இருந்தே வெளிய வராத டைம்ல நீ உன்னோட காதல்ல சொன்ன.. எனக்கு சின்ன பொண்ணான உன்னை அடிக்கவும் மனசு வரல..ஏதோ எம்மேல பரிதாபப்பட்டு காதலிக்கறேனு உதாசீனம் கூட பண்ணியிருக்கேன்..ஆனா நீ உன்னோட காதல்ல உறுதியா இருந்து என்னை ஜெயிச்சிட்ட துளசி.. உன்னை ஏத்துக்க தடையா
உன்னோட படிப்பு.. நமக்கிருந்த வயசு வித்யாசம்.. என்னோட உறுதின்னு எல்லாத்தையுமே உன் அன்பால..என்மேல நீ வெச்சிருக்க நம்பிக்கையால உடைச்சு எறிஞ்சிட்டடா.. நான் இப்ப சொல்றேன்.. நல்லா கேட்டுக்கோ துளசி " என்றவன் அவளது முகத்தினை உயர்த்தி அழுதழுது சிவந்த அவளது கண்களைப் பார்த்தவண்ணம்
" நானும் உன்னை மனதாற காதலிக்குறேன் துளசி..என் வாழ்க்கைய உன் துணையோட சந்தோசமா வாழனும்னு ஆசைப்படறேன்.. இதெல்லாம் நீ எனக்காக சப்போர்ட் பண்ணி பேசுனதால சொல்லல.. நான் இத்தன நாள் நான் மறைச்சு வெச்சிருந்த காதல உங்கிட்ட சொல்ல வேண்டிய நேரம் அமைஞ்சதால சொல்றேன்.. லவ் யூ சோ மச் துளசி
" என்று கூறி அவள் நெற்றியில் தனது இதழைப் பதித்தான்..
அவளது
இத்தனை வருட காதல் தவத்திற்கு கிடைத்த வரம் இந்த இதழ் ஒற்றள்.. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகினாலும் அவனது நெருக்கம் அவளுக்கு சற்று நடுக்கத்தைக் கொடுத்தது..
அவள் நிலையை உணர்ந்தவன்
" சாரிடா..உணர்ச்சி வசப்பட்டு .. சாரிடா..சாரிடா " என பதறியவன் அவன் இதழ் பதித்த இடத்தை கைகளால் அழிக்க முயன்றான்.. அவனை செல்லமாக முறைத்து " சீக்கிரம் கம்பெனிய ஸ்டார்ட் பண்ணி நல்ல நிலைக்கு வந்து கல்யாணம் பண்ற வழிய பாருங்க.. " என்றவள் சிட்டாய் பறந்தாள்.
இத்தனை நாள் வாழ்வில் என்னவென்று தெரியாது இருந்த வெற்றிடமும் நிரம்பியதைப் போல உணர்ந்தவன் அவள் சென்ற திசையையே புன்னகை முகமாய் பார்த்திருந்தான்.
சிரித்த முகமாய் கனியின் வீட்டிற்குள்
நுழைந்தவளுக்கு அங்கிருந்தவர்களின் அமைதியே ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தியது.. அவள் என்னவென்று யூகிக்கும் முன்னரே பார்வதி துளசியின் கைப் பிடித்து அவள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
Ennapa story eh mudiya poguthu..aana ninga enna ninaikringanu solla matingringa.. Story epdi poguthu..ethum change pannanumanu sollunga friends.. 😔☺☺
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz