ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 42

Nivethamagathi

தங்களது சொந்த ஊருக்கு அசோக்கின் குடும்பத்தோடு வந்திறங்கினர் கந்தனும் தேவியும்..
பார்வதியும் அபி மற்றும் துளசியோடு தங்களது வீட்டிற்கு சென்றிருந்தார்.. அசோக் குடும்பத்தாரை சொந்தபந்தங்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார் கந்தன். அவர்களின் செல்வ செழிப்பே பாதி வாயினை அடைக்க, அசோக் ஐசுவை தாங்குவதைப் பார்க்கும் போது மீதி வாயும் அடைக்கப்பட்டது..  பருவநிலை மோசமானதால் கதிரால் ஒரு வாரம் கழித்தே வர முடிந்ததால் அவன் நேரடியாகவே தங்களது கிராமத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர்தான்  வந்திருந்தான்..  தற்போது அவன் வைத்திருந்த பிரன்ச் பியர்டும்  சற்று இளைத்திருந்த தேகமும் அவனது வயதைச் சற்றுக் குறைத்துத்தான் காட்டியது..

அவன் வந்தவுடன் கனியும் அவனும் நடத்திய பாசப் போராட்டத்தை கண்டு மற்றவர்கள் கண்ணிலும் கண்ணீர் சுரந்ததை சொல்லவா வேண்டும்.. அவளுக்காக பார்த்துப் பார்த்து வாங்கிய அனைத்தையும் அவளுக்கு கொடுத்தவன் அதனை மற்றவர்களிடம் கூறி பெருமை அடித்துக் கொள்ளும் அவள் சுட்டித் தனத்தையும்  இரசித்துக் கொண்டிருந்தான்..

வந்தவுடன் குடும்பத்தாரின் உபசரிப்புகளுக்கு பிறகு தானும் வேலையில் இறங்கினான்.. கனி தான் அவன் வேலை செய்வதையும் பொருட்படுத்தாமல் இத்தனை நாள் பேசாத கதைகளையும் அவனிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.. அவனும் தோரணங்கள் கட்டியபடியே அவள் கூறுவதை செவிமடுத்து கேட்டுக் கொண்டிருந்தான்..

அந்த நேரம் ஊர்க்காரர் ஒருவர் " ஏம்ப்பா கதிரு.. என்ன தான் உங்கக்கா மகளா இருந்தாலும் உன்னை பிடிக்கலைன்னு உட்டுட்டு ஓடுனவளுக்கு அவ உனக்கு பண்ண அநியாயத்தயும்  மறந்துட்டு அவ வளைகாப்புல போய் வேலைய இழுத்துப் போட்டு செய்யறியே.. உனக்கு பெரிய மனசுதாய்யா " எனக் கூறிச் சென்றார். அவர் அவனை பாராட்டினாரா இல்லை ஏளனமாக சொன்னாரோ அது அவருக்குத் தான் தெரியும்.. அவர் பேச்சைக் கேட்டவனுக்குத் தான் மனம் கனத்து விட்டது..இந்த அனுதாபப் பேச்சுக்களை கேட்டு கேட்டு மனம் நொந்துபோய் தான் ஊர்பக்கம் வராமல் இருந்தான்..ஆனால் எத்தனை நாள் அவன் ஓடி ஒழிய முடியும்..அனைத்தையும் சந்தித்துத் தானே ஆக வேண்டும்.. அவனும் முகத்தில் எந்த வேதனையும் காட்டிக் கொள்ளாமல் தன் வேலையைத் தொடர்ந்தாலும் கனி அவனது கஷ்டத்தை அறியாமல் இருப்பாளா?

அவன் மனதை திசை திருப்பும் பொருட்டு " மாமா உனக்குத் தெரியுமா.. என் பிரண்ட் இருக்காளா "

" யாரு "

" அட சோடாபுட்டி மாமா "

" சோடாபுட்டியா.. அப்படி யாரும் எனக்குத் தெரியாதே"

" ம்மாமா.. எல்லாம் உனக்கு ரொம்ப வேண்டபட்டவங்கதான்.. உன் மச்சனோட தங்கச்சிதான் " என சளித்துக் கொள்ள..

" ஹேய்..நீ துளசியவா சொல்ற.. அவ கண்ணாடி எப்போருந்து போட ஆரம்பிச்சா"

" எப்போருந்துன்னா சரியா ஒரு ஆறு மாசம் இருக்கும் அவளுக்கு பசலை  நோய் வந்துருச்சு.. சரியா சாப்பிடறதுல்ல.. யார்கிட்டயும் ஒழுங்கா பேசறதுல்ல..எப்பா பாரு படிக்கறனு புக்க எடுத்து வெச்சிட்டு தனியா உக்காந்து அழுக வேண்டியது.. அப்டியே அவ விடாம அழுததால கண்ணு வலிச்சு கண்ணாடி போட்டதுதான் மிச்சம்..ஆனா பாவம் பாரும்மா ..புள்ள கஷ்டப்பட்டு படிக்கறதால தலைவலின்னு நினைச்சு ஏமாந்துட்டாங்க.. இந்த விசயம் உங்க காதுக்கு வரக்கூடாதுன்னு அவுங்க அண்ணனயே அவ மிரட்டி வெச்சிருக்கா " என நீட்டி நெளித்து கூற, அவனோ அவள் துளசி அழுகிறாள் எனக் கூறியதுமே அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்க வெறும் சுவற்றிடம் இத்தனைக் கதையையும் கூறிக் கொண்டிருந்தாள். பின்பு எழில்தான் அவள் தலையில் கொட்டி உள்ளே அழைத்துச் சென்றான்.

அறக்கப்பறக்க அபியின் வீட்டிற்கு  ஓடி வந்தவன் பார்த்தது வாசலில் அபியும் பார்வதியும் வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருப்பதைத்தான். தன் நண்பனைக் கண்ட அபி முகமலர்ச்சியுடன் " வாடா கதிரு.. நானே ஈவ்னிங் உன்னைப் பார்க்க வரலாம்னு இருந்தேன்.. " என்றபடியே கைகளை கழுவியவன் வாசலில் அவன் அமர்வதற்கு கட்டிலை எடுத்துப் போட்டான்..

" ஏன்டா பேங்க் ஆபிசர்.. இந்த வேலையிலாம் ஆள் விட்டு செய்யக்கூடாதா.. அம்மாவையும் ஏன்டா கஷடப்படுத்தற "

" அட போடா.. எங்கம்மா தான் எனக்கு உடம்பு வளைய மாட்டிங்குதுன்னு
என்னையவே செய்ய வெக்கிறாங்க.அடுத்து எங்க வீட்லயும் விசேசம்தான அதான் இப்பவே வேலைய ஆரம்பிச்சிட்டோம்.  "

" என்ன விசேசம்டா"

" எல்லாம் என் கல்யாணந்தான் "

" அடப்பாவி..டேய்..என்னடா இப்படி பொசுக்குனு கல்யாணம்னு சொல்ற.. எப்போ.. எங்க.. எங்கிட்ட கூட சொல்லலியேடா நீயி ..ஆமா தர்ஷினி வேலை வாங்குனாதான் கல்யாணம்னு வீரவசனம்லா பேசுன.. இப்போ இப்படி சொல்ற"

" ம்ம்..என்னத்த சொல்ல.. அவுங்கப்பா ஆசைக்கு நானே படிச்சு வேலைக்குப் போயிட்டேன்.. ஆனா மேடம் படிக்கிறேன் படிக்கிறேனு ஏமாத்திட்டு இருந்துருக்குடா இத்தனை நாளும்..போனவாரந்தான் கண்டு பிடிச்சேன் அவ இத்தனை நாளும் படிக்கிறேனு புக்குள்ள  போன வெச்சிட்டு இத்தனை நாள் சீன் போட்ருக்கானு.. "

" அப்போ நீ ஒன்னும் அவள திட்லியா"

" திட்டாம இருப்பனா.. ஆனா அவளோட இன்ட்ரஸ்ட் வேற பீல்ட்ல இருக்கும் போது எதுக்கு அவளுக்கு பிடிக்காத வேலைய பார்க்கப் போகனும்னு தான் அவுங்கப்பாட்ட பேசிட்டு கல்யாணத்துக்கு நாள் குறிக்க சொல்லிட்டேன்.அடுத்த மாசந்தான் கல்யாணம்..வர வெள்ளிக்கிழமை
சின்னதா நிச்சயம் வெச்சிக்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்க.. எங்க குடும்பத்துக்கும் அவுங்க குடும்பத்துக்கும் சொல்லிக்கற அளவுக்கு அவ்ளோ சொந்தம்லா இல்ல.. அதான் கல்யாணத்த  சிம்ப்ளா நம்ப  கோவில்ல பண்ணிட்டு பிரண்ட்ஸ்க்கு மட்டும் ஹோட்டல்ல ரிசப்சன் மாறி வெச்சிக்கலாம்னு நினைச்சிருக்கோம்..
இதை நீ நேர்ல வரப்ப சொல்லலாம்னு நினைச்சுத்தான் வெயிட் பண்ணேன்.  ஆனா நீ தான் ஒரு வாரங்கழிச்சு லேட்டா வந்து நிக்கற.. " எனும் போதே பார்வதி அவர்கள் இருவருக்கும் மோர் கொண்டு வந்து கொடுத்தார்..

" அக்கா.. கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் நான் தான் தர்ஷுவோட அண்ணனா இருந்து செய்யனும்னு ஆசைப்படறேன்.. இனி எந்த வேலையா இருந்தாலும் எங்கிட்ட தயங்காம சொல்லுங்க "

அவன் கூற்றில் புன்னகைத்தவர் " கண்டிப்பா கதிரு.. உங்கிட்ட சொல்லாம யார் கிட்ட சொல்லப்போறேன்.. உன்னை இங்கப் பார்த்ததும்தான் எனக்கு ரொம்ப தைரியமா இருக்கு.. இன்னும் எத்தனை நாள்தான் வெளிநாட்ல இருந்து கஷ்டப்படுவ.. சீக்கிரம் இங்கனயே வந்துடு தம்பி.. "
என்க, அவனும் தற்போதைக்கு சரி என தலையாட்டினான்..

பார்வதி உள்ளே சென்ற பின்னர் கொஞ்சம் தயங்கியபடி
"  கதிரு.. நானே உங்கிட்ட கொஞ்சம் பேசலாம்னு இருந்தேன்.. நீ கண்டிப்பா வெளிநாடு போய் தான் ஆகனுமா.. "

" டேய் "

" நீ பேசாத.. நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்ட.. ஆனா எந்தங்கச்சி படற கஷ்டத்த என்னால பார்க்க முடிலடா.. அவ பாவம்டா.. நைட்ல உக்காந்து அழுதுகிட்டே இருக்கா..உங்கிட்டயும் இதைப் பத்தி பேச விட மாட்டிங்கறா.. போதும் நீ நல்லவனா எல்லோருக்கும் இருந்தது போதும்.. உன் லைப நீ தான்டா வாழனும்.. அடுத்தவுங்களுக்காக ஓடி ஒழியாதடா..
"

" அவ படிப்பு"

" நான் உன்னை வாயத் தொறக்க சொன்னனா.. சும்மா சும்மா படிப்பு படிப்புனு சொல்லாத.. அவ எப்படி இருந்தாலும் நல்லாதான் படிப்பா.. ஏன் அவ படிக்கலைனா நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டியா.. ரொம்ப ஓவராத்தான்டா பண்ற நீ.. அவ என்ன கலெக்டருக்கா படிக்குறா.. இன்ஜினியரிங் தானடா..அவளாம் ஒரே நைட்ல படிச்சா கூட டிஸ்டிங்சன்ல பாசாகிடுவா..ப்ளீஸ்டா.. சீக்கிரம் வந்துருடா " எனக் கெஞ்ச,
அவனுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை..

" என்னமோ போடா.. அவ பக்கத்துல இருக்க முருகன் கோவிலுக்குத் தான் போயிருக்கா.. அங்கயே போய் பாரு " என்றவன் தனது வேலையைத் தொடர, மனதில் பாராத்தோடு துளசியைக் காண கோவிலுக்குச் சென்றான்..

அங்கே துளசி தனது இஷ்டதெய்வத்திடம் வழக்கம் போல வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தாள்.. மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கும் போதே கீழே கதிர் பைக்கில் காத்திருப்பதை பார்த்துவிட்டாள்..

அவள் தயங்கியவாரே அவனிடம் வர, அவனைக் கண்டவனோ அவள் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டான்..
துளசி சாதரணமாகவே ஒல்லிதான் என்றாலும் இன்று கழுத்துக் கீழ் எலும்புகள் தெரியுமளவிற்கு நன்கு இளைத்திருந்தாள்.. கண்ணிலிருக்கும் கருவளையத்தை அவளது வட்ட வடிவ பெரிய மூக்குக் கண்ணாடியால் கூட மறைக்க முடியவில்லை..

" துளசி நீ ரொம்ப மெச்சூர்டானா பொண்ணுனுதான நான் தைரியமா கிளம்பிப் போனேன்.. ஆனா இப்படி கண்லயே பார்க்க முடியாத மாறி மாறிட்டியே " என வருத்தத்துடன் கூற,
" ஆமாங்க.. இப்பலா நான் உங்களுக்கு கண்ல பார்க்க முடியாத மாறி கேவலமாதான் இருப்பேன்.."

" ஹேய்..நா அந்த அர்தத்துல சொல்லலம்மா"

" நீங்க இப்போ எந்த அர்தத்துல சொன்னாலும் எனக்கு கவலை இல்ல..உங்க வேலைய பாருங்க" என்றவள் நடக்க ஆரம்பிக்க, பெண்ணவளின் இந்தக் கோபத்தின் காரணம் புரியாமல் குழம்பியவன்
அவள் முன்சென்று " ஏன்டா என்னாச்சு.. நான் என்ன தப்பு பண்ணேனு சொன்னாதான தெரியும்.. "

" முதல்ல இந்த டா போடறத நிறுத்துங்க.. நான் என்ன சின்ன பாப்பாவா.. " எனக் கத்தியவள்
" நான் உங்க கிட்ட காதல சொன்னதுக்கு பிறகும் ஒதுங்கிதான போனேன்.. ஆனா நீங்களே தான நீ படி..படிச்சதும் கல்யாணம் பண்ணிக்கறேனு வாக்கு கொடுத்தீங்க.. இப்போ நீங்களே அதை மீறிட்டிங்க " என அழ ஆரம்பிக்க

" துளசி என்னடா..ச்சே..என்ன சொல்ற.நான் எங்க உன்னை ஏமாத்துனேன்..நீ சொல்றது சுத்தமா எனக்குப் புரியவே இல்ல. "

" ஆமா உங்களுக்குத்தான் எதுமே புரியாது.. ஆனா என்னை வெறுப்பேத்த மட்டும் தெரியும்"

என்னவென்று சொல்லாமல் அழுகும் அவளைப் பார்க்க கோபம்தான் வந்தது கதிருக்கு..

" இப்போ என்னதான் சொல்லவர "

" அப்ப நீங்க சியாமளா மேம்கிட்ட பழகவே இல்லைங்கறியா"

" ஓ.அப்போ நீ என்னை சந்தேகப்படற..அதானே "

" நான் அப்படி சொல்லவே இல்ல.."

" அப்ரோ எதுக்கு இந்த அழுகை"

" நீங்க போனதிலிருந்து ஒரு வார்த்தை எங்கிட்ட பேசுனிங்களா"

" நீதான எங்கிட்ட நேர்ல பேசிக்கிறேனு சொன்ன"

" நான் அப்படிதான் சொல்வேன்.. ஆனா அதுக்காக என்னை சமாதானப்படுத்தி பேச வைக்க முயற்சி பண்ணிங்களா.. விட்டா போதும்னு தான இருந்துட்டிங்க.. நீங்க அப்போ போன் பண்ணுவீங்க.. இப்போ போன் பண்ணுவீங்கனு தெனமும் எதிர்பார்த்து அழுதது எனக்குத் தான தெரியும்" என முகத்தைத் திருப்பிக் கொள்ள,

சத்தியமாக அவனுக்கு அவளை எவ்விதம் சமாதனப்படுத்துவது எனத் தெரியாமல்
அவன் முகமருகே தன் கைகளை  கொண்டு செல்வதும் பின் தயங்கியபடியே பின்னிழுத்துக் கொள்வதுமாகவே இருந்தான்.. பெண்களின் மனதை புரிந்து கொள்ளவே முடியலையே என தனக்குள்ளே புலம்பியவன் தனக்குத் தெரிந்த வகையிலே பேசிடலாம் என நினைத்து
" தப்புதான் மன்னிச்சிடு துளசி " என்க,

" பாத்திங்களா.. இத்தனை நாள் எங்கோட பழகிறீங்க..எனக்கு ஒரு செல்ல பேர் வெச்சீங்களா? " என அதற்கும் கோவித்துக் கொள்ள அவனுக்கு தலையை எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது..

" இப்போக்கோட பாருங்க.. நான் இவ்ளோ பேசறேன்..என்னை சமாதனப்படுத்த கூட மாட்டிறீங்க.. அப்போ உங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லைன்னுதான அர்த்தம்.. நான் தான் உங்களுக்கு ஏத்தவ இல்ல..அந்த சியாமளா மேடம்தான் உங்களுக்கு ஏத்தவுங்க..அப்படிதான"

" இதுல சியாமளா எங்கிருந்து வந்தாங்க 😡😡"

" பாருங்க அவளப் பத்தி பேசும்போது மட்டும் கோபப்படறீங்க..அன்னைக்கு அவுங்கள அடிக்கற அளவுக்கு போனவுங்க பின்ன எதுக்கு அவுங்க கூட சிரிச்ச மாறி செல்பி எடுத்திங்க"

" அப்போ நீ என்ன நம்பாம சந்தேகப்படற "

"
இதுக்குப் பேரு சந்தேகமா..பொசசிவ்நஸ்நான்னு எனக்குத் தெரில.. ஆனா அவுங்க மேல கொலைவெறில இருந்த நீங்களே அவுங்களோட குளோசா இருந்தா..அதும் அவுங்க உங்கள விரும்பினாங்கனு தெரிஞ்சதுக்குப் பிறகும்...இதுக்கு எனக்கு கோபப்படனுமா அழுகனுமான்னு தெரியல " என மீண்டும் அழுகத் துவங்க, அவளின் கன்னீர் அவனையும் அசைத்துப் பார்த்தது..

என்னதான் துளசி தன்னை தைரியமாகக் காட்டிக் கொண்டாலும் அவளுள்ளும் அவள் வயதுக்கே உரிய சின்னச் சின்ன ஆசைகள், எதிர்பார்ப்புகள் நிறைய இருப்பதைக் கண்டு கொண்டான் அவளவன்.அதனை இனியாவது பூர்த்தி செய்ய வேண்டும் என நினைத்து,
இதுவரை தான் கொண்டிருந்த தயக்கத்தைப் போக்கி முதன்முறையாக அவள் கையைப் பிடித்தவன் அருகே உள்ள சிறு பாறை மேல் அமர வைத்தவன்..

சற்று உறுதியான குரலில் " துளசி.. இங்க என்னைய பாரு.. நான் உன்னை கைவிட மாட்டேன்னு நம்பறியா..இல்ல சியாமளாவ கட்டிப்பேனு நினைக்கிறியா ? " என்க,

தனது முகத்தில் வழியும் கண்ணீரைத் துடைத்தவள் " நீங்க அதுக்கலாம் சரிப்பட்டு வர மாட்டீங்கனு எனக்குத் தெரியும் " என முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு சொல்ல, அதில் சற்று கடுப்பானவன் " நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு"

" ம்ச்.. நம்பாமதான் உங்க கூட இப்போ பேசிட்டு இருக்கனு நினைக்கிறீங்களா " என பாவமாக சொல்ல, அவனுக்கே அவளைப் பார்க்க கஷ்டமாகிப் போனது..அவள் கைகளை தன் கைகளுக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டவன்
" இங்கப் பாருடா.. நிஜமா நானும் சியாமளா மேல கோபமாதான் இருந்தேன்.. ஆனா அன்னைக்கு நான் ஊருக்குப் போகும்போது பிளைட்ல பக்கத்து சீட்ல பாவமா உட்காந்திருந்தா.. என்னைப் பார்த்ததும் ' கனிக்கும் உங்களுக்கும் உள்ள ரிலேசன்சிப்ப தப்பா புரிஞ்சிட்டேன்.. நீங்க லவ் பண்ற பொண்ணு கனின்னு நினைச்சிட்டு உங்க கிட்டயும் கோபமா பேசிட்டேன்.. ஆனா நான் அவளோட படிப்புல வீக்கா இருக்கா அவளப் படிக்க வெச்சே ஆகனும்னுதான் உங்ககிட்ட கோபமா பேசிட்டேன்னு ' எங்கிட்ட சாரி கேட்டா.. நான் அடிச்சத அங்க நிறைய பேர் பார்த்துட்டாங்க..அது அவுங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததால வேலைய ரிசைன் பண்ணிட்டாங்க.. தென் அவுங்களோட மெமரிக்காக என்கூட சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கனும்னு கேட்டாங்க.. எனக்கும் அது தப்பா படல.. நாங்க சமாதானம் ஆனது எல்லோர்க்கும் தெரிஞ்சா கொஞ்சம் பெட்டரா ப்பீல் பண்ணுவேனு சொன்னாங்க.. அதான் அந்த போட்டாவ பேஸ்புக்ல போட சம்மதிச்சேன்.. அவ்ளோதான் " என்க

" அவ்ளோ தானா? "

" உங்கிட்ட சொல்ல இன்னும் நிறைய இருக்கு.. ஆனா என் நண்பன் அவ தங்கைய இன்னும் காணோம்னு பைக்கையும் எங்கிட்ட கொடுத்தனுப்பிட்டு இந்நேரம் அங்க பயந்துட்டு இருப்பான்.. அவுங்கிட்டயும் உங்க அம்மா கிட்டயும் முக்கியமான விசயம் சொல்னும் .. அதான் .. சரி வண்டில ஏறு " என்றான்..

" அப்டி என்ன விசயம் "

" எல்லாம் நல்ல விசயம்தான்.. நம்ம காதல உங்கம்மா கிட்ட சொல்லப்போறேன்.. எனக்கும் அவுங்க கிட்ட சொன்னா கொஞ்சம் நிம்மதியா இருப்பனு தோணுது " என குறும்பாக சொல்ல

" ஐயோ.எங்கம்மா என் தோளை உறிச்சிடும் "

" அதுனால என்ன..உனக்கு தோளே இல்லைனாலும் நான் ஏத்துக்குவேன்.. சீக்கிரம் " என வண்டியை முறுக்க, பயந்து கொண்டே ஏறியவளுக்கும் மனதில் சற்று நிம்மதியாகத்தான் இருந்தது..

" பயப்படாம வா கண்ணாடி..அங்க உனக்கொரு இன்ப அதிர்ச்சி காத்துட்டு இருக்கு" என வண்டியை ஓட்டினான்..
அவனின் குரலில் உள்ள மகிழ்ச்சியே அவளைப் பரவசப்படுத்த, அது  என்ன இன்ப அதிர்ச்சி என யோசித்துக் கொண்டே போனாள் சிறகில்லா பட்டாம்பூச்சியாய் வட்டமடித்த மனதோடு..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz