உறவு 4
ஐசு சாரிடி. எங்கிட்ட பேசுடி.. நேத்து எதோ கோபத்துல பேசிட்டேன்டி.. என்னை பத்தி உனக்குத் தெரியாதா. என்னால கோபத்த கட்டுப்படுத்த முடியாதுனு.. சாரிம்மா.. " என அவளின் காலில் விழாத குறையாக நேற்று இரவிலிருந்து கெஞ்சியும் ஐசு மனமிறங்கவில்லை..
அவனது கடைசி ஆயுதமாக காலில்கூட விழுந்து பார்த்தான்.. ஆனாலும் கொட்டிய வார்த்தைகளை அள்ள அவனால் முடியவில்லை..
" ஐசு.. நீ மட்டும் இப்போ எங்கிட்ட பேசலினா உயிரோடவே இருக்க மாட்டேன் " என சோகமாக கூற
இதுவரை பேசாமடந்தையென இருந்தவள்
" சும்மா நிறுத்து அசோக்.. உனக்கு மட்டும் தான் கோபம் வருமா.. ஏன் எங்களுக்கு வராதா.. அதென்ன கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அப்படியென்ன கோபம். அதுவும் சம்பந்தமே இல்லாம.. நான் உன்னை காதலிச்சுதான் கல்யாணம் பண்ணேன்.. அதுக்காக நீ என்ன பேசுனாலும் பொறுமையா இருப்பேனு நினைக்காத.. இதுவே நீ பேசறத அத்தை மாமா யாராச்சும் கேட்ருந்தா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க.. நான் தப்பான பொண்ணுனு நினைக்க மாட்டாங்களா.. உங்களுக்காக என் குடும்பத்தை அவமானப்படுத்திட்டு வந்தனே.அதுக்கு இதான் சன்மானமா " என கோபமாய் ஆரம்பித்து அழுகையில் முடித்தாள்..
அவள் அழுவதை தாங்க முடியாத அசோக் " சாரி ஐசு.. ஆபிஸ்ல கதிர் வராததால சின்ன புரோபளம்.. அந்த டென்சன்ல இருந்தனா.. அதான் அவன்மேல இருந்த கோபத்த உங்கிட்ட காட்டிட்டேன்டி.. என் ஐசு நெருப்புனு எனக்குத் தெரியாதா.. " என அவளது கைகளைப் பற்றியபடியே கூற
" இந்த ஒருவாட்டி மன்னிச்சு விடறேன்.. இன்னொருக்கா இப்படி பண்ணிங்க அத்தைக்கிட்ட எல்லா உண்மையும் சொல்ல வேண்டி வரும் " என எச்சரிக்கை விடுத்து சென்றாள்.
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
கனி:
நான் அவமேல எவ்ளோ நம்பிக்கை வெச்சிருந்தேன்.. ஆனா அவ அதை ஒரு நிமிசத்துல காலி பண்ணிட்டா.. யார்னு தான கேட்கறீங்க அந்த துளசி தான்..
அவளுக்கு என்ன தைரியம் இருந்திருந்தா ஐசுவ பத்தி விசாரிச்சிருப்பா.. துளசியப்பத்தி எனக்குத் தெரியாதா. எந்த நோக்கத்துல அவ கேட்டானு. அவ எனக்காகத்தான் அப்படி பண்றானு.. ஆனா உண்மை என்னன்னா எம்மேல ரொம்ப பாசம் வெச்சனால என்னோட சின்ன கஷ்டம் கூட பெரிசா தெரியுது..
துளசி சொல்ற அளவுக்கு என் வாழ்க்கை அவ்ளோ நரகம்லா இல்ல.. அதுக்குனு ஜாலியாவும் இல்ல.. ஓகே உங்கள கன்பியூஸ் பண்ண விரும்பல..எல்லாத்தையும் சொல்றேன்..
எங்க குடும்பம்னா அதுல நான் எங்கப்பா அம்மா ஐசுனு நாலு பேர்தான்..
எல்லா குடும்பத்துல இருக்குற அக்கா தங்கச்சி மாறிலாம் நாங்க இல்ல.. சண்டை யார் போட்டாலும் திட்டு என்னமோ எனக்குத்தான். என்னை துண்டிவிட்டுட்டு நல்ல பொண்ணு மாறி மூஞ்ச வெச்சுக்குவா.. அவள எனக்கு 0% பிடிக்கும்.அவளுக்கு என்னை -1000 % அளவு பிடிக்கும்.. அவ்ளோதான் வித்தியாசம்.. நானும் அவள முடிஞ்ச அளவுக்கு வெறுப்பேத்துவேன்.நான் என்ன தியாகியா..அமைதியா இருக்க.
ஆனா எப்பவும் எங்க அப்பா அம்மாக்கு நான் இன்விசிபிள் மோட் தான்.. ஐசு தான் எங்க வீட்டு மகாலட்சுமி இளவரசி.. செல்லம் எல்லாமே.. நான் எப்பவும் ரெண்டாம் பட்சம்தான்.. எனக்கும் எந்த குறையும் வெச்சதில்லதான்.பாசத்தை தவிர..
அதுக்குனு நான் அடங்கி இருப்பனு நினைக்காதிங்க.. நான் மட்டும் வாயத் தொறந்தேன்னா அவங்க என் கால்ல விழாத குறையா கெஞ்சற வரைக்கும் சண்டை போடுவேன். அதனால என்னோட இமேஜ் நிறையவே டேமேஜ் ஆயிடுச்சு.. வாயாடி.. அம்மா அப்பாவ மதிக்காதவன்னு..
எனக்கும் அவங்க மேல பாசம் இல்லாமெலாம் இல்ல.. நிறையவே இருக்கு.. ஆனா ஒவ்வொன்னுக்கும் என்னை கம்பேர் பண்ணி பேசும்போது மட்டும் என்னோட பொறுமை லீவ் விட்டுட்டு போயிடுது.
அப்பாக்கூட சில டைம் எனக்கு சப்போர்ட் பண்ணும்.. ஆனா எங்கம்மா இருக்கே சப்பா. நல்லவேளை அவங்களக்கு பையன் இல்ல.. பெத்த பொண்ணையே இவ்ளோ டார்ச்சர் பண்ணுறவுங்க மருமகள விட்டுவெப்பாங்களா..
ஆனா எனக்கு எப்பவும் ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்கும்.. ஒருவேளை ஐசு அடிக்கடி சொல்ற மாறி என்னைத் தவுட்டுக்கு வாங்கிட்டு வந்திருப்பாங்களோனு. ஆனா எப்படி பார்த்தாலும் மூத்த பொண்ணதான வாங்குவாங்க ரெண்டாவதா பையன வேணா வாங்க சான்ஸ் இருக்கு.. ஆனா என்னை ஏன் வாங்கனும்.
. ஒருவேளை இந்த சொத்தெலாம் என்பேர்ல இருக்குற ரீசனுக்குத்தான் கடமைக்குனு வளர்த்தறாங்களோன்னு கூட சந்தேகப்பட்டு யாருக்கும் தெரியாம பத்திரத்த கூட செக் பண்ணேன்.. ஒரு அலுமனியத்தட்டு கூட என்பேர்ல இல்ல..எல்லாம் அவ பேர்லதான் இருக்கு.
அவ்ளோ ஏன் எங்க வீடு பேர்கூட ஐசு இல்லம்தான்.. எண்ண மாய மந்திரம் பண்றானே தெரியல அவள எல்லார்க்கும் ரொம்ப பிடிக்கும்.. ஆக்சுவலி அவளும் நல்லவதான்.. ஆனா நான் அவகூட எல்லாத்துக்கும் பங்குக்கு வருவேன். அப்படியே ஸ்டார்ட் ஆயிடும் சண்டை..
எவ்ளோ பிரச்சினை நடந்தாலும் நானும் விட்டுத்தர மாட்டேன்..
அவளும் விட்டுத்தர மாட்டா..
ஆனா எங்களை சமாதனப்படுத்துற திறமை எல்லாம் ஒரே ஒருத்தருக்குத்தான் இருக்கு.. அதான் எங்க கதிர் மாமா.. மாமா என்னை விட 7 வயசு பெருசு.. அவளவிட 3 வயசு பெருசு..
எங்கம்மாவோட ஒரே தம்பி.. அடிக்கடி எங்க வீட்டுக்கு வரும்.. வரும்போது நிறைய தீனி வாங்கிட்டு வரும்.. எனக்கு மாமாவ எதுனால ரொம்ப பிடிக்கும் தெரியுமா... மாமா எப்பவும் எனக்கு மட்டும்தான் சப்போர்ட் பண்ணும்.. அவகூட சண்டைதான் போடும்.. அதுக்கும் அப்பா அம்மா இல்ல.. அவுங்க பாட்டி அதான் என்னோட கொள்ளுப்பாட்டி வீட்ல தான் இருக்கு...
துளசி கூட எங்கிட்ட அடிக்கடி சொல்லுவா.. பேசாம உங்க மாமாவையே கட்டிக்கோன்னு.. ஆனா எனக்கு அந்தமாறி நினைப்பு எப்பவும் இருந்ததே இல்ல.. என் மாமா தான் அப்பா அம்மாக்கிட்ட சண்டை போட்டு ஐசுவ டவுன்ல படிக்க சம்மதிக்க வெச்சாங்க..மாமா அங்க தான் தங்கி வேலை செய்யறதால எப்பவும் அவள எங்க ஊருக்கு கூட்டிட்டு வரது அதுதான் பண்ணும்.
நானும் அப்படி பண்ணாத மாமான்னு சண்டை போட்டா ஒவ்வொரு தடவையும் இதான் லாஸ்ட்னு பொய் சொல்லியே என்னை ஏமாத்திடும்..
ஆனா எப்ப என் மாமா ஐசுவ விரும்புச்சுனு தெரிஞ்சுதோ அப்பவே அதோட பேசறத விட்டுட்டேன்..
கல்யாண ஏற்பாடு வரைக்கும் போயிடுச்சு.. என்னை ஒரு வார்த்தை கூட யாரும் எங்கிட்ட சொல்லல..
கடைசில எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க.கடைசி வரை எனக்கே எனக்குனு மட்டும் யாருமே இல்லைனு
கஷ்டமா இருந்துச்சு..
கல்யாணத்துக்கு முந்துன நாள்தான் எங்க அப்பா அம்மா பேசறது என் காதுல கேட்டுச்சு.. ஐசு என்னோட சொந்த அக்கா இல்லையாம்,
அதாவது அவ எங்கப்பாவோட
முதல் மனைவிக்கு பொறந்தவளாம்.. அவங்க இறந்தனால தான் எங்கம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.. அதும் எங்க அம்மாவுக்கு குழந்தையே பிறக்காதுன்னு தெரிஞ்சபிறகு தானாம்மா..
ஆனா எப்படியோ நான் பிறந்திட்டேனாம்.. எங்க எல்லாரும் சித்தி கொடுமை படுத்துறானு சொல்லிருவாங்கனு நினைச்சிட்டு என்னை விட அவளதான் நல்லா பார்த்துக்கிட்டாங்களாம்.. இதைக்கேட்ட பிறகு நான் பொறுமையா இருக்க நான் என்ன பைத்தியமா..
' இப்படி அவ சந்தோசத்துக்காக என்னை கொடுமை படுத்திட்டீங்களே'ன்னு நல்லா நறுக்குனு கேட்டுவிட்டுடேன்..அதான் நான் பண்ண பெரிய தப்புன்னு எனக்கு அப்ப தெரியல.. ஆனா அவ அன்னைக்கு நைட்டே ஓடிப்போயிட்டா..
அவ வேற யாரையோ விரும்பிதான் போயிருக்கா..
ஆனா எங்க வீட்ல எல்லாரும் நான் சத்தம் போட்டு பேசனதுனால தான் அவளுக்கு உண்மை தெரிஞ்சு ஓடிப்போயிட்டா.இல்லைனா எங்க அம்மா மேல இருக்குற பாசத்துல எங்க மாமன கட்டிக்க ஒத்திருப்பான்னு அழுக ஆரம்பிச்சிட்டாங்க..
அவங்க எப்பவும் அப்படித்தான் என்மேல நம்பிக்கையே இல்ல.. அதுனால எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல..
என்னோட ஒரே பிரச்சனை என்மாமா என்னை பார்த்து முரைச்சிட்டு பேசாம போனதுதான்..
அதே சோகத்துல இருந்த என்னை துளசி தான் எனக்கு படிப்பு வராதுன்னு தெரிஞ்சும் காலேஜ்ல சேர வெச்சு இங்க கூட்டிட்டு வந்தா.. ஆனா அவளும் இப்படி பண்ணுவான்னு நினைக்கில.. வரட்டும் இன்னைக்கு அவள அடக்கி வெச்சாதான் பின்னாடி எந்த பிரச்சனையும் பண்ண மாட்டா..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz