ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 5

Nivethamagathi

ஹேய் லூசு சாரிடி..தெரியாம பண்ணிட்டேன்.. இனிமே உனக்குத் தெரியாம எதும் பண்ண மாட்டேன்.. இதோட போதும் கை வலிக்குதுடி.. என்றபடியே ' கனி இனி சத்தியமா தப்பு பண்ண மாட்டேன் ' என்பதை ராம ஜெயத்தைப் போல எழுதிக் கொண்டிருந்தாள் துளசி.

அப்படடிலாம் விட முடியாது. படிக்கும்போது மட்டும் படிச்சது மறக்க கூடாதுனு எனையும் இப்படித்தான எல்லா கேள்வியும் எழுத வெச்ச..நல்லா எழுது இன்னும் 250 எழுதிட்டினா 1000 கம்பிளீட் ஆயிடும் எழுதி வை நான் போய் சாப்பிட்டு வரேன் " என கூறியவள் நிற்காமல் வெளியே சென்றுவிட்டாள்..

கனியைத் திட்டிக் கொண்டே எழுதிக் கொண்டிருந்த துளசியை அவளது கைப்பேசி அழைப்பு ஈர்த்தது.
" சொல்லுடா இந்நேரத்துல கூப்டுருக்க "
என எடுத்த உடனே கேட்க,

அந்தப்புறம் இருந்த அபி " கனி பக்கத்துல இருக்கா.. இருந்தா கொஞ்சம் தள்ளிவா" பதற்றமாக கூறினான்.

அவனது பதற்றம் இவளையும் தொற்றிக் கொள்ள
" அவ இல்ல..அவ இருந்தாலும் உங்கிட்ட பேசமாட்டா தெரியாதா.. என்னாச்சு எதாச்சும் பிரச்சனையா.. கதிர் மாமா இன்னும் கிடைக்கலையா " என அவளும் பயந்தவாரே கேட்டாள்..

கொஞ்சம் தயங்கியவாரே
" அதுக்குத்தான் போன் பண்ணேன்.. நாளைக்கு நீயும் கனியும் நான் சொல்ற இடத்துக்கு வரீங்களா.. கதிர் யார் பேச்சையும் கேட்க மாட்டிங்கறான்.. கனி வந்தா கண்டிப்பா கேட்பான்.. அவள வர சொல்றியா.. "

" ம் சரிடா.. நாங்க வரோம்.. நீயும் கவனமா இரு. அவரையும் நல்லா பார்த்துக்க "

" ம் நாளைக்கு இங்கதான் வரப்போறதையும் நானும் இங்கதான் இருக்கறதையும் சொல்லிடாத தெய்வமே.. அப்ரோ நான் தான் அவங்க மாமாக்கு ஊத்தி கொடுத்து கெடுத்த மாறி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பிச்சிடுவா. "

"சரி சரி அவளுக்கு ரொம்ப பயப்படறமாறி சீன் போடாத. அவளுக்கு தெரிஞ்சா நைட்லெம் அழுவானு சொல்லிதான சொல்ல வேனாங்கிற மிஸ்டர்.பாசமலர்..
அப்படியே பண்றேன்.
கேவலமா நடிக்காத... நீங்க பண்ற அலும்ப இப்பவே தாங்க முடியல.. இதுல நாளைக்கு நான் நேர்ல பார்க்கவேற போறீங்க.. என்ன பண்ண போறிங்களோ"

" அதைப்பத்தி நீ பேசாத.. ஒரு நல்ல பிரண்ட்னா அவள எங்கோட பேச வெச்சிருக்கனும்.. அவளுக்கு சப்போர்ட் பண்றேங்கற பேர்ல என்னை டேமேஜ் பண்ற..என்னை மனுசனா மதிக்கறியா இரத்தக் காட்டேரி. உனக்காக நான் என்னலெம் பண்றேன். ஆனா நீ
.
.
.
......... " என அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக இவனை அடக்க வேறு வழி தெரியாமல் அவளது அஸ்திரத்தை கையிலெடுத்தாள்..

" சோன்பப்டி " என்றதும் அடுத்த பக்கம் லைன் கட்டானது..

அடுத்த நாள் கனியை படத்திற்கு கூட்டி செல்வதாக பொய் சொல்லி கதிரின் இல்லத்திற்கு அழைத்து வந்தாள் துளசி..

வாசலில் இருந்த காலணியை வைத்தே கதிரின் இல்லம் என கண்டறிந்தவள் அதற்கு மேல் உள்ளே வராமல் அப்படியே நின்றாள்.

" கனி வாடி.. "

" நான் வரல.. எம்மேல மாமா கோபமா இருக்கும்..அதும் எல்லார் மாறி என்னைத் திட்டும்... நான் போறேன்""

"
அவர் எப்படி உன்னை திட்னாங்க.. அதெலாம்
திட்ட மாட்டாங்கடி.. நாம உள்ள பர்ஸ்ட் போய் பார்க்கலாம்." . என அவள் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

வழக்கத்தை விட அதிகளவான தாடியும் கசங்கிய சட்டையும் இளைத்த தேகமுமாய் நேராக அமர முடியாமல் பிடிமானத்திற்காக சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த கதிரைப் பார்த்ததும் தாரை தாரையாக கண்ணீர் சுரந்தது..

திருமண நாளிற்கு முந்தைய நாள் கனியிடம் அவளுக்கு பிடித்த பால் கொளுக்கட்டை செய்து அவளை சமாதனப்படுத்த முயன்ற போது அவனை சிரித்த முகத்தோடு பார்த்தது..அதற்கு பிறகு கடைசியாக தன்னை வெறுத்து ஒரு பார்வை.. அதைக் கூட தாங்கிய அவளால்
அவனை இந்நிலையில் பார்க்க முடியவில்லை.. ஊருக்கே உபதேசம் செய்யும் மாமாவா இப்படி சோர்ந்துபோய் மூளையில் அமர்ந்திருக்கிறார் என அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.. அவள் கண்களுக்கு தற்போது அருகில் நின்ற துளசியும் தெரியவில்லை.. அவள் கண்ணில் படுமளவுக்கு ஒளிந்து நின்ற அபியும் தெரியவில்லை..
தெரிந்ததெலாம் தனது மாமன் மட்டுமே.

" மாமா " என்று அறைகூவல் விடுத்து அவனுக்கு அருகே கீழே அமர்ந்து கொண்டாள்.. மூடியிருந்த அவனது கண்கள் அவள் குரலைக் கேட்டதும் மீண்டும் கண்ணீரைச் சுரந்தது..

அவன் அமைதியாகவே இருக்கவும் வழக்கம்போல அவன் மடியில் தலை வைத்து அழுக ஆரம்பித்தாள்..
" என்னை பேச சொல்லி கெஞ்சினியல்ல. நான் இனி பேசறேன்.. அழாத.. நான் தான் சொன்னேன்ல அவ உன்னை அழ வெச்சிருவானு.. நீ கேட்டியா.. இப்ப ஒன்னும் ஆகல.. அவ உனக்கு வேணா மாமா.. நானே உனக்கு அவள விட அழகான பொண்ணப் பார்த்து கட்டி வெக்கிறேன்.. அன்னைக்கு சொன்ன மாறி உன் கல்யாணத்துக்கு எனக்கு 4 சேரி வாங்கித் தரணும்.. சரியா.. இப்படி இருக்காத.. பார்க்க சகிக்கவே இல்ல.. அப்ரோ உன்னை பக்கத்து வீட்டு பொன்னம்மா பாட்டி கூட கட்டிக்காது. ப்ளீஷ் எங்கோட பேசு..
எழுந்துரு மாமா. நான் சொன்னேன்ல அந்த அழுக்கு மூஞ்சிய உள்ள விடாதன்னு.. எம்பேச்ச கேட்க கூடாதுன்னு அத கிட்சன் வரைக்கும் விட்ருக்க.. அதை வெளியே போக சொல்லு மாமா " என அவள் தேம்பியவாரே கூறிக் கொண்டிருக்க கதிரின் கை அனிச்சையாக அவளது தலையை வருட ஆரம்பித்தது.

" இந்த காலேஜ்ல சேர்ந்தா எனக்கு நிறைய டிரெஸ் வாங்கித்தரேன்.. ஷாப்பிங் கூட்டிட்டு போறேனு சொன்னல்ல.. வா போலாம்.. எழுந்திரி " என அவனது கையை பிடித்து இழுக்கவும் அவன் அசையாது அப்படியே இருந்தான்..

அவன் கையை வெடுக்கென விட்டவள் " போ நான் வந்து பேசியும் எங்கோட பேசாம பழி வாங்கறல. அப்பவும் உனக்கு அந்த ஐசுதான முக்கியமா போயிட்டா.. அதனால தான் அவ போனதும் யார்டயும் பேசாம கண்ட கண்ட கருமத்தெலாம் குடிக்க ஆரம்பிச்சிட்ட..
நான் அழுகுறேன் நீ கண்டுக்காம இருக்க போ. நீ என் மாமா இல்ல.. நான் போறேன். " என்று கோபமாக அழுது கொண்டே சொன்னவள் வாசல்பக்கம் நடந்தாள்

" கனிம்மா நீயும் என்னை விட்டு போகாதடா.. என்னால தாங்க முடியாது.. "

இந்தக் குரல் அவளுடைய மாமாவுடையதுதான்.
அவளது பெயரை அவனைவிட யாரும் பாசமாக அழைத்திட முடியாது....
ஆனால் இன்று சுற்று சோகமாக கேட்டது... இதைத்தான் இத்தனை நாட்களாக கேட்காமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்து அவன் சிரித்ததும் அவளது முகம் புன்னகையை தத்தெடுத்துக் கொண்டது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் தோசை ஊற்றி தேங்காய் சட்னி செய்த துளசி கனியின் கையில் தட்டைத் திணிக்க அதை வாங்கி கதிருக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள்..

அவளிடம் மறுப்பு சொன்னால் என்னாகும் என அறிந்த கதிர் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான்..

அவள் வந்ததும் பொட்டிப் பாம்பாய் அடங்கிய கதிரை சந்தோசமாக பார்த்தவன்
" ஹையோ துளசி.. அவன் பல்லு விளக்குனானு கூட தெரியல.. ஹவ்வே.. உன் பிரண்டு கூட சேர்ந்து அவனும் பேட் பாயாகிட்டான்.. இதுல என்னை அவ அழுக்கு மூட்டைங்கிறா.. இதுங்குல பார்க்க எனக்கு குமட்டிட்டு வருது... " என கேவலமாய் அபி முகத்தை வைத்துக் கொள்ள..

" வாந்தி வந்துச்சுனா எடுத்து வேணா தொலைக்க சொல்லுடி.. அதோட மூஞ்சிய பார்க்க சகிக்கல.. அப்ரோ சொல்லிடு என் மாமாவ அது இதுனெலாம் பேசாம வயசுக்கு மரியாதை கொடுத்து பேசச் சொல்லு..இவனையெலாம் உன்னோட அண்ணானு என்னால நம்பவே முடியல..ச்சை " என அவளும் அவனைப் போலவே கேவலமாய் முகத்தை அஷ்ட கோணலாக்க

" மரியாதைய பத்தி நல்ல மரியாதையா சொல்றா .. நல்லா கேட்டுக்கோ துளா " என்றான் அபி

துளசிக்கு வழக்கம்போல ஏன்டா இங்க வந்தோம் என்றானது..கனி கதிரை பார்த்த சந்தோசத்தில் அபியுடன் வாதிட விரும்பாமல் ஊட்டிவிடிவதை தொடர்ந்தாள்.

கதிர் ஒரு தோசைக்கு மேல் சாப்பிட மறுக்க அவன் தலையில் கொட்டி இன்னும் இரண்டு தோசைகளை உள்ளே தினித்துவிட்டாள்..

அவளது அதட்டலும் மிரட்டலும் என்றும் நடக்கக் கூடியதுதான்.. ஆனால் இன்றோ அவள் குரலிலுள்ள சோகம் அவனை இன்னும் வாட்டியது.. என்றுமே
அவனது கண்களுக்கு
சிறகில்லா குட்டி தேவதையாக தெரிபவள் இன்று
தாயாக தெரிந்தாள்.. சாப்பிட்ட பின் அவளது மடியில் தலை சாய்த்து நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான் கதிர்..

சிறிது நேரத்திற்கு பிறகு அவனை கட்டாயப்படுத்தி குளிக்க வைத்து வழுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்றனர் மூவரும்..
துளசியும் அபியும் அவனது பைக்கில் வர, கனியும் கதிரும் ஒன்றாக வந்தனர்..

திரையரங்கு, ஷாப்பிங் மால், பீச் என ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோசமாக சுற்றி திரிந்தனர்..

கதிர் கனிக்காகவாது தன்னை மாற்ற முயற்சிப்பதாக வாக்கு கொடுத்தவன் நாளை வேலைக்கு செல்லவும் சம்மதம் தெரிவித்தான் அங்கே நாளை நடக்கும விபரீதம் தெரியாமல்.

கனியின் சந்தோசத்திற்கு அளவேயில்லை. விடுதிக்கு வந்த பிறகு கூட தனது மற்ற தோழிகளிடம் கதிர்புராணத்தை பாடிக் கொண்டே இருந்தாள்.. துளசியும்
பீச்சுக்கு சென்றதிலிருந்து கனியை விட சந்தோசமாக இருக்க, ஆனால் கனி தற்போது அவளைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை அறியாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருப்பதால் அதை கண்டறிய தவறிவிட்டாள்.

அடுத்த நாள் ..கனி நீண்ட நாட்களுக்கு பிறகு தனக்கு மிகவும் பிடித்த ஆழ்ந்த மயில்கழுத்து நிற சுடிதாரை அணிந்து சந்தோசமாக பாடலை பாடிக் கொண்டே தயாராகிக் கொண்டே இருந்தாள் ..

. இன்று
கிருத்திகை என்பதால் துளசி கல்லூரிக்கு அருகே இருக்கும் முருகன் கோவிலுக்கு காலையிலே சென்று விட்டாள்..
கனிக்கு துளி கூட கடவுள் பக்தி இல்லை . அதனால் உடன்வர மறுத்துவி்ட்டாள்.

பக்தர்கள் கூட்டநெருக்கம் அதிகமாக இருந்ததால் தாமதமாக கல்லூரிக்கு வந்த துளசியை வழி மறைத்தது ஒரு உருவம்.

அவனைப் பார்த்ததும் எரிச்சலுடன் " வழிய விடுங்க " என்றிட,

" நேத்து எங்க யார்கூட போனேன்னு சொல்லு.. வழிய விடறேன் " என்று தனது கைகளை இருபுறமும் தடையாய் நீட்ட,

" டேய் யாருடா.. நீ. வழிய விடல பிரின்சிட்ட கம்பெளியின்ட் பண்ணிடுவேன்.. மரியாதையா நகரு.. ஆளும் அவனையும் பாரு.. " என்று அவனது கையைத் தட்டிவிட்டு உள்ளே செல்ல முயல,

" என்னோட கேள்விக்கு நீ பதில் சொன்னா.. உங்க ஐசு அக்கா பத்தி நான் சொல்வேன் " என்றதும் சந்தோசமாக திரும்பி நின்றாள்..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz