உறவு 3
செல்வராஜும் சாரதாவும் நேர்த்திக் கடனுக்காக அதிகாலையிலே கோவிலுக்கு சென்றதால் அசோக் இன்னும் வீடு திரும்பாதது தெரியாமல் போனது..
உணவருந்தும் வேளையில் ஐசுவின் அழுது வீங்கிய முகத்தைப் பார்த்த எழில் " என்னாச்சு அண்ணி. அண்ணனோட சண்டையா.அண்ணன் இன்னும் வீட்டுக்கு வரல." என்றான்
" ஐயோ அதெல்லாம் இல்லை..அவர் ஒரு டம்மி பீஷு.. உங்க அண்ணா எங்கிட்ட சண்டைலாம் எப்பவும் போட மாட்டார்னு உனக்கேத் தெரியாதா.எதோ ஆபிஸ் விசயமா காலைலதான் வெளிய போனாரு. "
என்று சிரித்தவாறு சமாளிக்க தனது அண்ணனின் குணம் அறியாததால் அவனும் நம்பி விட்டான்.
" அப்படினா இன்னைக்கும் உங்க பேமிலிய நினைச்சுத்தான் அழுதீங்களா.. நீங்க அழுகறது ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணி. நான் வேணா உங்க வீட்லபோய் பேசவா.. "
என அக்கறையாக வினவ
அவள் வேண்டாம் என்று தலையாட்டிட " என்மேல இன்னும் நம்பிக்கையில்லையா அண்ணி " என்றான் சோகமாக..
" அப்பிடிலாம் இல்லை எழில்.. நான் இப்படியே இருக்கறதுதான் எனக்கும் நல்லது.. என் தங்கச்சிக்கும் நல்லது. நான் அங்க போனா அவ நிம்மதியா இருக்க முடியாது.. என்னாலயும் சந்தோசமா இருக்க முடியாது..நான் இப்பதான் நிம்மதியா இருக்கேன்.. எனக்கு நம்ம குடும்பம் மட்டும் போதும் எழில்.. " என்க, இதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியானான்.
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
தனது மனைவியுடன் புதிதாக திருமண வாழ்வை ஆரம்பிக்க, அவளுக்கு பிடித்தமானதாக ஒவ்வொன்றையும் தேடித்தேடி அலைந்து வாங்கி
தனக்குத் தெரிந்தவகையில் கலைநயத்துடன் வீட்டை அலங்கரித்த
கதிர்
அதில் சிலதை அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக அங்கங்கே அவள் கண்களுக்குத் தெரியாதவாறு
மறைத்தும் வைத்திருந்தான்..
அன்று அவன் ஆசையாக செய்து வைத்ததெலாம் இன்று பார்க்கும்போது பைத்தியமே பிடித்துவிடும் போன்றிருந்தது.. ஐசுவை அவனுக்கு நான்கு வயதிலிருந்தே தெரியும்.. 20 வயதில்தான் அவள்மேல் காதல் கொண்டான்.. அவள் தன்மீது உரிமையாக நடந்துகொள்ளும் விதம், தாய் தகப்பன் இல்லாத அவனிடத்தில் அவள் காட்டிய பாசம் என அனைத்தையும் காதல் என தவறாக புரிந்துகொண்டவன் அவள் பெற்றோரிடம் பெண் கேட்க அவர்களும் சம்மதித்தனர்..
அப்போதும் அவள் எந்த மறுப்பும் சொல்லவில்லை..
தனது காதல் நிறைவேறப்போகும் ஆசையில் மணமகன் அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த
கதிரிடம் ஐசு வேறொருவருடன் சென்றுவிட்டாள் என்று கூறியதும் அவனால் நம்பக்கூட முடியவில்லை.. அவள்மேல் அவ்வளவு மதிப்பு
வைத்திருந்தான். அவளது குடும்பத்தின்மீது அவள் கொண்ட பாசமே அவனது காதலை இன்னும் அதிகப்படுத்தியது.. ஆனால் அவள் செய்த காரியத்தால் தன்னைவிட
அவளையே உயிராய் நினைத்து வாழ்ந்து கொண்டிருந்த அவளது பெற்றோரான இவனது அக்கா மாமாவிற்கு எவ்வளவு அவமானம் என துடித்துப் போனான்..
அவனுக்கு வாழ்க்கையே சூனியமாகிட சோகத்தை மறக்க குடியெனும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானான்..
குடியினால் உலகத்தை மறந்த அவனால் தனது காதலியை மறக்க முடியவில்லை..
" கதிர் இன்னும் எவ்வளவு நாள் தான் நடந்ததையே நினைச்சுட்டு இருப்ப..அவளாம் ஒரு பொண்ணாடா..அவளை படிக்க வெச்சதே நீதான்.. ஆனா அவ அதைகூட நினைச்சு பார்க்கலியே.. அவளுக்காக நீ இப்படி இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்குடா.. சீக்கிரம் கிளம்பி ஆபிஷ் வர வழியப் பாரு.. நாம எம்.டி ஓட ரிசப்சனுக்கு வரலனு மேனேஜர் திட்டிட்டு வேற போனான் தெரியுமா.. நீ அங்க இல்லாம எல்லாருக்கும் ரொம்ப குளிர் விட்டுப் போச்சுடா.. வாடா " என அவனை உலுக்கிக் கொண்டிருந்த அபியின் கத்தல் அனைத்தும் வீண்தான்..
கதிரோ வாசலை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருக்க அபி அவனைத் திட்டிக் கொண்டே சமையலறைக்குச் சென்றான்..
கதிர்தான் அபிக்கு ரோல்மாடல். படித்து முடித்து வீட்டில் வெட்டியாக பொழுதை கழித்த அபிக்கு புத்திமதி சொல்லி அவன் வேலை செய்யும் கம்பெனியிலே வேலையும் வாங்கித் தந்தான். தன்னைவிட 4 ஆண்டுகள் கதிர் பெரியவன் என்றபோதும் அபியிடம் மரியாதை எதிர்பாராதவன்..
எம்டி செல்வராஜ் தனது மகனைவிட கதிரின்மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார்.. இவனிருக்கும் நம்பிக்கையில்தான் தனது பதவியை மகனிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டார்..
யாரிடமும் அதட்டாமலே வேலை வாங்கும் கெட்டிக்காரனான கதிரிடம் அனைவருக்கும் நன்மதிப்பு உண்டு. ஒருவரைத் தவிர.. ஆனால் இந்தப் பெருமையெலாம் இ்ன்னும் எத்தனை நாளென்று தெரியவில்லை.. எம்டி இன்னும் ஒரு வாரத்தில் அவன் பணிக்கு வரவில்லை என்றால் வேலை பறிபோய்விடும் என்று கூறியுள்ளார்.
ஆனால் கதிர் அபியின் பேச்சை காது கொடுத்தும் கேட்கமாட்டேன்கிறான்.
இதற்கே இப்படியென்றால் அசோக்கைத் தான் ஐசு திருமணம் செய்துள்ளான் என்ற உண்மை தெரிந்தால் என்னாவானோ..
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
கல்லூரிக்கு சென்ற எழில் தனது கிளாசிற்கு வெளியே தனது வகுப்புத் தோழிகள் யாரோ இரண்டு பெண்களிடம் கதையளந்து கொண்டிருப்பதை கவனித்தவன் ' இவங்க வாயெலாம் ஓயவே ஓயாதா ' என்றபடி உள்ளெ சென்றான்.. பின்புறம் அவர்கள் திரும்பியிருந்ததால் முகம் தெரியவில்லை..
எழில் தனது நண்பர்கள் உலகில் மூழ்கியிருக்க அவனது வகுப்புத் தோழி கவிதா " எழில் இங்க கொஞ்சம் வாயேன் " என்று வெளியே அழைத்தாள். அவனும் எதாவது உதவி கேட்பாள் என நினைத்துச் செல்ல
" எழில் ரெண்டு பொண்ணுங்க உங்க அண்ணி ஐசுவர்யாக்காவ பத்தி விசாரிச்சாங்க.. அவங்க இப்போ என்ன பண்றாங்கனு கேட்டாங்க.. அவங்க கேட்ட விதமே சரியா படல..என்னமோ கொலைகாரிய தேடறமாறி பேசுனாங்க. அதான் நான் சொல்லல.. நம்ம காலேஜ்ல வேற யாராவதுகிட்ட கேட்கறக்குள்ள எதாவது ஸ்டெப் எடுடா " என்க அவனுக்கு கொலைவெறி தோன்றியது.. அவர்களை பற்றி கவிதாவிடம் விசாரித்தவன் அவர்களை நோக்கி நகர்ந்தான்.
" கனி இப்போ எதுக்கு மூஞ்சிய தூக்கி வெச்சிட்டு இருக்க.. ஆக்சுவலி நான் தான் கோபப்படனும்..எதுக்குடி சீனியர்ஸ்கிட்ட பேசவிடாம தரதரன்னு இழுத்துட்டு வந்த.. இன்னும் கொஞ்சம் பேசியிருந்தா ஐசு அக்கா பத்தி தெரிஞ்சிருப்பேன்.. "
" ஹான் நல்லா கிளிச்சிருப்ப.. இதுக்கு மேல எதாவது அவள பத்தி பேசுன மண்டைய உடைச்சு மாவிளக்கு போட்ருவேன் " என கை முஷ்டிகளை மடக்கியவள் " கடைசியா சொல்ற பால்டப்பா.. அவ என்னைப் பொறுத்தவரை என்னிக்கோ செத்துட்டா. எங்க மாமாவ அழ வெச்சவ எப்படி நாசமா போனா நமக்கென்ன.. அவ கட்டுன புருசன் மட்டும் அவள சந்தோசமாவா வெச்சிருக்க போறான் அவ எனக்கு பண்ண பாவத்துக்கு நல்லா அனுபவிப்பா.. "
இதைக்கேட்ட எழிலுக்கு தனது அண்ணியை சபித்துக் கொண்டிருந்த பெண்ணை கன்னம் கன்னமாக அரைய தோன்றியது..
" ஹேய் அவ உங்க அக்காடி.. அப்படிலாம் பேசாதடி..அவ இப்போ தனியா இல்ல.. அவளுக்கும் ஒரு குடும்பம் இருக்கு. " என்ற துளசியை,
" நான் உன் அளவுக்கு நல்லவ இல்லடி.. நான் இப்படித்தான் பேசுவேன்.. வேணும்னா அவகிட்டயே போ.. எனக்கு யாரும் வேணா " என அவளை திட்டியவள் அவளிடம் நிற்காமல் சென்றுவிட்டாள்..
எழிலுக்கு அனைத்துமே தெளிவாக புரிந்தது. கனிமொழி தான் அண்ணியை கொடுமை செய்த சித்தி மகள் என்றும் இவளுக்கு பயந்துதான் அவள் தங்கள் வீட்டிற்கு ஐசு செல்ல பயப்படுகிறார்கள் என்றும்.
ஐசுவின் பெயரைக் கேட்டதற்கே இவ்வளவு ஆத்திரப்படுகிறாளே நேரில் என்னென்ன கொடுமைகளை செய்திருப்பாள் என யோசித்தவன்
அவளை அடித்து துவைக்க வேண்டும் என்ற வெறியை கட்டுப்படுத்தி அவளை பழி வாங்க நினைத்தான். கனியைப் பற்றி தெரிந்து கொள்ள துளசியை பகடைகாயாய் பயன்படுத்த எண்ணினான். அவளிடம் முன்வந்து நின்றான்.
கண்ணீரை சுமந்துவாறே உணர்ச்சி துடைத்த முகம் என்ற நிலையில் இருந்த துளசியைப் பார்க்க அவனுக்கே பாவமாக இருந்தது.. ஏற்கனவே அண்ணிக்காக பரிந்துபேசியவளிடம் இனம்புரியா பாசம் வந்து தொற்றிக் கொண்டிருக்க
இவளது கண்ணீருக்கு காரணமான கனியின்மீது வெறுப்பு இன்னும் கூடியது.
அவளிடம் பேசியே தீரவேண்டும் என நினைத்தவன் நிதானத்தை வரவைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
துளசியோ அவளை சமாதனப்படுத்த முயலாமல் கண்ணீருடன் அங்கேயே நிற்க " எஸ் கியூஸ் மீ " என்றவாறு அவளிடம் கைக்குட்டையை நீட்டினான்.. அப்போதுதான் அவள் அழுகிறாள் என்பதையே உணர்ந்தாள்.
தனது கர்சீப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட துளசி " எங்கிட்டயே இருக்குங்க.. " என்றாள்.
அவளோ கனியை சமாதனப்படுத்த முடியாதோ என பயந்து கொண்டிருக்க அதை அறியாத அவனோ மிகவும் அப்பாவி போல என தவறாக எண்ணிவிட்டான்..
துளசிக்கோ அவனைப் பார்த்ததும் நெகடிவ் வைப்ரேட்டர் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது..
" நீ தான அண்.. ஐ மீன் ஐஸ்வர்யா பத்தி விசாரிச்ச.எதுக்குனு தெரி்ஞ்சிக்கலாமா. " என்றதும்
கனி இதற்கு தானே கோபித்துக் கொண்டாள் தற்சமயம்
இதை தள்ளி வைப்போம்
என எண்ணி " சும்மா தாங்க.அவங்க எங்க ஊருக்காரங்க தான்.. தெரிஞ்சா நோட்ஸ் கேக்கலாம்னு தான்.. நான் உங்ககிட்ட எந்த உதவியும் கேட்காமலே நீங்களா வந்து ஹெல்ப் பண்றத நினைக்கும்போது நீங்க பொண்ணுங்களுக்கு ஓடிவந்து ஹெல்ப்பண்ணுவீங்கனு நல்லா தெரியுதுங்க. ஆனா உங்க உதவி இப்போதைக்கு வேணாங்க.. பாய் " என்று சிரித்தவாறே உரைத்துவிட்டு நிற்காமல் ஓடிவி்ட்டாள்.
அவள் தன்னை பாராட்டுகிறாள் என நினைத்தவன் பின்புதான் தன்னை பெண்களிடம் வழிபவன் என சொல்லி செல்கிறாள் என புரிந்து கொண்டான்..
அவளிடம் எதுவோ ஒன்று தன்னை ஈர்ப்பதாக தோன்ற அவள்புறம் சாய்ந்த மனதை சாயாமல் இருக்க வைக்க வேண்டும் என தனக்குள்ளே வீண்கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டான்.
ஊர்க்காரரிடமிருந்து
ஐசுவைக் காப்பாற்ற நினைத்த கனி
வேண்டுமென்று பொய்யுரைக்க அது அவளை வில்லியாகவும் தோழியை தவிக்க செய்தவளை கண்டுபிடித்து பழி வாங்க வேண்டுமென்று நினைத்த துளசியை நல்லவளாகவும் காட்டி விளையாட்டு காட்டியது விதி..
நிறைய கேரக்டர்ஸ் இருக்குறமாறி தோனுதா.
அடுத்த பதிவிலிருந்து கதை ஆரம்பமாகும் என்பதால் குழப்பம் ஏற்படாது என நம்புகிறேன். தங்கள் கருத்துகளைப் பகிரவும் நண்பர்களே.
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz