ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 38

Nivethamagathi

நாட்கள் அதன்பாட்டிற்கு கடந்து கொண்டிருந்தது.. ஐசு அசோக்கின் இல்லத்திற்கு சென்று ஒரு மாதம் கடந்திருந்தது..கதிர் மற்றும் கந்தனின் நன்மதிப்பை அசோக் பெற்றுவிட்ட பிறகு  சந்தோசமாக அவள் இல்லத்திற்கு சென்றாள்..

கனி அடம்பிடித்து தனது பெற்றோர்களை கதிரின் வீட்டிலே தங்க வைத்திருந்தாள்..
அபி மற்றும் தர்ஷுவும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்கு சனி ஞாயிறு மட்டும் சென்று கொண்டிருந்தனர். தினமும் இரவு 7 மணி முதல் 11 மணி வரை கடுமையாக படிக்க ஆரம்பித்தனர்..

கனியும் எழிலும் கல்லூரியில் அவ்வப்போது பார்க்கும் நேரம் மட்டும் புன்னகையை பரிமாறிக்கொள்வர்..மதியம் என்றாவது ஒருநாள் ஒன்றாக அமர்ந்து உணவைப் பகிர்வார்கள்..
மத்தபடி அதிக பேச்சுகளோ சந்திப்புகளோ இருந்ததில்லை..  

இவர்கள் இவ்வாறு இருக்க துளசி மற்றும் கதிரின் காதலில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.. துளசி இப்போது கல்லூரிப் பேருந்தில் சென்று விடுவதால் கதிரைப் பார்க்கின்ற சந்தர்ப்பமும் அமைவதில்லை..கடைசியாக அவனை கதிரின் வீட்டில் வைத்து அவனது காதலை மறைமுகமாக சொன்ன போது பார்த்தது.. அவளுக்கு முன்னர் எப்படியோ அவன் காதலை ஏற்றுக் கொண்ட பிறகு அவளுக்கு அவனைக் காண ஏனோ மனம் ஒவ்வவில்லை..ஒருவேளை அடிக்கடி சந்தித்தால் அவன் மனம் மாறிவிடுவானோ என்கிற பயம்தான்..

அவனும் அவள் கண்ணில் பட்டு விடுவேனா என கண்ணாமூச்சி ஆடிக் கொண்டுதான் இருக்கிறான்.... அவனுக்கு என்னமோ தனது காதலால் அவள் படிப்பு பாழாகி விடுமோ என்கிற பயம். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதில் தயக்கம்காட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

இவர்கள் விளையாட்டை ஆரம்பத்தில் உணராத கனி பின்பு கண்டு கொண்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவெடுத்தாள்..

கல்லூரி முடிந்ததும்  கல்லூரி பேருந்து நிற்கும்  இடத்திற்கு சென்ற துளசியை பேருந்தில் ஏறவிடாமல்  இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் கனி....
" ஹேய்..என்னடி..பஸ்ஸு போயிடும்டி.. விட்றி " என அவள் கையை விடுவித்துக் கொள்ள முயல,

" மேடம் இப்போ பஸ் போயிடுச்சுனு ப்பீல் பண்றீங்க. அப்ரோ லைப் போயிடிச்சுனு ப்பீல் பண்ண போறீங்க.. எனக்கென்னப்பா.. போ " என கையை விட்டுவிட்டு சலித்துக் கொள்ள,
துளசி
கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே " ஏன்டி..நீ எந்த மேட்டரையும் டேரக்டாவே சொல்ல மாட்டியா.. சீக்கிரம் சொல்லுடி " என திட்ட ஆரம்பித்தாள்..

"ஹோ..என்னை திட்ற அளவுக்கு மேடம் வந்துட்டிங்கல்ல.. போடி போ..ஏதொ என் பிரண்டாச்சே..உன் லைப் நல்லார்க்கனுமேன்னு சொன்னேன்.. எனக்கிது தேவைதான்.. " என உண்மையாகவே அவள் கோபப்பட துளசிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது..

" ஹே சாரிடி.. லேட்டா போனா பஸ்ல சீட் கிடைக்காதுடி.. அதான்டி கோபப்பட்டுட்டேன்.. சரி பஸ்ஸு போனா போகட்டும்.. நீ என்னனு பொறுமையாவே சொல்லு " என அருகிலுள்ள பென்ச்சில் அமர்ந்து கொண்டாள்..

" இஇஇஇஇ..பரவாலடி..நான் உன்னை மன்னிச்சிட்டேன்.. நீ என்னடான்னா சீட் காக சண்டை போடற..ஆனா அங்கொருத்தங்க உன் காதலோட சண்டை போடறாங்க " என இப்போதும் அவள் புதிராகவே பதிலளித்தாள்..
' இவ என்ன சம்பந்தமே இல்லாம உளருரா ' என அவளையே பார்த்திருக்க, அவள் தலையில் கொட்டியவள் கைப்பிடித்து கல்லூரி வாசலுக்கு அழைத்து வந்து ஓரிடத்தில் கைக்காட்டினாள்..

அங்கே கனியை அழைத்துச் செல்ல வந்த கதிரிடம் ஐசுவும் சியாமளாவும் சிாித்து பேசிக் கொண்டிருந்தனர்..
துளசி அதிர்ச்சியுடன் கனியைப் பார்க்க, " ரொம்ப அதிர்ச்சியாகாத.. இதான் ஒரு வாரமா நடந்துட்டு இருக்கு.. இப்படியே போனா ' எங்கிருந்தாலும் வாழ்க ' னு நீ வயலின் வாசிக்க வேண்டியதுதான்.. "  என கனி எதார்த்தமாக நடந்த நிகழ்வைத் திரித்து தூண்டிவிட அது நன்றாக பற்றியது..

துளசிக்கு சியாமளாவினை எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுத்து விடலாமா எனும் அளவிற்கு ஆத்திரம் பொங்கியது.. ஆனால் என்னவென்று அவளைத் திட்டி அனுப்புவது, அடுத்த செமஸ்டர்களில் சியாமளாவும் தங்கள் வகுப்பிற்கு பாடம் எடுக்க வர அதிக வாய்ப்புள்ளது.. இவளை இப்போது பகைத்துக் கொண்டால் இன்டெர்னில் ஆப்புதான்.. ஆனால் இப்போது பொறுமையாக இருந்தால் கனி சொன்னது போல வாழ்க்கை அல்லவா போய்விடும்... என்ன நடந்தாலும் சரி என அவர்கள் முன்பு கோபமாக போய் நின்றாள்..

கதிர் வண்டியில் அமர்ந்திருக்க ஐசுவும் சியாமாளாவும் அவனை நோக்கி நின்றவாறு பேசிக் கொண்டிருப்பதால் துளசி வந்தது அவர்கள் இருவருக்கும் தெரிய வாய்ப்பில்லை..

அவர்களிடம் பேசியபடியே திரும்பியவனின் விழிகளில் தன்னையே முரைத்துக் கொண்டு நிற்கும் துளசிபட அவனுக்கும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது..
ஏற்கனவே ஐசு சியாமளாவைப் புகழ்ந்து கொண்டிருந்தது அவன் காதில் இரத்தம் வரவைத்திருந்தது.. எப்போதான் இதுங்க கிளம்புங்க என நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் துளசி வந்து நின்றாள்.. துளசிக்கு பின்னால் கனி கதிரை எண்ணி சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் இது யார் வேலை என தெளிவாக புரிந்தது அவனுக்கு..

' உருகி உருகு காதல் சொன்னவகிட்ட பேசறக்கு நேரம் கிடைக்கல.. இவங்கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு நிக்கறீங்க..ஹான் ' என துளசி கண்களினாலே மிரட்ட கதிருக்கு ஐயோ என்றிருந்தது.. அவன் இல்லை என தலையை இடம் வலமாக ஆட்ட இவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. கதிருக்கே தன்னை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது.. தானா சிறு பெண்ணின் கோபப்பார்வைக்கு இப்படி அஞ்சி நடுங்குவது என்று..ஆனால் அவனுக்கு இந்த மிரட்டல் பார்வைகூட  பிடித்திருந்தது..

துளசிக்கு
இத்தனை நாள் கழித்து இருவரும் இந்நிலையிலா சந்திக்க வேண்டும் என்றிருந்தது..
துளசிக்கு கதிரின் மீது துளியும் சந்தேகமில்லை.. அதே சமயம் சியாமளாவின் மீதும் அந்த அளவுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை.. 
இருவரும் அமைதியாகவே இருக்க ஒரு ஆக்சன் சீனை எதிர்பார்த்த கனிக்குத்தான் புஸ்ஸென்றானது..

இதுங்க ரெண்டும் தத்தி என்பதை புரிந்தவள் தானே களத்தில் இறங்கினாள்..

" மாமா வந்துட்டிங்களா.." என்றபடியே அவர்களை நெருங்கினாள்..அவள் வந்ததும் சியாமளா கதிரிடமும் ஐசுவிடமும்  மட்டும் கூறி விட்டு கனியிடம் பேசாமல் கூட கிளம்பிவிட்டாள்..கனிக்கு அது பெருத்த அவமானமாகத் தோன்றியது..

இருந்தும் அதைக் கண்டு கொள்ளாமல்
" மாமா..துளசி பஸ்ஸ மிஸ் பண்ணிட்டா..அவளையும் டிராப் பண்ணலமா " என்றாள் கதிரிடம் மர்மப் புன்னகையோடு..

ஐசு உடனே " ஹேய் குண்டு..அவள கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொல்லு.. அசோக் வந்துருவார்.. நாங்க. டிராப் பண்ணிரோம்.." என்றதும் கனி மனதுக்குள் ஐசுவிற்கு ஒரு அர்ச்சனையே செய்யத் துவங்கினாள்.

இதைக் கேட்டதும் துளசியின் முகம் மாறியது..ஏற்கனவே துளசியை அசோக் அடித்ததற்கு அவன் மன்னிப்புக் கேட்டிருந்தாலும் அவனின் உதவியை நாட தன்மானம் இடங் கொடுக்கவில்லை..

" இல்ல பரவாலக்கா.. நான் ஆட்டோல போயிக்கிறேன் " என்றவள் அவர்களை கடக்க முயற்சிக்க கனி அவளின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

தற்போது நேரடியாகவே ஐசுவை முரைத்தவள் " ஏண்டியம்மா..பொறந்த வீடு பொறந்த வீடுன்னு ஒன்னு உனக்கு இருக்குதே அது நியாபகம் இருக்குதா.. எல்லாரும் எப்படா சான்ஸ் கிடைக்கும் அம்மாவ பார்க்கலாம்  அப்பாவ பார்க்கலாம்.. கூடப் பொறந்த பொறப்ப பார்க்கலாம்னு காத்துக்கிடரக்கறாங்க.. நீ என்னடான்னா கண்டுக்கவே மாட்டிங்கற " என கூற

" ஏன்டி போன வாரந்தான வந்துட்டு போனேன் " என்க,
" எனக்கு அதெல்லாம் தெரியாது..நீ இப்போ எங்க வீட்டுக்கு வர..நான் எங்க அத்தானோடு கேரம் போர்டு விளையாடறேன்..அவ்ளோதான் " என்றவள் அசோக்கின் கார் தூரத்தில் வருவது தெரிந்ததும் துளசியின் கையை விட்டுவிட்டு ஐசுவின் கையைப் பற்றி தரதரவென இழுத்துச் சென்றவள் அவளை வாயத்திறக்க விடாமல் அசோக்கின் காரில் ஏற்றிவிட்டு தானும் ஏறிக் கொண்டாள்..
தனது கதிர் மாமா மற்றும் துளசியின் காதலுக்கு துணை போன கனியினாலே அவர்களின் உறவில் விரிசல் வரும் என்பதை அப்போது மூவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை..

அவர்கள் சென்றதையே பார்த்துக் கொண்டிருந்தவன் தற்போது துளசியை நோக்க அவளோ பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தாள்..

பைக்கை அவள் அருகில் நிறுத்தியவன் அவளை ஏறுமாறு சைகை செய்ய, அவளோ அதைக் கண்டு கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தாள்..உண்மையில் அவளிடம்  அவனுக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை..

" துளசி.. " என அவன் சத்தமாக அழைக்க
பதிலுக்கு  கோபமாக
" சொல்லுங்க " என அவளுமஇ சொல்ல,
தனது பதற்றத்தைக் கட்டுப்படுத்தியவன் " வா..நான் டிராப் பண்றேன்.. " என்றான்..

" இல்ல..பரவாலங்க.. நான் போய்க்கிறேன்.. " என்றவளிடம் " நான் வேணும்னே அவங்ககிட்ட பேசலம்மா..அவளே தான் வந்து பேசுனா..நான் அதை ஒழுங்கா கூட கேட்கல " என தன் பக்கம் நியாயத்தை அவன் எடுத்துரைக்க,
அவளோ " தெரியும் " என்ற ஒற்றை வார்த்தையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்..

அவள் தன்மேல் கொண்ட நம்பிக்கையில் இதழ்கள் தானாக புன்னகையை தத்தெடுத்துக் கொள்ள
" அப்போ மேடம்க்கு என்மேல கோபம் இல்லைனா  " என அவனிழுக்கும் போதே
அவளும் அதே புன்னகையுடன் பைக்கில் அமர்ந்து கொண்டாள்..

இருவரும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக  சென்றாலும் இந்த மௌனம் கூட பல காதல்கதை பேசியது..
காதலுடன் அவர்களின் இந்த முதல் பயணம் இருவருக்கும் இடையே உள்ள மர்மத் திரையை விலக்கியது..
மனதில் இந்த பயணத்தை ஏற்பாடு செய்த கனிக்கு நன்றி கூறினர்...

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz