உறவு 37
கதிர் பாட்டிற்கு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனது செயலால் மாட்டிக் கொண்ட துளசியோ கனியிடம் செமத்தையாக வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தாள்..
"ஹேய்... கனி நம்புடி..அவர் இன்னைக்கு தான் பர்ஸ்ட் டைம் கால் பண்ணாங்க..நீ நினைக்கற மாறிலா இல்லடி..வேணும்னா கால் ஹிஷ்டிரிய செக் பண்ணு " என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,
அவளோ " ஐய்யோய்யாோ ..நான் நம்பிட்டேன்பா உங்கள.. அய்யோ சாமி...உங்க ரெண்டு பேத்தையாடி உலகம் தெரியாத பச்சைப் பிள்ளைன்னு நம்புனேன்..அவ்வா..அவ்வா " என வாயில் அடித்துக் கொண்டவள்
" ஏன்டி எனக்குத் தெரியாம இது மட்டும்தானா..இல்ல... பார்க்..பீச்..சினிமா அதும் இருக்கா..." என அவளை நம்பாமல் கேட்க,
அவளை வெறுப்பேற்றும் பொருட்டு " ச்சேச்ச.அங்கலாம் போகல டீ.. வெறும் காபி சாப் மட்டும்தான்.. " என சிரிப்பை அடக்கிக் கொண்டு கூற,
" அடப்பாவிங்களா..எங்கப்பா கல்யாணப் பேச்ச எடுத்தோனே என்னமா ரெண்டு பேரும் சீன் போட்டிங்க.. நீங்க என்னமோ அவர் உங்கள வேண்டான்னு சொன்ன மாறியும், அவர் என்னமோ வேற வழியே இல்லாம ஒத்துக்கிட்ட மாறியும்.. ஆக எல்லாமே முன்னயே பேசி வெச்சிக்கிட்டு தான் இப்படி உடான்ஸ் விட்ருக்கிங்க.
ஐயோ..கனி இப்படி ஏமாளியா இருக்கியேடி.. நீ மட்டும்தான் அக்கா வாழ்க்கைய காப்பாத்தனும்..ஆட்டுக்குட்டிய காப்பாத்தனும்னு காலெஜ கூட கட் அடிச்சிட்டு குடும்பத்துக்காக ஓடா உழைச்ச..ஆனா இதுங்க உனக்குத் தெரியாம லவ்ஸ் பண்ணிட்டு சுத்திட்டு இருந்திருக்காங்களே " என ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்..
" ஹேய்..கத்தாதடி எங்க அம்மாக்கு கேட்டற போகுது " என்ற துளசியின் கதறலை அவள் கேட்கவே இல்லை..
" அமுக்குனி மாறி இருந்துட்டு ராசா மாறி இருந்த மாமன சாச்சுப்புட்டாளே.. இதுக்குத்தான் படிக்கற பொம்பளப் புள்ளைங்கள மட்டும் நம்பவே கூடாது " என மீண்டும் தன் கச்சேரியை ஆரம்பித்தாள்.. துளசி அவள் வாயை அடைக்கும் வழி தெரியாமல் திணற, சரியாக அந்த நேரம் அவளை காக்கும் பொருட்டு எழிலும் அபியும் வந்து சேர்ந்தனர்..
" ஹோ.. மேடம் நீங்க மட்டும் அப்படியே குமிஞ்ச தலை நிமிரா நடந்து போற மாறி பேசறீங்க. . நீங்களும் கமிட்டட் தான..என்னமோ காதல்னா ஏதொ கெட்ட வார்த்தைய கேட்ட மாதிரி இந்த குதி குதிக்கிறீங்க. இப்போதான் என் மச்சான் கிட்ட உங்க காதல் கதைய கேட்டுட்டு வந்தேன்..ஒத்தை ரோஸ்கே மேடம் பிளாட்டாம்மே " என அபி அவளை கேலி செய்ய,
" மானம் போச்சே " என முகத்தை மூடியவளின் காதுகளில் அவர்கள் சிரிப்புச் சத்தம் அதிகமாக விழுக,
அதில் கடுப்பானவள்
" ஐயடா.. நாங்களாச்சும் பரவால.நீ வெறும் சோன்பப்டிக்காக பின்னாடி சுத்துனவனாச்சே " என அவனைக் காலை வாரினாள்..
" அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்துகிட்டு எங்கிட்ட எல்லாத்தையும் மறச்சிட்டிங்கள...பாரு உன்னோட கல்யாணத்துல எந்த சாப்பாட்டிலும் உப்பே இருக்காது " என சாபம் விட்டாள்..
இதுவரை துளசியின் மீதிருந்த கோபம் தன்னிடம் கூட சொல்லாமல் சோன்பப்டியிடம் திருமண சம்மந்தம் பேசிய அபியிடம் வந்து நின்றது..
" ஹேய் என்னடா குண்டு பாப்பு . இதுக்குலாம் கோப்பட்டா எப்படி.. அதான் எல்லாத்தையும் நேர்ல சொல்ல நான் வந்துட்டேன்ல..உனக்கு என்ன கேட்கனுமோ கேளு.. " என அவளை சமாதனப்படுத்த முயன்றான்..
அவன் ரொம்ப இறங்கி பேசுவும் மன்னித்தாள்..
எழிலுக்குத்தான் அபியின் காதல் விபரம் தெரியாததால் அதை தெரிந்து கொள்ளும் ஆவல் தோன்றியது..
" என்ன பாஸ் நீங்க. என் ஸ்டோரிய மட்டும் கேட்டுட்டு உங்க கதைய சொல்ல மாட்டிக்கிறீங்களே.. சொல்லுங்க நாங்களும் உங்க கிட்ட இருந்து கத்துக்கறோம் " என ஆர்வமாக கேட்க,
அவனும் சொல்லத் துவங்கினான்.
அவள் தங்களது முதல் சந்திப்பில் தன் மண்ணையை உடைத்ததையும் எதற்காக அவளுக்கு சோனபப்டி என்ற பெயர் வந்தது என்பதைக் கூறுயவன் அப்படியே தனது கடந்த காலந்துக்குள் புகுந்து விட்டான்.
அபியின் கடந்த காலம் :
தனது தலையில் வழியும் இரத்தத்தை கைக்குட்டையால் துடைத்தவன் அதில் எச்சிலை அப்பிக் கொண்டான்.
பின் பள்ளி மணியும் அடிக்க அனைத்து மாணவர்களும் தத்தம் வகுப்புகளுக்கு சென்றனர். அதன் பின் அபி தனது வகுப்பிற்கு செல்ல அவனிற்கு அடுத்த பெஞ்சில் அமர்ந்திருந்தது சாக்ஷாத் தர்ஷினி தான்.
அவளை கண்டு மனதிற்குள்ளேயே வறுத்தெடுத்தவன் 'உன்ன என்ன பண்றேன் பாருடி' என்று நினைத்துக்கொண்டான். பாவம் தான் அதற்கெல்லாம் சரி பட்டு வரமாட்டோம் என்று தெரியாமல் .
பின் சற்று நேரத்தில் உள்ளே வந்த ஆசிரியர் அட்டெண்டென்ஸ் எடுக்க காமாட்சி பிரியதர்ஷினி என்ற பெயரை அவர் வாசிக்க, விருப்பமே இல்லாமல் தன் கைகளை உயர்த்தினாள் தர்ஷினி "உள்ளேன் அய்யா "என்று.
அவளிற்கு காமாட்சி என்ற பெயர் சுத்தமாக பிடிக்காது ஆதலால் தான் இந்த தயக்கம்..
அபியோ அவளின் முழுப்பெயரை கேட்டு சிரித்தவன் மனதில் காந்தி காலத்துல காலாவதியான பேர எல்லாம் வச்சுக்கிட்டு பண்ற அளம்பல பாரு என்று அவளை பார்த்து நக்கலாய் சிரிக்க, அவளோ கையில் இருந்த காம்பஸ்ஸை கண்ணில் குத்திவிடுவது போல் செய்கை செய்தாள்.
அன்று உணவு வேலையின் பொழுது அனைவரும் வெளியே சென்று விட அவளை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்த அபியோ அவளின் சாப்பாடு பாத்திரத்தை எடுத்து அதை தான் காலி செய்துவிடலாம் என்ற முனைப்போடு அதிலிருந்து ஒரு வாய் சாதத்தை வாயில் வைக்க அவனால் அதை மெல்லவும் முடியவில்லை முழுங்கவும் முடியவில்லை .மிகவும் மோசமாக இருந்தது.
அப்பொழுது கை கழுவிவிட்டு உள்ளே தனது சாப்பாடு பாத்திரத்தை எடுக்க வந்த தர்ஷினி இதை பார்த்துவிட்டு வேகமாய் அவன் கையிலிருந்து சாப்பாட்டு பாத்திரத்தை பிடுங்க அப்பொழுதே அவளை முழுதாய் கவனித்தான்.
எண்ணெய் வைக்காமல் சீரில்லாமல் வாரப்பட்ட தலை..கண்ணின் கீழ் கருவளையம்.. முகத்தில் கோபத்தை தாண்டி ஒளிந்திருந்த சோகம்...இதை கண்டவன் அவள் வெளியேறும்முன் அவள் கையை பிடித்தான் .அவள் கடுகடுவென திரும்பியவள் "என்ன எதுக்கு இப்போ கைய பிடிக்குற ?"என்று கேட்க அவனோ திக்கி திணறி "அது ..அது இல்ல.. உன் உன் அம்மா ஏன் இப்டி சமைச்சுருக்காங்க.. சுத்தமா நல்ல இல்லையே ...அப்பறோம் ஏன் இவ்ளோ மோசமா வந்துருக்க ஸ்கூலுக்கு ?"என்று கேட்க அவளோ கண்களில் சட்டென கண்ணீர் நிறைந்துவிட "அது என் அம்மா இறந்துட்டாங்க .அப்பா தான் தலை சீவி சாப்பாடு செஞ்சு தருவார் "என்க அவனிற்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது.
அவள் வெளியே சென்று ஒரு மரத்தின் கீழ் அமர அவனும் அவள் எதிரே அமர்ந்தான் .அவள் அவனை கேள்வியாய் பார்த்துவிட்டு உண்ண துவங்க அவனோ அவனின் சாப்பாட்டு பாத்திரத்தை அவளிடம் நீட்டினான்
.அவள் கேள்வியாய் நோக்க அபியோ அவளை நோக்கி சிநேகமாய் சிரித்தவன் "இதை சாப்புடு ரெண்டு பேரும் சாப்பாட்டை ஷேர் பண்ணிக்கலாம் " என்க அவளோ தயக்கமாய் நோக்க
அவனோ "அட ஸீன் போடாம எடுமா ..
நான் உன் சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டேன்ல..அப்போ நீயும் என்னோடத சாப்பிடனும்ல..இந்தா இல்லன எனக்கு வயுறு வலிக்கும் " என அம்மாஞ்சு போல கூறியவனைப் பார்த்து என்ன நினைத்தாளோ
அவளும்
சிரித்தபடி "சரி டா மூட்டைப்பூச்சி "என்று சாப்பாட்டை எடுத்துக்கொண்டாள். .அபியின் அம்மாவின் உணவு மிகவும் சுவையானதாக இருக்க அவளின் முகத்தில் இருந்த ஆனந்தத்தை குறித்துக்கொண்டவன் சாப்பிட்டு முடித்ததும் "இனி உங்க அப்பாகிட்ட சாப்பாடு வேணாம்னு சொல்லு நா உனக்கும் சேர்த்து கொண்டு வரேன் "என்க அவள் அவளின் அப்பாவை நினைத்து பயப்பட்டு மறுத்துவிட்டாள்..
அவனிடம் தினமும் வாங்கி சாப்பிட அவள் மனம் ஏற்கவில்லை..
அடுத்த நாளே அவளுக்கு பிறந்தநாள்.. அனைவருக்கும் சோன்பப்டி கொடுத்து அவள் அதற்கு கூறிய காரணமும்
அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.. அன்றிலிருந்து அவள் " சோன்பப்டி " தான்.. அவளது அனைத்து செயல்களும் அவனுக்கு மற்றவர்களிடமிருந்து அவளை சற்று உயர்த்திக் காட்டியது.. அவளுடன் நட்பு கொள்ள வேண்டும் எனத் தூண்டியது..
அன்றிலிருந்து அவளது அருகே சாப்பிட அமர்பவன் அவளது சாதத்திலிருந்து பாதியை எடுத்துக் கொண்டு தன்னுடையதில் இருந்து பாதியை அவள் மறுக்க மறுக்க தந்துவிடுவான். அவளுக்காக அவனும் அந்த சாப்பாட்டை விரும்பியே சாப்பிடுவான்..
நாட்களும் செல்ல இருவரும் கிடைக்கும் நேரமெல்லாம் சண்டை இட்டாலும் ஒரு ஆழமான நட்பு உருவாக ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் நட்பு அவளை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வந்து விடுவது வரை வளர்ந்தது..
அனைத்திற்கும் குற்றம் கண்டுபிடித்து அவளை திட்டும் தந்தையோ அபியிடம் மட்டும் தன்மையாகவே நடந்துகொள்வார் தன் பெண்ணை படிக்க வைப்பதால்.. .தர்ஷினிக்கும் படிப்பிற்கும் ஆகவே ஆகாது அதுவும் கணிதம் என்றால் சுத்தம்.. அபி தான் அவளின் தலையில் கொட்டி கொட்டி படிக்க வைத்தான் ..
வருடங்கள் ஓட இரண்டும் வெயிலோடு விளையாடி ரெயிலோடு உறவாடி என்று இருவரும் சேர்ந்து சுற்றாத இடமும் இல்லை .. விளையாடாத விளையாட்டும் இல்லை ...நாட்கள் செல்ல பத்தாம் வகுப்பு முடிய இருக்கும் தருவாயில் அவர்களுக்கு farewell நடக்கவிருந்தது . தர்ஷினி சிறிது நாட்களாகவே அபியை முன்பு போல் பார்க்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள்..எப்படி என்று தெரியவில்லை ஆனால் ஏனோ இப்பொழுதெல்லாம் முன்பு போல் இயல்பாக அவனிடம் பழக முடிவதில்லை .தன்னை அறியாமலே அவன் மேல் தன் பார்வையை வெகுநேரமாய் பதிக்கிறாள் வேறு பெண்ணுடன் அவன் பேசினாலோ அப்பெண்ணை பார்வையாலே எரிக்கிறாள்.இவை அனைத்தையும் சேர்த்து யோசித்து பார்த்தவளிற்கோ உள்ளங்கை நெல்லிக்காயை விடை கிடைத்துவிட்டது.. ஆனால் தன் தந்தையை நினைத்தும் அபியின் பதிலை நினைத்தும் பயந்தவள் அதை அப்படியே தன மனதிற்குள் புதைத்துவிட்டாள் .
farewellirku அனைவரையும் புடவை அல்லது வேஷ்டி சட்டையில் வர சொல்லி விட அது க்ராமமாதலால் சில பெண்களிற்கு திருமணத்தையும் குறித்துவிட்டிருந்தனர் .வேஷ்டி சட்டையில் தயாராகி வந்து தர்ஷினியின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தவன் அங்கே புடவையில் வந்தவளை கண்டு மூச்சு விடவும் மறந்தான் என்றால் மிகையாகாது .மனது "என்னடா இது எனக்கு வந்த சோதனை கொஞ்ச நாளாவே இவளை என்ன அறியாமை யூனிபோர்ம்ல இருக்கேளேயே பே னு பட்டிக்காட்டான் முட்டாய் கடைய பாக்குற மாறி பாத்துகிட்டு இருக்குறேன்.. இன்னிக்கு என்னடானா ரொம்ப அழகா தெரியுறாளே ஏன் கண்ணுல எதுவும் ப்ரோப்ளேம்மோ"என்று அவன் உணர்வுகளின் பெயர் புரியாது எண்ணிக்கொண்டிருக்க தர்ஷினியோ இன்றுடன் அபியை பார்ப்பது கடைசியாக இருக்க கூடும் என்று அவனை முடிந்த மட்டும் கண்ணில் நிறைத்துக்கொண்டிருந்தாள்...நாளும் முடிவடைய குழப்பத்திலேயே சுற்றிக்கொண்டிருந்த அபிக்கு பாரெவெல்ல் முடியும் நேரம் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப கண்ணீர் நிறைந்தவாறு தன்னையே பார்த்தபடி திரும்பி சென்ற தர்ஷினியின் விழிகள், நிதர்சனம் உரைக்க மனதில் ஏதோ பெரும் பாரம் அழுத்துவதாய் உணர்ந்தவன் அந்த நொடி,
தன் சோன் பப்டியை காதலிப்பதை அப்பொழுதே அவள் விழி வழியே பிரிவின் தருவாயில் உணர்ந்தான் அபி.
காதலை உணர்ந்த நொடி அவளைக் காண மனம் துடிதுடித்தது..ஆனால் அதை சொல்ல தைரியம் வரவில்லை.. படிக்கும் வயதில் என்னதிது என அவனுக்கு அது அபத்தமாகத் தெரிந்தது.. தங்களது பள்ளிப் படிப்பு முடிந்த பின்பே அவளிடம் தன் காதலைத் தெரிவிக்க வேண்டும் என்று மனதில் ஏற்றுக் கொண்டவன் அதன்படி நடக்கவே செய்தான்.. தர்ஷுவே காதலை சொல்ல வந்தாலும் எதாவது சொல்லி மழுப்பிவிடுவான்..
இப்படி இருக்க பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வும் முடிந்து விட்டது..தனது காதலை அவளிடமும் அவள் தந்தையிடமும் தெரிவித்து விட வேண்டும் என நினைத்துகஇ கொண்டவன் சைக்கிளில் அவர்கள் வீட்டை நோக்கிச் சென்றான்..
அவளைக் காண வீட்டிற்கு சென்றவனது பார்வையில் அவளது தந்தை எதையோ பறி கொடுத்தது போன்று கோயில் அருகிலுள்ள மண் திட்டில் அமர்ந்திருந்தது ஏதோ செய்ய அவர் அருகே நெருங்கினான்.
அவன் பக்கத்தில் சென்ற போது அவரின் நண்பன் பேச ஆரம்பித்தார்.
" ஏன்பா அவுங்கதான் உன் பொண்ண அவுங்க பையனுக்கு கட்டிக் கொடுக்கலன்னு கோபத்துல பேசிட்டாங்க...அதுக்குன்னு அதையே தான் நெனெச்சிட்டு இருப்பியா.. எழுந்து வா " என அழைக்க,
" என்னால முடியலடா.. அவ சின்ன பொண்ணு கல்யாண வயசில்லைன்னு தெரி்ஞ்சும் எப்படி நான் அந்த கல்யாணத்த ஒத்துக்குவேன்.. என் மனைவி சாகும் போது அவளுக்கு ஒன்பது வயசு.. அப்பையெலாம் ஒத்த பொண்ண வெச்சிக்கிட்டு நான் கஷ்டப்படும் போது வராத சொந்தம் இப்போ சொந்தங் கொண்டாடறதுல என்னடா நியாயம் இருக்கு.. அவன் தாய் மாமன்னா என்ன வேணா என் பொண்ணப் பத்தி பேசுவானா.. அவன் பையனுக்கு தர மறுத்த உடனே
' ஆம்பள வளக்கிற பொண்ணு தான..எப்படி தரங் கெட்டு ஓடிப் போறா..இல்ல காதல் கீதல்னு வந்து நிக்கப் போறா.நானும்
பாரக்க தான போறேனு ' என் முன்னயே என் பொண்ணப் பத்தி தப்பா பேசறான்.. எனக்கு அதைக் கேட்ட உடனே அவன அங்கையே கொன்னறலாம்னு தோனிருச்சு..ஆனா என் பொண்ணுக்கு என்னை வி்ட்டா வேற யாரும் இல்லைங்கறனால தான் பல்லக் கடிச்சிகிட்டு வந்துட்டேன். " என்றார் ஆதங்கமாக,
" கவலைப்படாதடா.. உன் பொண்ணுக்கு அவ படிச்சு நல்ல வேலைக்கு போன பிறகு நீயே மாப்பிள்ளை பார்த்து இவனுங்கலாம் மூக்குல விரல வைக்கற மாறி ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வை.. அது போதும் அவங்க மூக்க உடைக்க
இன்னும் கொஞ்ச நாள்தான் இந்த ஊர்ல இருப்ப..அதுவரை பொறுத்துரு.
.. அதை விட்டுட்டு நீயும் டென்சனாகி பிரசர ஏத்திக்காத.. டாக்டர் ஏற்கனவே உன்னை கொஞ்சம் கோபப் படறத குறைச்சிக்க சொல்லிருக்கார்ல. " எனச் சொல்லி அவரை கைத் தாங்கலாக அழைத்துச் சென்றார்..
அவர்கள் பேசியதில் அவனுக்கு புரிந்தது தர்ஷூவிடம் தான் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது தான்..
தன் வீட்டை நோக்கிச் செல்ல திரும்பும் போதே அவளை முறைத்த வண்ணம் அவள் நின்றிருந்தாள்..
" என்ன இவ்ளோ தூரம் வந்துட்டு வீட்டுக்கு கூட வராம போற மூட்டைப் பூச்சி. " என கோபத்தில் ஆரம்பித்து சோகத்துடன் முடித்தாள்..
" இல்ல வேற வேலையா வந்தேன்டி" என்றான்..
அவள் தயங்கியபடியே " டேய்.. மூட்டைப்பூச்சி உங்கிட்ட ஒன்னு சொல்னும்டா.. இப்ப விட்டா இனி உங்கிட்ட சொல்ல முடியாம போயிடும்
..
ஆனா அதைக் கேட்டா நீ சிரிக்கக் கூடாது சரியா .. " என்றவள் " உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா.. நான் நினைக்கிறேன்..நான் உன்னை காதலிக்கிறேன்னு.. " என அவளே தன் காதலை கூறி ஆர்வமாய் அவன் முகத்தைப் பார்க்க
அவனோ பதில் சொல்ல முடியாமல் தவித்துப் போனான்..
" டேய் சொல்லுடா..ஏன்டா எதும் பேச மாட்டிங்கிற "
" என்ன சொல்ற சோன்பப்டி.. உன்னை எனக்கு பிரண்டா மட்டும்தான் பிடிக்கும்.. மத்தபடி நான் உன்னை வேற எந்த மாறியும் நினைச்சதில்ல.. எப்போ உன் மனசுக்குள்ள இப்படி தோனுச்சோ அதுலருந்து நாம பிரண்சிப் லயும் அர்த்தம் இல்ல.. இனி உன் முகத்துல கூட முழிக்க விரும்பல " என்றவன் நகர முயற்சிக்க,
அவளோ அவன் விளையாடுகிறான் என நினைத்து " நிஜமா இந்த சோன்பப்டிய உனக்கு பிடிக்கலயா மூட்டைப் பூச்சி " என பாவமாக கேட்க
" இனி என் வாய்ல இருந்து எப்போதுமே சோன்பப்டினு கூட கூப்ட மாட்டேன்.. போதுமா " என்றவன் இதற்கு மேல் இங்கிருந்தாள் தான் தன் காதலை உலறி விடுவோம் என சைக்கிளில் பறந்து விட்டான்.
அந்த நிகழ்வுக்கு அடுத்து பலமுறை அவள் ஊருக்கு செல்வதற்கு முன் அவனிடம் தன் காதலை வெளிப்படுத்தியும் அவன் செவி சாய்க்கவே இல்லை.. ஏங்கிப் போனவளின் மனது மறுத்துப் போய்விட்டது.. அவனும் அவளை பார்க்க கூட முயற்சிக்கவில்லை
அதன் பின் காலத்தின் வேகத்தில் இருவரும் வெவ்வேறு கல்லூரிக்கு சென்று விட மனம் மட்டும் ஓயாது ஒருவரை பற்றி மற்றொருவர் நினைக்க வைத்துக்கொண்டிருந்தது .
அவனிடத்தில் வேறு யாரையும் நண்பனாக கூட வைத்துப் பார்க்க முடியாததால் நண்பர்கள் வட்டாரத்தைக் கூட அவள் அமைத்துக் கொள்ளவில்லை..பேச்சையும் குறைத்துக் கொண்டாள்.
அதன்பிறகு அவளை இங்கு கோவிலில்தான் மீண்டும் பார்த்தான்.. அதன்பிறகு நடந்ததுதான் அவர்களுக்கே தெரியுமே..
பிளாஸ்பேக் முடிந்தது...
அபிக்கும் தர்ஷுக்கும் தெரியாத விசயங்களும் அவர்கள் வாழ்வில் இருந்தது.. அது
மகள் தவறான வழியில் போகக் கூடாது என்பதால் ஆரம்பத்திலிருந்தே கண்டிப்புடன் இருந்த அவரது தந்தைக்கும் தர்ஷுவின் மாற்றம் புரிந்தது.ஆனால் காரணம்தான் புரியவில்லை...கண்டிப்புடனே இருந்தவர் தாயாய் மாறி அரவணைக்க மறந்துவிட்டார்.
ஆனால் அபியை கோயிலில் கண்டவளின் முகத்தில் வழியும் சந்தோசத்தைக் கண்டாரோ அன்றே அவர் முடிவு செய்துவிட்டார் அபி மற்றும் தர்ஷுவின் திருமணத்தை..
அன்று வீடு மாறி வருவதற்கு சம்மதம் கேட்கும் போது கூட இதை மனதில் வைத்தே ஒப்புதல் அளித்தார்.. ஆனால்
இவை அனைத்தும் அபிக்கு கூட தெரியாது..
அபிக்கு தெரியாத இன்னொரு விசயம்
அவர் தர்ஷுவிற்கு மாப்பிள்ளை பார்த்தது கூட பொய் தான் என்று.. அப்படிச் சொன்னால் தான் இருவரில் ஒருவராது காதலை ஒத்துக் கொள்வர் எனத் திட்டமிட்டு காயை நகர்த்தினார் ..
அதில் வெற்றியும் கண்டுவிட்டார்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz