ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 39

Nivethamagathi

அனைத்து பிரச்சனைகளும் முடிந்து அனைவர் வாழ்வும் இன்பமயமாக சென்று கொண்டிருக்க அதில் மேலும் சந்தோசத்தை அள்ளித் தெழிக்கும் விதமாக ஐசு கறுவுற்றிருந்தாள்..
தான் தந்தையாகப் போகும் செய்தியை கேட்டதிலிருந்து அசோக்கை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை..
ஐசுவை அவன் கவனித்துக் கொள்ளும் விதத்தினை கண்டு அனைவருமே வியந்து போயினர்.

ஐசுவின் உடல்நிலையைக் கண்டு அவளை கல்லூரியிலிருந்து நிற்க சொன்னவன் தானும் தன் வேலை நேரத்தைக் குறைத்துக் கொண்டு அவளுடன் பொழுதைக் கழித்தான்.. அவள் குடிக்கும் பழரசம் தொடங்கி டானிக் வரை அனைத்தையும் தான் ருசி பார்த்த பின்னரே அவளுக்கு கொடுப்பான்.. ஐசுவும் தனது கணவனின் அன்பில் திக்கு முக்காடித்தான் போனாள்..

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

வழக்கம்போல கனியை அழைத்துச் செல்ல வந்த கதிர், கனியிடம் எப்போதும் இருக்கும் துள்ளல் இல்லாமல் இருப்பதைக் கண்டு துணுக்குற்றான்..

வீட்டிற்கு அழைத்துச் சென்றவன் அவளிடம் வினவ, " நாளைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங்" என்றாள்..

" மீட்டிங் தான..அதுக்கு ஏன் பயப்படற.. "

" மாமா..அது வந்து...ரிசல்ட் வந்துருச்சு.. " என அவள் நடுங்கியவாரே கூறவும்..அவள் பயத்திற்கான காரணம் அறிந்து
" பரவால கனிம்மா.. காலேஜ்ல அரியர் வைக்கறதுலாம் சகஜம்டா " என ஆதரவாய் தலையை நீவ, அதில் ஆறுதலைடைந்தவள் " அப்போ நாளைக்கு நீயே வரியா..அந்த சியாமளா கொரங்கு..இன்னைக்கு என்ன ரொம்ப திட்டிருச்சு.. நீ வந்தா ஒன்னுஞ் சொல்லாது.. " என முகத்தை சுழித்தவாரே கேட்க, எப்போதும் அவள் பள்ளியில் கூட தான்தான் அவளுக்கு கார்டியனாக செல்வதால் விபரீதம் தெரியாமல் சரி என தலையாட்டினான்.

" அம்மாட்ட சொல்லாத மாமா.. நான் ரீவேலுவேசன் போட்டு பாஸ் பண்ணிடறேன்..அப்ரோ சொல்லிக்கலாம்..ப்ளீஸ்..ப்ளீஸ் " என கண்களை சுருக்கிக் கெஞ்ச அவள் கெஞ்சலில் கரைந்தவன் " நெக்ஸ்ட் டைம் இப்படி பண்ணக்கூடாது.. " என்ற கண்டிப்போடு எழுந்து சென்றான்..

அடுத்த நாள் பத்து மணிக்கு அவளது கல்லூரி வளாகத்திற்கு வந்தவன் ஐசு வேலையை விட்டு நின்றுவிட்டதால் அவளது தற்போதைய வகுப்பாசிரியரான சியாமாளாவின் கேபினுக்குள் நுழைந்தான்..

தன்னிடம் சிரித்த முகமாகவே பேசும் சியாமளாவின் முகத்தில் இன்று அனல் தெரித்தது.. அவனை அமரச் சொன்னவள் " நீங்க எதுக்கு வந்தீங்க.. நான் கனிமொழி யோட பேரண்ட்ஸ்தான வரச்சொன்னேன்..அப்போதான தன் பொண்ணோட இலட்சனம் அவுங்களுக்கும் தெரியும் " என வார்த்தைகளை தெறித்தாள்.

அவள் பேசும் விதத்தில் எரிச்சலடைந்தவன் " அவ அப்படி என்ன தப்பு பண்ணானு நான் தெரிஞ்சுக்கலாமா " என பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,

" இங்கப் பாருங்க கதிர் சார்.. உங்களுக்கு உங்க அக்கா பொண்ணு ஒசத்தியா இருக்கலாம்.. ஆனா எங்களுக்கு எல்லாருமே ஒன்னுதான்.. பசங்க கூட பரவால சார்..ஆனா கனிமொழி நாலு அரியர் வெச்சிருக்கா.. பஸ்ட் இயர்லயே அவளால தாக்குப் பிடிக்க முடியாது போல.. தயவுசெஞ்சு டிசி வாங்கிட்டு போயிடுங்க.. அவளால காலேஜ் ரிசல்ட் பர்சென்டேஜ் டவுன் ஆயிடும்.. எங்க காலேஜ்க்குனு ஒரு நேம் இருக்கு சார் " என வெறுப்பாக சொன்னாள்..

அவள் பேசப்பேச கனியின் மீது கதிருக்கு அவ்வளவு கோபம்.. அவள் ஒழுங்காக படித்திருந்தால் கண்டவர்களிடம் தான் தலை குனிந்து நிற்கும் நிலை இருந்திருக்குமா என மனதில் புகைந்து கொண்டவன்
" மேடம் அவ இனி ஒழுங்கா படிப்பா.. அதுக்கு நான் கேரண்டி.. " என்றவனை இடைமறித்து

"படிப்பு மட்டும் இல்ல சார்.. அவ கூட இருக்குற மத்த பிரண்சையும் படிக்க விடறது இல்ல.. துளசி கிளாஸ் டாப்பர்..இவளோட சேர்ந்தா கெட்டுப் போயிருவான்னு வேற பயமா இருக்கு.. " என கனியை என்னென்ன கூற முடியுமோ அத்தனையையும் ஒன்றுக்கு இரண்டாக கதிரிடம் போட்டுக் கொடுத்தாள்..

கதிருக்கு மனபாரம் கூடியது..
" மேடம் இனி நானே அவளப் பக்கத்துல இருந்து பார்த்துக்கறேன்.. " என்ற எந்த விளக்கத்தையும் காதில் ஏற்றுக் கொள்ளாமல் அவள் மீண்டும் பழைய பல்லவியையே வார்த்தைகளை மாற்றி மாற்றி பாட பொறுமை இழந்தவன் கத்த தொடங்கினான்..

" என்ன நினைச்சிட்டிருக்கீங்க.. படிப்பு வரலைனா காலேஜ விட்டு நின்னுறனுமா. அப்ரோ எதுக்கு நீங்க இருக்கிங்க.. எல்லோரும் ஒரே மாதிரியே படிக்க முடியாது.. வீக் ஸ்டூடண்னா நீங்க தான் அக்கறை எடுத்து சொல்லித் தரனும்.. நீங்களே மத்தவங்க சொல்றத புரிஞ்சிக்காம இப்படி காட்டுக் கத்து கத்துனா அவுங்க எப்டி புரிஞ்சிக்குவாங்க.. நான் மேனேஜ்மென்டலயே பேசிக்கிறேன்.. " என அவன் வார்த்தைகளில் அனல் தெரிக்கும் வண்ணம் பேச, சியாமளாவோ உள்ளுக்குள் நடுங்கினாலும்

" நானும் அவ கெட்டுப் போறதே உங்களாலதான்னு  சொல்லுவேன்.வயசுப் பொண்ண பைக்ல வெச்சு ஊரைச் சுத்திகிட்டு காதல் வசனம் பேசிட்டுருந்தா படிப்புல எப்படி கவனம் போகும்னு அவுங்க கிட்ட நான் சொன்னா உங்க மானம்தான் போகும்.. உங்க அக்கா பொண்ண பிடிச்சிருந்தா அவ படிப்பு முடிச்சவுடனே கல்யாணம் பண்ணிக்கறேனு முடிவெடுத்தா  மட்டும் பத்தாது அவள படிக்கவும் விடனும்.. அதைவிட்டுட்டு சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காம " என அவள் அடுத்த வார்த்தை பேசி முடிப்பற்குள் அவளது காது கொய்யென்று சத்தம் எழுப்பியது..
கண்கள் சுழல அவனைப் பார்க்க " நீ இருக்கிற இடம் காலேஜ்ங்கிற ஒரு காரணத்தால இப்ப தப்பிச்சிட்ட..இல்லண்ணா என் பொண்ணு மாறி இருக்க கனிம்மா கூட என்னை சேர்த்து வெச்சு பேசுன உன்னை கொன்னு புதைச்சிருப்பேன் ."என்றவன் தன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு
" உங்க காலேஜ் கரஸ்பான்டட் என்னோட வெல்விஷர்தான்.. அவர் சொல்லிதான் ஐஸ்வர்யாவும் கனிம்மாவும் இந்த காலேஜ்ல சேர சம்மதிச்சேன்..மீதிய நான் அவர்கிட்டயே பேசிக்கிறேன் " என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் அதற்கான நடவடிக்கையையும் எடுத்தான்..சியாமளாவை கதிரிடம் மன்னிப்புக் கேட்க வைத்தவர் அவளை கண்டித்தும் அனுப்பினார்..

வேலைக்குப் போகாமல் வீட்டிற்கு வந்தவனது ஆத்திரம் இன்னும் குறையவில்லை.. அவளுக்கு எப்படி தன் கனிம்மாவை தன்னுடன் இணைத்து பேச மனம் வந்தது என கோபத்தில் சுவற்றில் கையை அடித்துக் கொள்ள அங்கே இருந்த ஆணியில் கைப்பட்டு இரத்தம் பீறிட்டுக் கிளம்பியது..

சத்தம் கேட்டு வந்த தேவி பதறி கட்டுப்போட்டுவிட்டு என்னவென்று வினவ அவரிடம் கூட வாயைத் திறக்கவில்லை அவன்.. சாப்பிடச் சொல்லி அழைத்தது கூட காதில் விழாதவாறு யோசனையிலே இருந்தான்..
மாலை நேரமானதை உணர்ந்தவன் அபியிடம் சொல்லி கனியை அழைத்துவரச் சொன்னான்..   

வேலை இருப்பதாக அபி வந்ததும் கிளம்பிவிட  கனி கதிரைப் பார்க்க அவனது அறைக்குச் சென்றிருந்தாள்..

" மாமா.. நீ காலேஜ் வந்தியா.. அப்ரோ ஏன் என்ன பார்க்க வரல.. அவன எதுக்கு அனுப்புன " என கேள்வி கேட்டவாறே உள்நுழைய அவளைப் பார்த்ததும் அதுவரை படுத்திருந்தவன் எழுந்து நின்றான்..

" மாமா இன்னைக்கு சியாமளா என்னை திட்டவே இல்லையே " என சிரித்தவாறு கூறயவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்..
தன் மாமனா தன்னை அறைந்தது என சந்தேகத்தோடு அவனை நோக்க,

அவளின் மற்றொரு கன்னத்திலும் அறைந்தவன் " இனிமே ஒழுங்கா படிச்சு அந்த நாலு அரியரை கிளியர் பண்ற ..இனி உம்மேல எந்த கம்பெளெயின்ட்டும் வரக் கூடாது.. புரியுதா " என விரல் நீட்டி எச்சரித்தான்..

இதுவரை தன்னை அடிக்காதவன் தன்னை தாயிடம் இருந்து அடி வாங்கும் சமயம் காப்பாற்றுபவன் இன்று தன்னையே அடிக்கிறான் என்றால் தான் தான் தவறு செய்து விட்டோம் என்பதை உணர மறுத்துவிட்டாள்.. கோபமாக  அவள் அறைக்குச் சென்று கட்டலில் படுத்தவள் தேம்பித் தேம்பி அழுக ஆரம்பித்தாள்.. அவன் சமாதானம் செய்தாலும் பேசக் கூடாது என முடிவெடுத்தவள் அவன் வருகிறானா என கதவையே பார்த்தவாறு அழுது கொண்டிருக்க அவன் வந்தபாடுதான் இல்லை..

அவளை அடித்து விட்டு இங்கு இவன் துடித்துக் கொண்டிருந்தான்.. ஆனால்
தான் இறங்கிச் சென்றால் கண்டிப்பாக அவள் படிக்க மாட்டாள் என்பதை புரிந்தவன் அப்படியே அமர்ந்து விட்டான்..
சிந்தனையில் உலன்றவனை அவனது கைப்பேசி நினைவிற்கு கொண்டுவர அதனை உயிர்பித்தான்..

" மாமா.. எனக்கு இப்போதான் இன்னொரு ஸ்டாப் சொன்னாங்க.. அவ இவ்ளோ சீப்பா பேசுவான்னு நான் நினைக்கவே இல்ல.. அவ உங்களப் பத்தி பேசி நச்சரிச்சிட்டே இருந்ததால அன்னைக்கு நீங்க  ஒரு பொண்ணு விரும்பறதையும் அவ படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னதையும் அவகிட்ட சொல்லி அவள வார்ன் பண்ணேன்.  ஆனா அவ அந்தப் பொண்ணு நம்ம கனின்னு நினைச்சி இப்படிலா பேசிட்டா மாமா.. எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு..கனிக்கு தெரிஞ்சா ரொம்ப ப்பீல் பண்ணுவால மாமா " என ஐசு அவனிடம் மன்னிப்பைக் கேட்க அவளின் தாய்மையைக் கருதி அவளிடம் கோபத்தைக் காட்டாதவன் அசோக்கிடம் கொடுக்கச் சொன்னவன் அவனிடம் சில அலுவலக சம்பந்தமான விசயங்களைப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்..

மணியைப் பார்க்க அது எட்டு என காட்டியது.. கனியை தேவி சாப்பிட சொல்லி அதட்டிக் கொண்டிருந்தது அவன் செவிகளில் விழுந்தது..

தட்டில் சாதத்தை நிரப்பியவன் தேவியிடம் தான் பார்த்துக் கொள்வதாக கூறி அவரை வெளியே அனுப்பினான்..

" கனிம்மா எழுந்திரி.. "

" கனிம்மா "

" கனிம்மா..சாி..நான் உன்னை அடிச்சிருக்க கூடாதுதான் . கோபத்துல அடிச்சிட்டேன்.. சாரிடா.. எழுந்திரு " என எவ்வளவு கெஞ்சியும் அவள் எழவில்லை.. அவளை கைப்பிடித்து இழுத்து தன்னருகே அமர வைத்தவன்
அவள் முகம் திருப்ப,அவன் அடித்த அடியால் கன்னம் ரெண்டும் நன்றாக சிவந்திருந்தது.. அவள் இதனால்தான் தன்னிடம் முகம் காட்ட முடியாமல் எழாமல் படுத்திருந்தாள் என்பதை உணர்ந்தவன் கண்களில் கண்ணீர் ததும்ப " சாரிடா " எனக் கெஞ்சினான்..

அவள் " பரவால மாமா.. நீதான அடிச்ச.. எனக்கு வலிக்கவே இல்ல " என சமாதானம் சொன்னாலும் அவன் மனம் ஆறவில்லை..

அவளுக்கு சாப்பாட்டை ஊட்டியவன் " நான் சொல்றத உணர்ச்சி வசப்படாம பொறுமையா கேட்கனும் சரியா " என பீடிகை போட,

அவளும் அவனுக்கு ஊட்டிவிட்டவாறு " எனக்குத் தெரியும் மாமா.. நீ போன் பேசறத கேட்டுட்டேன் " என்றாள் அமைதியாக

" நான் எடுக்கப் போற முடிவால என்மேல உனக்கு கோபம் இல்லையே.. "

" இல்லைனு பொய் சொல்ல மாட்டேன்.. ஆனா எங்க மாமா ஒரு முடிவெடுத்தா கண்டிப்பா அதுல ஒரு காரணம் இருக்குனு தெரியும்.. " என்றவள் " கடைசில துளசிக்கும் உனக்கும் என்னாலதான மாமா பிரச்சனை.. சாரி மாமா " என்று அவன் தோளினில் சாய்ந்துகொண்டு அழுகத் தயாராக
" அதெல்லாம் ஒன்னுமில்ல.. ஆனா
நான் இந்த முடிவ உங்க ரெண்டு பேரோட படிப்புக்காகவும் உங்கள யாரும் குறை சொல்லக் கூடாதுன்னும் தான் எடுக்கிறேன்.. அதை மட்டும் நீ மறந்துற கூடாது " என்றதும் சரி என தலையாட்டியவள் தட்டை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்..

கனியை சமாதனப்படுத்தியவனால் துளசியை சமாதனப்படுத்திட முடியுமா எனத் தெரியவில்லை..

அவன் என்ன முடிவெடுத்திருக்கிறான் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா?

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz