ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 2

Nivethamagathi

ட்ரிங் ட்ரிங்..ட்ரிங்.. ட்ரிங்..

ஹான் சொல்லுடா

கதிர் போன எடுக்க உனக்கு இவ்ளோ நாள் ஆகுமா.. எங்கடா போய் தொலஞ்ச.. என எதிர்முனையில் எரிச்சல் கலந்த குரல் கேட்க

" நா.ன் எ.ங்க.டா போயி .தொ.ல.ஞ்ச.. இதோ இங்.கதா... ப.டு.த்து.க் கிட.க்கு.றேன்."

கதிர் நீ குடிச்சிருக்கியா.. என்னால நம்பவே முடியல.. சரி அட்ரஸ் சொல்லு.. நான் வரேன்..

போ.டா... டேய் நீ வே.ணா " என வார்த்தைகள் தரம்புரண்டு ஓட

ஏன்டா குடிச்சிட்டு நீயே உன்னை கஷ்டப்படுத்திக்கற.. உன் லீவ் முடிஞ்சு 4 நாளாகுது.. எம்.டி உன்னை காணம்னு உன் போஸ்ட வேற யாராவதுக்கு கொடுக்க போறானாமாடா..வாடா

அவ.அவ.னு.க்கு லை.பே போச்..சாம்.. இ.து.ல போ.ஸ்.டா.. நா.ன் எ.ன்ன மந்.தி.ரியா.. அதற்கு மேல் பேச முடியாதவாறு மயக்கமடைந்தான்..

20 நிமிடங்களுக்கு பிறகு, அபி அவனை எழுப்பி முகத்தில் தண்ணீரை வேகமாக அடித்தான்.. தூக்ககலக்கத்தில் இருந்த அவனுக்கு வாங்கி வந்திருந்த இட்லிகளை வழுக்கட்டாயமாக ஊட்டி விட்டான்.

அவன் போதை மயக்கத்திலும் " ஏன் இப்படி பண்ண.. என்னை பிடிக்கலைனா சொல்ல வேண்டியதுதான.. எதுக்குடி என்னை அவமானப்படுத்துன " என புலம்ப,
அதைக் கேட்ட அபி தலையிலடித்துக் கொண்டான்..

அவனுக்கு துணையாக கதிரின் வீட்டிலே அன்றிரவு படுத்துக் கொண்டான்..

அடுத்த நாள் மகிழ்ச்சியுடன் கல்லூரிக்கு கிளம்பினர் துளசியும் கனியும்.. திரைப்படத்திலும் கதைகளிலும் செய்வதைப் போல முதல்நாள் கேலிவதை செய்வார்கள் என பயந்துகொண்டு சென்ற இருவருக்கும் புஸ்ஸென்றானது..

சீனியர்கள் இவர்களை இன்முகத்துடன் வரவேற்று எந்தப் பிரிவு என்று கேட்டு வழியையும் காண்பித்தார்கள்..

வகுப்பிலும் பெரும்பாலும் வெளி மாவட்டங்களிலிருந்தே மாணவ மாணவிகள் வந்திருந்த காரணத்தினால்
வீட்டு நினைப்பால் சில பெண்கள் அழுதிட, சிலர் " காலேஜ் ஹாஸ்டல் ஒன்னும் ஸ்கூல் ஹாஸ்டல்மாறி இருக்காது ஜாலியா இருக்கும்.. இங்க ஸ்டடி ஹவர்ஸ் கிடையாது " என ஆறுதல் கூறி்க் கொண்டிருந்தனர்..

கொஞ்ச நேரத்தில் பேராசிரியர் வந்துவிட அவரும் கடமைக்கே என மாணவர்களது பெயர்களை கேட்டுவிட்டு பாடம் நடத்த துவங்கினார்.

துளசி பாடத்தில் மூழ்க,.. கனியோ 10 நிமிடத்திற்கு மேல் தாக்கு பிடிக்காமல் அருகில் தன்னை கண்டுகொள்ளாது பாடம் கவனித்த துளசியை சுரண்டி
" ஹேய் என்னடி காலேஜ் இப்படி மொக்கயா இருக்கு.. காணாக்காணும் காலங்கள் மாறி காலேஜ் இருக்கும்னு பார்த்தா ஸ்கூல விட மோசமா இருக்குது.. நம்ம ஸ்கூல கூட பர்ஸ்ட்டே பாடம் நடத்த மாட்டங்கடி " என்று கனி புலம்ப,

அருகே அமர்ந்திருந்த ரக்ஷ்னா " இதெலாம் தெரியாமலா இஞ்சினியரிங் ஸூஸ் பண்ணிங்க.. இதுக்கே பயந்துட்டா எப்படி..
இன்னும் நிறைய இருக்கு மச்சி." என்றிட,

முன்னாடி டெஸ்கில் அமர்ந்திருந்த ரதி பின்னாள் திரும்பி
" டெஸ்ட்ல பெயிலாயிட்டா ரீடெஸ்ட் எழுதி பாஸ் பண்ணாதான் விடுவாங்க. இல்லைனா அசைன்மென்ட் சப்மிட் பண்ணனும்னு சீனியர்ஸ் சொன்னாங்க நட்பு " என்க,

" மார்க்ஸீட்ட பேரண்ட்ஸ் நம்பர்க்கு மெசேஜ் பண்ணிடுவாங்க. அதும்
3 சப்ஜெக்ட்ல பெயில் ஆயிட்டா கன்பார்ம் பேரண்ட்ஸ் வரணும் " என ரக்ஷ்னா
அடுத்த குண்டைத் தூக்கிப் போட கனிக்கு மூச்சே நின்றுவிட்டது..

கனிக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்.. அவளே துளசியின் கடும்முயற்சியால் தான் பள்ளிப்படிப்பையே முடித்தாள்.. இன்று கூட காலேஜ்தான ரிசல்ட் என்ன பேப்பர்லயா போடப்போறாங்க..என அசால்டாக துளசியை மட்டுமே நம்பி வந்தவளுக்கு இதும் வேண்டும் .. இன்னமும் வேணும் என புத்தி காரித்துப்ப.. துளசியை மனதில் திட்டியபடியே பாடத்தை கவனிக்கலானாள்.. ஆனால் பாதிகூட மண்டையில் ஏறவில்லை..

துளசி துடுக்குத்தனமாக இருந்தாலும் படிப்பு விசயத்தில் படுசுட்டி.. வகுப்பை நன்றாக கவனித்து மனதில் பதித்துக் கொள்வாள்.. ஆனால் வீட்டில் புத்தகத்தை தொடமாட்டாள்.
கனி அவளுக்கு நேர்மாறு.. வகுப்பில் கவனிக்காமல் வீட்டிலே சென்று புரியாமல் நீண்ட நேரம் புத்தகத்துடன் மல்லுக்கட்டுவாள்.. இறுதியில் அவளது நட்பான நித்ராதேவி வந்து அவளை காப்பாற்றி விடுவாள்..

துளசி கூட " ஏன்டி உங்க வீட்ல உனக்கு நடக்குற கொடுமைக்கு நீ நல்லா படிச்சீனா சீக்கிரமா வேலை வாங்கி அந்த நரகத்த விட்டு போயிடலாம்ல " என அடிக்கடி கேட்டிட,
அவளும் சளைக்காமல்
" நா என்ன வெச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன்.. என்னால இதான் முடியும்..
நான் கிளாஸ்ல மட்டும்தான் சந்தோசமா இருக்கேன்..இங்கயாச்சும் நிம்மதியா இருந்துட்டு போறேனே.. ப்ரியா விடுடி.. " என மழுப்பி விடுவாள்..
அதற்கெலாம் சேர்த்து தான் கனியை மிகவும் கட்டுபபாடான கல்லூரியில் கோர்த்துவிட்டாள் துளசி..

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

அசோக்.. இங்க பாரேன்..

என்ன ஐசும்மா

அதுவந்து..

சும்மா சுத்திவளைச்சு பேசாம என்னனு சொல்லு.. ஐசு..எதாவது வேணுமா. அம்மா எதாச்சும் சொன்னாங்களா என அக்கறையுடன் ஐசுவின் கண்களைப் பார்த்துவினவ,

நாம கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம்னு தோனுது.. என தயங்கியபடி கூறிட அவனது முகம் கோபத்தில் சிவந்தது..

என்ன ஐசு பேசற.. கொஞ்சம் விட்ருந்தா என் கண்ணு முன்னாடி நீ வேறொருத்தனோட வொய்பா நின்னுருப்ப அப்போ உனக்கு சந்தோசமா. என கத்த..
அவள் கண்களில் கண்ணீர் வடியத்துவங்கியது.

" அசோக்.. நான் அதுக்காக சொல்லல.. அத்தை மாமாகிட்டவாது நாம உண்மைய சொல்லிருக்கலாம்னு தோணுது " என அழுதுகொண்டே கூற,

" அதுக்காகவா இல்ல என் கம்பெனில வேலை செய்ற கதிர உன்னால மறக்க முடியலைங்கறனாலயா " என்றிட அவனுக்கு
மறுமொழி கூற முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது..இதுவரை அவனது காதல் மொழியை கேட்டறிந்த இவளுக்கு இவனது இந்த அவதாரம் புதியது..

இவனுக்காக
தனது தாய் தகப்பனை விடுத்து அவள்மேல் உயிரையே வைத்திருந்த கதிரையும் உதறிவிட்டு வந்தாளே எதற்கு இவனது பழிப்பேச்சுக்கு ஆளாகவா என மனசாட்சி கேள்விகேட்க " நீ பண்ணிய பாவத்தின் பலன் " என அதுவே பதிலையும் கூறிக்கொண்டது.

கனத்த இதயத்துடன் அவனை நோக்கிட "சாரி ஐசு.. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். இதை பெரிசு பண்ணாத " என சாதாரணமாக கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz