உறவு 24
இங்கே அவள் நேர்முக காணலை வெறும் பேச்சிற்கு நடத்திக் கொண்டிருக்க அங்கே அவனோ தனக்கு வேலை கிடைத்து விட்டது என்று அனைவருக்கும் இனிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான்..
உண்மையில் இவனைப் போன்ற திறமையான ஒருவனைப் பெற்றதால் இந்த அலுவலகத்திற்குத் தான் இலாபம்.. ஆனால் எடுத்த எடுப்பிலே அவனுக்கு உயர்பதவியை வாரிக் கொடுத்துவிட முடியாதே.. அவனது திறமையை வெளிக்காட்டி அவனே பதவி உயர்வு வாங்கிக் கொள்ளட்டும் என தனக்கு கீழாக தனது குழுவில் ஒருத்தராக நியமித்துக் கொண்டாள்..
சிற்றுண்டிச் சாலைக்கு அவனைக் காண ஆவலாக செல்ல அங்கே அவன் ஏற்கனவே தனக்காக நட்பு வட்டாரத்தை உருவாக்கி அதில் ஐக்கியமாகியிருந்தான்.. அவளைக்
கண்டவன் " ஹேய் நட்புஸ்.. நான் இவ்ளோ நேரம் என் பெருமையா பேசிட்டிருந்தனே அது இவுங்கதான் மிஸ் பிரியதர்ஷினி.. என்னோட ஸ்கூல்மேட் " என்று அவளுக்கு கீழ் பணிபுரியும் ஆட்களிடமே அவளை அறிமுகப்படுத்தி வைத்தான்..
அவர்கள் இவளைக் கண்டதுமே சிரிப்பை அடக்க முயற்சிப்பதிலே இவன் எந்த மாதிரி புகழ்ந்திருக்கிறான் என்பதை புரிந்துகொண்டாள். அவனை முறைக்க அவளின் கோபத்தை பலமுறை அறிந்து பயந்தவர்கள் ஆதலால் அங்கிருந்த அனைவரும் அபியைத் தனித்து விடுத்து வெளியேறினர்.
அவனுக்கு எதிரே கோபமாக அமர்ந்தவள் " அறிவிருக்கா உனக்கு.. இங்க எனக்குனு ஒரு ரெஸ்பெக்ட் இருக்கு.. நான் கொஞ்சம் பிரண்ட்லியா பேசுனா உடனே வேலைய ஓப்பி அடிச்சிருவாங்க.. அவுங்க கிட்ட ஏன்டா என்னை பத்தி சொன்ன.. அவுங்க என்னை என்ன நினைப்பாங்க " எனக் கடிந்து கொள்ள..
பல வருடங்களுக்கு பிறகு அவன் வாங்கிய திட்டு என்பதால் அவளை இரசித்துக் கொண்டே " இதோ. இந்தக் கோபத்த தான் நான் அவுங்க கிட்ட சொன்ன.. கண்ணை உருட்டி உருட்டியே என்னை வேலை வாங்கி டார்ச்சர் பண்ணத.. அப்பவும் நான் செய்யலன்னா ஓங்கி அரைஞ்சத சொல்லித்தான் அவுங்கள பயப்படுத்திட்டு இருந்தேன்..
ஹூம் நான் சொன்னா நம்பவா போற.. நானும் கம்பெனில வொர்க் பண்ணவன்தான். எனக்கும் கோ வொர்க்கர்ஸ்கிட்ட எதை சேர் பண்ணனும். எதை ஸ்ஸேர் பண்ணக் கூடாதுன்னு தெரியும் பிரியதர்ஷினி மேடம் " என அவனும் அவள்தொனியிலே சொல்ல...தன் கோபத்தை விடுத்தவள்
" சாரி மூட்டைப்பூச்சி.. என்னைப் பத்திதான் தெரியும்ல.. அவசரப்பட்டு எதாச்சும் கோபத்துல பேசிருவன்னு.. சாரிடா.. அதும் அவுங்க எல்லாரும் எனக்கு சரியான தலைவலி.. ஒன்னும் உருப்படியா பண்ண மாட்டாங்க..அதான் டென்சன் ஆகிட்டேன்.. இதுங்க எல்லாம் என்னத்ததான் படிச்சிட்டு வந்துதுங்களோ " என அவள் புலம்ப ஆரம்பிக்க அவனோ அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்..
டேபிளில் இருந்த டிஸ்ஸு பேப்பரை அவன்மேல் தூக்கிப் போட்டவள் " டேய் சும்மா இரு.. இப்போ என்ன சொல்லிட்டேனு இப்படி சிரிக்கிற.. எல்லாரும் ஒருமாறியா பார்க்கிறாங்க.ஆக்வர்டா இருக்கு " என அவஸ்தையாக அவள் சொல்ல
" ஹேய். கூல்.. டென்சன் ஆகாத.. " என சிரிப்பைக் கட்டுப்படுத்தியவன் " இதுல என்தப்பு எதும் இல்ல.. உன்னை யாரு படிப்ப பத்தி பேசச் சொன்னா.. நீ அதை சொன்னதும் நீ ஸ்கூல்ல பண்ண சாதனைங்க எல்லாம் நியாபகம் வந்துருச்சு.. அதான் " என சீரியசாக சொல்ல முயன்றவன் தோற்று இறுதியில் சற்று சிரித்தும் விட்டான்..
அவன் தனக்கு படிப்பு மண்டையில் ஏறாததையும் அதனால் அவளது தந்தை சைக்கிளில் துரத்தி துரத்தி அடித்ததையும்தான் சொல்லி கேலி செய்கிறான் என்பதைப் புரிந்தவள்..
" ஹலோ.. எனக்கு மேக்ஸ் மட்டும்தான் வராது.. மத்தபடி நான் எல்லா சப்ஜெக்ட்லயும் பார்டர் பாசாச்சும் பண்ணிருவேன்.. எல்லாரும் உன்னை மாறி புத்தகப்பூச்சியா இருப்பாங்கனு நீ எதிர்பார்க்க கூடாது.. " என முகத்தை வெட்டியவள் " படிப்பு மட்டுமே போதாது மிஸ்டர்.அபிமன்யூ.. திறமையும் வேணும்.. அது இருக்கறதாலதான் இங்க நான் வொர்க் பண்றேன்.. காட் டிட் " என சூறாவளியாய் பாய்ந்தவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்ப தயாராக..
அவள் கையைப் பிடித்தவன்
" ஆத்தா மாரியாத்தா.. மாயி.. மகமாயி.. மலை இறங்கிடுமா.. புள்ளை பாவம் இப்பதான் வேலை கிடைச்சிருக்கு .. அந்த சந்தோசத்த என்னோட சிநேகிதிகிட்ட ஷேர் பண்ண உடனே தப்பிச்சு ஓடிறேன்.. அந்த அழகு மொகத்த கொஞ்சம் காமிங்கமா.. " எனக் கெஞ்ச அவன் கையைத் தட்டிவிட்டு நாற்காலியில் அமர்ந்தாள்.
அவள் எதற்காக இந்த சின்ன விசயத்திற்காக கோபப்படுகிறாள் என யோசித்து
அவனும் எதுவும் பேசாமலே இருக்க, அவளே
" சாரிப்பா கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன்.. " என தன்னை சமாளித்துக் கொண்டு அவள் கூற ஆனாலும் அவன் கண்டுபிடித்துவிட்டான்..
" என்னாச்சு தர்ஷு.. அப்பா இன்னும் புாிஞ்சிக்கலையா.. " என்றதும் அவள் கண்களிலிருந்து தானாக கண்ணீர் வந்தது.. ஆதரவாக அவளது கைகளைப் பிடிக்க
" அப்பாக்கு இங்க நான் வேலை செய்யறதே பிடிக்கல.. ஒழுங்கா படிச்சா கவர்மென்ட் வேலை வாங்கிருக்கலாம்னு இன்னும் பழைய பல்லவியவே பாடறாங்க.. எனக்கு என்னோட ஜாப் ரொம்ப பிடிச்சிருக்கு..அதை புரிஞ்சிக்க மாட்டதறாங்க.. எவ்ளோ கஷ்டமான சாப்ட்வேர் புரோகிரோம் என் மனசில அப்படியே நிக்குது.. ஆனா அந்தப் பாலிட்டி.. ஆர்ட்டிக்கிள்.. டைம் லைன், எகனாமி, என்விரான்மென்டல்னு எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும் டைட்டில் தவிர வேற எதுவும் மனசில நிக்க மாட்டிங்குது.. நானும் கோச்சிங் சென்டர் எல்லாம் போய் பார்த்துட்டேன்.. ஒன்னு கூட வேலைக்கு ஆகல.. ஆனா அந்த மனுசன் தினமும் காலைல எழுந்தா ' கால்நா காசுனா கூட கவர்மென்ட் காசு.. அதை உன்னால சம்பாதிக்க முடியலைன்னு ' நடுத் தெருவுல நின்னுட்டு மானத்த வாங்கறாரு.. நான் என்ன வெச்சிகிட்டாடா வஞ்சகம் பன்றேன்..நான் மாசம் 75 தௌசன்ட் சம்பாரிக்குறேன்.. ஆனா அது அவர்க்கு தெரிய மாட்டிங்குதேடா.. அதும் இன்னைக்கு ஸ்கூல் போற பசங்க முன்னாடி எல்லாம் " என அவள் தேம்ப ஆரம்பிக்க அவன் அன்னிச்சையாக அவள் அருகே அமர்ந்து அவளைத் தோளினில் சாய்த்துக் கொண்டு தட்டிக் கொடுத்தான்..
ஆதரவு சொல்ல ஆள் இருக்கிறது என்ற தைரியத்தில் அவள்மனதில் இத்தனை வருடங்களாக மறைத்து வைத்திருந்த காயத்தினை வெளிப்படுத்த துவங்கினாள்.
" நான் இதையெலாம் நான் யார்கி்ட்ட சொல்வேன்.. அன்னைக்கு அப்படித்தான் சன்டே கிரௌண்ட்க்கு போலாம்னு கிளம்புனா உனக்கு கல்யாணம் பண்ற வயசாகுது.. ஏற்கனவே நீ கலர் கம்மி.. இதுல வெய்யில வெளிய போனா இன்னும் கருப்பாகிடுவ.. அப்ரோ கல்யாணம் பண்றது தள்ளிப்போகும்னு சொல்றாருடா.. அப்போதான் நான் அம்மா இல்லைன்னு ரொம்ப பீல் பண்ணேன் தெரியுமா. என்னதான் நான் வெளிய கெத்தா இருந்தாக்கூட உள்ளுக்குள்ள பயந்தாங்கொள்ளிடா.. ஒருத்தங்க அழறப்ப அவுங்க கண்ணீரத் துடைக்க கூட ஆளில்லைனா அது எவ்ளோ வலிக்கும் தெரியுமாடா.. அப்போ நீ கூட இல்லாம போயிட்டல்ல.. இப்ப மட்டும் எதுக்கு வந்த.. போ " என தன்மேல் போட்டிருந்த அவன் கையைத் தட்டிவிட முயல, சற்று அழுத்தம் கொடுத்தவன்
" தர்ஷு காம்டௌன்.. அழாத தண்ணி குடி.." என பாட்டிலைத் திறந்து அவளைக் குடிக்க வைத்தவன் "என் ராட்சசி பொசுக்குனு அழுகுற ஆள் இல்லையே.. இங்கப்பாரு.. அப்பாங்கனா அப்படிதான்டா இருப்பாங்க.. உனக்கு தெரியாததா.. உன் நல்லதுக்கு தான சொல்றாரு.. நான் பேசறேன்டி அந்த விருமாண்டிகிட்ட.. சிரிடி.. " என்று சொல்லியும் அவள் சிரிக்க மறுக்க வேறு வழி தெரியாதவன் " சோன்பப்டி " என அழைக்க தனது கவலைகளை மறந்த அவள் சந்தோசமாக அவனைப் பார்க்க அவனோ தான் டேபிளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சோன்பப்டி பாக்கெட்டை அவள்முன் வைத்தான்.
அவன் தன்னை ஏமாற்றியதால்
அவனிடம் அவள் பொய்யாக சிணுங்க " உனக்கொரு உண்மை தெரியுமா தர்ஷு.. என் பிரண்ட் ஒருத்தி அவளோட பர்த்டேக்கு எப்பவும் சோன்பப்டி தான் எல்லாருக்கும் தருவா.. ஏன்னு கேட்டா சாக்லெட் கம்பெனிக்காரங்க பணக்காரங்க.. அவுங்ககிட்ட நம்ப பணத்தை கொண்டு போய் கொட்டறக்கு பதிலா தள்ளுவண்டில பொட்டிக்கடைல இருக்குற திண்பண்டத்த வாங்குனா அந்த ஒரு ரூபாக்கூட அவுங்களுக்கு உதவியா இருக்கும்னு கிழவிமாறி பஞ்சாங்கம் பேசுவா.. அந்த நிகழ்ச்சிதான் நான் அவகூட பிரண்ட்ஷீப் வைக்க காரணமே.. அவள எனக்கு அவ்ளோ பிடிக்கும் தெரியுமா " என்றதும் அவள் கண்கள் சந்தோசத்தில் மின்னுவதை அவனால் உணர முடிந்தது..
அவள் கவனத்தை திசைதிருப்ப முயன்றதில் வெற்றியடைந்தவன்
"அதான் எனக்கு வேலை கிடைச்ச சந்தோசத்த கொண்டாட அலைஞ்சு திரி்ஞ்சு வாங்கிட்டு வந்தேன் .. இந்தா சாப்பிடு தர்ஷு " என ஒன்றினை எடுத்து அவள் வாய்க்கு அருகே நீட்ட அவளோ அதை சாப்பிடாமல்
" என்னை உனக்கு பிடிக்கும்னா ஏன்டா என்னை சோன்பப்டின்னு கூப்பிட மாட்டிங்குற.. நீ இன்னும் பழச மறக்கலியா.. " என்று எதையும் மறைத்து பேச தெரியாதவள் அவனிடம் இந்த முறையும் நேரடியாகவே கேட்டிட அவனுக்கு தர்ம சங்கடமாகிப் போனது..
தன்னை மீட்டவன் " ச்சேச்ச.. அப்படிலா இல்ல தர்ஷு... எனக்கே தோணறப்ப கண்டிப்பா கூப்பிடுவேன்.. நீ சாப்பிடு " என வழுக்கட்டாயமாக ஊட்டி விட்டவன் தானும் ஒன்றினை எடுத்துச் சாப்பிட்டான்..
அவனிடம் சற்று தள்ளி அமர்ந்தவள் அவனைப் பற்றி விசாரிக்க அனைத்தையும் சொன்னவன் தான் வேலையை விட்டு வந்ததற்கான காரணத்தையும் மறைக்காமல் கூறினான்..
" சரி நீ எதும் நினைக்காம நாளைக்கு வந்து ஜாயின்ட் பண்ணு... அப்படியே துளசிய ஒருநாள் வெளிய எங்காச்சும் கூட்டிட்டு வா.. ஜாலியா என்ஜாய் பண்ணலாம்.. " என்றவள் வாட்சைப் பார்த்து " எனக்கு இப்போ ஒரு பிரசன்டேசன் இருக்கு " என எழுந்து " பாய் அபி " என்று கூறிவிட்டு சென்றாள்..
அவள் வாயிலிருந்து வந்த அபி என்ற வார்த்தையை கைவிட்டு எண்ணிவிடலாம்... ஆயிரம் பேர் சுற்றி இருந்தாலும் அவன்பெயர் மூட்டைப் பூச்சி மட்டும்தான்... அதனால் எத்தனை சண்டை வந்தாலும் அவளை மாற்ற முடியாது.. இன்று ஏன் அபி என்று வேண்டுமென்றே அழைத்துப் போனாள் என யோசனையிலே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
அசோக் அழைப்பதாக வேலையாள் வந்து சொல்ல அதனை நம்பி அவனின் கேபினுக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தான் கதிர் ஒரு அரை மணி நேரமாக..
இன்னும் அரைமணிநேரம் கழித்தே அவனை உள்ளே வரச்சொன்ன அசோக் " கன்கிராட்ஸ் கதிர்வேல்..உங்கள ஒன் ஆப் தி டேரக்டரா புரோமோட் பண்ணிருக்கேன்..இந்தாங்க அதற்கான ஆர்டர் " _என ஒரு கோப்பை அவனிடம் நீட்ட அவனை நம்பாத கதிர் அதை வாங்க மறுக்க,
" மிஸ்டர் கதிர் நீங்க என்ன நம்ப மாட்டீங்கனு எனக்கு நல்லாத் தெரியும்.. ஆனா இந்தக் கம்பெனிக்காக நீங்க பட்ட கஷ்டத்த நான் பார்த்து வளர்ந்துருக்கேன். இந்த அங்கீகாரம் நான் எப்பவோ உங்களுக்கு கொடுத்திருக்கனும்.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. நல்லா படிச்சு பார்த்துட்டு நாலு நாள் கழிச்சு சைன் பண்ணா போதும்.. நீங்க கிளம்புங்க " என்று வெளியே கைக்காட்டினான் சிரித்த முகத்தோடு..
அவன் இடத்திற்கு வந்த கதிர் அதனை
படித்துப் பார்க்கும்போது தான் தெரிந்தது அந்த பதவி உயர்வு அவனை இரண்டு ஆண்டுகள் வெளிநாடு செல்ல வைப்பதற்கான துருப்புச்சீட்டு என்று..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz