ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 23

Nivethamagathi

சாப்பிட துவங்கிய எழில் அங்குமிங்கும் தன் பார்வையை அலைய விட்டுக் கொண்டிருந்த கனியிடம் " அண்ணிய உங்கம்மா திட்னாங்களா " என குற்றவுணர்ச்சியில் கேட்டிட
அதற்கான பதிலாய் " எங்கம்மா அவளத் திட்டிருந்தா இந்நேரம் சுனாமியே வந்திருக்குமே.. ம்ச் . அவள யாரும் திட்டமாட்டாங்க.. திட்டவும் கூடாதுன்னு எங்க மாமா ஆர்டர் போட்ருக்கு " என்று அலுத்துக் கொண்டே கூற,

சற்று நிம்மதி அடைந்தவன் " அப்போ உங்க கதிர் மாமா உன்னையும் திட்ட கூடாதுன்னு அவுங்க கிட்ட சொல்ல வேண்டியதுதான.. அன்னைக்கே ஆனட்டி உன்னை எப்படி திட்டி அடிச்சாங்க . " என்று அவள்மேல் உள்ள அக்கறையில் கூற,

" என்ன எப்போ அடிச்சாங்க " என யோசித்தவள் " இஇஇஇ.. அதெல்லாம் நானும் எங்க மாமாவும் கணக்குலயே எடுத்துக்கல.. நான் தப்பு பண்ணாதான அடிச்சாங்க.. " என்று கூறியதும் ' நீ ஒன்னும் அவ்ளோ நல்லவ இல்லையே ' என்பதைப் போல பார்க்கவும்
அவன் அருகே தள்ளி அமர்ந்து மெதுவாக " உங்களுக்கொரு உண்மை தெரியுமா.. அன்னைக்கு அம்மா என்னை அடிக்கல.. உங்க அண்ணா மேல இருக்குற கோபத்ததான் எங்கிட்ட காட்டுனாங்க. நிஜமா.. சரி அதான் நானும் பொறுமையா இருந்திட்டேன்.. அதும் இல்லாம என்னை அடிச்சிட்டேனு ப்பீல் பண்ணி அன்னைக்கு நைட் எங்கிட்ட சாரில கேட்டாங்க " என்று அவன் நம்பும்படியாக பொய் கூறியவள் எதேச்சையாக திரும்பிப் பார்க்க கண்களில் கொலை வெறியுடன் துளசி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அவளுக்கு தற்போதுதான் தனது காதலை அவளிடம் மறைத்துவிட்டது நினைவு வர அவள் எப்படியும் தி்ட்டத்தான் போகிறாள் என்பதால் தனது காதுகளைத் தயார்படுத்திக் கொண்டாள்..

" கனி இங்க என்ன பண்றேனு தெரிஞ்சுக்கலாமா " என்று துளசி கோபமாக கேட்கவும் அதற்கு பதில் சொல்ல தயங்கிய கனிக்காக " துளசி நான் தான் அண்ணிக்கா" என ஆரம்பித்தவுடன் " மிஸ்டர் நான் கனிய தான் கேட்டேன்.. உங்கள கேட்கல.." என்று துளசி சொல்ல,

" ஹேய் எதுக்குடி இப்படி மிரட்டுற.. நான் என்ன கொலையா பண்ணிட்ட.. நாங்க ரெண்டு பேரும் விரும்புறோம்.. இப்ப என்னடி பண்ணுவ.. சிபி சிஐடி ரேன்ஜுக்கு பில்டப் பண்ற " என வெட்கம் கலந்த சிரிப்போடு அவள் இழுத்து இழுத்து கூறவும் துளசியோ எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ அதுவே நடந்துவிட்டதென்று அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

பிறந்தநாளன்று அவன் கொடுத்த காதல் மடலால் அவனும் தன்னை விரும்புவதாக என எண்ணிய கனி அவ்வாறு சொல்ல தனது காதலை முழுவதுமாக உணராத எழிலுக்கோ
அவளது விரும்புகிறோம் என்ற வார்த்தையில் ஆயிரம் மின்னல் வெட்டுக்களை தன்னுள் பாய்ச்சியது போல இருந்தது..

அதிர்ச்சியில் மீ்ண்ட துளசி பொறுமையாகவே " கனி அவசரப்படாத. இவன் நல்லவன் இல்ல.. " என்றதும் " இவரோட அண்ணா கெட்டவுங்கனா.. இவரும் கெட்டவர்னு அர்த்தம் இல்லை துளசி.. இவர்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. " என்று எழிலுக்கு ஆதரவாக பேச எழிலுக்கு கனியை நினைத்து பெருமையாக இருந்தது..
அதே சமயம் துளசியின் மீது கோபமும் பிறந்தது.

" ஏன்டி புரிஞ்சிக்க மாட்டற.. நான் உனக்கு கெடுதல் நினைப்பேனா.. இவனும் இவன் பிரண்டும் சரியான பொறுக்கிங்க டி.. எங்கிட்டையே மிஸ்பிகேவ் பண்ண பார்த்திருக்காங்க. இவன் வேணாம்டி.. உங்க மாமாக்கு தெரிஞ்சா இன்னும் பெரிய பிரச்சனை ஆகிடும்டி.. நீ குழந்தை கனி.. உனக்கு நல்லது எது கெட்டது எதுன்னு தெரியாது.. இந்த வயசுல உனக்கு காதல் அவசியமா சொல்லு கனி.. ப்ளீஸ் இவன விட்ரு.. நான் சொல்றேன் நீ கேட்க மாட்டியாடி.. " என வருத்தத்துடன் கேட்கவும் கனி எழிலைப் பார்த்தாள்.. இல்லையென்று தலையாட்டியவனின் கண்களில் தனது நடத்தையை குறை கூறிவிட்டாளே என்ற வருத்தமும் இருந்தது..
துளசியும் தன் விசயத்தில் பொய் சொல்பவள் இல்லை.. யாரை நம்புவது என புரியாமல் தவித்தவள்

" துளா. நீ இவர தப்பா புரிஞ்கிட்டடி.. எதும் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் ஆகிருக்கு " என தெளிவாக கனி கூறவும் துளசி்க்கு அவளை எப்படி சரிசெய்வது எனத் தெரியவில்லை..

" சரி.. என்னை நம்ப மாட்ட.. இவரையே உண்மைய ஒத்துக்க வைக்கட்டுமா " என்றவள் சென்ற இரண்டு நிமிடத்தில் ஒரு பெண்ணை அழைத்து வந்தாள்.

" இவுங்க யார் தெரியும்ல கனி நம்ப ஹாஸ்டல்மேட் திவ்யா.. இவனோட கிளாஸ்தான்..இவன் என்ன பண்ணாங்கனு இவுங்களே சொல்வாங்க.. " என்றதும் எழிலுக்கும் கனிக்கும் அவள் என்ன சொல்வாளோ என பயமாக இருந்தது..

" ஐ யம் சாரி எழில்.. தேவா யார்கிட்டயும் இதை சொல்ல வேணானு சொன்னான்.. ஆனா நானும் ஒரு பொண்ணுதான.அதான் கனிமொழியோட லைப் வீணாக கூடாதுன்னு சொல்றேன்.. " என்றவள் கனியை நோக்கி " கனி உன் பர்த்டேக்கு ஒரு நாள் முன்னாடி தேவா எங்கிட்ட வந்து ஐசு மேமோட வாழ்க்கைய அழிக்கிறதே நீதான்.. அவுங்க சந்தோசமா இருக்கனும்னா உன்னை காலேஜ்ல இருந்து நீக்கனும். அதுக்கு தப்பான பொருள உன் பேக்ல வைக்க சொல்லி கொடுத்தான்.. நான் பர்ஸ்ட் வேணானு தான் சொன்னேன்.. ஆனா ஐசு மேமோட நல்லதுக்காக ஒத்துக்கிட்டேன். அப்பவும் எனக்கு மனசு ஒரு மாதிரியாதான் இருந்துச்சு.. நல்லவேளையா தேவாவே அதை எடுத்துட சொல்லிட்டான்.. நானும் வெச்ச அரை மணி நேரத்துலயே அதை எடுத்துட்டேன்.. அப்போ துளசி வந்துட்டா.. நான் தப்பிக்க உன் பேக் பக்கத்துல கிடந்த ரோஷயும் கிரிட்டிங்க கார்டையும் படிக்கறமாறி ஆக்ட் பண்ணி எஸ்கேப் ஆகிட்டேன்..

ஆனா நீயும் மேமும் அக்கா தங்கச்சி அப்டிங்கற உண்மை தெரிஞ்ச பிறகு எழில் மேலதான் தப்பிருக்குனு எனக்கு தெரிஞ்சிடுச்சு.. அதும் நீயும் அவனும் ஒன்னா இருக்கறத பார்க்கிறப்ப அவன் உன்னை ஏதும் செஞ்சிருவானோனு பயந்துகிட்டேதான் இருந்தேன்.. அதான் உன் பிரண்ட் துளசிகிட்ட எல்லா உண்மையும் உன்னை அலார்ட் பண்றக்காக சொன்னேன்.. இது சத்தியமா உண்மை " என்று சொல்லிவிட்டு திவ்யா சென்று விட்டாள்.

செய்யாத தவறு.. இருப்பினும் தன்னால் தான் நடக்க இருந்த தவறு.. அதனை ஏற்றுக் கொள்வதா.. இல்லை மறுப்பதா என யோசனையில் இருந்தவன் கனியைப் பார்க்க அவளோ கண்கள் குளமாக நின்ற இடத்திலே அழுது கொண்டிருந்தாள்.. காதலை அறிந்துகொண்ட நாளிலே காதலியைப் பிரியவும் வேணுமா என அவன்மனம் வருத்தி எடுக்க மெதுவாக அவள் தோளில் கைவைத்தவன்

" திம்ஸு.. நிஜமா நான் அதை செய்யலடி. உன் மேல கோபம் இருந்தது உண்மைதான். ஆனா அந்த கேவலமான வேலையை நான் செய்யற அளவுக்கு வில்லன் இல்லைடி.. இந்த விசயம் அண்ணிக்கு கூட தெரியும்.. ப்ளீஷ் அழாதடி.. " எனக் கெஞ்ச, அவளுக்கு இன்னும் அழுகை வந்தது..

" கனி வா போலாம் " என துளசி அவள் வலது கையை இழுக்க எழிலோ " ஒரே நிமிசம் பொறுங்க துளசி.. " என்றவன்

" ஹேய்.. திம்ஸு.. என்னை நம்பறியா இல்லையா.. " என சற்று கோபமாக அவன் கேட்கவும் கண்களைத் துடைத்துக் கொண்டு " நம்பறேன்.. " என எனத் தேம்பிக் கொண்டே கூறினாள்..

" கனி நான் அவ்ளோ சொல்லியும் அவன நம்பறியா " என துளசி அவள் காதுகளை நம்பமால் கேட்கவும்

" ஆமாடி நம்பறேன்.. அவர்தான் சொல்றார்ல அவர்தான் வேணானு தேவாவ தடுத்தார்னு.. அதுலருந்து இவர் நல்லவர்னு புரிஞ்சுக்கோடி.. " எனக் கொஞ்சம் காட்டமாக கூறவும் எழிலுக்கு அவளைத் தூக்கி கொஞ்ச வேண்டும் என தோன்றியது..

" கனி காதலிக்க உனக்கு வயசில்லடி.. நல்லது எது கெட்" என துளசி பேசத் துவங்கும் முன்னரே

" அப்படி பார்த்தா.. நீயும் தான் ரெண்டு வருசமா என்னோட மாமாவ விரும்புற. அப்போ நீ என்ன கிழவியாடி.. நீ மட்டும் அவர விரும்புற விசயத்த மறைச்சல.. அதான் டி நானும் சொல்லல..
இவர் பாவம்டி.. அண்ணாவும் இவரோட பேசறது இல்ல.. அண்ணியும் பிரிஞ்சு போயிட்டாங்க.. இப்போபோய் நானும் அவரத் தப்பா புரிஞ்சிட்டு விட்டுட்டு போயிட்டா கஷ்டமா இருக்கும்லடி.. நீயும் என் மேல இருக்கிற அக்கரைனால தான் சொல்றேன்னு எனக்கு புரியுதுடி.. ஆனா ப்ளீஸ் கொஞ்சம் கோபத்த தள்ளிவெச்சிட்டு பாரு.. இவர்மேல தப்பில்லைன்னு உனக்கு புரியும் " என்று துளசியின் கைகளைப் பற்றியபடி கூறியவுடன் எழிலும்
" துளசி உங்க இடத்துல நான் இருந்தாலும் இப்படித்தான் பண்ணிருப்பேன்.. ஆனா உண்மைய இப்பவாச்சு புரிஞ்சுக்கோங்க.. கனிய கண்டிப்பா நான் நல்லா பார்த்துப்பேன்.. " என்றான் தன் பங்கிற்கு..

இவர்களிடம் எதுவும் பேசத் தோணாதவள் " சரி " என்று மட்டும் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்..
இவர்களிடம் பேசிய பின்பு சற்று தெளிவு கிடைத்தாலும் எதுவோ மனதிற்கு நெருக்கமான ஒன்று தன்னை விட்டு நீங்கியது போன்று இருந்தது.. அதற்காக கனியின் மீது கோபம் என்றில்லை..
பெற்றவர்கள் தான் கனிக்கு உகந்தவர்களாக அமையவில்லை..சரி
கனிக்கு சிறந்த வாழ்க்கைத் துணையாவது அமைய வேண்டும் என எப்போதும் கடவுளிடம் வேண்டிக் கொள்வாள்.. அந்த வாழ்க்கை துணை எழில்தானா என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை..
கனியின் கண்மூடித்தனமான நம்பிக்கை அவளை ஒருநாள் வருத்திவிடுமோ என பயப்பட்டாள்.. ஒரு பென்சில் வாங்குவதென்றால் கூட துளசியின் விருப்பத்தைப் பெற்றே வாங்குபவள் இன்று தனக்காக வாழ்க்கைத் துணையை தானே தேடிக் கொண்டுவிடுமளவிற்கு பெரியவளாகி விட்டாளா..இல்லை தான்தான் அவள் வளர்ந்துவிட்டாள் என்பதை உணர மறுக்கின்றேனா.. என்ன இருந்தாலும் அது அவளது வாழ்வு..தான் இறுக்கிப் பிடிக்க முடியாது.. ஒருக்கட்டத்தில் தான் ஒதுங்கி தான் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தவள்
எழில் நல்லவனாக இருக்க வேண்டும் என தனது இஷ்ட தெய்வத்திடம் வேண்டுதல் விடுத்துக் கொண்டாள்.. தனது காதல் நிறைவேறுமோ எனத் தெரியவில்லை.. குறைந்தது கனியின் காதலாவது நிறைவேறி விட வேண்டும் என அவளது காதல் நிறைவேற திங்கட் கிழமையுடன் கனிக்காக வெள்ளிக்கிழமையும் உண்ணாநோன்பு இருப்பதாக முருகனுக்கு வேண்டிக் கொண்டாள்.

" ரொம்ப தேங்க்ஸ் திம்ஷு.. எங்க நீ என்னை நம்பாம போயிடுவியொன்னு பயந்திட்டேன் தெரியுமா " என சிரித்தவாரே கேட்கவும் கனி
" சிரிக்காதீங்க.. அந்த கிரிட்டிங் கார்ட் அப்போ நீங்க தரலியா " என முகத்தை திருப்பிக் கொள்ள, அவனுக்கோ அது எந்த கிரிட்டிங் கார்ட் என்று கூட தெரியவில்லை..

" எந்த கிரிட்டிங் கார்ட் " என அவன் கேட்கவும் " அப்போ நீங்க என்னை லவ் பண்ணவே இல்ல. நான்தான் ஏமாந்துட்டேன்.. என்கூட பேசாதீங்க " என முரண்டு பிடித்தாள்..
எழிலுக்கு இரண்டு நிமிடத்திற்கு முன்னால் தனது உயிர்த் தோழியிடம் தனக்காக பரிந்து பேசிய பெரிய மனுஷி இவள்தானா என்றிருந்தது.. அப்படியெனில் இவளது குழந்தைத் தனம் தன்னிடம் மட்டும்தானா.. இவளது அன்பிற்கு நான் உகந்தவன் தானா என தன்னையே கேட்டுக் கொண்டவன் இனி அவள் கண்ணில் கண்ணீர் வரவிடாதவாறு அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தான்..

அவள் கொலைவெறியில் முரைத்துக் கொண்டிருக்க அவனின் நல்ல நேரமா? தேவாவின் கெட்ட நேரமா? எனத் தெரியவில்லை.. ஆடே தானாக ஓநாயிடம் சிக்கிக் கொண்டது போல அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் தேவா..

இங்கே நடந்ததையெல்லாம் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த இரதி வெற்றிப் புன்னகையில் துளசியைப் பழி வாங்க திட்டம் ஒன்றினை போடத் துவங்கினாள்..

இரதியின் திட்டம் பலிக்குமா?

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz