உறவு 25
கதிருக்கு வரும் கோபத்திற்கு அசோக்கை இழுத்துப் போட்டு அடிக்கலாம் என்று தோன்றியது.. நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த கம்பெனியை பாதி விலைக்கு வாங்கிய செல்வராஜ் அதனை எவ்வாறு நிர்வாகம் செய்வது எனக் குழம்பிப் போன நிலையில்தான் கதிர் வேலைக்குச் சேர்ந்தான்..
முதலீடு மட்டும்தான் செல்வராஜிற்குச் சொந்தம்..மத்தபடி உழைப்பு கதிருடையதே.. சிறியதாக இருந்த நிறுவனத்தை தன் கடின உழைப்பால் மாநிலத்தில் முண்ணனி நிறுவனமாக மாற்றியவன் அசோக் பொறுப்பிற்கு வந்தததும் ஒதுங்கிக் கொண்டான்.
இருப்பினும் அவன் பார்த்து பார்த்து உருவாக்கிய கம்பெனி அவனது குழந்தைக்குச் சமம். அதனை எளிதில் விட்டு விலக அவனால் முடியவில்லை.. அதற்காக அவனைக் கோழை என்று நினைத்து விட்டானா அசோக்.. எங்கே தான் அதிர்ந்து பேசினால் தன்வீட்டுப் பெண்ணின் வாழ்வில் பிரச்சனையாகிவிடும் என்கிற காரணத்தினாலே பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்..
தனது அக்காவின் குடும்பத்திற்கு தற்போது தேவை அவனது துணை மட்டுமே.. அவன் இவர்களை விட்டுச் சென்றால் நிச்சயம் அனைவரும் துவண்டு போவார்கள் என்பதை உணரந்த கதிர் இதனை வேண்டாமென்று முடிவெடுத்தான். ஆனால் அவனை விதி நிம்மதியாக இருக்க விட்டிருமா?
💝💝💝💝💝💝💝💝💝💝💝
கனியிடம் இருந்து வந்த துளசி அழுதுகொண்டே வகுப்பறைக்கு வந்து சேர " என்ன துளசி கனி கூட சாப்பிடப் போறனு சொல்லிட்டு மெஸ்ஸுக்கு கூட வரலியே.. அவ கூட சாப்பிட்டியா இல்லை நான் கேண்டின்ல எதும் வாங்கிட்டு வரவா? இன்னும் அரை மணி நேரம் இருக்குல லன்ச் முடிய" என்று ரக்ஷனா கேட்க, வேண்டாமென்று தலையசைத்தவள் பென்ச்சில் படுத்துக் கொண்டாள்.
" தங்கச்சிம்மா.. தங்கச்சிமா " என்று ஆணின் குரல் மிக அருகில் கேட்க, அவளோ தன்னை யார் அழைக்கப் போகிறார்கள் என எண்ணி எழாமல் இருக்க மீண்டும் " தங்கச்சிம்மா.. தங்கச்சிமா " என்று அவள் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது.
தொல்லை தாங்காமல் எழுந்தவள் யாரென்று பார்க்க அங்கே கசங்கிய சட்டை.. கலைந்த கேசம். விரல்தடம் பதிந்த கன்னங்கள் என சோகமே உருவமாய் கையில் உணவுப் பொட்டலத்துடன் தேவா பாவமாக நின்று கொண்டிருந்தான்..
அவள் எழுந்ததும் " தங்கச்சிமா.. சத்தியமா அன்னைக்கு புத்தியில்லாம நடந்து கிட்டேன்.. ப்ளீஸ்டா என்னை மன்னிச்சிரு " எனக் கெஞ்சியும் அவளுக்கு அவனை மன்னிக்க மனமில்லை. எழில் கொஞ்சம் விட்டிருந்தால் இந்நேரம் கனியின் வாழக்கை அல்லவா முடிந்திருக்கும்!
அவள் கோபமாக பார்க்க " நான் உண்மையா திருந்திட்டேன்மா. நான் செய்ய இருந்தது எவ்ளோ பெரிய பாவம்னு நான் அப்பவே உணர்ந்திட்டேன்.. " என உண்மையான வருத்தத்துடன் சொல்ல,
" நீங்க மன்னிப்பு கேட்க வேண்டியது எங்கிட்ட இல்ல.. கனிக்கிட்ட " என்று சொல்லும்போதே
" கனி தங்கச்சிதான் நீ மன்னிச்சாதா என்னை மன்னிப்பனு சொல்லிட்டாங்க.. நான் பொண்ணுங்கள சைட் அடிப்பேன் இல்லைனு சொல்லல. ஆனா அதுக்குனு நான் பொறுக்கிலாம் இல்லம்மா... அதும் உன்னை ஆரம்பத்துல இருந்தே தங்கச்சியாதான் பார்த்தேனே தவிர தப்பான எண்ணத்துல உங்கிட்ட அன்னைக்கு பேசலமா.. " என அவன் கலங்கிய நிலையில் கூற அவளுக்கும் பாவமாக இருந்தது.. அதுவும் வகுப்பறையில் சாப்பிட வெளியே சென்றவர்கள் உள்ளே வர ஆரம்பிக்கவும் பேச்சை முடிக்கும் நோக்கத்தில் " மன்னிச்சிட்டேன் கிளம்புங்க " என அமைதியாக சொல்ல, அவன் சாப்பிடுமாறு சாப்பாட்டைக் கையில் தந்தான்.. அவள் வேண்டாமென்று மறுக்க,
" தங்கச்சிமா.. என்னை நீயும் நாலு அடி வேணா அடிச்சிருமா.. ஆனா இந்தப் பாவப்பட்ட ஜீவனுக்காக இந்த சாப்பாட சாப்பிட்டுருமா.. இல்லைனா அங்க வாசல்ல நிக்கறாள உன் பிரண்ட் என்னை அறைஞ்சே கொன்றுவாம்மா" எனக் கெஞ்ச சரி என்று வாங்கிக் கொண்டாள். அவளுக்கு சாப்பிடும் எண்ணம் துளி கூட இல்லை.. அவன் எப்போது கிளம்புவான் என சாப்பாட்டை கையில் வைத்துக் கொண்டு சாப்பிடுவது போல பாவனை செய்து கொண்டிருந்தவள் அவன் சென்றதும் சாப்பாட்டை மூடி வைத்தாள்.
அவள் சாப்பிடாமல் இருப்பதைக் கண்ட கனியும் எழிலும் உள்ளே வந்து அவள் இருபுறமும் அமர்ந்து கொண்டனர்.
" துளா.. சாரிடி நான் உங்கிட்ட கொஞ்சம் கோபமா நடந்துட்டேன்...நானே உங்கிட்ட மறைக்காம எல்லாத்தையும் பர்ஷ்டே சொல்லி இருக்கனும்டி.. சாரிடி..
ஆயிரம் பேர் வந்தாலும் எனக்கு எப்போவும் நீ மட்டும்தான்டி முக்கியம்.. உனக்கேத் தெரியும்ல என் மாமா கூட உனக்கு அடுத்துத்தான்..
ப்ளீஸ்
சாப்பிடுடி " என கனி சாப்பாட்டை வாங்கி ஊட்டிவிட ஆரம்பித்தாள்..
தன்னை விட்டு அவள் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் அவளுக்கும் ஊட்டிவிட்ட துளசி " நானும் சம்பந்தபட்டவங்க கிட்ட விசாாிக்காம அந்த திவ்யா பேச்ச அப்டியே நம்பிருக்க கூடாது.. நீயும் என்னை மன்னிச்சிருடி.. " என்றவள் எழிலிடமும் மன்னிப்புக் கேட்டாள்...
அவளிடம் புன்னகைத்தவன்
" உண்மையாவே உங்கள பார்க்க எனக்கு பொறாமையா இருக்கு... எப்பவும் நீங்க இதேமாறி ஒற்றுமையா இருக்கனும் சரியா " என்று எழில் கூற,
" அதெல்லாம் நாங்க இருந்துப்போம்.. ஆனா எக்காரணத்தைக் கொண்டும் கனிய அழுக விட்ராதீங்க. அவ அதிகமா யார் மேலயும் பாசம் வைக்க மாட்டா. ஆனா அவளுக்கு பிடிச்சிருச்சுனா அவுங்களுக்காக என்ன வேணா பண்ணுவா... அவள மிஸ் பண்ணிராதீங்க எழில் " என்றதும் சரி என புன்னகைத்தவன் கனியைப் பார்க்க அவளோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.
துளசி அவளை உலுக்க சுயநினைவுக்கு வந்தவள் " இப்போ எங்க வீட்ல இருக்குற எல்லா பிரச்சனையும் தீரணும்னா நாம என்ன பண்ணனும் " என சோகமாக சொல்ல துளசியோ சிறிதும் யோசிக்காமல் " உங்க கோபக்கார அத்தானுக்கு பேய் ஓட்டுனா போதும்..வேற என்ன பண்றதாம்.. உங்க அக்கா வாழ்க்கை குரங்கு கைல கிடைச்ச பூமாலை மாறி ஆகிடுச்சு.. " என சளித்துக் கொண்டாலும் அதுதான் உண்மை என கனிக்கும் புரிந்தது.
ஐசுவை யாரும் குணத்தில் குறை கூறிட முடியாது. அவள் செய்த ஒரே தவறு அவளது திருமணம்தான். ஆனால் அந்த தவறால் அவளது வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிட்டது.. எழிலுக்கு துளசி அவன் அண்ணனை குறை கூறும்போது வலித்தாலும் அதை மறுக்க முடியவில்லை.. அவர்கள் என்ன தவறு செய்தார்கள்... செய்யாத தவறுக்கு போடக்கூடாத பழியை தன்னை நம்பி வந்த பெண்ணின் மீது போட்டது முட்டாள்தனம்தானே.. அசோக்கால் எப்படி அவ்வளவு கீழத்தரமாக யோசிக்க முடிந்தது.. என அவனும் யோசனையில் மூழ்கிப் போக
கனி
" கிளாஸ் ஆரம்பிக்க போகுது.. இடத்தைக் காலி பண்ணுங்க . நெக்ஸ்ட் கிளாஸ் ஐசுதான் வருவா " என்றதும் தன்னிலையறிந்தவன் எழ முயற்சிக்க
" இன்னைக்கு நான் உங்க அண்ணன மீட் பண்ணனும்.. அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க.. மத்தத நான் பார்த்துக்கிறேன் " என்றவள்
" அப்படியே உங்க பிரண்ட் அந்த தேவாங்கையும் மன்னிச்சிட்டேனு சொல்லுங்க.. பாவம் உங்க மேல இருக்க கோபத்த அவர்மேல காமிச்சிட்டேன். அவரும் உங்க மேல இருக்குற பாசத்தாலதான அப்படிலா செய்ய நினைச்சாரு... கொஞ்சம் ஓவரா அடிச்சிட்டேன்ல" என்று அவள் குற்றவுணர்ச்சியில் கூறவும்
அவள் அவனது உயரத்திற்கு எட்டாமல் எம்பி எம்பி அவன் தலையில் கொட்டியதை நினைத்து சிரித்துக் கொண்டவன்
" அது அவனுக்கு தேவைதான் திம்ஸு. நீ ப்பீல் பண்ணாத. அவன் இப்பதான் ரொம்ப நிம்மதியா ப்பீல் பண்ணுவான்.. அவனும் தங்கச்சி இல்லைன்னு அடிக்கடி வருத்தப்படுவான்.. அதான் இப்போ துளசியோட சேர்த்து நல்ல வெயிட்டா அரிசி மூட்டை மாறி நீ வந்துட்டல அவனுக்கு அதுவே போதும் " என்றவன் கனியைப் பார்த்து கண்ணடிக்க, தன்னை அரிசி மூட்டை என்றதால் கோபம் கொண்டவள் அவனை அடிக்க எழுந்தவள் அவனைத் துரத்த அதற்குள் அவன் வாயிற்கதவை நோக்கி அவன் ஓட ஆரம்பித்தான்..
அவன் சிரித்துக் கொண்டே ஓட, எதிரே வாசலில் எந்தவித உணர்ச்சியும் காட்டாது நின்று கொண்டிருந்த ஐசுவைப் பார்த்ததும் அப்படியே சிலையாகி நின்றான்.. ஐசுவின் பார்வை என் வாழ்க்கையை அழித்துவிட்டு நீ சந்தோசமாக சுற்றித் திரிகிறாயா? என்று கேட்பது போல அவனுக்குத் தோன்றியது..
" கெட் அவுட் " என்ற ஐசு சொன்ன பிறகே " சாரி மேம் " என்று கூறிவிட்டு வெளியேறினான்..
கனி வகுப்பின் மத்தியில் அப்படியே நிற்க " கனிமொழி. சொந்தக்காரங்கனா வீட்டோட நிறுத்திக்கோ.. இப்படி காலேஜ்ல வந்து விளையாடி உன் பேர நீயே கெடுத்துக்காத " என்று கூறியவள் பாடம் எடுக்கத் துவங்க வழக்கம்போல ஐசுவைத் திட்டிக் கொண்டே இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
இதனையெல்லாம் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த இரதிக்கு மனதில் தன் திட்டம் கண்டிப்பாக வெற்றியடையும் என நம்பிக்கை பிறந்தது..
மதியம் 3 மணிக்கு கனி எழிலுடன் வெளியே சென்றுவிட, துளசிதான் பயந்துகொண்டே இருந்தாள்.. ஐசு கல்லூரி வாகனத்தில் செல்வதால் ஐசுவை சமாளித்தாலும் கனியைக் கூட்டிச் செல்ல வரும் கதிரினை எவ்வாறு சமாளிப்பது என அவளுக்கு தெரியவில்லை.. இதுவரை கனியை கதிர்தான் அழைத்துச் செல்ல வந்தாலும் ஒருமுறை கூட துளசி அவன் கண்ணில் பட்டதில்லை.. அவனிடம் தனது காதலை சொல்லியாகிவிட்டது.. அதற்காக அவனைப் பார்த்து பேசி தொல்லை பண்ண அவளால் முடியவில்லை..அது தன்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் தன் அன்னைக்கு செய்யும் துரோகம் என்று நினைத்தாள்.. அதேபோல தனது அண்ணன் தனக்காக பரிந்து போவதையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
ஆனால் அவள் காதல்
கண்டிப்பாக வெல்லும் என்ற நம்பிக்கை மட்டும் ஒருபோதும் குறையவில்லை.
அவன் ஒருவேளை தன்மேல் கோபம் கொண்டு தன்னை ஏற்றுக் கொள்ளாமல் வேறொரு பெண்ணை மணந்து தனக்கான வாழக்கையை அவன் அமைத்துக் கொண்டாலும் அதுவும் அவளது காதலின் வெற்றி என்றே கருதினாள்.. ஆனால் அதற்காக அவனிடம் கெஞ்ச அவளது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அதற்காக அவளது காதலும் குறைந்ததில்லை..
கதிர் கல்லூரி முடிந்த இருபது நிமிடத்தில் சரியாக வர கனியோ இன்னும் வந்து சேரவில்லை.. பயத்தில் அவளது கால்களும் கைகளும் நடனமாடத் துவங்கின..
என்றும் புன்னகையுடன் வருபவன் இன்றோ வரும்போதே ருத்ரமூர்த்தியாகத் தான் வந்து சேர்ந்தான்.. அது அவளுக்கு இன்னும் கிலியை ஏற்படுத்தியது..
கைகளைப் பிசைந்தவண்ணம் மனதிற்குள் கந்தசஷ்டி கவசம் கூறிக் கொண்டிருந்த அவள்முன் வண்டியை நிறுத்தியவன் அவளது அருகே வந்து நிற்க அவளது இதயம் வெடித்து விடுமோ என்ற அளவிற்கு வேகமாக துடித்தது..
" கனிமொழி எங்க " என்று கோபமாக கேட்க, கனிம்மாவைத் தவிர வேறு பெயர் சொல்லி அழையாதவன் இன்று அவளது முழுப் பெயரை சொல்லி அழைத்ததும் எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்தவள் " அது. அவ.. இங்க.இதோ வந்துருவா " என உலற ஆரம்பித்தாள்.
ஏற்கனவே பயந்து போனவள் அடுத்து அவன் கேட்ட கேள்வியில் அவனை நம்ப முடியாமல் பார்க்க அவனோ அவனது கேள்விக்கான விடையை மட்டும் எதிர்பார்த்து நின்றிருந்தான்.
கனி அசோக் மனதை மாற்றிவிட்டாளா?
கனி மாட்டிக் கொண்டாளா?
இரதியின் திட்டம் பலித்து விட்டதா?
கதிரின் கோபத்திற்கான காரணம் என்ன? என்பதை பொறுத்திருந்து காண்போம்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz