ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 20

Nivethamagathi

அசோக்கை அவள் அடிக்க நினைத்தது உண்மைதான்.. ஏற்கனவே அடித்தும்தான் இருக்கிறாள்..ஆனால் இன்றோ வேண்டுமென்றே அடிக்க வில்லை..கைதவறி தான் அந்தக் குச்சி அவன்மீது விழுந்தது.

விழுந்த அடி சின்னதென்றாலும் திடீரென விழுந்ததால் " அம்மா " என அசோக் அலற ஆங்காங்கே இருந்தவர்களும் பதற்றத்துடன் வந்து சேர்ந்தனர்.. தேவி அவளை முறைக்க ஆரம்பிக்க ' படுபாவி.. அவன் பொண்டாட்டி பண்ற மாறியே என்னை மாட்டி விடறதுலயே குறியா இருக்கானே ' என கைகளைப் பிசைந்த வண்ணம் இருக்க அவள் கன்னத்தில் இடியென வந்திறங்கியது பெரிய அடி...

அவள் அன்னை அடித்தது கூட அவளுக்கு வலிக்கவில்லை.. ஆனால் அத்தனை பேர் முன்னாடியும் அடித்ததுதான் தாங்க முடியவில்லை..

" எவ்ளோ டைம் சொல்றது கனி.. வெளிய வந்தா உன் குரங்கு சேட்டைய மூட்டை கட்டி வைன்னு.. ஆம்பளப் பையன் மேல கைய ஓங்குற அளவுக்கு வந்திட்டியா.. கதிர் உனக்கு செல்லங்கொடுத்து ரொம்பக் கெடுத்துட்டான். இவர் யாரு தெரியுமா.. உங்க அக்கா வீட்டுக்காரரு.. அந்த மரியாதைய கொஞ்சமாச்சும் அவருக்கு கொடுக்கறியா"
என மிரட்ட ஆரம்பிக்க கனிக்கு அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை..

தேவியை அனைவரும் " சின்ன பொண்ணு தான விடுங்க " என சமாதனப்படுத்த முயன்றாலும்
அவரோ விடாமல்
" இப்பவாச்சும் அவர் கி்ட்ட சாரி கேளுடி.. " என மிரட்ட " சாரி " என அழுது கொண்டே கூறினாள். சாரதா அவரை வெளியே இழுத்துச் செல்ல கனி கதிரையில் அமர்ந்து அழுக ஆரம்பித்தாள்.

" ஹேய் கனி.. அழாதடி.. ப்ளீஸ் " என ஐசு தோளில் கை வைக்க " இதுக்கு தான்டி நான் வரமாட்டேனு சொன்னேன்.. வம்படியா கூட்டிட்டு வந்து அவமானப் படுத்திட்டிங்கள்ள " என்றவள் தேம்பித் தேம்பி அழுக, கந்தனிற்கு விருந்துக்கு வந்த இடத்தில் மானத்தை வாங்கும் தனது மகளை எண்ணி அவமானமாக இருந்தது.. நாளை இவர்கள் குடும்பமே இப்படித்தான் என ஐசுவை சுட்டிக் காண்பித்து பேசி விடுவார்களோ என பயப்பட ஆரம்பித்தார்..

" மாமா கவலைப் படாதீங்க.. நான் பார்த்துக்கிறேன் " என அசோக் அவளை அவர்கள் அறைக்கு அழைத்துச் செல்ல ஐசுவும் எழிலும் அவர்கள் பின்னே சென்றனர்.

" ஹேய் சாரிடா.. நான் வேணும்னு கத்தல.. நிஜமா வலிச்சிச்சு.. " என அசோக் ஆறுதல் சொன்னாலும் அவள் மனம் அதை ஏற்கத் தயாராக இல்லை..

" சரி நீ அழுகைய நிறுத்த நாங்க என்ன செய்யட்டும் பாப்பு " என அசோக் அவளைத் தோளினில் சாய்த்துக் கொண்டு கேட்க அவள் மூளை வில்லத்தனமாக ஐசுவைப் பார்த்து சிரித்தது..

" என்ன எங்க அம்மா எவ்ளோ ப்போர்ஸா அடிச்சாங்களோ அதே மாறி நீங்களும் அவளையும் உங்க தம்பியையும் அடிக்கனும்..ப்ளீஷ் எனக்காக அடிப்பிங்களா அத்தான் " என அவள் அடித்த இடத்தை ஆறுதலாய் தடவிக் கொண்டே கெஞ்ச அவனது அத்தான் என்ற அழைப்பில் அவன் கிளீன் போல்ட் ஆகிப் போனான். அவனது முகபாவனையே அவன் அவர்களை செல்லமாகவாது அடிக்கப் போகிறான் எனத் தெள்ளத் தெளிவாகக் கூற எழிலும் ஐசுவும் அடிக்க முடியாதவாறு கன்னத்தில் கைகளை வைத்துக் கொண்டனர்.

அவர்களின் செயலில் சிரித்தவன்
" அப்போ அவங்கள அடிச்சிட்டா நாம பிரண்ட்ஸ் ஆகிடலாமா பாப்பு.. "
என்று கேட்டதும் தான் அவன்மேல் உள்ள கோபம் ஞாபகம் வர அவனை விட்டு தள்ளி அமர்ந்தாள்.

இதுவரை பொறுமையாக இருந்த எழில் " திம்ஷு நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க. ஆன்டி தான உங்கள அடிச்சாங்க.. எதுக்கு எங்க அண்ணிய அடிக்க சொல்றீங்க.. " என ஐசுவின் தோள்மேல் கைப்போட அசோக்கின் மூளையில் உறங்கிக் கொண்டிருந்த சாத்தான் முழித்துக் கொண்டது.

ஐசு , எழில் கனியை திம்ஷூ என கூறியதில் அதிர்ந்தவள் அவர்கள் இருவர் நடவடிக்கையையும் கவனிக்க ஆரம்பிக்க அசோக்கின் முகத்தினை கவனிக்கத் தவறினாள்.

கனியோ நிலைமை புரியாமல் "அவரு பொய் சொல்றாங்க அத்தான்.. பார்த்திங்கள்ள என்னை குண்டுன்னு கிண்டல் பண்றாங்க ரெண்டு பேரும்.. அங்க பாருங்க. அவுங்க ரெண்டு பேரும் ஒரு டீம் பார்ம் பண்ணி்ட்டாங்க.. அவுங்கள சும்மா விடக் கூடாது.. ப்ளீஸ் அடிங்க அத்தான் " என அவனை உசுப்பி விட தற்போது உண்மையான ருத்திரமூர்த்தியாக உருமாறியிருந்தான்.

தனது அண்ணன் தன்னை அடிக்க மாட்டான் என நினைத்து உற்சாகத்தில் இருந்த எழிலிற்கு விழுந்தது உலக்கையால் இடித்தது போன்று ஒரு
அடி.. இதனை கனி கூட எதிர்பார்க்கவில்லை தான்.. அதிர்ச்சியில் அசோக்கை மூவரும் பார்க்க அவனோ இன்னும் கோபத்துடனே காணப்பட்டான்..

" அசோக் என்ன பண்ற.. அவ விளையாட்டுக்கு சொன்னா அதையே செஞ்சிருவியா." என அசோக்கை திட்டியவள் எழிலின் காயத்தினை ஆராய " ஏன் ஐசு.. எனக்கும் தான் அடி விழுந்துச்சு..உன் தங்கைக்கும் தான் அடி விழிந்துச்சு.. அப்போலா பொறுமையா தான இருந்த.. இவனுக்கு மட்டும் ஏன் இப்படி பதறுற.. என்னை விட அவன் உனக்கு முக்கியமா " என கர்ஜிக்க, கனி பயத்தில் எழிலுக்கும் ஐசுவிற்கும் வந்து நின்று கொண்டாள்.

" என்ன பேசற அசோக்.. கனி உன்னை வலிக்கிற அளவுக்கு அடிக்கல.. அதே மாறி தான் அம்மாவும்..எங்க வீட்ல கனி அடி வாங்காத நாளே இல்ல.. அவளுக்கு அடிச்சது வலிக்கவே இல்லைங்கறது எனக்கு நல்லாவேத் தெரியும்..
ஆனா எழில். அவன் என்ன தப்பு பண்ணான்.. எதுக்கு வேகமா அடிச்ச.. இங்கப் பாரு உன்னோட கைவிரல் அச்சு பதியற அளவுக்கு அடிச்சிருக்க... நீ பண்ணது சரியா அசோக் " என ஐசுவும் வாதம் செய்ய

" அண்ணி ப்ளீஸ்.. எனக்காக நீங்க சண்டை போடாதீங்க.. ப்ளீஸ்.. " என தடுத்தும் கோபம் அடங்காத அசோக் " என் ரூம விட்டு வெளிய போ எழில் " எனக் கத்தினான்..
தனது அண்ணனா இப்படி என நம்ப முடியாத எழில் கணவன் மனைவி பிரச்சனையில் தலையிட விரும்பாமல் வெளியேறினான்..

" உனக்கும் தனியா சொல்லனுமா கனிமொழி " என்றதும் பயந்துநடுங்கியவள் தனது அக்காவினைப் பார்க்க ஐசுவோ,
கண்கள் மூடியிருக்க அதில் கண்ணீர் வழிந்தவாரே
" அப்பா அம்மா கிட்ட இது எதையும் சொல்லாதா கனி ப்ளீஸ்.. இப்போ வெளிய போ " என கூறினாள் எச்சிலை விழுங்கியவாரே..

" நான் போக மாட்டேன்.. நான் போன இவன் உன்னை அடிச்சிருவான்.. எனக்கு பயமா இருக்கு.. வா அப்பா கிட்ட சொல்லலாம் " எனக் கெஞ்ச

" சொன்னா கேளு கனி.. வெளிய போ.. " எனக் கோபமாக சொல்ல அழுதுகொண்டே வெளியேறினாள்.
தனது மாமாவினை விடுத்து வந்தவள் பணக்கார வீட்டில் ஏக போக வசதிகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என நினைக்க இவளோ அந்த மிருகத்துடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாள் என்பதை தெரிந்தவுடன் அவளுக்கு ஐசுவை எண்ணி பாவமாக இருந்தது.. அவளை பிடிக்காதே ஒழிய அவள் அழுக வேண்டும் என நினைத்ததில்லை.. இதை எப்படி சரி செய்வது என்றும் அவளுக்கு தெரியவில்லை.

கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவளுக்கு பக்கத்து அறையில் அழுகுரல் ஒன்று கேட்க அந்த அறையினுள் வேகமாக உள்ளே நுழைந்தாள்.. அங்கே எழில் சுவற்றில் மாட்டியிருந்த தனது அண்ணனி்ன் புகைப்படத்தை பார்த்து அழுது கொண்டிருந்தான்.

ஆதரவாய் அவன் தோள் தொட்டவள் " ரொம்ப வலிக்குதுங்களா" எனக் கேட்க அவள் வருகையை அறிந்தவன் கண்களைத் துடைத்துக் கொண்டான்..

" உங்க அண்ணா தான அடிச்சாரு.அதுக்கு போய் அழலாமா " என்று அவன் கன்னத்தை தடவிக் கொடுக்க அவள் அருகாமையில் தன்னைத் தொலைத்தவன் மயங்கி அப்படியே நிற்க அவளோ " நான் வாங்குற அடிய விட கம்மியாதான் விழுந்துருக்கு..இதுக்கே பயந்தா எப்படி.. " என்றாள் விசனமாக..

அவள் குரலில்
தன்னை சுயநினைவுக்கு கொண்டு வந்தவன்
" ஓ உங்க தைரியத்ததான் எங்க அண்ண பேசறப்ப பார்த்தேனே " என்றதும் அசடு வழிந்தாள்.

அவளைப் பார்த்து
அவன் சிரிக்கவும்
" அட நான் என்ன உங்கள மாறி அண்ணா திட்டிடாருன்னு ரூம் போட்டா அழுதேன். அதும் குழந்தை மாறியே கண்ணை கசக்கிட்டு " என அவனை சீண்ட

அவனும்
" அப்போ நீயும் தான அழுத.. அப்டினா நீ என்ன குழந்தையா. " என்று கேலி செய்ய

இதற்கெலாம் நான் சலைத்தவள் இல்லை என்பது போல
" ஹான்.. பின்ன இல்லையா.. நீங்க சொன்னாலும் சொல்லலினாலும் நான் பதினெட்டு வயசு குழந்தைதான்.. " என வாயிற்குள் கட்டை விரலை வைத்துக் கொண்டாள்..

அவளது செய்கையில் கரைந்தவன்
" ஓ விரல் சப்பிற இந்த பச்சைக் குழந்தைதான் திட்டம்போட்டு எனக்கு அடி வாங்கிக் கொடுத்துச்சா.. " என ஏற்ற இறக்கத்துடன் கூற

அவளோ குற்றவுணர்ச்சியில்
" நான் ஒன்னும் வேணும்னே பண்ணல.. விளையாட்டுக்கும் நிஜத்துக்கும் உங்க அண்ணாவுக்குத்தான் வித்தியாசம் தெரியலைங்க" என பாவமாக சொல்லிவிட்டு அவளை அறியாமலே அதே எச்சை விரலால் அடி பட்ட அவனது கன்னத்தில் நீவி விட அவன் முறைக்க ஆரம்பித்தான்..

ஆனால் அதைக் கண்டு கொள்ளாதவள்
" நிஜமாவே உங்க அண்ணன் வில்லன்தானா ? " என சீரியஸாக கேள்வி எழுப்ப

அவளின் தீவிரத்தை உணர்ந்தவன் பதில் சொல்ல ஆரம்பித்தான்.
" அப்படிலா இல்ல திம்ஷு.. எங்கண்ணா ரொம்ப நல்லவரு. ரொம்ப கோபப்படுவாரே தவிர குறை சொல்ற அளவுக்கு வேற எதுவுமில்லை.. நீ வேணா பாரேன். கால்ல விழுந்தாவது அண்ணிய இந்நேரம் சமாதானம் பண்ணிருப்பாரு.." என்றதும்

" அப்படினா அவர் கோபத்துக்கு காரணம் என்னவா இருக்கும் " என அவள் யோசிக்க ஆரம்பிக்க அவனோ தலையை சொறிந்து கொண்டே கண்களை உருட்டி உருட்டி யோசிக்கும் அவளது அழகை இரசித்துக் கொண்டிருந்தான்.

நீண்ட நேரம் யோசித்தவள்
அதற்குரிய பதிலை அவனிடம் கூற அதைக் கேட்ட எழிலுக்கோ எங்காவது முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz