ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 21

Nivethamagathi

அவள் முகம் சற்று வாடினாலே தாங்காதவன் இன்று ஊமையாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்தும் மனமிறங்கவில்லை.. கோபத்தில் அங்குள்ள பொருள்களை எல்லாம் தூக்கி வீசி எறிய, அவன் எறிந்த பரிசுப் பொருள் ஒன்று அவள் நெற்றியை பதம்பார்த்து இரத்தத்தை வர வைத்தது. அந்த வலியைக் கூட உணரும் நிலையில் அவளில்லை..

கல்லூரியில் அவனது
கண்டதும் காதல் என்பதில் நம்பிக்கையற்றவள் அவனை மறுக்க அவனோ பல்வேறு சாகசங்கள் புரிந்து அவள்மனதை கொள்ளைக் கொண்டான். அவன் காதலில் அவளுக்கு எள்ளளவும் ஐயமில்லை. அவனது அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளும் அவள் அவனை விடுத்து வேறு யாரிடமும் பேசக் கூடாது என்ற நிபந்தனையும் அவனது உரிமைப் போராட்டம் என அவள் நினைத்துக் கொண்டிருக்க அது தற்போது சந்தேக விரூட்சமாய் உருமாறி நிற்பதை எண்ணி ஆடிப் போனாள்..

அவனுக்காக பெற்றோரை விடுத்து நண்பனுக்கும் மேலாக இருந்த கதிரின் உறவைத் தவிர்த்து அவனது கரம்பற்ற அதற்கு அவன் கொடுத்த பரிசோ, தனது மகனாக கருதும் அவனது தம்பியுடன் இணைத்த கேவலமான பேச்சு.. ஒரு பெண் எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்வாள். ஆனால் தனது நடத்தையை அவளுடன் குடும்பம் நடத்திய கணவனே தவறாக பேசும் போது எந்தப் பெண்ணும் தாங்கமாட்டாள். தற்போது
தன் நிலையை யாரிடம் சொல்லி அழுவது தான் உதாசீனப்படுத்தி வந்த பெற்றவர்களிடமா? அவள் சொன்னால் அவர்கள் அந்த உண்மையை தாங்குவார்களா? மகள் திருமணத்தன்று ஓடி விட்டாள் என்ற சோகத்திலிருந்தே மீண்டு வராதவர்கள் அவள் தேர்ந்தெடுத்தவன் அவளை சந்தேகிக்கிறான் என்ற உண்மை தெரிந்தால் அவர்கள் மனம் என்னவாகும்? உடைந்து போக மாட்டார்களா!
தான் தேடிக் கொண்ட வாழ்க்கையை தான் தானே சரி செய்ய வேண்டும்! அதற்காக அவனை வாழ்நாள் முழுவதும் சகி்த்துக் கொள்ள முடியுமா? இல்லை அவன் வேண்டாம் என்று தூக்கி எறியத்தான் முடியுமா?
அவன் மட்டும்தான் காதலித்தானா? அவனுக்கு ஈடாக அவளும் தானே காதலித்தாள். அவனை அவ்வளவு சுலபமாக வி்ட்டுக் கொடுக்க காதல் கொண்ட பேதை மனம் ஒத்துக் கொள்ளுமோ! மனதை கல்லாக்கிக் கொண்டு அவனை சரிசெய்யும் வழியை அவளே தேர்ந்தெடுத்தாள்.

அலைபேசியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு
கதிரின் எண்ணிற்கு அழைத்தாள்..முதலில்
விருந்துக்கு வரவழைப்பதற்காகத் தான் அழைக்கிறாள் எனக் கருதியவன் அவள் அழைப்பை ஏற்க மறுக்க, பின்பு மனம் தாங்காதவன்
அழைப்பினை ஏற்றான்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

தீவிரமாக சிந்தித்த கனி எழிலிடம் " நான் சொல்றதக் கேட்டு என்கிட்ட சண்டைக்கு வரமாட்டிங்கள்ள" என்றதும் அவன் இல்லையென்று தலையாட்ட அவள் பேச ஆரம்பித்தாள்.

" நான் சொல்றத பொறுமையா கேட்கனும்..குறுக்க பேசக் கூடாது சரியா ...

இந்த உலகத்திலே உங்களுக்கு பிடிச்சது யாரு? "

அதற்கு
" அண்ணா அண்ணி அம்மா அப்பா " அவன் கூற,

அவனை மெச்சுதலாய் ஒரு பார்வைப் பார்த்தவள்
" கரெக்ட்.. இதே கேள்விய எங்கிட்ட கேளுங்க? " என்றாள்.

' உங்கிட்ட பதில வாங்கறதுக்குள்ள நான் என்னென்ன பாடுபடனுமோ' என நினைத்தவன் " உனக்கு யாரப் பிடிக்கும் " என்றிட
" எனக்கு யார ரொம்ப பிடிக்கும் தெரியுமா.. எங்க கதிர் மாமாவும்.. துளசியும் தான்.. " என புன்னகையுடன் கூற அவனுக்கு எங்கோ புகைய ஆரம்பித்தது..

அதைக் கண்டு கொள்ளாதவள்
" சரி மேட்டருக்கு வரேன்.. எனக்கு அவுங்க ரெண்டு பேரத்தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா துளசி, மாமாவ விரும்புறானு சொன்னதும் எனக்கு துளசி மேலயே கோபம் வந்திடுச்சு " என அவள் உணர்ச்சி வசப்பட்டுக் கூற

எங்கே அவள் கதிரை விரும்புவதால்தான் கோபம் வந்தது எனக் கூறிவிடுவாளோ எனப் பதறியவன் " கோபம் வந்து " என அவளுக்கு எடுத்துக் கொடுக்க,

" ஹூம் நீங்களே சொல்லுங்க.. என்னோட வாழ்க்கைல ரொம்ப முக்கியமானவங்க ஒன்னா சேர்ந்தா நான் சந்தோசம்தான படனும்.. ஆனா ஏன் கோபப் பட்ட..ஏன்னா எங்க அவுங்க மேல இருக்க உரிமை பறிபோய்ருமோனு தான.. நான் எவ்ளோ நல்லவ.. நானே அவுங்க சேரக்கூடாதுன்னு கொஞ்ச நேரம் நினைச்சிட்டுத்தான போனாப் போகட்டும்னு அவுங்கள ஏத்துக்கிட்டேன். அதுக்குனு நான் கோபப்பட்டத தப்புனு சொல்ல முடியுமா.. தப்பில்லை தான.. ஏன்னா அது என்னோட உரிமை.. எங்க அவுங்க என்னை கண்டுக்காம போயிருவங்களோன்னு ஒரு பயம்.. என்னோட இடத்தை அவுங்களுக்கு புரிய வைக்கத்தான் கொஞ்ச நாள் துளசி கூட பேசாம இருந்தேன்.. அவ என்னை புரிஞ்சிட்டா. இப்போ அவ என்னை விட்டு போக நினைக்கமாட்டால்ல..

அப்படி இருக்கும்போது உங்க அண்ணா ஏற்கனவே ரொம்பக் கெட்டவரு.. அப்போ அவர் என்னை மாறியே ஐசுவ புரிஞ்சிக்க கொஞ்ச நாள் ஆகும்ல.. " என்று அவனைக் கேட்கவும் அவன் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தான்.

அவள் பேசியது அவனுக்கு புரிந்தது போலவும் இருந்தது.. புரியாதது போலவும் இருந்தது...

" இப்போ நான் என்ன சொல்ல வரன்னா " என இழுக்கவும்,
" அம்மா தாயே.. உன் அளவுக்கு என்னால திட்டம் போட முடியாது.. நீ கடைசியா எனக்கு என்ன புரிய வைக்க நினைக்கிற அதை மட்டும் சொல்லு.. " என அவன் ஜகா வாங்க..
அவன் தலையை தட்டியவள் " நீங்க சீரியல்லா பாக்கிறது இல்லையா.. அதான் டியூப்ளைட்டா இருக்கிங்க என்றவள் அவளது திட்டத்தைக் காதில் கூற உண்மையாகவே அவன் முகம் மகிழ்ச்சியில் பிரகாசமடைந்தது..

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
தனது கூந்தலை விரித்து காயத்தினை மறைத்தவள் எதுவும் நடவாதது போல கீழே சென்று தனது தாயிடம் உரையாடிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பத் தயாராக இருக்கும் போது சரியாக கதிர் வந்து சேர்ந்தான்..வந்தவன் தேவி கந்தனிடம் என்ன ஓதினானோ, தேவி அவன் கூறியதை செய்ய ஆரம்பித்தார்.

ஆடி மாதம் தொடங்கி விட்டதாலும் ஐசுவின் கிரகக் கூறுகளின் நிலை திருப்தி அழிக்காத வகையில் இருப்பதாலும் ஐசுவினை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்திருப்பதாக அவர் சொல்ல அதற்கு ஐசுவும் சம்மதம் தெரிவித்ததால் அவளின் வாடிய முகத்தினைப் பார்த்தே புாிந்துகொண்ட செல்வராஜ் அரை மனதாக சம்மதித்தார். அத்துடன் தங்கள் கிராமத்திற்கு ஐசு வந்தால் ஊர்க்காரர்கள் அவள் மனதை எதாவது பேசி வற்புறுத்துவார்கள் என்ற காரணத்தால் இந்த மாதம் முழுவதும் கதிரின் வீட்டிலிருந்து நாங்களே கவனித்துக் கொள்கிறோம்.. அவள் கல்லூரி சென்று வருவதற்கும் அது ஏதுவாக இருக்கும் என்று கூறுயதை யாராலும் மறுத்தும் பேச முடியவில்லை..

இதனைக் கேட்க கேட்க அசோக்கின் மனம் உலைகலனாய் கொதிக்க ஆரம்பிக்க ஐசுவோ சிரித்த முகமாகக் காணப்பட்டாள்.. அவள் பதிலுக்கு திட்டியிருந்தால் கூட அவன் தாங்கியிருப்பான். ஆனால் தன்னை விட்டு அதுவும் கதிரின் வீட்டில் தங்க முடிவெடுத்திருக்கிறாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

அவளது துணிகளை எடுத்து வைக்கும்போது கூட தேவி உடனிருந்ததால் அவனால் பேச முடியவில்லை.. கடைசிவரை தன்னை ஏறெடுத்தும் பாராமல் சென்றது அவன் இதயத்தைக் கண்ணாடியால் கிழிப்பது போல வலித்தது..

இதுவரை அவனையே முறைத்துக் கொண்டிருந்த கனி அவனது தோளினில் சாய்ந்து கொண்டு " உங்க பொண்டாட்டிய சமாதனப்படுத்துறது இந்தப் பாப்புக் குட்டியோட பொறுப்பு .. கவலைப் படாதீங்க அத்தான்" என்று அவனுக்கு ஆறுதல் அளித்தாள். கதிர் இதைக் கண்டும் காணாமல் இருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ பிசைவது போல இருந்தது..

வீட்டிற்கு வந்த ஐசுவிடம் யாரும் இது சம்மந்தமாக எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.... அதற்கு காரணம் கதிர் என்பதால் அவனை நன்றியுடன் பார்க்க அவனோ வரண்ட புன்னகையை உதிர்த்தான்.

தான் ஒரு தலையாக காதலி்க்கும்
காதலன் வீட்டில் அவனது முன்னால் காதலி கணவனைப் பிரிந்த நிலையில் வந்து
தங்கினாள் எந்தப் பெண் தான் தாங்கிக் கொள்வாள்.. துளசி மட்டும் அதற்கு விதி விலக்கா? ஆனால் அவளுக்கும் ஐசுவைப் பார்க்க பாவமாகத் தான் இருந்தது.. இருப்பினும் அவளை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

இதற்கிடையில் எழிலுக்கு எதிரான வலுவான ஆதாரம் துளசியின் கையில் கிடைக்க அதனை அறிந்த கனியின் நிலை என்ன ஆகும்?

அசோக் கெட்டவன்.. சந்தேகப் பிராணி.. என்பதற்கு அவன் கூறும் விளக்கம் என்ன? ஐசுவைப் பிரிந்து அவனின் நிலை என்ன? அவன் மனம் இனியேனும் மாறுமா?

கதிரின் மீதான துளசியின் காதல் ஈடேறுமா?அபிக்கு அவனது சோன்பப்டி கிடைப்பாளா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலை வரும் அத்தியாயங்களில் காண்போம்.

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz