உறவு 19
மணியோசை கேட்கும் திசையில் திரும்பிப் பார்க்க அங்கே அதேக் கோழி முட்டைக் கண்களுடன் இரு வாண்டுகளை கையில் ஏந்தி கோயில் மணியை அடிக்க உதவி செய்து கொண்டிருந்தாள் அவனது சோன்பப்டி.
ஆள் மாறி ஆடை மாறி போயினும் அவளது கோள விழிக் கண்கள் மட்டும் மாறாமலிருந்தது..
குழந்தையோடு குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டிருந்த அவளின் நெற்றி வகிடில் உள்ள குங்குமத்தைப் பார்த்ததும்
தனக்குத் தெரியாமல் அவளுக்கு
திருமணம் கூட ஆகிவிட்டது என அவன் மூளை எடுத்துரைத்தாலும் காதல் கொண்ட அவன் மனம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அவனுக்குத் தான் அவள் காதலி.. அவளுக்கு வேறு யாரோதானே! என நினைத்துக் கொண்டான்.
அன்னையும் தங்கையும் அவனை உலுக்கினாலும் சிந்தனை சிதறாதவன் அவள் முன்னே சென்று நின்றான்.
சோன்பப்டி என தொண்டை வரை வந்த குரலை உள்ளே அனுப்பியவன் தர்ஷினி என அழைக்க அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.. சந்தோஷ மின்னல் முகத்தில் தோன்ற "ஹேய் மூட்டைப் பூச்சி.. நீதானா.. யார்டா இந்த ஊர்ல நம்ம பேர சொல்லிக் கூப்பிடறதுனு பார்த்த. செம்ம ஹேன்சமா மாறிட்டடா.. " என வழக்கமான உற்சாகத்துடன் கூறியவள் " பார்த்தியா பெரிய ஆளான்ன உடனே என்னோட நிக்நேமக் கூட மறந்துட்ட " அவள் கன்னத்தை இடித்தாள்..
அவன் அப்போதும் அசராமல் இருக்க அவன் தலையில் ஓங்கிக் கொட்டி " மூட்டைப் பூச்சி " எனக் காதில் கத்த சுயநினைவடைந்தான்.
அவளுக்கு தன்னைப் பிரிந்தது கொஞ்சம் கூட வலியை ஏற்படுத்தவில்லையா.. இவ்வளவு சாதரணமாக நடந்து கொள்கிறாளே என அதிர்ச்சியாகப் பார்த்தவன்
" எப்படி இருக்கிங்க பிரியதர்ஷினி.. உங்க குழந்தைங்க நேம் என்ன " என்று குழந்தைகளைக் கையில் வாங்க முற்பட அவளோ சற்று தள்ளி நின்று முறைக்க ஆரம்பித்தாள்.
" ஹலோ மிஸ்டர். அபிமன்யு... உங்களுக்கு வேணா கல்யாணமாகிருக்கலாம்.. ஏன் ஏழெட்டு குழந்தைகளுக்கு தாத்தாவா கூட இருக்கலாம்.. பட் நா கெத்து சிங்கிள். " என முகத்தைத் திருப்பிக் கொள்ள அவனுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
அவள் அருகே வந்த பெண்மணி " ரொம்ப நன்றிடா.. கோயில்ல அதிக கூட்டமா இருந்தனால இவனுங்கள சமாளிக்க முடியாது..அதான் " என்று குழந்தைகளை வாங்கிட..
அவளும் " பரவாலம்மா.. ஆனா இதேத் தப்ப இனிமே பண்ணாதீங்க.. ஏன்னா கோயிலுக்கு வரவுங்க எல்லோரும் என்னை மாறியே நல்லவுங்கனு சொல்ல முடியாது " என்றதும் அவரும் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு சென்று விட்டார்.
அவளது அதே துடிப்பான பேச்சு, புத்திக்கூர்மையான நடவடிக்கை என எதுவும் மாறவில்லை என நினைத்தவன் " மேடம் உங்க பொது சேவைய முடிச்சிட்டிங்கனா நான் பேச ஆரம்பிக்கலாமா " என்றான்..
அவன் இன்னும் தன்னை சோன்பப்டி என அழைக்கவில்லை எனக் கோபம் கொண்டவள் " என்ன வேணும் மிஸ்டர் உனக்கு "என பல்லை நறநற என்று கடித்துக் கொண்டேக் கூற " மேடம்க்கு
கல்யாணம் ஆகல.. ஆனா பொட்டு மட்டும் " என நெற்றியைத் தொட்டு குங்குமத்தைக் காட்ட
" ஓ..அதுவா குழந்தைகள தூக்கினேன்ல தெரியாம ஒட்டி இருக்கும் போல " என கைக்குட்டையால் அழிக்க முற்பட, " ஹேய் கோயில போய் குங்குமத்த அழிக்கற " என்றவன் அவள் கைகளைத் தட்டி விட்டு அந்தக் குங்குமத்தை சரி செய்து அவள் கண்களை கைகளால் மறைத்து ஊதி விட்டான்.. அவன் மூச்சுக் காற்றுப் பட்டு மேனி சிலிர்த்தவள் சற்று தள்ளி நின்று " ஹேய் அப்பா தேடுவாங்கடா.. நான் போகனும்..டாடா.. மூட்டைப் பூச்சி " என்றவள் நிற்காமல் ஓடிவிட
" அட்ரஸ் ஆச்சும் சொல்லிட்டுப் போ " என அவன் கத்த " 9876***210 " எனக் கூறியவள் சிட்டாகப் பறந்து விட்டாள்..
அவனுக்கு நடந்தது நிஜமா கனவா என்று குழப்பமாக இருந்தது..
ஆண் மகன் அவனேப் பேசத் தயங்க அவளோ எவ்வித சலனமுமின்றி முன்பிருந்த அதே உரிமையோடு பேசியது மட்டுமில்லாமல் நம்பரையும் தந்து விட்டுச் சென்றது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.. அவன் காதல் உலகத்தில் மூழ்கத் துவங்க " டேய் டேய் உனக்கெலா சாங்க் போட முடியாதுடா.. பூமிக்கு வாடா.. " என துளசி முதுகில் ஓங்கி குத்த ஆரம்பிக்க " என்னடி... " என அவன் முகத்தைக் காண்பித்தான்.
" என்னடியா.. நல்லார்க்கே..யார்டா அவுங்க..நீ என்னடான்னா பொண்டாட்டி மாறி நெத்தில குங்குமம் வெச்சி விடற.. அவுங்க என்னடான்னா உன்னோட கன்னத்த இடிக்கிறாங்க.. தலைல கொட்றாங்க ... ரொம்ப கிளோஸ் பிரண்டோ .. அப்டினா எனக்கும் இன்ட்ரோ கொடுத்துருக்கலாம்ல " என சீண்ட அவனோ அவள் தொட்ட தன் கன்னத்தில் மெதுவாக தடவிக் கொடுத்தான். அவனுக்கு பல வருடங்கள் கழித்து கிடைத்த சோன்பப்டியின் தரிசனம் அவனை சித்தம் கலங்கிடச் செய்ய சொரனையே இல்லாமல் துளசியின் திட்டுகளை வாங்க ஆரம்பித்தான்.
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
அடுத்த நாள்
அசோக்கின் இல்லத்தில் அனைவரும்
கனியின் குடும்பத்திற்காக காத்திருக்கத் துவங்கினர்.
எழில் கனி கண்டிப்பாக வர வேண்டும் என மனதில் வேண்டிக் கொண்டவன் கண்ணாடியின் முன் நின்று ஒப்பனைகளையும் செய்து கொண்டான். அசோக் நேற்று ஐசு கதிரிடம் மன்னிப்புக் கேட்டு அவன் மறுத்ததை எண்ணி அவன்மேல் கொலை வெறியில் இருந்தான்.
தேவி 'தங்கையே தனது அக்காவின் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் ஐசுவிற்கு கௌரவ குறைச்சலாகி விடும் என்பதால் கண்டிப்பாக வரவேண்டும் என உத்தரவு போட்டு விட்டார்.
அவள் செல்ல மறுக்க,
கதிர் வர மறுத்து கனியை மட்டும் வற்புறுத்தி அனுப்பி வைத்தான்...துளசிக்கு கனியை எழில் இருக்கும் இடத்திற்கு நம்பி அனுப்ப மனமில்லை.. ஆனால் அவள் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்க அமைதி காத்தாள்.
அசோக்கின் வீடு மிகவும் பெரியதாக இருந்தது. வாசல்வரை வந்து வரவேற்றவர்களை மனதிற்குள் பழித்துக் கொண்டே உள்ளே சென்றாள். நேற்று இருந்த துள்ளல் இன்று அவளிடம் இல்லை என்பதை அனைவருமே புரிந்திருந்தனர்.
பேச்சுத் துணைக்கு கூட ஆள் இல்லாமல் கனிக்கு சளிப்பாக இருந்தது.. காற்று வாங்கலாம் என நடக்கத் துவங்கியவள்
' வீடு இத்தாச்சோடு இருந்து என்ன புரோயோஜனம். மனசு ரொம்ப சின்னதா இருக்கே.. பையன ஒழுங்கா வளர்க்கத் தெரியல.. அசோக்காம் அசோக்.. அவனப் போய் எப்படித்தான் அவளுக்குப் புடிச்சது.. எந்நேரமும் மாமாவ முறைச்சிட்டே இருக்கான்.. அவுங்க அம்மா அதை விட சரியான மேக்கப் பைத்தியம்..மைதா மாவு மூஞ்சிய வெச்சிட்டு என்னமோ உலக அழகின்னு நினைப்பு.. அவுங்க குடும்பத்துல ரொம்ப நல்லவரு அவுங்க அப்பா தான்.. அடுத்து அவரு ' என நினைத்தவள் ' வேணா கனி..மனசுல ஆசைய வளர்த்தாத.
ஐசு இருக்க குடும்பத்துல நம்மனால குப்பைக் கொட்ட முடியாது.. அதும் நம்ம மாமாவ மூக்குல குத்துவேனு வேற சொன்னவன்கிட்ட நாம பேசவே கூடாது.. அண்ணன் தம்பி அண்ணினு எல்லாரும் கெட்டவங்கதான்.. ஹூம் " என நினைத்தவள் அப்போதுதான் யோசித்துக் கொண்டே தோட்டத்திற்கு வந்ததை உணர்ந்தாள்..
திரும்பி உள்ளே செல்ல முற்பட அவளது கையைப் பிடித்து நிறுத்தினான் எழில்..
அவனை முறைத்தவள் கையை எடுத்துவிட முயற்சிக்க " மேடம் எங்கிட்ட பேச மாட்டிங்களா " என்றான்..
" நான் என்னமோ உங்க கிட்ட. விடிய விடிய பேசுன மாறி சொல்றீங்க.. பர்த்டே விஸ் பன்னிங்க.. நான் தேங்க்ஸ் சொன்னேன். அவ்ளோதான நமக்குள்ள வேறென்ன இருக்கு" என்றிட,
" நிஜமா அவ்ளோதானா "
"அவ்ளோதான்.. ச்சே கைய விடுங்க..நீங்க என் கைய பிடிச்சத எங்க மாமாக்கிட்ட சொன்னா உங்க தோலை உரிச்சிடும். " எனக் கெஞ்ச ஆரம்பிக்க அவனுக்கு அது கோபத்தை ஏற்படுத்தியது.. வேகமாக கையை விட்டவன் " இப்போ எதுக்கு உங்கமாமாவ இழுக்குற.. இப்படிக் கோபமா பேசற அளவுக்கு நான் என்ன பண்ணேன் " என்றிட
அவளும் விடாமல்
" இதான்..இந்தக் கோபம் தான் காரணம்.. உங்களுக்கு உங்க அண்ணாவுக்கெலாம் எங்க மாமாவ ஏன் பிடிக்கல.. எதுக்கு அவர அடிக்க நினைக்கிறீங்க " என முகத்தை சுளிக்க,
அவளின் கோபத்திற்கான காரணத்தை உணர்ந்தவன்
" ஹேய் அவர நான் ஏன் தப்பா நினைக்கனும்.. அவர் முகத்த கூட நான் சரியா பார்க்கல .. நான் ஏன் அவர அடிக்க நினைக்கப் போறேன்"
" நிஜமா நினைக்கலையா... "
" அட சத்தியமாங்குறேன்.. நான் என் பிரண்ட் தேவாவ தான் மாமான்னு சொல்லுவேன்.. அவன திட்டனததான் நீ தப்பா எடுத்திக்கிட்ட போல.. " என பாவமாக சொல்ல..
" ஓ அப்படியா.. சாரி.. " என காதில் கை வைத்துக் கொண்டே கேட்க
" ஹும்.. உன்னை மன்னிக்கனும்னா நீ நான் சொல்றதத கேட்கனுமே " என வில்லங்கமா சொல்லிட,
" என்ன கேட்கனும் " என உதட்டை பிதுக்கியவாரே கேட்கவும் " இனிமேல் நான் உங்களை திம்ஷு என்று தான் அழைப்பேன் " என இலக்கிய நடையில் கூறியவன் " திம்ஷூ " எனக் கத்த
" உங்களை " என அருகிலிருந்த மரக்கிளையை உடைத்தவள் அவனைத் துரத்த ஆரம்பிக்க அவனும் ஓட ஆரம்பித்தான்.
" வேணா திம்ஷு.. மீ பாவம்.. அப்ரோ அழுதிடுவேன் " என ஓடிக் கொண்டே கூற " என்னை குண்டுன்னு எங்க ஐசு சொன்னாலே பிடிக்காது.. நீங்களும் அப்படியே சொல்றிங்கள்ள " என புகைய அங்கே வந்த ஐசுவோ பேச்சு வாக்கில் தன்னை என் ஐசுன்னு சொன்னதை எண்ணி மகிழ்ந்தாள்..
வேகமாக ஓடியவன் அசோக்கின் அருகில் அமர்ந்து கொள்ள அவள் ஓங்கிய குச்சி அசோக்கின் முதுகில் சுளீரென விழுந்தது.
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz