ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 1

Nivethamagathi

மனிதன் நூறு சதவீதம் நல்லவனாகவும் இருப்பதுமில்லை.. அதேபோல முழுவதும் கெட்டவனாகவும் இருப்பதுமில்லை.. நல்லவர்களும் தெரியாமல் தவறிழைப்பது உண்டு.. தீயவர்களும் தெரிந்தே நல்லதும் செய்வதுண்டு..

மெக்கானிக்காக தன் வாழ்வை துவங்கிய செல்வராஜ்
கடினஉழைப்பால் முன்னேறி தானே சுயமாக வாகனஉதிரிபாக தொழிற்சாலை வைக்கும் அளவிற்கு வளர்ந்தார்.. அவருக்கு உறுதுணையாக என்றும் அவரது மனைவி சாரதா நின்றார்.. இவர்களுக்கு இரண்டுமே ஆண்பிள்ளை தான்.. பெரியவன் அசோக் படித்து முடித்தவுடன் தந்தைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அலுவலக பொறுப்பை தான் கையில் எடுத்துக் கொண்டான்..அத்தோடு பல நிறுவனங்களையும் தனது தாயின் பெயரிலே நிறுவினான்..

சின்னவன் எழில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவன். தனது அண்ணனை ரோல்மாடலாக கருதுபவன்..
அசோக் மற்றும் அவனது மனைவி ஐஸ்வர்யாவின் திருமணம் தற்போதுதான் நடந்து முடிந்திருந்தது..

காலை 8 மணி..
" இன்னைக்கு கிச்சன்ல வாசம் ஆளயே தூக்குது.. சாரதா என்னமா இப்படி அசத்துற " என்ற செல்வராஜ்

மனதுக்குள் ' எங்க இவ சமைச்சிருக்க போறா.. எப்படியோ புதுமருமகள காக்கா பிடிச்சு அவளையே நல்லா வேலை வாங்கிருப்பா ' என தனது மனைவியின் உண்மை குணத்தை நினைத்துக்கொண்டே டைனிங்டேபிளில் அமர்ந்தார்..

அவரது மனையாள் மேசையில் உணவுப் பாத்திரங்களை கொண்டு வைத்துவிட்டு " மைன்ட் வாய்ஸ்ல நினைச்சா எதும் கேட்காதுன்னு நினைச்சிங்களா.. இன்னைக்கு என்னை புதுமருமக முன்னாடி கேவலப்படுத்தினீங்க போனதடவை மாறி இந்த தடவையும் 108 தோப்புகரணம் போடனும் பார்த்துக்கோங்க " என்று யாருக்கும் கேட்காதவண்ணம் அவரது காதில் சிரித்தவாரே சொல்லிச்சென்றார்..

இதற்கிடையில் தனது மகன்கள் இங்கே நடப்பது எதுவும் அறியாததுபோல அருகில் வந்து அமர்ந்தனர்..

" ஐஸு நீயும் வாமா.. எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம் " என்று சாரதாவும் அமர சிரித்த முகத்துடன் வந்தமர்ந்தாள் ஐஸு..

" அண்ணி உங்களுக்கு தங்கச்சி யாராவது இருக்காங்களா " என்றான் எழில் திடீரென்று..அவன் அவ்வாறு கேட்கவும் அவளுக்கு பழைய நினைவுகள் வந்துவிட சிரித்த அவளது முகம் பயத்தால் வியர்க்க துவங்கியது..

தனது மனைவியைப்பற்றி முழுவதும் அறிந்த அசோக் அவளது பயத்தைப் போக்கும் விதமாக அவளது கைகளை இறுகப்பற்றிக் கொண்டான்..

" அண்ணி என்னாச்சு.. இப்படி பயப்படறீங்க ரிலாக்ஸ்.. நான் எதும் கேட்கல " என்று அமைதியாகிட

" ஏன்டா திடீர்னு அப்படி கேட்ட " என்று சாரதா வினவினார்.. அதற்கு " நத்திங்மா.. அண்ணி எவ்ளோ அழகா இருக்காங்க " என்றதுமே அசோக் அவனை முரைத்திட,
" ஐயோயோ தப்பா சொல்லல.. அண்ணி அழகா அன்பா அடக்க ஒடுக்க மா இருக்காங்கள்ள.. அதேமாறி எனக்கும் ஒரு பொண்ணு கிடைக்குமான்னு தான்.. அண்ணிக்கு தங்கச்சினா குடும்பத்தில சண்டை சச்சரவெலாம் இருக்காதுல " என்றான் தனது அண்ணியைப் பார்த்து..

இதைக் கேட்டதுமே அசோக் சிரித்திட ஐசு " சும்மா இரு " என்று அவனை அடக்கினாள்..

" டேய் அண்ணா ஏன்டா இப்படி சிரிக்குற. நான் ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி ஒன்னும் சொல்லல "
அசோக்கும் தனது சிரிப்பை அடக்கிவிட்டு " ஐஷுவோட தங்கச்சி ஐசு மாறியொன்னும் கிடையாது. அவதான் பெரிய வில்லியே..அவங்க அம்மோவுக்கு சொல்லிக் கொடுக்கறதே அவதான்.. அவகோடெலாம் மனுசன் 2 நிமிசம் பேச முடியாது இரத்தக்காட்டேரி " என்றிட,

" அப்போ கவலைய விடுங்க.. அண்ணிய என்னென்ன டார்ச்சர் பண்ணியிருப்பாளோ அதே டார்ச்சர நாமளும் செஞ்சிடலாம். இல்லண்ணா " என்று எழிலும் சிரித்துக்கொண்டே கூற, ஐசுவின் கண்களில் கண்ணீர் வடியத்துவங்கியது..

" நீங்க சாப்பிடுங்க.. நான் கொஞ்சநேரம் கழிச்சு சாப்பிடறேன் " என்று அழுதபடி ஐசு கிட்சனிற்குள் நுழைந்துகொள்ள, மூவரும் எழிலை முரைத்து தள்ளினர்..

அன்றிலிருந்து எழில் பேச்சுக்கூட ஐசுவிடம் அவளது கடந்த காலந்தைப்பற்றி கேட்டதில்லை..அவளை அண்ணியாக நினைக்காமல் தனது சகோதரியாகவே நினைத்துப் பழகினான்..

ஐசுவுமே நாளடைவில் அவனிடம் உரிமையுடன் பழக ஆரம்பித்தாள்.. வீட்டில் நடக்கும் சிறுவிவாதங்களுக்கு கூட எழிலை விட்டுக்கொடுக்காமல் அசோக்கிடம் சண்டையிடுவாள்..
சாரதாவுமே ஆரம்பத்தில் ஐசுவை வேலை வாங்கினாலும் போகப்போக அவளது குணத்தை புரிந்து கொண்டு சாந்தமதனார்.. செல்வராஜ்
தனக்கு பெண்பிள்ளை இல்லாத குறையை அவள்மூலம் தீர்த்துக்கொண்டார்.. ஆனாலுமே அவள்மனதில் அவளது பிறந்தவீட்டைப் பற்றி எண்ணம் மறையவே இல்லை.. யாருக்கும் தெரியாவண்ணம் மட்டும் அழுதுதீர்ப்பாள்..
ஐசுவும் எவ்வளவு அழகாக ஒப்பனைகள் செய்து அதை மறைத்துக்கொண்டாலும் அனைவருமே அவள் அழுததை கண்டுபிடித்துவிடுவார்கள்..
அவள்மேல் அவ்வளவு பிரியம் வைத்திருந்தனர்..

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
பூஞ்சோலை கிராமம்..

காலை 10 மணி..

தனது உடைமைகளை பத்திரப்படுத்திக் கொண்டவள் தோழிக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் . முதன்முதலாக கல்லூரிக்கு செல்லும் தன்னை வழியனுப்ப தனது செல்ல நாய்க்குட்டி சின்சேனைத் தவிர வேறு யாருமில்லை என கவலை ஒருபுறமிருந்தும் தன்னுடைய கடைமையை சரியாக செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் அவளது தந்தை மற்றும் தாயின் முன் நின்றாள்..அவளைப் பார்த்தபின் இருவரும் முகத்தை திருப்பிக்கொள்ள, அவளோ " அப்பா நான் காலேஜுக்கு போயிட்டு வரேன்பா..என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க " என்று காலில் விழுந்தாள்..

அவரோ ஒதுங்கிக்கொள்ள, தாயோ " எங்க கால்ல விழுந்தா மட்டும் நீ பண்ண பாவம் குறையவா போகுது.. அங்க போயாவாது யார் மனசையும் காயப்படுத்தாம நல்ல பொண்ணா இரு.. " என்றார் கோபமாக.

இதுவே சென்ற வாரத்திற்கு முன்னாடி என்றால் " நான் என்ன வில்லியா " என
வீட்டையே ரெண்டாக்கியிருப்பாள்.. ஆனால் எதிர்த்து பேச முடியாத நிலையை அவளே உருவாக்கிக் கொண்டாள்..
" சரிம்மா.. சின்சேன நல்லாப் பார்த்துக்க.. போன உடனே போன் பண்றேன்.. எங்கிட்ட பேசனும்னா துளசியோட நம்பருக்கு பண்ணுங்க... " என்று அழுதுகொண்டே கூற, தேவி அதை கண்டுகொள்ளவே இல்லை..

கந்தன் ஏடிஎம் கார்டை அவள் கைகளில் திணித்து விட்டு எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றுவிட்டார்.தேவியும் வேறுஎதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார்.

கந்தன் தேவி தம்பதியினரின் ஒற்றை மகள் கனிமொழி..அவளைச்சுற்றி அவள் பிறந்ததற்கு பிறக்காமல் இருக்கலாம் என எண்ணுபவர்கள் தான் அதிகம். அதில் அவள் தாயும் தந்தையும் அடக்கம். பிறந்ததிலிருந்து தாய் பாசத்தை முழுவதும் உணராமல் இருந்தவளுக்கு அனைத்துமே அவள் மாமா தான்.. அவள் மாமாவிற்காக எதையும் செய்துவிடுவாள்.
அன்றும் அதைத்தான் செய்தாள்.. ஆனால் நடந்ததோ அவள் எதிர்பார்க்காதது.. அவள் செய்த செயலால் அவளுக்காக இருந்த ஒரு உறவும் அவளை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது..

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

" ஹேய் துளசி.. அங்க போன உடனே உன் வேலைய ஆரம்பிக்காத.. கனி மாறி அமைதியா இருக்கனும்.. புரியுதா " என்று கண்டிப்பாக சொன்ன தாயிடம்

பாயசத்தை குடித்துக் கொண்டே
" நீ கனி புராணம் பேச ஆரம்பிச்சா வாய மூடவே மாட்டியே.. பேசாம நான் இங்கயும் அவ இங்கயும் பொறந்துருக்கனும்.. அப்போதான்
என்னோட அருமை புரியும்.. அதும்
அவங்க அம்மாவ அப்படியே
" என வழக்கம் போல தேவியை திட்ட ஆரம்பிக்க,

அதற்கு மேல் அவளை பேசவிடாது தலையில் கொட்டியவர்
" ஏன்டி எங்கள விட்டு ஹாஸ்டல் போறேனு கொஞ்சமாச்சும் பீல் பண்றியா.. அதானே உன் பிரண்ட் பக்கத்துல இருந்தா நானெலாம் உனக்கு ரெண்டாம் பச்சம் தான " என முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள,

அதை நம்பாதவள்
" ரொம்ப மொக்க போடாதம்மா.
ஆமா உன்னோட சீமந்திர புத்திரன் எங்க.. அவனை கடைல சோன்பப்டி வாங்கிட்டு வரச்சொன்னேன்.. இன்னுமும் அந்தக்கடைக்காரிகிட்ட ஜொல்லு விட்டுட்டு நிக்கறான்போல. "

" அடியேய் என்பையன் ஒன்னும் அப்படி பட்டவன் இல்ல.. அவன் பத்திரமாத்து தங்கம்.. " என்று கோபமாக சொன்னவர் " நானும் உங்கண்ணனுக்கு கனிய கேக்கலாம்னு தான் நினைச்சிட்டு இருக்கேன் ..அவ முன்னாடி இப்படி பேசி உலறி வைக்காத.. " என்றதும் துளசிக்கு புரை ஏறியது..

சிறிதுநேரத்தில் அபி வந்துவிட மூவரும் கனியினை அழைத்துக் கொண்டு மகிழுந்தில் கல்லூரி நோக்கி பயணம் சென்றனர்.

இளம்வயதிலே கணவனை இழந்த பார்வதி தனது மகன் அபி மற்றும் துளசியை மிகவும் சிரமப்பட்டு ஆளாக்கினார்.. தான் கஷ்டப்படும்போது உதவாத சொந்தங்களை தான் முன்னேறிய பிறகு தானே தள்ளிவைத்தார். அபி சென்னையின் புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகின்றான்.. அவன் அங்கு பணிபுரிவதால்தான் தனது மகளை அங்கே நிம்மதியாக அனுப்பி வைத்தார் பார்வதி..

கனியும் அபியும் எப்பவும் எதிரிகள் தான்.. சிறுவயதில் துளசி, கனியை நாய்க்குட்டி துரத்த தனது தங்கையை மட்டும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டவன் கனியை மறந்துவிட்டான். பாவம் கனி அந்த நாயிடம் தப்பிக்க படாதபாடுபட்டாள்.
துளசிக்கு அண்ணனென்பதால் அவனையும் அண்ணனாக நினைத்த அவள் மனது அவனது செயலால் தனக்கு யாருமே இல்லை.. யாரையும் சார்ந்து வாழக்கூடாது என மனதில் பதித்துக் கொண்டது..

அபியும் அவர்களை விட 3 வயது பெரியவன் அவ்வளவுதான். அதனால் அவனும் குழந்தைத் தனமாகவே நடந்து கொண்டான்.. அன்றிலிருந்து கனியிடம் எவ்வளவோ மன்னிப்புக் கேட்டு இருப்பான்.. ஆனால் அவள் மன்னித்ததாக தெரியவில்லை.. அவனும் என்னை ஒருமுறை " அண்ணா" என்றழைத்துவிடு எனக் கெஞ்சி கெஞ்சி பார்த்து ஓய்ந்தே விட்டான்.. அதிலிருந்து இருவரும் பேசிக் கொள்வதே இல்லை.. ஆனாலும் இருவருக்குள்ளும் பாசம் மனதில் ஒளிந்து இருக்கிறது.எந்தப் பொருள் புதிதாக துளசிக்கு வாங்கினாலும் கனிக்கும் அதேபோல் வாங்கிவிடுவான்.. அதை துளசியிடம் கொடுத்தே கனிக்கு தரச் சொல்லுவான். ஆனால் இதையெலாம் அறியாத பார்வதி மனதில் தவறான ஆசையை வளர்த்துக்கொண்டார்.

கனிக்கு துளசியைத் தவிர உற்ற தோழியென்று யாருமே இல்லை.. இவள் ஜெனிலியாவும் இல்லை.. அதற்கென்று அம்மாஞ்சியும் இல்லை.. தனது மாமாவிற்கு அடுத்து அவளுக்கு எல்லாமே துளசிதான். பார்க்கலாம் இனி இவர்கள் வாழ்வில் என்னென்ன நடக்கும் என்று!
சோகமான கதையென்று ஓடி விடாதீர்கள்.. இனி தான் கதையே ஆரம்பம்.

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz