உறவு 18
நண்பனிடம் பேசிவிட்டு திரும்பிய எழில், தன்னையே முறைத்த வண்ணம் நின்றிருந்த கோதையினைக் கண்டு மனதில் சற்று கிலி பரவினாலும் புன்னகைத்தவாரே அவள் அருகில் செல்ல அவளோ அவன் அருகில் வருவதை உணர்ந்ததும் விருட்டென்று காபியைக் கூட கொடுக்காமல் உள்ளே சென்று விட்டாள்.. தன்னிடம் வெட்கம் கலந்த பார்வையினை மட்டுமே உதிர்த்தவளின் பாராமுகம் இவனையும் வாட்டியது..
நாம் பேசியதைக் கேட்டுத்தான் கோபம் கொண்டுவிட்டாலோ என எண்ணி சமாதானம் செய்ய உள்ளே சென்றால் அவள் எங்கே இருக்கிறாள் என கூட கண்டறிய முடியாதவாறு எங்கோ சென்று ஒளிந்து கொண்டாள்..
சிறிது நேரத்தில்
தேவி அனைவரையும் சாப்பிட அழைக்க ஐசு மற்றும் அசோக் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அசோக்கிற்கு கதிரின் வீ்ட்டில்
இருக்கும் ஒவ்வொரு நொடியும் முள் மேல் நடப்பது போல தோன்ற, எப்போது வீட்டை விட்டு கிளம்பலாம் என நினைத்துக் கொண்டிருந்தான்.கதிரின் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் ஐசுவின் விருப்பத்திற்கேற்ப இருப்பது அவனது கோபத்தை இன்னும் அதிகரித்தது.. ஐசு தேவிக்கு சமையலில் உதவுவதைக் கூட தனது ஐசுவின் சமையலை அவன் சாப்பிடுவதா என உறுமிக் கொண்டிருந்தான்.
ஐசுவிற்கும் அவனது மனநிலை சற்று புரிந்துதான் இருந்தது.. ஆனால் இன்று தான் குடும்பம் ஒன்று சேர்ந்த நிலையில் அவன் முன்கோபத்தினாலும் பிடிவாதத்தினாலும் எங்கே தனது பெற்றோர்கள் முன்பு கெட்ட பெயரை வாங்கி விடுவானோ என பயந்து கொண்டேதான் இருந்தாள்.. மகளை மன்னித்து ஏற்றுக் கொண்டவர்களால் மருமகனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது அவளுக்கும் புரியாமல் இல்லை.. ஆனால் இது ஒரு நாளில் சரியாகும் பிரச்சினை இல்லையே.. அசோக்கின் நடவடிக்கையால் மாறினால்தான் உண்டு.. அவனோ சிரித்துப் பேசாவிடினும் முறைக்காமல் அமைதியாக இருந்தால் கூட பரவாயில்லை எனத் தோன்றியது..
கந்தனோ தன்னை மதிக்காதவரிடத்தில் பேச மாட்டார்.
தேவியோ மிகவும் கூச்சசுபாவம் கொண்டவர். இதுவரை தன்னை எந்நேரமும் வம்பிழுக்கும் அபியிடம் கூட அதிகம் பேசியதில்லை.. அப்படியிருக்க முள் கட்டிய முகமாய் இருக்கும் அசோக்கிடம் தானே சென்று எவ்விதம் பேசுவார். தற்போது
கணவனுக்கு பயப்படுவதா பெற்றோருக்கு பயப்படுவதா என்று புரியாமல் கைகளைப் பிசைந்த வண்ணம் இருக்க, அவளது செய்கையையும்
அவளது வாடிய முகத்தினையும் பார்த்த அசோக் அவளை இன்னும் வருத்தாமல் சாப்பிட அமர்ந்தான்..தேவி ஐசுவையும் அவர்களுடனே சாப்பிடச் சொல்ல, தேவியும் கனியும் பரிமாறத் துவங்கினர். கதிரும் அசோக்கும் எதிர்புறமாக அமர கதிருக்கு அருகே எழில் அமர்ந்திருந்தான். ஐசுவிற்கு கதிரிடம் மன்னிப்புக் கேட்க தோன்றினாலும் அதனை மற்றவர்களை வைத்துக் கொண்டு கேட்க தயங்கி அவனது முகத்தினைப் பாராமலே இருந்தாள்.
கதிரும் அவளை முழுவதுமாக மன்னிக்க தியாகி இல்லையே. அவளது நம்பிக்கைத் துரோகம் மனதில் ஆறா இரணமாய் இருந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் தன் உடன்பிறந்தவளுக்காக அவரது மன நிம்மதிக்காக அமைதி காத்தான்.
எழில் கனியையே பார்த்துக் கொண்டிருக்க அவளோ
சாப்பாடு பரிமாறும்போது கூட தலை நிமிரவில்லை.. எழிலுக்கு அனைத்து விதமான உணவுகளையும் பரிமாறியவள் அவனருகே அமர்ந்திருந்த கதிருக்கு இரசம் மற்றும் பூண்டு ஊறுகாயை மட்டும் வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல அமைதியாக சென்று நின்று கொண்டாள்.. எழிலுக்கு இது எதனால் என்று புரியவில்லை.. ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு நன்றாகப் புரிந்தது..
அசோக்கிற்கு தனது மனைவி சமையலை கதிர் சாப்பிடாததும், ஐசுவிற்கு அசோக்கின் கோபத்திலிருந்து தப்பித்ததாலும் நிம்மதியாக இருந்தது.. கதிருக்கும் ஐசுவின் கைப்பட்ட பொருளைத் தவிர்த்ததே நிம்மதியாக இருந்தது..கனியும் அவ்வாறுதான் நினைத்தாள்..
" கதிர் நாளைக்கு நீயும் இவங்களோட வீட்டிற்கு வந்தரனும்.. நீயும் ஒவ்வொரு டைமும் எதாச்சும் சாக்குப் போக்கு சொல்லிட்டே இருக்க.. இப்பதான் நாம சொந்தக்காரங்க ஆகிட்டோம்ல.. இப்பவாச்சும் வாப்பா " என செல்வராஜ் கதிரினை வற்புறுத்தி அழைக்க கதிருக்கோ அதை எப்படி தவிர்ப்பது எனத் தெரியவில்லை..
சரி என்று தலையை மட்டும் ஆட்டி வைத்தான்..
விருந்து உபசரிப்புக்குப் பின்பு அனைவரும் கிளம்பத் தயாராக " சார் நானும் என் மாமாவும் நாளைக்கு ஷாப்பிங் போறோம்.. அதுனால நாங்க வரமுடியாது சாரி " என்று கீழேப் பார்த்தவாறு கூறிட அனைவருக்கும் சங்கடமாகிப் போனது. கனிக்கு பெரியவர்களிடமும் உறவனர்களிடமும் எவ்விதம் நடந்து கொள்வது என கற்றுக் கொடுக்காமல் இருந்துவிட்டேனோ என தேவி எண்ண, செல்வராஜோ " என்னமா.. காலேஜ்ல என் மருமக உன்னை ரொம்ப தொல்லை பண்றாளா. அதான் எங்க வீட்டுக்கு வரமாட்டிங்கறியா .. " என்றதும் அவரிடம் என்ன பதில் பேசுவது என தெரியாமல் பாவமாய் முழிக்க " சரிம்மா. நீ ஷாப்பிங் போயிட்டு ஈவ்னிங் கூட வந்தாப் போதும்..பட் கண்டிப்பா வரணும். அப்போதான் நீ என் கியூட்டி சரியா " என்றவர் அவளது கன்னத்தினை மெதுவாக தட்டிச் சென்றார்..
கந்தனும் தேவியும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக ஐசுவை ஜோடியாகப் பார்ப்பதால் புடவை,பூ, பழம், மஞ்சள் மற்றும் குங்குமம் கொண்ட தாம்பூலத்தட்டை ஆசிர்வாதமாகக் கொடுக்க அசோக்குடன் காலில் விழுந்து அதனை வாங்கிக் கொண்டாள்.. கந்தனும் அசோக்கின் கையினைப் பிடித்துக் கொண்டு " பார்த்துக்கோங்க மாப்பிள்ளை.. எல்லாத்தையும் உதறிட்டு உங்களை மட்டும்தான் நம்பி வந்த பொண்ணுங்கறத எப்பவும் மறந்துடாதீங்க .. " என்று பேச முடியாமல் தயங்கியவாரே கூறவும் அசோக்கிற்கு ஒரு மாதிரியாக இருந்தது..பெற்றவர் உரிமையாக இதனைச் சொல்லாமல் வருத்தத்துடன் சொன்னதால் முதன்முறை தான் தவறு செய்து விட்டோமோ என எண்ணத் துவங்கினான். அவனும் " என்னை மன்னிச்சிடுங்க மாமா.. இனிமே நீங்க பெருமைப் படறமாறி நடந்துப்பேன்" என்றவன் அவர் பற்றியிருந்த கைகளை சற்று அழுத்தி தைரியம் கொடுத்தான்..
அடுத்து கனியிடம் வந்தவன் காதோரமாக " . என்னதான் நீ என் சாப்பாட்டுல காரத்தக் கலக்கி கொடுத்தாலும் எப்பவும் நீ என்னோட செல்ல பாப்பு தான் " என்றவன் அவள் வலது கையினில் அழகிய பிரேஸ்லெட் ஒன்றினை அணிவித்து " ஹேப்பி பர்த்டே பாப்பு " என்று சத்தமாக கூறியவன் நெக்ஸ்ட் பர்த்டே என் தம்பியோட நம்ம வீட்ல ஜோடியா செலிபிரேட் பண்ணனும் சரியா " என்பதைக் காதில் கூறிவிட்டு பறந்துவிட்டான். சிறிது நேரத்திற்கு முன்பு இதனைக் கூறியிருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பாள்.. ஆனால் இது தற்போது வெந்த புண்ணில் வேலினைப் பாய்ச்சியது.. இதற்கும் சேர்த்து எழிலினை முறைத்து விட்டு உள்ளே சென்றாள்.
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
கோவிலில் சாமி தரிசனம் முடிந்தபிறகு துளசியும் பார்வதியும் பிராகாரத்தில் அமர அபி மெதுவாக வேலையினை விடுவது குறித்துக் கூறினான்..
" உனக்கு எது சரின்னு தோனுதோ அதையே செய்டா. உனக்கு பிடிச்ச மாறியே வேலை கிடைக்கும் " என பார்வதி கூற துளசியோ " கிடைக்கும் கிடைக்கும்.. அங்கயும் இப்போ கிடைக்கிற மாறி மரியாதை கிடைக்குமா.. இப்படியே ஒவ்வொரு கம்பெனிக்கும் குரங்கு சேட்டை பண்ணி தாவிட்டு இருந்தா உன்னை நம்பி எவன் பொண்ணு கொடுப்பான்..அங்கயும் அந்த சிடுமூஞ்சி மாறியே எம்.டி வந்தா என்ன பண்ணுவ.. " என்ற அடுத்த நொடி கோவில் மணி ஓசை தாறுமாறாக மாறி மாறி அடிக்கத் துவங்கியது.
காதில் கை வைத்தவாறே " ரத்தக் காட்டேறி வாய வைக்காதடி " என்று கத்திக் கொண்டே ஒலி வந்த திசையினைத் திரும்பிப் பார்க்க, அவன் வாயிலிருந்து வந்ததோ " சோன்பப்டி " என்றுதான்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz