உறவு 11
அடுத்த பத்தாவது நிமிடத்தில் தூக்கம் கலைந்த எழில் அருகிலிருந்த காபி கப்பையும் தனது படுக்கையைும் பார்த்தான்.. தனதறைக்கு வந்தது அண்ணியாக இருக்க கூடாது என வேண்டிக் கொண்டே தயாராகி கீழே வந்தான்.
ஐசு அவன் முகத்தை பாராமல் பரிமாறத் துவங்கினாள். சாப்பிட்டு எழுந்தவன் பேசாமல் வெளியே செல்ல முயல, " எழில் உங்கிட்ட கொஞ்சம் பேசனும் " என்றாள் ஐசு..
தோட்டத்தில் பதற்றமாக ஐசுவிற்காக எழில் காத்துக் கொண்டிருந்தான்.
கோபமாக அவனிடம் வந்தவள் " எழில் அண்ணியா நான் உங்கிட்ட நீ இப்ப பண்ணிட்டு இருக்கறத கேட்க சங்கடமா இருக்கு... ஆனா ஒரு அம்மாவா நான் உரிமையா கேட்கலாம்னு நினைக்கிறேன்.. நான் கேட்கலாம் தான.. " என அதேக் கோபத்தோடு கேட்க,
" அண்ணி நீங்க நினைக்கற மாறி ஒன்னுமில்ல.. " எனத் தடுமாற,
" ஸட் அப் எழில்.. நான் உங்கிட்ட உண்மைய மட்டும்தான் எதிர்பார்க்கிறேன்.. உன்னோட இந்த புலம்பல கேட்க நான் வரல.. " என உறுதியாக சொல்ல நடந்ததை கூற துவங்கினான்..
" அண்ணி நீங்க எவ்ளோ தைரியமா வெளிய காட்டிகிட்டாலும் உங்க குடும்பத்த நினைச்சு வருத்தப் படறீங்கனு எனக்குத் தெரியும் " என அவன் ஆரம்பிக்க,
" எழில் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் .. " என புரியாமல் விழிக்க
"அண்ணி நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க .. நீங்க சோகமா இருக்க காரணம் உங்க சித்தி பொண்ணு தான.. அவதான உங்கள காலேஜ்ல கூட நிம்மதியா இருக்க விடமாட்டிங்கறா..? அதான் நான் அவள காயப்படுத்த நினைச்சேன் அண்ணி.. அதும் உங்கள டிவோர்ஸ் பண்ண சொல்லி வற்புறுத்தவும் நான் செம டென்சனாயிட்டேன். அவளுக்கு நல்ல பாடம் சொல்லித்தரணும்னு நினைச்சேன்.. ஆனா தேவா அவள பழி வாங்க அவ பேக்ல போதைப் பொருளையும் தப்பான வீடியோஸ் எல்லாத்தையும் வைச்சு பிரின்சிட்ட மாட்டிவிட டிரை பண்ணுவானு நான் நினைச்சு கூட பார்க்கல.. என்ன இருந்தாலும் அவ ஒரு பொண்ணு அண்ணி.. அவளோட பேர் கெட்டுச்சுனா அது அவுங்க குடும்பத்துக்கு எவ்ளோ பெரிய அவமானம்னு எனக்கும் தெரியும் அண்ணி.. அதும் அவ உங்க தங்கச்சி அவளுக்கு எதாச்சும் நடந்துச்சுனா உங்களால தாங்க முடியாதுனு தெரியும்
நான் எதும் வேணும்னே பண்ணல..ப்ளீஸ் என்னை வெறுத்துடாதீங்க அண்ணி..
அப்பாவும் அம்மாவும் பிசினஸ் பிசினஸ்னு அதையே நினைச்சிட்டு என்னையும் அண்ணாவையும் கண்டுக்காம விட்டுடாங்க.. எனக்கு எல்லாமே அண்ணாதான் அண்ணி..இப்ப அவருக்கடு்த்து எல்லாமே நீங்கதான். நீங்க சொன்னாலும் சொல்லலினாலும் நீங்க எனக்கு அம்மாதான்.. ப்ளீஸ் அண்ணி உங்க எழில் எப்பவும் நீங்க தலைகுனியற மாறி நடந்துக்க மாட்டேன்.. என்னை நம்புங்க.." என துக்கம் தொண்டை அடைக்க சொல்ல, ஐசு அதிர்ச்சியில் அருகிலுள்ள கல்பெஞ்சில அமர்ந்தாள்..
காலையில் அவனது அறையில் போதைப் பொருட்களையும் தவறான புத்தகங்கள் மற்றும் வீடியோ கேசட்களை பார்க்கும்போது அவன் தவறான திசையில் செல்வதாக நினைத்து புத்திமதி கூறத்தான் அவனை அழைத்தாள்.. ஆனால் அது கனிக்காக தீட்டப்பட்ட படுகுழி என்று அவள் அறிந்திருக்கவில்லை.
தனது தங்கை இவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து மீண்டதை எண்ணி சந்தோசப்படுவதா இல்லை அவளை தன்னால்தானே எல்லோரும வெறுக்கிறார்கள் என எண்ணி வருந்துவதா என்று அவளுக்கு தெரியவில்லை...
" அண்ணி " என்ற அவனது குரலில் கலைந்தவள் " அவ என்னை கொடுமைப் படுத்துனானு யார் சொன்னா எழில் உனக்கு.. நான் தான் அவளோட இடத்தை இவ்ளோ நாள் தட்டிப்பறிச்சிருந்திருக்கேன்.. அதான் இனியாச்சும் அவ சந்தோசமா இருக்கட்டும்னு என் பேர நானே கெடுத்துட்டு கல்யாண நாளன்னைக்கு ஓடி வந்துட்டேன்... "
என சொல்லவும் இப்போது அதிர்ச்சி அடைவது இவன் முறையானது.
" அப்போ உங்க சித்தி உங்கள கொடுமை படுத்துலயா.. உங்கள வயசானவனுக்கு கட்டிக் கொடுக்க நினைச்சதா நீங்க சொன்னதெலாம் பொய்யா.. " என சந்தேகமாக கேட்க அவள் ஆமென்று தலையாட்டினாள்..
" அப்போ ஏன் அண்ணி கல்யாண நாளனைக்கு ஓடி வந்திங்க.. உங்க வீட்ல சொல்லி அண்ணாவயே கல்யாணம் பண்ணிருக்கலாம்ல "
" எங்க அம்மா அப்பா என்னை வெறுக்கறக்கு தான் அப்படி பண்ணேன்.. ஆனா அதுல பாவம் கதிர் மாமாதான் ரொம்ப பாதிச்சிட்டாரு..
நான் எவ்ளோ தடவை அவர்கிட்ட உங்க அண்ணாவும் நானும் விரும்பரோம்னு சொல்ல முயற்சி பண்ணேன்.. ஆனா உங்கண்ணாதான் வேணானு தடுத்துட்டாரு. அவர் என்னை மன்னிக்கலைனா நான் காலம்பூரா குற்றவாளியாதான் இருக்கனும்னு தான் முதல்ல கனிக்கிட்ட மன்னிப்பு கேட்டு அவ மூலம் அவர்கிட்ட மன்னிப்பு கேட்கலாம்னு நினைச்சேன்.
ஆனா நீ அவள தப்பா புரிஞ்சிக்கிட்ட..
அவ குழந்தைடா.. அவ எப்பவும் எல்லார்டையும் சண்டை போடறமாறி தான் பேசுவாளே தவிர மனசுல எதும் வெச்சுக்க மாட்டா.. எங்க என்னோட அம்மா இல்லைன்னு தெரிஞ்சா நான் வருத்தப்படுவேனு என்னை ரொம்ப செல்லமா வளர்த்துட்டாங்க.. அது அவ மனச ரொம்ப பாதிச்சிருச்சு..
இது தெரியாம
நான் விளையாட்டு தனமா அவகூட சண்டை போட்டதெல்லாம் சீரியசா எடுத்துட்டு என்னை வெறுத்துட்டாடா.. அவ இப்போ பாசத்துக்காக ஏங்குறா.. அதான் அவளை எங்க அம்மா அப்பாட்ட சேரறதுக்காக நான் ஒதுங்கி நின்னுட்டேன்.
இந்த உண்மைலா நானே உங்ககிட்ட சொல்லிற்கனும்.. ஆனா அசோக்தான் தடுத்திட்டாரு.."என கண்களில் கண்ணீர் தேங்க பொறுமையாக சொன்னவள்
"ஐய்யோ
இதுனால இவ்ளோ பெரிய பிரச்சினை வரும்னு தெரியாம போச்சே " என வாய்விட்டு கதறி அழ ஆரம்பித்தாள்.
" அண்ணி சாரி ... ப்ளீஸ் அழாதீங்க.. நான் கனிக்கு எந்தப் பிரச்சனையும் வராம பார்த்துக்கிறேன்.. அவ இனி என்னோட பொறுப்பு அண்ணி.. " என அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு கூறினான்.
"ஆனா தேவா அவ பேக்ல" என அவளிழுக்கவும் " அவன்ட நேத்து நைட்டே அதை வாங்கிட்ட.. அதான் என் ரூம்ல இருந்துச்சு . ப்ளீஸ் அண்ணி என்னை நம்புங்க.. இனிமேல் தீர விசாரிக்காம நான் யாரையும் ஜட்ஜ் பண்ண மாட்டேன்.. " என அவன் உண்மையான வருத்தத்துடன் சொல்லவும் ஆதரவாக அவன் தலையை கோதிவிட்டாள்..
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
சந்தோசமாக கனி வகுப்பில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தாள்..
" ஏய் கனி பேப்பர கொடுடி.. பயமா இருக்குடி. சார் பார்த்திற போறாரு" என ரதி பின்னால் இருந்து மெதுவாக கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள்.
அவளோ அதைக் காதில் கேட்காமல் ரதியின் பேப்பரில் உள்ள பிள்ளையார் சுழியை கூட விடாமல் காபி அடிப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.. ரதிக்கு தெரியவில்லை அவள் தேர்வெண்ணை
தவிர வேறெதுவும் எழுதவில்லைெயன்று..
அவளுக்கு இன்று தலைகால் புாியவில்லை.. யாரோ தனக்கு தெரியாமல் சிவப்பு ரோஜாக்களுடன் காதல் கடிதத்தையும் பையில் வைத்ததிலிருந்தே யாராக இருக்கும் யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே இருந்தாள்..
தமிழ் சினிமாக்களையும் ஹிந்தி நாடகங்களையும் பார்த்து பைத்தியம் முற்றிப் போன இவள் அதை போலே காதலும் அமைந்து விடும் என எண்ணி மன கோட்டை கட்ட ஆரம்பித்தாள். பதினெட்டு வயதே அடைந்த இவளுக்கு காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற நீண்ட ஆசை நிறைவேற போகிறது என குதூகளித்துக் கொண்டிருந்தாள்.. ( அது துளசி கதிருக்கு வாங்கி வைத்திருந்த கிரிட்டிங் கார்ட் என அவளுக்கு தெரியவில்லை. )
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz