ZingTruyen.Xyz

உயிரோடு உறவாட ( முழுக் கதை)

உறவு 12

Nivethamagathi

கனியின் ஆசைக்கிணங்க அவளுக்குப் பிடித்த அனைத்தையும்
தேவியும் பார்வதியும் சமைக்கத் துவங்கி விட்டனர்.

கதிரும் கந்தனும் ஒருவருக்கொருவர் பேசாமல் அமைதியாக எதிரெதிரே அமர்ந்திருந்தனர்..கதிரின் திருமணம் நின்றதிலிருந்து நேருக்கு நேர் பேசுவதற்கு சங்கோஜமாக இருவரும் கருதினர். தனது மகளால் அவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க வழி தெரியாமல் தயங்கினார்.. மெதுவாக கந்தனே பேச்சை ஆரம்பித்தார்.

" தம்பி.. "

" சொல்லுங்க மாமா "

" ஐசு இப்போ எங்க இருக்கானு எனக்குத் தெரிஞ்சிடுச்சு..இப்போ என்ன பண்ணலாம் " என்று தயக்கமாக கூற

" எனக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே தெரியும் மாமா.. அவ உங்க பொண்ணு.. அவள ஏத்துக்கறதும் ஒதுக்கறதும் உங்க இஸ்டம்.. அதுல நான் சொல்ல ஒன்னுமில்ல " என்றான் தெளிவாக அவர் கண்களைப் பார்த்து.. தற்போது அவனிடம் காதலியை இழந்த சோகமோ அல்லது திருமணம் நின்ற அவமானமோ தெரியவில்லை..

" எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல தம்பி.. இப்ப வரைக்கும் என் மகதான் அப்படி செஞ்சாளான்னு நம்பமுடியல.. அவள ஏத்துக்க தன்மானம் இடங்கொடுக்கல. வேண்டானு ஒதுக்க பெத்தமனம் ஒத்துக்கல. " என்றார் தலைகுனிந்தவாறு.. அவன் கண்களைப் பார்த்துப் பேச தைரியம் வரவில்லை..

தேநீர் கொடுக்க வந்த தேவிக்கோ
என்றும் கம்பீரமாக தலைநிமிர்ந்தவாறு இருக்கும் தன் கணவர்
தரையைப் பார்த்தவாறு பேசுவதைப் பார்க்க துணிவில்லாமல் தேநீரைக் கூட கொடுக்காமல் கையோடு உள்ளே சென்றுவிட்டார்.

' இதே இவ பொண்ணா இருந்தா எப்படியோ போகட்டும்னு விட்ருப்பாளா.. '

' இதே அவுங்க அம்மா இருந்திருந்தா பொண்ணுக்கு நல்லது கெட்டது சொல்லி ஒழுக்கமா வளர்த்திருப்பா.. என்ன இருந்தாலும் சித்திக்காரி சித்திக்காரி தான் ' என ஊர்க்காரர்கள் தன் காதுபடவே பலவாறு பேசி சென்றுள்ளதையெல்லாம் கேட்டு கேட்டு மனம் இரணப்பட்டு என்றோ கடினப்பட்டு விட்டது. ஆனால் தன் கணவர் படும் பாட்டை பார்த்துக் கொண்டிருக்கும் அவரால் ஐசுவை மன்னிக்க முடியவில்லை.. அவளை நேரில் பார்த்து திட்டினால் கூட ' நீ என்ன என்னோட அம்மாவா ' என கேட்டுவிடுவாளோ? இனி அவள் வாழ்வை முடிவுசெய்யும் உரிமை தனக்கில்லையா? என வளர்த்த மனம் அடித்துக் கொண்டது.. அவள் நற்பெயருடன் சந்தோசமாக வாழ்ந்தாலே தனது வாழ்க்கையின் அர்த்தம் முற்றுப்பெறும் என எண்ணி வாழ்ந்து கொண்டவருக்குத் தான் மற்றவர்களைக் காட்டிலும் வலி அதிகம்.. ஆனால் அதையெல்லாம் மற்றவர்களுக்குச் சொன்னால் புரியுமா !

இளம்வயதில் கீழே விழுந்ததில் அடிவயிற்றில் அடிபட குழந்தையினைத் தாங்கும் தன்மையினை அவரது கர்ப்பப்பை இழந்துவிட்டதால் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தவருக்கு கடவுள் கொடுத்த வரமாய் வந்தவள்தான் ஐசு.. தன் கணவரை விட தனது மகளையே உயிராய் நேசித்தார். அதனால் என்னவோ ஐசுவை வெறும் பேச்சுக்கூட திட்ட முடிவதில்லை..

அவள் எப்போதாவது கோபத்தில் இருந்தால் கூட தன்னை " மாஆஆ " என ஐசு இழுத்துக் கூறினாலே தனது கோபம் சோகம் எல்லாம் சூரிய ஒளியின் முன் பனித்துளி மறைவது போல மறந்துவிடுவார்.
ஊரார் பாராட்டும்படியாக அவள் செய்த
ஒவ்வொரு செய்கையையும் மனதில் மெச்சிக் கொள்வார். அதற்காக கனியை வெறுக்கிறார் என்று அர்த்தமில்லை..

ஐசு நன்றாக படிப்பாள். சொன்னதை கேட்டு அதன்படியே நடந்துகொள்வாள்.

கனியோ தினமும் பள்ளி செல்வதற்கு கூட ஆயிரம் அடம், பொய்கள் என உயிரைப் பாடாய்படுத்தி விடுவாள்..

அதற்கு கோபப்பட்டாலும் 'உம்பொண்ண மட்டும் திட்டறியா? எப்பவுமே என்னை தான திட்டற.. அடிக்கற.. நான் என்ன தவுட்டுக்கா வாங்கிட்டு வந்தேன்.. பேசாம்ம எங்கம்மா அப்பா எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க நான் அவுங்ககிட்டையே போயிக்கிறேன்.. " என வார்த்தையால் வெளுத்து வாங்குவாள்..
கனியின் சேட்டைகளைப் பொறுத்துக் கொள்ள இந்த தேவியால் மட்டுமல்ல பூமாதேவியால் கூட முடியாது.. இவரே அமைதியாகப் போனாலும் ' இன்னைக்கு ஏன் என்னை திட்டல.. ஏன் உங்க பொண்ணு எங்கூட பேசக் கூடாதுன்னு கூட சொல்லிக் கொடுத்துடால்லா... " என வம்பிழுப்பாள்..
தேவி ஒரு வார்த்தை சொன்னால் அதை நூறாக்கி கந்தனிடம் போட்டுக் கொடுப்பாள்.. கந்தனோ அதைப் பொய் என்று தெரிந்தும் மகளுக்காக பொய்யாக திட்டுவார்..
நாட்கள் போகப்போக ஐசு மற்றும் கனியின் சண்டை அதிகரித்துக் கொண்டே போனது..
தான் யாருக்குத் தான் பரிந்து பேசுவது
என புரியாமல் திண்டாடுவார்..

" தேவி ஏன்மா டீ கொடுக்காம வந்துட்ட.. " என்ற பார்வதியின் கூற்றில் தன்னிலையறிந்தவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்..

" இன்னும் எத்தனை நாள் தான் அழுதுட்டே இருப்பீங்க தேவி.. ஐசு ரொம்ப தைரியமான பொண்ணு.. எங்க இருந்தாலும் பத்திரமா இருப்பா.. கொஞ்சநாள்ள நான் செஞ்சது தப்புண்ணு அவளே வந்து மன்னிப்புக் கேட்பா... கொஞ்சம் ரிலாக்சா இருங்க தேவி. உங்களுக்கு இன்னொரு பொண்ணு இருக்கிறானு ஞாபகம் இருக்குல்ல.. அவளுக்காவாது சந்தோசமா இருங்க.. " என பார்வதி ஆறுதல் கூறினார்.

தேவியும் ஐசுவின் மனதில் இருப்பதைத் தான் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.. இனிமேல்
கனியின் மனதையாவது புண்படுத்தாமல் நடந்து கொள்ளலாம் என தன்னை திடப்படுத்திக் கொண்டார்..

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

கனியின் சந்தோசமான முகத்தை பார்த்த ரதி என்னவென்று கேட்க அவள் வாழ்த்து மடலைக் காட்டினாள்..

" ஓ மேடம் அதான் ஸ்மைலிங் மோட்லயே சுத்தறீங்களா.. " என்றதும் அழகாக வெட்கப்பட்டாள்.

" ச்சை சகிக்கல.. ப்ளீஸ்டி ரியாக்சன மாத்து.. ஆமா இது துளசிக்குத் தெரியுமா "

" தெரியாது.. தெரியவும் கூடாது.. அவ மட்டும் எங்கிட்ட மறச்சால.. நானும் மறைக்கப்போறேன் ' என நினைத்தவள்

முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு
" அவகிட்ட சொல்லாத. அது யார்னு கண்டுபிடிச்ச பிறகு சொல்லிக்கலாம்.. நீ அதுக்கு ஹெல்ப் பண்றியா " என கேட்க,

" கண்டிப்பா.. ஆனா அவசரப்படாத.. அவன் பொறுக்கியா கூட இருக்கலாம்.அதுக்குள்ள ஆசைய வளர்த்துக்காத . சரியாடி. " என கட்டளையிட்டாள்..

" லூசு.. அப்படிலா இருக்காது.. எனக்கு இராசி பலன்ல இன்னைக்கு லைப் பார்ட்னர மீட் பண்ணுவேனு போட்ருக்குடி.. காதல் கைகூடும்னு கூட சொல்லுச்சு.. தெரியுமா.. நானும் இதெல்லாம் நடக்காதுன்னு நினைச்சேன்.. ஆனா நடக்குதே " என ஆசையாய் சொல்லிட,

" ஏன்டி எனக்குலா வாயை வைத்துக் கொண்டு சும்மா இருங்க.. அடுத்தவங்க பிரச்சனைய மூக்க நுழைச்சு நோஸ்கட் வாங்காதீங்கனு தான்டி சொல்லும்.. உனக்கு மட்டும் என்ன அப்படி சொல்லுது.. அப்படி என்ன இராசிடி உனக்கு.. "

" இஇஇஇ கன்னி இராசி.. உனக்கு தெரியுமா .. மோஸ்ட்லி கன்னி ராசிக்கு லவ் மேரேஜ்தான் நடக்குமாம். " என ரதியை இன்னும் வெறுப்பேற்ற..

"உன்னைஐஐஐ......... சீக்கிரமா உனக்கு காதல் பைத்தியம் பிடிக்க போகுது.. அத நான் பார்க்த்தான் போறேன். நீயும் பார்த்துட்டே இரு " என பொங்கி எழுந்துவிட்டாள்.

அப்போது தான் உள்ளேவந்த துளசி " ஓய்.. டெஸ்ட் எப்படி பண்ண " என்றவாரே அருகிலமர்ந்தாள்.. கனி வழக்கம் போல முகத்தை திருப்பிக் கொண்டாள்.. அது துளசிக்கு கோபத்தை ஏற்படுத்த
"கனி ரொம்ப பண்றடி. நானும் சாரி கேட்டுட்டே இருக்கேன்ல.. இப்ப பேசுவியா..மாட்டியா " என துளசி பொறுமையிழந்து கத்தினாள். கனி கோபமாக பார்க்கவும் தனியாக சென்று அமர்ந்து கொண்டாள்.

அவள் காலையிலிருந்தே தன்னை விடுத்து ரதியிடம் பேசி்க் கொண்டிருக்கிறாள் அதும் இரகசியமாக என்றதும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

" கொஞ்சம் ஓவராத்தான் போறமோ " என கனி தன்னையே கேட்டுக் கொண்டாள்.. ஆனால் எங்கிட்ட மறைச்சு பொய் சொன்னால்ல கொஞ்சம் அனுபவிக்கட்டும்...
சரி சாயந்தரம் வீட்ல போய் சமாதானம் பண்ணிக்கலாம் " என விட்டுவிட்டாள்..

மதியம் கேண்டினில் " நல்லா பாரு.. யாராச்சும் நம்மள நோட் பண்றாங்களான்னு.." ரதி சீரியசாக சொல்ல

"ஏன்டி எதாச்சும் பாம் வைக்க போறியா "
"ஐயடா.. என்னைக் கலாய்ச்சிட்டனு நினைப்போ.. மொதல்ல நான் சொல்றத செய்.." என்றதும்
கனியும் சுற்றும் முற்றும் பார்த்தாள்..

" இப்போ யாராச்சும் பார்த்தா ஹார்ட் வேகமா துடிக்குறமாறி. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குற மாறி.. பின்னாடி வயலின் யோசிக்கற மாறி தோனுதா " என்றிட

அவளை மேலும் கீழுமாய் பார்த்தவள்
" ஏன்டி நான் தான் சினிமா பைத்தியம்.. உனக்கென்னடி ஆச்சு.. " என்றாள்

" ஹேய் நான் மட்டும் லவ்ல பிஹெச்டி யா வாங்கிற்கேன்.. காலங்காலமா எல்லாரும் இதத்தான சொல்றாங்க. அதான் நானும் சொன்னேன்.. ஒருவேளை இந்த கார்ட் வெச்சவன் கண்டிப்பா இங்க எங்கயாச்சும்தா இருப்பான்.. உனக்கு அந்தமாறி பார்த்தவுடனே தோணுச்சுனா சொல்லு.. அவங்கிட்டயே விசாரிச்சுப் பார்க்கலாம்.. இல்லைனா விட்டர்லாம்.. "

" ஒருவேளை எனக்கு அப்படி தோனி அது வேற யராச்சும் இருந்து அவரு என்னை விரும்பலைன்னா " என அவள் எதிர்கேள்வி கேட்க..

ரதி
" ஏய் சொன்னத செய்டி.. கண்டிப்பா அவன் உன்னை பார்த்துட்டுதான் இருப்பான் " சளித்தவாறே சொல்ல

" இருப்பான் இல்லடி..இருப்பாரு " என அதில் திருத்தம் செய்தாள்..

" ஹேய் கனி. அங்கப்பாரு.. பிளாக் சர்ட். ரொம்பநேரமா உன்னையவே பார்க்கிறான் " என்றதும் அவள் கூறிய திசையில் பார்த்தாள்

அங்கே எழில் கனியை பார்த்தவாறே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

மதியம் வீட்டிற்கு வந்த அசோக் ஐசு சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் மனம் தாங்காமல் " ஐசு.. என்னடா உடம்புக்கு எதும் பண்ணுதா.. " அவள் நெற்றியில் கைவைத்து பார்த்தான்.

" நான் நல்லாதா இருக்கேன் அசோக்.. நீ எப்ப வந்த.. சாப்பாடு எடுத்து வைக்கவா " என எழப் போனவளை தடுத்து தன்னருகே அமர்த்தியவன் " வீட்டுக்கு வேலை செய்யதான் அத்தனை பேர் இருக்காங்கள.. நீயேன்டா கஷ்டப்படற.. பாரு எவ்ளோ வீக்காயிட்ட.. அப்ரோ உங்கம்மா என் பொண்ண சாப்பாடு போடாம வேலை வாங்கிறானு குறை சொல்லவா " என்றான் கேலியாக..

" எங்கம்மாவ நினைக்காம உன்னால இருக்க முடியாதே.. பாரு ஒருநாள் அவுங்கிட்ட கனி மாறி கரண்டிலயே வாங்கப் போற " என பொய்யாக அவனின் தலையில் கொட்டினாள்..

" லூசு.. வலிக்குதுடி.. எருமை.. இப்படிதான குண்டுமாங்காவுக்கும் வலிச்சிருக்கும்.. அதான் உங்கோட சண்டை போட்ருப்பா.. நாமளாம் ஒன்னு சேர்ந்ததுக்குப் பிறகு நான் அவகட்சிதாம்பா.. சாமி என்ன அடி.. " என வலிக்காத தலையை நீவிக் கொண்டான்..

" நீ குண்டுன்னு சொன்னது அவ காதுல விழந்துச்சு.அப்போ தெரியும் கனிகூட சேரலாமா.. வேணாமான்னு "

" என்ன இருந்தாலும் அவ என்னோட மச்சினிச்சி ஆச்சே.. விட்டுக் கொடுக்க முடியுமாடி.. " என்றான்...

அவன் சொன்னதில் மகிழ்ச்சியடைந்தவள் " அப்போ கண்டிப்பா நாம அவுங்களோட சேர்ந்துருவோம்ல அசோக்.. அம்மா என்னை மன்னிச்சிருவாங்கல.. அவுங்கள பிரிஞ்ச பிறகுதான் நான் பண்ண தப்போட வீரியம் புரிஞ்சுதுடா.. நான் அவுங்கிட்ட சாரி கேட்டா என்னை ஏத்துப்பாங்களா " என பாவமாக கேட்க,

" கண்டிப்பா ஏத்துப்பாங்க.. உன்னை யாராச்சும் வெறுப்பாங்களா... கொஞ்ச நாள் போகட்டும் நானே பேசி புரிய வைக்கிறேன்..சரியா " என்றதும்
அவனுக்குப் புன்னகையினை பரிசளித்தவள் அவன் தோளில் வாகாய் சாய்ந்துகொண்டு " எங்காச்சும் வெளிய போலாமா அசோக் " என அவன் விழி பார்த்து கேட்க

" போலாமே.. மகாராணி உத்தரவ மீற முடியுமா " என்றவன் தனது உடல் அலைச்சலையும் மன இறுக்கத்தையும் பொருட்படுத்தாமல் கிளம்பத் தயாரானான்..

அங்கே நடக்கப் போவதை அறியாமல் இருவரும் சந்தோசமாகக் கிளம்பினர்..

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz