ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 9

Nivethamagathi

தன்னை இழுத்தது யாரென்று பார்க்குமுன்பே மதுவின் நெடி பயங்கரமாக வீசியது.அறுவெருப்போடு அவனது முகத்தைப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்...

" டேய் என்னாச்சுடா.. எதுக்குடா இந்தக் கெட்ட பழக்கம் " என்று அதட்டினாள்..

" நான் கு.டி.க்.கல... நான் ஆரஞ்சு " என்று வார்த்தையை முடிக்கமுடியாமல் அவள் மீதே மயங்கி விழுந்தான்.. சந்துரு

இந்த நிலையில் இவனை இவர்கள் வீட்டார் யாராவது பார்த்தால் என்ன ஆகும் என்று நினைக்கும்போதே சென்றமுறை இவன் குடித்துவிட்டு வந்தபோது அவனை வீட்டை விட்டு துரத்திவிடுவேன் என்று மல்லிகா மிரட்டியது நினைவு வரஅவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அருகிலுள்ள கோயில் மண்டபத்தில் அமரவைத்தாள்..குடத்தில் சிறிது தண்ணீரை எடுத்துவந்து அவனது முகத்திலே ஊற்றினாள்..அப்போதும் அவன் எழுந்தபாடில்லை..

அவனோ " நான் ஆகாஸ சும்மாவிட மாட்டேன்.. அனுவ நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் .. அனுவுக்கு அவனோட நாளைக்கு நிச்சயமா" என்று வாயிக்குள் எதையோ புலம்பிக் கொண்டிருந்தான்.

விடியும் நேரமானதால் மக்கள் நடமாடத் துவங்கினர். இதற்கு மேல் இங்கிருந்தால் ஊரார் முன் தன் நண்பன் அவமானப்பட நேரிடும் என்று எண்ணி பிரசாந்திற்கு அழைத்தாள். அவனின் அலைபேசி சுவிட்ச் ஆஃப் என்று வந்ததால் ஆகாஷிற்கு வேறு வழியின்றி அழைத்தாள்..

அவன் வந்து காரில் சந்துருவை அள்ளிக் கொண்டு சென்றான்..

9 மணிக்கு சந்துருவிற்கு மயக்கம் தெளிய, அவன் முன்னே மொத்த குடும்பமும் முறைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து பதறியடித்துக் கொண்டு எழுந்தான்.

நேற்று கூத்து பார்த்துக் கொண்டிருந்தவன் எப்படி இங்கு வந்தான் என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை... தலை கின்னென்று வலித்தது.. ஆகாஷ் சட்டைக் கிழிய, வாயில் இரத்தத்துடன் நின்றிருந்தான்..

" மா என்னாச்சு " என்று அவன் பேசிமுடிக்கும் முன்னரே ஓங்கி அவன் கன்னத்தில் அறையினைப் பதித்தார் மல்லிகா..

" ஒரே பையன்னு செல்லங்கொடுத்தது தப்பா போச்சு.இப்படி மானத்தையே வாங்கிட்டியே " என்று அவர் கோபமாக சொல்லவும் " மல்லிகா நீ சும்மாயிரு.. அவன் நமக்கு பிள்ளையே இல்ல " என்றார் இராஜேந்திரன்..

சென்றமுறை தனக்காக பரிந்துபேசிய அனு இன்று அழுது கொண்டிருந்தால் வாய் திறக்காமலே..

" சித்தி நீங்க சும்மா இருங்க.. சந்துரு எதோ வயசுக் கோளாறுல தப்பு பண்ணிட்டான் " என்று அவனுக்கு பரிந்து பேசினான் ஆகாஷ்..ஆனால் அவனது பாவப்பட்ட பேச்சு சந்துருக்கு கோபத்தை வரவழைத்தது..

" எல்லாரும் முதல் நான் என்னத் தப்பு பண்ணேனு சொல்லுங்க..அப்ரோம் என்ன வேணா என்னைத் திட்டுங்க " என்று கத்தினான்..

" என்னத் தப்பு பண்ணியா.. குடிச்சிட்டு விதிமுறை இல்லாம ஒரு பொண்ணோட "என்று ஆகாஷின் அம்மா அவனைக் குறை சொல்லும் முன்பே " போதும் நிறுத்துங்க.. நான் ஒரு பொண்ணோடயா.. எப்படி இப்படி என்மேல வாய்க்கூசாம பொய்சொல்ல முடியுது.. " என்று அவன் கத்தினான்

" நீங்க எல்லாரும் இதைக்கேட்டுட்டு சும்மாயிருக்கிங்கனா அப்ப என்னை நம்பலைனு தான அர்த்தம்.. என்னைப் பத்தி இவ்ளோ சீப்பா நினைச்சிட்டிங்களா.." என்று சொன்னவன், அனுவைப் பார்த்து " அனு நீ கூட என்னை நம்பலியா " என்றான் தழுதழுத்த குரலில்..

அனு அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை..

" எப்படி அவ பதில் சொல்லுவா.. அதான் உன்னோட லட்சனம் தெரிஞ்சிடுச்சே " என்றான் குமார்

தன்னோட சொந்தக் குடும்பத்தின் முன்னிலையில் தன்னை நிரூபிக்க வேண்டிய ஒரு அவலநிலை வரும் என்று ஒருபோதும் அவன் நினைத்ததில்லை..

ஓஒ.. அப்ப எனக்கு ஆதாரம் வேண்டும்.. என்னை ஒரு பொண்ணுக்கூட தொடர்பு படுத்தி பேசினீங்கள்ள.. அவ வந்து நேர்ல சொல்லட்டும் " என்றான் ஆத்திரத்தோடு.

" ஆதாரம் வேணுமா.. உனக்கு " என்று கூறி போனில் ஒரு புகைப்படத்தை எடுத்துக் காட்டினார் ஆகாஷின் தந்தை..

அதனை வாங்கிப் பார்த்தவன் நெஞ்சம் துடித்துப் போனது.. அவன் பார்த்தது சாதனாவுடன் அவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்.. ( அவன் சரியாக மயக்கம் போட்ட போது எடுத்தது )

தங்களது புனிதமான நட்பினை யாரோ வேண்டுமென்றே அசிங்கப்படுத்தியுள்ளனர் என்பது திட்டவட்டமாகத் தெரிந்தது.. சாதனாவிற்கு இது தெரிந்தால் என்னவாகும் என்று நினைக்கும்போதே பாதி உயிர் கரைந்தது..

" வெறும் போட்டாவ வெச்சு எங்கள தப்பா பேசிடாதிங்க.. உங்க எல்லாருக்கும் எங்க ரெண்டு பேரப் பத்தி தெரியாதா.. பாட்டி நீங்களாது சொல்லுங்க " என்று புலம்பத் தொடங்கினான்..

" நம்ப பிள்ளைங்க மேல நாமளே சந்தேகப்பட்டா எப்படிங்க " என்று லட்சுமி பேசத் தொடங்க " பிரண்ட்ஸ் தான் ராத்திரி வேளையில கட்டிப்புடிச்சிட்டு இருப்பாங்களா.. நல்லவேளை என்னோட பையன் பாத்து அவளத் திட்டிட்டு இவனக் கூட்டிட்டு வந்ததுனால பரவால.. வேறயாரும் பார்த்திருந்தா என்னாகுறது " என்று கல்யாணி பதில் சொல்ல அதற்கு மேல் பேச முடியாமல் லட்சுமி அமைதியானார்..

இதற்குமேல பொறுக்க முடியாமல் " ஆகாஷ் ப்ளீஷ் என்னைப் பழிவாங்க நினைச்சு சாதனாவ கேவலப் படுத்தாத..அவ உன்னோட தங்கை மாறில.. என்ன நடந்ததுனு உண்மைய சொல்லு " என்று அவன் கைகளைப் பிடித்துக் கெஞ்சினான்..

" இவ்ளோ நேரம் மிரட்டுன.. ஒன்னும் ஆகலைனு கெஞ்சிறியா சந்துரு.. இப்ப என்னாச்சு.. நீங்க ரெண்டுபேரும் லவ் பண்றீங்கனு சொன்னா நான் பேசி உங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கித்தரேன்.. அதுக்குள்ள அசிங்கமா நடந்துக்காத " என்றான் பாவமாக வைத்துக் கொண்டு

" டேய் என்னடா சொன்ன " என்று அவன் காலரைப் பிடித்தான் சந்துரு

" சும்மா கத்தாத சந்துரு.. அவன் சொல்றதும் சரிதான.. சாதனாவும் நல்ல பொண்ணுதான்.. நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறேன் .." என்றார் ஆகாஷின் தந்தை..

" அண்ணா ஆகாஷ விட்டுட்டு இவனப் போய் நம்ப அனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சிங்களே.. இவன் பண்ணனுதுக்கு " என்று பல்லைக் கடித்தாள் கல்யாணி..
அந்தப் பேச்சு பிடிக்காமல் அனைவரும் கூனிக் குறுகினர்.. அவர்களுக்கும் சந்துருவின் மீது சந்தேகம் ஒன்றும் இல்லை.. ஆனால் சாட்சியும் சந்தர்ப்பமும் எதிராக அமைந்ததால் வேறு வழியின்றி அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று..

இதயம் வெடிக்கும்போது எவ்ளோ வலிக்குமோ அந்த வலியை உணர்ந்தான் சந்துரு.... அதுவும் அனு அவர்கள் முன்னே வாயைத் திறக்காமல் இருப்பது இன்னும் வலியை ஏற்படுத்தியது ..

மற்றவர்களைக் காட்டிலும்
அனுவிற்கு தன்னையும் சாதனாவையும் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால்
" அனு நீ என்னை நம்பறேனு சொல்லு.. அதுபோதும் எனக்கு " என்றான் அனுவின் மேல் உள்ள அபரிமிதமான நம்பிக்கையில்..

அவனை அழுது கொண்டே பார்த்தவள் தேம்பிக் கொண்டே
" நானும் உன்னை நம்பிருப்பேன் சந்துரு.. ஆகாஷ் அத்தான் சாதனாவ குறை சொல்லாம இருந்திருந்தா.. அவர் எதுக்கு தங்கை மாதிரி பாசமா பாத்துக்கிட்டு இருக்கிற சாதனாவ தப்பா பேசனும் " என்றாள்.

இதைக்கேட்ட சந்துருவிற்கு அனைத்தும் புரிந்தது.. அனுவைத் திருமணம் செய்வதற்கு தங்களை பகடையாக உபயோகித்திருக்கிறான் இந்த பசுத்தோல் போத்திய நரி என்று ..

தங்களை குற்றமற்றவர் என்று நிரூபிக்க இப்போது இருக்கும் ஒரே வழி ..... பிரசாந்த் என்பதை அறிந்து அவனைத் தேடினான்.. அவனை அங்கே காணாததால், இருந்த ஒரு வழியும் உபயோகமில்லாமல் போனது..
அவனுக்கு மட்டுமே ஆகாஷின் அனைத்து திருட்டுத்தனமும் தெளிவாய்த் தெரியும்.

இந்த இடைவெளியில் சாதனாவைக் கைப்பிடித்து தரதரவென்று இழுத்துவந்தான் குமாா்..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz