ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 10

Nivethamagathi

" என்ன நடந்துச்சுனு தெளிவா சொல்லு தனாம்மா " என்று கத்தினான் ஆகாஷ்

இங்கு நடந்தது எதுவும் புரியாமல் இருக்க , சந்துரு குடித்துவிட்டு வந்ததுக்காகத் தான் இப்படி நடந்து கொள்கிறான் என்று தவறாகப் புரிந்துகொண்டாள்..

பேச்சை மாற்றுவதற்காக
"அண்ணா என்னாச்சு உங்களுக்கு இரத்தம் " என்று அவனருகில் வந்து கேட்டாள்..

உன் கண் முன்னாடிதான என்னை இவன் அடிச்சான்.. அதுவும் உங்க ரெண்டுபேரோட தப்பான நடவடிக்கைனால என்று அடிக்கிக் கொண்டே போனான்..

சாதனாவுக்கோ தன் மேல் பழி போட்டதுக்கு வருந்துவதா இல்லை தந்தை ஸ்தானத்தில் வைத்துப் பார்த்த ஒருவன் தன்மேல் அபாண்டமாக பொய் சொல்வதை நினைத்து வருந்துவதா என்று தவித்தாள்.. இவள் ஒன்றும் கோழையில்லயே இக்கட்டான சூழ்நிலையில் வருந்த, தன் மேல் போட்ட பழியைப் போக்க தானே முயன்று தான் ஆக வேண்டும் என்று துணிந்து பேசினாள்..

" எங்க ரெண்டு பேத்த அப்படி பார்த்தவுடனே நீங்க என்ன பண்ணீங்க அண்ணா... அப்ரோம் நேத்து வரை சண்டைக்கோழி மாறி சுத்திட்டு இருந்த குமாரும் நீங்களும் எப்படி ஒண்ணா ஆனிங்க " என்றாள் கோபமாக

" என்ன பண்ணனா.. உங்க ரெண்டு பேரையும் அடிச்சிட்டு அவன மட்டும் கார்ல தூக்கிட்டு வந்தேன்.. நீங்க பண்ண கேவலமான காரியத்த குமாரு தான் எனக்கு போன் பண்ணி சொன்னதே " என்றான் அசராமல்..

" அப்படின உங்க போன காமிங்க டைம் செக் பண்ணலாம் " என்றாள்

இவ்வளவு தூரம் பிளான் பண்ணியவர்கள் இதையா விட்டுவிட போகிறார்கள்.. போனை பதற்றமாக வாங்கிப் பார்த்ததுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது..

எந்தப் பெயர் வாங்கக்கூடாது என்று நினைத்து இருந்தாலோ அதே அவப்பெயர்.. துக்கம் தொண்டையை அடைத்தது..

" ஐயா நீங்க தான் இதுக்கு நல்ல முடிவ சொல்லனும் " என்று குமார் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சுந்தனராடிம் கூற " நீங்க ரெண்டு பேரும் முடிவா என்ன சொல்றீங்க " என்றார்

" நீங்க நாங்க சொல்றத நம்புவீங்களானு தெரியல.. ஆனா இதான் உண்மை" என சந்துரு தனக்கு எந்த நினைவும் இல்லை என்றுகூற சாதனாவும் காலையில் நடந்ததைக் கூறினாள்..

" அப்ப நீங்க ரெண்டு பேரும் விரும்பலதான.. நான் அதை நம்பறேன்..ஆனா மத்தவங்க தப்பா நினைக்கறாங்க.. அவுங்கப்படி நினைக்காம இருக்கனும்னா தனாம்மா நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ இப்பவே.. இல்லைனா நீங்களே உண்மைய ஒத்துக்கோங்க" என்றான் ஆகாஷ் நாக்கில் நரம்பில்லாமல்..

" அவ எதுக்கு நீங்க தப்பா நினைக்க கூடாதுனு அப்படி செய்யனும் " என்று சந்துரு எகிற..

" இந்த சோறம் போன நாய கல்யாணம் பண்ண யார் ஒத்துக்குவா " என்று கல்யாணி கூற " நான் பண்ணிக்கிறேன்.. என்னதான் இருந்தாலும் அவ என்னோட முறைப் பொண்ணு.. அப்படி தப்பான வழியில போனா விட முடியுமா " என்று குமார் கூற அனைவர் முகத்திலும் அறுவெருப்பு அப்பட்டமாகத் தெரிந்தது..

வேதவள்ளி " இது எங்க குடும்பவிசயம் .. நாங்க பாத்துக்குவோம் ..நீ கிளம்பு " என்று கூறி ஆகாஷிடம் " ஆகாஷூ என்னடா நடக்குது இங்க.. இவங்கள தப்பா நினைக்க கூட மனசு  வரல.. நீயும் பொய் சொல்றவன் கிடையாது .. எதை நம்புறதுனே தெரியல.கமலா பாவம்டா.. அவளோட நம்பிக்கையே சாதனா தான்.. இவளுக்கு தப்பா எதாச்சும் ஆச்சுனா உசிரையே விட்ருவா..." என்றார் வருத்தத்தோடு

" பாட்டிம்மா.. நான் நம்ப தனாம்மாவோட நல்லதுக்கு தான் பாட்டி இதை சொல்றேன்.. எனக்கும் அவளுக்கும் என்ன முன்விரோதம்.. அவ என்னோட தங்கச்சிப் பாட்டி.. உங்கள விட எனக்கு அவ வாழ்க்கைல அக்கறை இருக்கு..அவ சின்ன பொண்ணு..
அவளுக்கு நல்லது எது... கெட்டது எதுன்னு தெரியாது..
அவ வாழ்க்கை என் கண்ணு முன்னாடியே கெட்டுப் போகறத அண்ணனா என்னால பார்த்துட்டு இருக்க முடியாது..
அவளுக்கு நீதி வாங்கித் தராம விடமாட்டேன்.. இப்பவே உண்மைய மறைக்கிறவன் கடைசில இவள ஏமாத்திட்டு போயிட்டானா.. அதுக்குத் தான் பாட்டி இப்போ நான் கஷ்டப்படறேன்.. அதையேன் யாரும் புரிஞ்சிக்க மாட்டிங்கிறீங்க.. சாதனாவோட அப்பா இப்போ இருந்தா என்ன செய்வாங்களோ அதத்தான் நான் இப்போ செய்றேன்.
அதுமில்லாம கமலாம்மா நம்ப குடும்பத்த தான் நம்பி இருக்காங்க.. அவுங்களுக்காகவும் தான் நான் பேசறேன்
"என்று கூற
அவனது நடிப்பை உண்மையென்று நம்புவதைத் தவிர வேறுவழியில்லை..

சாதனாவிற்கு தற்போதுதான்  நேற்று சந்துரு தன்னிடம் ஆகாஷைப் பற்றி சொன்னது  உரைத்தது.. தங்களுக்கு ஆதரவு கொடுத்த குடும்பத்தின் மானத்தையும் சேர்த்துக் காப்பாற்ற வேண்டிய நிலைமை அவளுக்கு ..

ஆகாஷை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள் சுந்தரம் தாத்தாவிடம்
" ஐயா.. நான் எந்த தப்பும் பண்ணல.. அதே மாறி உங்க பேச்சையும் எதிர்த்துப் பேச விரும்பல.. எங்கம்மாக்கு இந்த விசயம் தெரிஞ்சா உயிரையே விட்ருவாங்க.. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்" என்றாள் அழுதபடி..

" அப்ரோம் என்ன சித்தப்பா.. சந்துருவ தாலியக் கட்ட சொல்லுங்க " என்று கல்யாணி முடிப்பதற்குள் " யாரும் யாரையும் கல்யாணம் பண்ண வேனா.. " என்று கூறியபடியே உள்ளே நுழைந்தான் பிரசாந்த் ..

அவனைப் பார்த்ததும் ஆகாஷ் சற்று மிரள, சந்துரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..

" வாடா உனக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்றது..ஆதாரம் கிடைச்சுதா " என்று அக்கரையாக விசாரித்தார் விசு..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz