மொழி 32
அனு மேனகாவைப் பற்றியும் அவள் உடல்நிலை பற்றியும் கூறியதும் பிரசாந்த் சாதனாவைத் திரும்பி அவள் கண்களைப் பார்த்தான். அது என்மீது இருந்த நம்பிக்கை அவ்வளவு தானா என்று கேட்பதுபோலத் தோன்றியது.
அதிதியும் ஒரு நிமிடம் ஆடித்தான் போனாள். "அண்ணா மேனகாக்கு பைத்தியம் பிடிச்சதுக்கு காரணம் நீதானா " என்று அனு தயங்கியவாரே கேட்கவும் பிரசாந்த் வாய்விட்டு கோரமாக சிரிக்க ஆரம்பித்தான்.
" டேய் சிரிக்காம உண்மைய சொல்லுடா " என அதட்டவும் " உண்மைதான்.. எல்லாம் உண்மைதான்.. அவளோட நிலைக்கு அப்ரோ ஏன் நாட்டுல நடக்குற கொலை கொள்ளை எல்லாத்துக்கும் நான் தான் காரணம் " என்றான் சிரித்துக் கொண்டு..
அனைவரும் அவனை கோபமாகப் பார்க்கவும் " சாதனா நான் கேட்குற ஒரேக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.. என்மேல ஒரு செகன்ட் கூட லவ் வரலியா.. நான் உங்கிட்ட உண்மைய மட்டும்தான் எதிர்பார்க்கிறேன்" என்றான் உறுதியாக
அவன் விழிகளையே உற்றுப் பார்த்தவள் அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று குழம்பிப் போனாள்.. அவன்மீது காதல்வயப்பட்டதும் உண்மைதான்.. ஆனால் அவன்முன்னே அதை எவ்விதம் ஒத்துக்கொள்வது. அவன் செய்த தவறு அப்படியே தானே இருக்கின்றது. பிரியா அவளுக்கு ஆதரவாக தோள்தொட்டு " நான் செஞ்ச அதே தப்ப நீயும் செஞ்சிடாத.. உன் மனசு என்ன சொல்லுதோ அதை மட்டும் செய் சாதனா " என்றாள்
அந்த நேரத்தில் அந்த வார்த்தை பேருதவியாக இருக்க " வந்துச்சு " என தலையாட்டினாள்.ஒரு வெற்றிப் புன்னகை ஒன்றை உதித்தவன் பேசாமல் சென்று விட்டான்.
பெண்கள் நால்வரும் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் செயலை கலைக்கும் விதமாக சந்துருவின் கார் வந்து நின்றது.. அவர்களை நோக்கி வேகமாக வந்தவன் சாதனாவின் கன்னத்தில் பளாரென்று அறைந்தான்..
அனு அவனைத் தடுக்க முயல " உனக்கு சி.ஐ.டின்னு நினைப்பாடி.. உன் முட்டாள்த் தனமான வேலையால இப்போ எவ்ளோ பேர் கஷ்டப் படறாங்க பாரு .. ஒருவேளை பிரசாந்த் மச்சான் தப்பு பண்ணிருப்பாரோனு என்னையவே நினைக்க வெச்சிட்டியே " என்று சாதனாவை இன்னொரு முறை அடித்தான்..
சந்துருவா தன்னை அடிப்பது என நம்பாமல் பார்த்தவள் அவன் கூறிய செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைவதா.. இல்லை வருத்தம் அடைவதா என்று குழம்பிப் போனாள்.
" என்ன சொல்ற சந்துரு.. தெளிவா சொல்லு " என அதிதி வினவவும் "ஆகாஷ் " என்று தன் காரை நோக்கி அழைத்தான்.
அந்தக் காரிலிருந்து ஆகாஷும் மேனகாவும் இறங்கி வந்தனர். மேனகா இப்போது நார்மலாக இருந்தாள்.அவர்கள் இருவரின் நெருக்கமே எதையோ சொல்லியது.
" எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. இங்க நடக்குற எல்லாப் பிரச்சனைக்கும் நான் தான் காரணம்.. பிரசாந்த நான் தான் காதலிச்சேன்.. என்னை காதலிக்கிலினா நான் செத்துடுவேனு பயமுறுத்துனேன்.. என்னை சமாதனப்படுத்த தான் அவர் எனக்கு ஓகே சொன்னாரு.. ஆனா அதுல இருந்து அவர் ஊருக்கே வரதில்ல..வந்தாலும் எங்கிட்ட சிடுசிடுன்னு விழுவாரு. எங்கிட்ட மட்டுமில்ல.. எல்லார்கிட்டயும் தான்...
அதுனால அவர்கிட்ட பேசவே பயமா இருந்துச்சு..
ஆனா கொஞ்சநாள் கழிச்சு ஆகாஷ் மாமா என்னை விரும்பராறுனு சொன்னத என்னால நம்ப முடியல.. எனக்கு அப்ப என்ன பண்றதுனு தெரில.. ஒருநாள் கல்யாணி அத்தை வந்து என்னை ரொம்ப தரக்குறைவா பேசி எங்கம்மா கிட்ட என்னை வீட்டுக்குள்ளே அடைக்கச் சொல்லிட்டாங்க. யாராச்சும் கேட்டா பிரசாந்த் மேலயே பழிய போட சொன்னாங்க.. அவங்க மேல இருந்த பயத்தால எங்க வீட்லயும் அப்படியே பண்ணிட்டாங்க..எனக்கு இருட்டப் பார்த்தாலே பயம்.. இருட்டுலே
இருந்ததால கொஞ்சம் லூசாகிட்டேன்..
" என்று கூறிவிட்டு களுக்கிச் சிரித்தாள்.
" ஆனா நான் இருக்கேனா செத்தேனானு கூட பார்க்காத பிரசாந்த விட, எனக்காக தங்கையவே கொலைப் பண்ண துணிஞ்ச ஆகாஷ் மாமா தான் எனக்கு இப்ப பிடிச்சிருக்கு. எங்களுக்கு வர ஆவணில கல்யாணம்.. கல்யாணி அத்தைக்கூட என்னை ஏத்துக்கிட்டாங்க.. இப்பலாம் என்னை யாரும் அடைச்சு வைக்கல.. ஜாலி " என அவள் கூறவும் அவளுக்கு பேசத் தெரிந்ததே அவ்வளவுதான் என அனைவரும் புரிந்து கொண்டனர்
" நல்லா கேட்டியா.. இப்போ என்ன பண்ணப் போற " என சந்துரு கோபமாக அதட்டவும், " சாதனா நான் தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிட்டு உன் வாழ்க்கையே அழிச்சிட்டேன்.. என்னை மன்னிச்சிடுமா " என்று அவளது காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான் ஆகாஷ்..
அவனை ஒருபொருட்டாக கூட எண்ணாமல் இத்தனை நாள் பிரசாந்த்திற்கு தான் செய்த கொடுமைகளையும் அவனது பொறுமையையும் நினைத்துப் பார்த்தாள்.இப்போது எந்த முகத்தைக் கொண்டு அவனை ஏறிடிவது.. தான் மன்னிப்புக் கேட்டால் மன்னிப்பானா..இல்லை தன்னை ஒதுக்கிவிடுவானா என அவள் யோசனையில் மூழ்க,
" ஹேய் சாதனா அங்கேப் பாரு " என அதிதி கைக்காட்டவும், அங்கே பிரசாந்த் கையில் லக்கேஜுடன் வெளியே வந்தான்.
" கல்யாண நாள் நெருங்கிட்டு இருக்கு..இப்போ எங்கட கிளம்பற " என லட்சுமி அவன் பின்னாடியே கூறிக் கொண்டுவர, " இனி இந்தக் கல்யாணம் நடக்காது. வேற நல்லப் பையனா பாத்து சாதனாக்கு கட்டி வெச்சிடுங்க.. நான் போயிட்டு வரேன்மா.. உடம்ப பாத்துக்க " என்றுகூறி காரில் அமர்ந்தான்.
சாதனாவை அவனை தடுக்க சொல்ல அனைவரும் தூண்ட, ஆனால் சாதனாவின் எண்ணம் வேறாக இருந்தது.
அவன் காதலைப் புரிந்து கொள்ளாமல் அவனை வறுத்திய தன்னைவிட, அனைத்து சூழ்நிலையிலும் அவனுக்கு உறுதுணையாக இருந்துவரும் அதிதி அவனுக்கு துணையாக வந்தால் சரியாக இருக்கும்.
அவளிடம் உயர்ந்த குணமும் அவனுக்கு ஏற்ற செல்வ செழிப்பும் அழகும் என அனைத்தும் உள்ளது.. ஒரு வாய் பேச முடியாத ஏழையை அதுவும் அவனை நம்பாமல் வெறுத்த தன்னைவிட அதிதியி்ன் காதலே சிறந்தது. அதிதியே அவனுக்கு ஏற்ற ஜோடி என நினைத்தாள்
இந்த ரெண்டுபேர்ல யார் பிரசாந்துக்கு ஜோடியா வரணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க?
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz