ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 31

Nivethamagathi

சாதனா மற்றும் பிரசாந்தின் நடவடிக்கைகளை குடும்பத்தினர் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.. திருமணத்திற்கு முன்னே சண்டைக் கோழிகளாக சிலுப்பிக் கொண்டிருக்கும் இவர்கள் திருமணத்திற்குப் பின் என்ன செய்வார்களோ என்ற பயம் அனைவரையும் தொற்றிக் கொண்டது..

அதிலும் கமலாவிற்கு சொல்லவேத் தேவையில்லை... சாதனாவின் நடவடிக்கை அவருக்குமே பிடிக்கவில்லை தான். இங்கு இவ்வாறு இருக்க, திருமண நாள் நெருங்கிக் கொண்டே போனது..இன்னும் இருபது நாட்களில் திருமணம் என்றானது..

இதற்கிடையில் சாதனாவின் நிலையைக் குறித்து ஆய்வு செய்த சந்துரு அவளுக்கு குரல் வருவதற்காக வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களிடம் உதவிக் கேட்டுக் கொண்டிருந்தான்..அவர்களும் அதற்கு 40% வாய்ப்பிருப்பதாக கூறியிருந்தனர்.. அதன்படி அவளுக்கு சிகிச்சையும் நடந்து கொண்டிருந்தது. திருமணத்திற்காக அதிதியும் வந்திருந்தாள் அவன் அழையாமலே..

அதிதியைக் கண்டதும் தாயினைக் கண்ட சேயாய் அவன் தோள்சாய்ந்து தனது மனக்குறைகளை எடுத்துக் கூறினான் பிரசாந்த்..
" நான் என்ன பண்ணேனு எனக்கேத் தெரிலடி.. பேசாம எங்காச்சும் ஓடிப் போயிரலாம் போல தோணுது.. அவ என்ன பிரச்சினைனு சொன்னாக்கூட பரவாலைடி.. " என்று தன்பாட்டுக்கு புலம்பிக் கொண்டே இருந்தான்..அவளும் அவனுக்கு ஆறுதலாக சிலவற்றை எடுத்துக் கூறியும் மனம் தேறாதவன் இறுதியில் அவள் கூறிய ஆலோசனையில் தேறினான்..அது என்னவென்றால் ஆகாஷை சிறையிலிருந்து வெளியே எடுத்தால் அவளது கோபம் ஒரு வகையில் குறையுமோ என்பது தான்..
இது நல்ல யோசனையாக இருந்தாலும் சாதனாவைக் கேவலப் படுத்திய அவனை மன்னிக்க இயலவில்லை..

அதிதியே தனது சித்தப்பாவான கமிஷனரிடம் பேசி சம்மதிக்க வைத்து உடனே ஆளுநருக்கும் அவர் மூலமாகவே மனுவொன்றை ஆகாஷின் பெற்றோர் சார்பாக அனுப்பி வைத்தாள்.அதன்படி எண்ணி ஒரு வாரத்தில் ஆகாஷ் வெளியே வந்தான்.

வந்தவன் நேராக சாதனாவைத் தான் பார்க்க வந்தான். இருப்பினும் சாதனா அவனைப் பார்க்க மறுத்து விட்டாள்..

அடுத்த நாள் பிரசாந்தும் அதிதியும் தோட்டத்தில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த சாதனாவுக்கோ பொறாமைத் தீப்பற்றிக் கொண்டு வந்தது.. அவன்மீது தவறிருக்காது என அவள் உள்மனதுக்கு உரைத்தாலும் ஈகோவினால் அதை ஏற்க மறுத்துவிட்டாள்.. இருந்தும் அவர்கள் நெருக்கமாக அமர்ந்து பேசுவது பிடிக்காமல் இவ்வளவு நாள் தான் கட்டிக்காத்த கோபத்தை விடுத்து  அவர்கள் அருகே சென்றாள்.

அன்று நடந்த சண்டைக்குப் பிறகு, இருவரும் இன்றுதான் நேரில் பார்த்துக் கொள்கின்றனர்..
" வாங்க மேடம்.. வந்து பக்கத்துல உக்காருங்க " என்று அதிதி அவள் கைப்பற்றி இருவருக்கும் இடையே அமரவைத்தாள்.
அவள் அமர்ந்ததும் அவன் வெடுக்கென எழுந்து நின்று கொண்டான்.

அவன் அவ்வாறு எழுந்ததும் அவளுக்கு மிகவும் அவமானமாகத் தோன்றியது..அவள் முகம் வாடியதைப் பார்த்தவன் " இந்த சின்ன விசயத்திற்கே உனக்கு கஷ்டமா இருக்கே.. நீ பண்ற ஒவ்வொன்னும் எனக்கும் எவ்வளவு வலியக் கொடுத்துருக்கும்னு நினைச்சுப் பார்த்தியா.. " என்றான் வானத்தைப் பார்த்தபடி..

அவள் அத்துடன் எழுந்து செல்ல முயற்சிக்க, அவள் தோளைப்பற்றிய அதிதி "எதுவா இருந்தாலும் இன்னைக்கே பேசித் தீர்த்துக்கலாம்.. என்ன பிரச்சினைனு சொல்லு.. இவனப் பிடிக்கலையா.. இல்ல இவன் செஞ்சது பிடிக்கலையா.. ஒருவேளை இவன் செஞ்சது பெரியத் தப்பா இருந்தா நானே அவனுக்கு தண்டனை வாங்கித் தரேன்.. என்னனு சொல்லு சாதனா " என்றாள் அதிதி..

சாதனா அப்போதும் அமைதியாக இருக்கவும் " அவ சொல்லமாட்டா.. அவள மாறியே அவ மனசும் ஊமையாகிடுச்சு " எனக் கடிந்துவிழ,

அவனிடமிருந்து இந்த வார்த்தையை சற்றும் எதிர்பார்க்காத அதிதியோ  அவனை முறைத்துப் பார்க்க, சாதனாவோ கண்களில் தேங்கி நின்ற கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தாள்.

" பின்ன என்னை என்ன பண்ண சொல்ற அதிதி.. ஒரு மனுசனுக்கு நிம்மதிதான் முக்கியம்.. அதுவே இல்லைனா ?
நான் நிம்மதியா தூங்கி எவ்ளோ நாளாச்சு தெரியுமா.. எந்த ஒரு மனுசன் என்னை மாறி பொறுமையா இருந்திருக்க மாட்டான்... பைத்தியக்காரனாட்டம் அன்னைக்கு யாருனே தெரியாதவங்க வீட்டுக்கெலாம் போயி.. ச்சே.. என்னைக் காமெடி பீஷாக்கி.. என்னை சொல்லணும்..
ஆகாஷோட அம்மா கல்யாணி என்னைக்கு இவள எங்க வீட்டு ஃபன்சன்ல அத்தனை பேர் முன்னால அவமானப் படுத்துனாங்களோ அன்னைலிருந்து யார் முன்னாடி இவ அவமானப்பட்டாளோ அவங்க முன்னாடி அவ இந்த வீட்டு மருமகளா சந்தோசமா வாழனும்னு நினைச்சு எல்லாப் பண்ணேன்ல.. எனக்கு இதும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்.
என் காதல சொல்றக்கு கூட அவ படிப்பு முடியற வரை  காத்திருந்தேன்ல நான் வில்லன் தான்.
அதனால தான
யாரக் கொல்லனும்னு நினைச்சனே அவனையே இவளோட சந்தோசத்துக்காக ஜெயில்ல இருந்து
வெளில எடுத்தேன் அதான் நான் நம்பிக்கைத் துரோகின்னு நினைச்சிட்டாங்க.. அவ்ளோ ஏன்
இவ்வளவு நடந்தும் எங்க அவ சிரிச்சாளே எல்லாத்தையும் மறந்துட்டு நிக்கறனே... அதுனால சிலருக்கு
என்னைப் பார்த்தா பொம்பளப் பொறுக்கி மாறி கூட தெரியும் அப்படி
தான சாதனா..
நானும் ராகுலும் கூட உனக்கு ஒன்னு தான
" என்றான் ஏளனக் குரலில்

இதைக் கேட்டதும் சாதனா வெடித்து அழ ஆரம்பித்தாள்.. அவள் கண்ணீர் கண்டு பொறுக்காத பிரசாந்த் அவளை சமாதனப் படுத்த அருகில்வர, அவனை பார்வையால் தடுத்தாள் அதிதி..

அந்தநேரம் பார்த்து  வேகமாக ஒரு கார் உள்ளே நுழைந்தது.. முதலில் அனுவும் அவளுடன் பிரியாவும் இறங்கி வந்தாள்.
சாதனா அழுவதைப் பார்த்த பிரியா ஓடிவந்து சாதனாவிடம் " ஏய் நீ எதுக்கு இப்ப அழுகுற... தப்பு பண்ணவங்களே தைரியமா இருக்குறப்ப " என்று பிரசாந்தை ஏற இறங்கப் பார்த்துவிட்டு கூறினாள்..

" யார் தப்பு பண்ணா.. என்ன பண்ணாங்கனு சொல்லுங்க " என்று பிரசாந்த் கூற,
" அண்ணா அதை நான் சொல்றேன் " என்றவாரே வந்தாள் அனு.

சாதனா பிரியாவை அதிர்ச்சியாக பார்க்கவும் " இவ்வளவு தூரம் வந்தபிறகு எதுக்கு சாதனா மறைக்கனும்.. அதான் நீ இப்படி நடந்துக்கிறக்கான காரணத்த  சொல்லிட்டேன்.. இவங்களுக்காக உன் வாழ்க்கைய நீ அழிச்சிக்கனுமா சாதனா..." என்று கூறிவிட்டு அனுவை சொல்ல சொன்னாள்..

அவள் சொல்ல சொல்ல இதுவரை கோபமாக இருந்த பிரசாந்தின் முகம் இறுகிப் போனது.

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz