ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 33

Nivethamagathi

" எதாவது சொல்லி அவனை நிறுத்து சாதனா.. அவன் நீ சொன்னா கண்டிப்பா கேட்பான் " என்று அதிதி கூற, அவள் முகத்தையே உற்றுநோக்கினாள். அவளிடம் அவன் சென்றுவிடுவானே என்ற கவலையை தவிர வேறெதுவும் இல்லை..

சந்துருவோ அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். " இன்னும் நீ செய்யறக்கு முட்டாள்தனமான வேலை எதாவது இருக்கானு யோசிச்சிட்டு இருக்கியா " என அவன் கோபமாகக் கூற, "நீங்க என்னமோ பண்ணுங்க, எனக்கு எங்க அண்ணா தான் முக்கியம் " என்றவாரே அனு அழுதுகொண்டு அவனிடம் சென்றாள்.

அனுவின் அழுகுரல் கேட்டு வீட்டிலுள்ள அனைவரும் வெளியே வந்தனர். அனைவருக்கும் பிரசாந்த் எங்கோ கோவித்துக் கொண்டு செல்கிறான் என்பது மட்டும் புரிந்தது. " பிரசாந்த் இப்போ உள்ள வரமுடியுமா? முடியாதா " என்ற சுந்தரம் தாத்தாவின் அதட்டலில் அனைவரும் சுயநினைவுக்கு வந்தனர்.

பிரசாந்தும் வேறு வழியின்றி உள்ளே சென்றான்.இளைய தலைமுறையினர் குற்றவாளிகளாக பெரியவர் முன் தலைகுனிந்து நின்றிருந்தனர்.

அனைவரும் வந்தபிறகு சுந்தரம் பேச ஆரம்பித்தார்
" இங்க எல்லாரும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.. வயசானவங்க தானே.. என்ன செய்ய போறாங்க. நாம சம்பாதிக்க ஆரம்பிச்டோம். அதனால என்ன வேணா செய்யலாம். யாரும் எதும் கேட்க மாட்டாங்கனு திமிரா.. இல்ல பசங்க விருப்பம் தான் எங்க விருப்பம்னு நினைச்சு நீங்க சொல்றதுக்கு தலையாட்டுனதால தான் எங்கள கேவலமா நினைச்சிட்டங்களா என்று நால்வர் முன்னும் கேள்வியாய் வினவ , சந்துருவோ " அப்படிலாமில்ல " என வாயைத் திறக்கமுன்பே " வாயை மூடு.எதாவது பேசுனா வாயிலே போடுவேன் ராஸ்கல்" என்று மிரட்டியவர்

" சிறுவார் வீட்டு வெள்ளாமை விளையும்.. ஆனா வீடு வந்து சேராதுனு நிருபிச்டீங்க.. பிரசாந்த் சாதனா உங்கமேல வெச்சிருந்த நம்பிக்கையவே உடைச்சிட்டிங்க. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிவெச்சா ஹேப்பியா இருப்பீங்கனு நினைச்சேன்.. ஆனா இப்படி சண்டைப்போட்டுட்டே இருப்பிங்கனு தெரிஞ்சிருந்தா அந்த முடிவ எடுத்திருக்க மாட்டோம்..
சரி.இப்போ ரெண்டு பேரும் உங்க முடிவ சொல்லுங்க.. ஒருவேளை உங்களுக்கு பிடிக்கலைனா இப்பவே சொல்லிடுங்க.. அப்ரோ பின்னாடி எங்க மானத்த வாங்கிடாதீங்க " என்றார் உறுதியாக,

"மாமா என்ன பேசறீங்க.. நம்ப பசங்க " என்று லட்சுமி ஏதோ பேச, " லட்சுமி நீ அமைதியா இரு.. அப்பா சரியாதான் பேசறாரு.. உங்க முடிவ இப்ப சொல்லுங்க " என்று சுந்தரத்திற்கு பக்கதுணையாக வந்து நின்றார் விஸ்வநாதன்..

பிரசாந்த் என்ன சொல்வதென்ன யோசிக்க, சாதனாவோ அவன் முகத்தையே உற்றுநோக்கினாள் அவன் என்ன சொல்லுவானோ என்று..

" தாத்தா இங்க நடக்கிற பிரச்சினைக்கெலாம் நான் தான் காரணம். சாதனாவ நான் தான் வற்புறுத்தி இதுக்கு சம்மதிக்க வெச்சேன்.. அவ படிச்சு அவளோட கெரியர பாத்துகட்டும்.. இப்போதைக்கு இதப்பத்தி பேச வேணாம் " என்று சொன்ன பிரசாந்தை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் வேதவள்ளி..

" என்னடா பேசற, உன்னைப் பிடிக்காமலா உன்னைய நாங்கெல்லாம் புரிஞ்சிக்காம இருந்தப்ப எடுத்துசொல்லி உங்கோட பேச வெச்சா.. என்னங்க நீங்க சொல்றது சரிதான்.. இவங்க பேச்சை நாம கேட்டிருக்க கூடாது.. " என்று மனமுடைந்து தரையில் அமர்ந்தார்.

அனைவரும் அவரருகே வர, அதைத் தடுத்த விசு " உங்க ரெண்டு பேருக்கும் 5 நிமிசம்தான் டைம். அதுக்குள்ள உங்க முடிவ சொல்லுங்க.. போய் பேசிட்டு வாங்க " என்று சாதனாவையும் பிரசாந்தையும் வெளியே அனுப்பினார்.

சாதனாவிற்கு பிரசாந்திடம் மன்னிப்புக் கேட்பதற்கு கூட தைரியமில்லை. அவள் மனதில் நினைப்பதை வெளியேக் கூறக்கூட முடியாததால் அவள் அழுக ஆரம்பித்தாள்..
அதுவரை அவளைப் பார்க்காமல் திரும்பி நின்றிருந்தவன் அவளது அழுகையைப் பார்த்ததும் " போதும் சாதனா..உன்மேல எனக்கு எந்த கோபமும் இல்ல.. நான் தப்பு பண்ணிருப்பேனு நினைச்சு அதை புரிய வைக்க தான கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு கடைசி நேரத்துல வேணாம்னு சொல்ல நினைச்ச.. விடு நீ அந்தளவுக்கு பெரிய தப்பு பண்ணல.. என்ன ஒரு தடவை எங்கிட்ட கேட்ருக்கலாம்.. சரி அதான் இப்ப எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சுல.. நீ ரிலாக்சா இரு.. நான் பேசி எல்லாருக்கும் புரிய வைக்கிறேன் " என்றுகூறி அவன் நடக்க, அவனது கைகளைப் பற்றியவள் " வேண்டாம் " என தலையசைத்தாள்.

இப்போது அவளது கண்களைப் பார்த்தவனால் அவளின் கண்களில் தெரியும் காதலை உணர முடிந்தது. இருந்தும் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது .
அவளது கையை அவன் எடுத்துவிட, அதைத் தடுத்தவள் அவனது இரண்டு கைகளையும் இறுக பற்றினாள்.

" சாதனா வீட்டுக்கு பயந்து " என்றவனிடம் இல்லையென தலையாட்டியவள் அவனது தோள்களில் சாய்ந்து கொண்டு அழுக ஆரம்பித்தாள். ஏனோ அவனுமே ஊமையாகி விட்டான் என்பதுபோல அவனும் அவளை சமாதனப்படுத்த முயலவில்லை.
தன் தவறை அவள் உணர்ந்துவிட்டாள் என்பதை அறிந்தவன் அவளை தண்டிக்க மனமின்றி மன்னித்துவிட்டான்.. காதலில் மறத்தலும் மன்னித்தலும் இயல்புதானே..
அவனுக்குமே தனது இத்தனை வருட காதல் கைகூடியதால்
சொல்ல முடியா உணர்வில் கட்டுண்டிருந்தான்.
அங்கே வார்த்தையில்லா காதல் மொழி ஆட்சி செய்தது.
அழுதுகொண்டே இருந்தவள் திடீரென அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவனது கைப்பற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

பீரோவின் உள்ளே இருந்த சிறிய மரத்தாலான பெட்டியொன்றை எடுத்து அதை அவன் கைகளில் திணித்தவள் , அருகேயிருந்த கரும்பலகையில் எழுத சாக்பீசை எடுக்க அதை அவள் கைகளிலிருந்து வாங்கியவன் " உன் மனசுல இருக்கிறத இந்த போர்ட், பேப்பர் பேனால எழுதுனும்னு அவசியமில்ல சாதனா.. எனக்கு இப்போ உன் முகத்தை பார்த்தாலே புரியுது.." என்றவன் அந்தப் பெட்டியைத் திறந்தான்.

அதில் அவனது கூலிங்கிளாசும் லவ் புரோபோசல் கிரிட்டிங் கார்டும் இருந்தது.. இப்போது
மகிழ்ச்சியில் புன்னகைத்தவளின் தோள்மீது கையினைப் போட்டு சிரித்தவாரே அவனது வீட்டுக்குள் சென்றான்.

அவர்களது முகமே பெரியவர்களுக்கு தங்கள் முடிவினைத் தெரியபடுத்த, அனு " அண்ணா என்ன நீ ஈசியா மன்னிச்சிட்ட " என்றதற்கு " விடுமா நம்பள டார்ச்சர் பண்ணதுக்கு கல்யாணத்துக்கு அப்ரோம் நல்லா வெச்சு செஞ்சுடலாம் " என்றான் பிரசாந்த்..
.
.

சாதனாவிற்கோ மன்னிப்புக் கேட்கும் படலம் சந்துருவிடம் இருந்து துவங்கி வேதவள்ளியார் மற்றும் கமலா வரை நீண்டது..ஆனால் ஆகாஷின் பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை.
அதிதிக்கு அவளது தந்தையே நல்ல வரனாக பார்த்துவிட அவளும் அதற்கு சம்மதித்தாள்.
சந்துரு திருமணத்தை இரண்டு வருடம் தள்ளிப் போட்டாதால் அனு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சுற்றினாள். அந்த வேளையில் பிரசாந்த் அனுவிற்கு அலுவலக வேலையை பாதியாக ஒதுக்கிக் கொடுத்து அவளையும் பொறுப்புள்ளவளாக மாற்றினான்.

பிரசாந்த் சாதனா வழக்கமான காதலர்கள் போல மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்தனர்.

அனைவரும் எதிர்பார்த்திருந்த சாதனா பிரசாந்தின் திருமண நாளும் வந்து மகிழ்ச்சியாக முடிவடைந்தது..பிரசாந்த், சாதனாவின் தேவைகளை அவள் விழிமொழியறிந்தே நிறைவேற்றினான். அவளது குறை குறையாகவே யாருக்கும் தெரியவில்லை.

அவள் நினைப்பதை அவன் கூறுவதால் அவர்கள் அன்பை இன்னும் அதிகமாக்கியது.. ஆனாலும் சிறுசிறு சண்டைகள் வரத்தான் செய்தது.இருப்பினும் யாரவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.

அவர்களின் வாழ்க்கை புத்தம் புது மலர்களைப்போல புதுப் பொலிவுடன் மலர்ந்து எங்கும் வாசனை பரப்பிக் கொண்டே இருக்கட்டும் என அனைவரும் வாழ்த்தி அவர்களுக்கு விடையளிப்போம்..

💞💞💞💞 சுபம் 💞💞💞💞

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz