மொழி 30
சாதனா பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தாள்..
"தேர்வுக்குத் தயாராகி விட்டாயா " என்று திடீரென வந்து அவன் கேட்கவும் பயந்தபோய் அப்படியே நிற்கவும் " பயப்படாத, பப்ளிக் எக்சாம் வருதுல அதான் அனுக்கும் சந்துருக்கும் கிப்ட் பண்லாம்னு பேனா வாங்குனேன்.. அப்படியே உனக்கும் ஒன்று வாங்குனேன்.. இந்தா " என்று நீட்டினான்.
பரவாயில்லை . எங்கிட்ட ஏற்கனவே ரெண்டு இருக்கு என மறுப்பதற்காகக் கூறவும் அவன் பிடிவாதமாகக் கையில் திணித்து விட்டுச் சென்றான். அதற்கடுத்து அவன் சாதனாவிடம் பேச முயற்சிக்கவேமில்லை.அதிகமாக யாருடனும் பேசுவதுமில்லை..
சாதனாவே எதார்த்தமாகப் பேசப் போனால் கூட முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சென்று விடுவான்.
அந்த வருடத்திலிருந்து அவன் யாரிடமும் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டான்..
அவனது ஒதுக்கம் சாதனாவிற்கும் கஷ்டத்தைக் கொடுத்தது.. ஆனால் இதற்கு என்னப் பெயரென்று அவளுக்குப் புரியவில்லை..
அவளும் அத்துடன் அதை விட்டுவிட்டாள்.
வருடங்கள் கரைந்தது.. அவளுக்கும் பிரசாந்தின் செயல்களும் அவனது பார்வையின் அர்த்தமும் புரிய ஆரம்பித்தது.. இருப்பினும் அவள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து விட்டாள்..
ஆனால்
அவனது காதலை முழுவதும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவனது காதல் புனிதமானது என்பதை முழுதும் உணர்ந்திருந்தாள்.. அதனால் தான்
அவன் சிரமப்படக் கூடாது என நினைத்து அதிதியை வரவழைத்தான்.. ஆனால் அப்போதும் கூட அவன் அதிதியை ஏற்றுக்கொள்ளாது அவள்புறமே இருந்ததால் மேற்கொண்டு என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை...
அதனாலே விசு வந்து
" என் மகன எங்களுக்கு திருப்பித் தர உன்னால தான் முடியும்.. தயவுசெஞ்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கோம்மா" என கெஞ்சிக் கேட்க, அவளும் ஒத்துக் கொண்டாள்.
ஆனால் நிச்சயத்த நாளிலிருந்தே அவள் மனம் அவன்மீது தன்னவன் என்ற உரிமையில் சாயத் துவங்கியது.. அவனது கோபத்தைக் கூட அவனுக்குத் தெரியாமல் இரசித்துக் கொண்டிருந்தாள்.. ஆனால் அதை வாய் திறந்து சொல்ல அவளது ஈகோ விடவில்லை.. இருந்தும் ஆகாஷின் முன்னால் பிரசாந்த்தின் காதல் வெற்றியடைந்து விட்டது எனத் தெரிவிக்கவே சிறைக் கைதியினைப் பார்க்க மனு அனுப்பினாள்..
அப்போதுதான் தெரிந்தது ஆகாஷ் உணவருந்தாமல் வருந்திக் கொண்டிருக்கிறானென்று.. அதுவும் பிரசாந்தே ' உன் காதல நான் பிரிக்கல ' என சொல்லும் போது அங்கே எதுவோ ஒன்று சரியில்லை..அப்படி இருவருக்குள்ளும் என்ன
ஆகாஷ் தன்மீது அவ்வளவு பெரிய பழியைப் போட்டதற்கும் தன்னைக் கொலை செய்யுமளவுக்கு துணிந்ததற்கும் உண்மையான காரணத்தை அறிய விரும்பினாள். ஏனெனில் தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்தே ஆகாஷை அறிந்திருக்கிறாள்.. அவனது அக்கறையையும் அன்பையும் முழுதும் அனுபவித்தவளால் அதனை எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.. அதேசமயம்
பிரசாந்தின் மீதும் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை... நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ள முடிவெடுத்தாள்.
அதனால் தனது சொந்த ஊரான பூஞ்சோலைக்கு தனது கல்லூரித் தோழி தீபாவுடன் யாருக்கும் அறியாமல் சென்று வந்தாள்.. அங்கே தான் பிரசாந்தின் உண்மைகள் வெட்டவெளிச்சமாயின..
சாதனாவிற்கு மேனகாவைப் பற்றி அவ்வளவாக தெரியாவிடினும் அவளுக்கு சில வருடங்களுக்கு முன்பே புத்திசுவாதீனமின்றி போக வீட்டிற்குள்ளே அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பதுவரை மட்டும் தெரியும்..
அங்கே சென்றபின்பு தான் தெரிந்தது
மேனகா பிரசாந்திடம் காதலைச் சொல்லியது.. பிரசாந்தும் அதற்கு சம்மதம் தெரிவித்தது.. பின்பு சில நாட்களுக்குப் பிறகு அவனே 'இது ஒத்துவராது.. உன் தகுதி என்ன? என் தகுதி என்ன ? என்று ஏளனமாகக் கூறி அவளை ஒதுக்கியது; பிரசாந்திற்குப் பயந்து அதை யாரிடமும் கூறாது மறைத்தது.. அதன்பின் அவள் தற்கொலைக்கு பலமுறை முயற்சித்து ஒருநாள் பைத்தியமாகவே மாறியது; கடந்த வருடம்கூட மேனகாவை ஆகாஷ் பெண் கேட்டுச் சென்றது; அவளது மனநிலையைக் கூறி அவளது பெற்றோர் தரமறுத்தது என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டாள்..
ஆனால்
மேனகா படும்பாட்டை நேரில் பார்த்தவளால் வேறு எந்தமாறியும் யோசிக்கமுடியவில்லை..
சிலசமயம் பிரசாந்த் தன்னிடம் நெருங்கிவர முயலும்போது அவன்காதலில் எங்கே உருகிவிடுவாமோ என்றெண்ணி பயந்தும் இருக்கிறாள்..இருந்தும் தன்னை வெறுப்பு என்னும் போர்வைக்குள் மறைத்துக் கொண்டாள்..
சம்மந்தப்பட்ட அனைவரிடமும் நேரடியாக கேட்டிருந்தால் இந்த விசயம் வேறுவிதமாகக் கூட மாறியிருக்கலாம்.. ஆனால் விதியின் விளையாட்டை இவள் உணராமல் தன்னையும் வருத்திக் கொண்டு அனைவரையும் வருத்தப் போகிறாள்..
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
வணக்கம்.. தங்களிடம் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால்,
நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு.. அதுபோல இக்கதைக்கும் இரண்டு முடிவுகள் உண்டு..
ஒன்று ஆசிக் அண்ணா அவர்கள் கதை " என் உயிரினில் நீ "யில் கூறியதுபோல இருக்கலாம்..
இரண்டாவது முடிவு வேறு மாதிரியாகவும் இருக்கலாம். இரண்டிற்கும் தங்களது ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுதத் துவங்குகிறேன்.. தயவுசெய்து தங்கள் கருத்துக்களைப் பகிரவும்.. வன்முறை கூடாது என்பதை முன்ஜாக்கிரதையாக இப்பவே தெரிவத்துக் கொள்கிறேன்.. 😃😃
நன்றி ! வணக்கம் 😁
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz