ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 29

Nivethamagathi

பிரசாந்திற்கு கண்டிப்பாகத் தெரியும் சாதனா இதுபோன்று முட்டாள்த் தனமாக நடந்து கொள்ள மாட்டாள் என்று..அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதை அவன் நேரடியாக அறியாவிடினினும் அவள் தன்மீது காட்டிய வெறுப்பு பொய்யில்லை என்பதை நன்கு அறிவான்.. அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல் என்றுமே அவன் அவசரப்பட்டு கோபத்தில் முடிவெடுப்பதைப் போல இன்றும் முடிவெடுக்க அவன் விரும்பவில்லை.. பொறுமையாக காயை நகர்த்த வேண்டும் என்பதை உணர்ந்தான்.

அறையை விட்டு வெளியே வந்த பிரசாந்த் கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்த பிரியாவைப் பார்த்தான்.

அவன் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு " சிஸ்டர் " என்று வாயைத் திறக்கும் போதே " அம்மா நாங்க வந்துட்டோம் " என்று நிஷூக்குட்டி கத்திக் கொண்டே அரவிந்தின் தோள்களிலிருந்து இறங்கி பிரியாவின் கால்களைக் கட்டிக் கொண்டாள்..

" ப்ரியா வெளிய யார் கார் நிக்குது " என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்த அரவிந்த் பிரசாந்தையும் பிரியாவின் திருட்டு முழியையும் பார்த்துவிட்டு ஏதோ புரிந்தவனாக பிரியாவை சந்தேகமாக ஒரு பார்வைப் பார்த்தான்..

பிரியாவும் கண்களாலே பிரசாந்திடம் அமைதியாக இருக்கும்படி கெஞ்சி விட்டு அரவிந்திடம்" இவர் சந்துரு இருக்கான்ல அவரோட கசின்.. ஒரு டிரஸ்ட் விசயமா என்னைப் பார்க்க வந்தாரு. அவ்ளோ தான்.. " என்றவள்
பிரசாந்திடம் " இவர் என் ஹஸ்பண்ட் அரவிந்த் .இது எங்க நிஷூக்குட்டி " என்று அறிமுகம் செய்து வைத்தாள்..

பிரியா செய்யும் இந்த வேலை அவளது கணவருக்குத் தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் போல என்று நினைத்தவன் சம்பிரதாயமாக சில வார்த்தை பேசிவிட்டுச் சென்றுவிட்டான்..

அவன் சென்ற அடுத்த நொடி அரவிந்தின் தலையில் நறுக்கென்று கொட்டியவள் " இன்னும் ஒரு நிமிசம் நீ லேட்டா வந்திருந்த அவன் எல்லாத்தையும் கண்டுபிடிச்சிருப்பான்..அப்ரோ நம்ப பிளானெல்லாம் வேஸ்ட் ஆகியிருக்கும் " என்றாள் பிரியா..

" இப்படி தெரிஞ்சா நான் கொஞ்சம் லேட்டா வந்திருப்பனே. நீயும் உன் முட்டாள் ஐடியாவும்.. " என சளித்துக் கொண்டான் அரவிந்த்..

இவர்கள் இருவருக்கும் சாதனாவின் திட்டம் தெரிய வாய்ப்பில்லை... இவர்கள் பிரசாந்தை அவள் உண்மையாக விரும்புகிறாள் என நினைத்துத் தான் உதவி செய்தனர்..ஆனால் உண்மையோ....
.
.

நேரடியாக வீட்டிற்கு வந்த பிரசாந்த் அதிதியின் தந்தைக்கு அழைத்து அவர்மூலம் அதிதியுடன் தொடர்பு கொண்டான். அவளிடம் தனக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டு, அடுத்ததாக அனுவின் அறைக்குச் சென்றான்.
அவளும் தனது அண்ணனிற்கு உதவுவதாக கூறினாள்..
ஆனால் மறந்தும் சந்துருவிடமோ சாதனாவிடமோ முகத்தைக் கூட காட்டவில்லை..

அங்கே சாதனாவின் வீட்டில்,
" சாது என்ன இருந்தாலும் நீ மச்சான் விசயத்துல பண்றது ரொம்ப தப்பு சாதனா.. அவரோட உணர்வுகளோட பொய்யா நீ விளையாண்டுக்கிட்டு இருக்க.. கடைசில இதுல நீதான் பாதிக்கப்பட்டு நிக்கப் போற.. எதையும் யோசிச்சு பண்ணு " என்று சாதனாவை மிரட்டிக் கொண்டிருந்தான் சந்துரு..

கொஞ்சம் அமைதியா இருக்கியா என்று சைகை செய்தவள் கோபமாக அவள் வாங்கி வைத்திருந்த பூச்செண்டை தூக்கியெறிந்தாள்..
அவன் கூறிய ' ஏன் அவரோட உணர்வுகளோட பொய்யா விளையாடர ' என்ற வார்த்தை அவள் காதினில் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.. கோபத்தில் தனது அறைக்குள் புகுந்து கதவினைத் தாழிட்டவள் வாய்விட்டுக் கதறி அழுதாள்..

முதன்முறையாகத் தான் தவறு செய்துவிட்டாமோ என எண்ணத் துவங்கினாள்.. ஆனாலும் பிரசாந்தின்மீது அவளுக்கிருந்த கோபம் மட்டும் குறையவில்லை..
அவனை இன்னும் வெறுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே அவளது பழைய நினைவுகளில் மூழ்கினாள்..

6 வருடங்களுக்கு முன்பு..
சாதனாவின் சொந்த ஊரில்
கோவில் திருவிழா.. எந்த வருடமும் இல்லாத அளவுக்கு அந்த வருடம் கூட்டம் கலை கட்டியது.. ஆண்களும் பெண்களும் உற்சாகத்துடன் ஆற்றுக்கு தீர்த்தம் எடுக்கச் சென்றனர்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் நீந்திக் கொண்டிருக்க நீச்சல் தெரியாத அனு, சந்துரு சாதனா மட்டும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பின்னரே நீச்சல் வகுப்பில் சேர்த்து விடுவதாக பெற்றவர்கள் கூறியிருந்ததால் அவர்களின் மீது கடுப்பின் உச்சத்தில் இருந்தனர் . அனுவும் சந்துருவும் மேளச்சத்தத்தில் மயங்கி ஆடத் துவங்கி விட்டனர்.. சாதனா அவர்களை விட்டு சற்று தள்ளி வந்து ஆற்றிலுள்ள மீன்களை ரசித்துக் கொண்டிருந்தாள்..
" வா சாதனா நான் உனக்கு நீச்சல் கத்துத் தரேன்.." என ஆகாஷ் அழைத்தான்..

அவளும் மகிழ்ச்சியாக ஆற்றுக்குள் இறங்கினாள்.. அவனும் அவளுக்கு முழு அக்கறையுடன் கத்துத் தர அவளும் அதை எளிமையாகக் கற்றுக் கொண்டாள்.. கோவில் விவகாரமாக ஆகாஷை பூசாரி அழைக்க அவன் சென்று விட்டான்..

நீச்சல் கற்றுக் கொண்ட சந்தோசத்தில் அவள் நீண்ட நேரம் தண்ணீரிலே நீந்திக் கொண்டிருந்தாள்.. திடீரென நீரின் வேகம் அதிகரித்தது.. அவளால் சமாளிக்க முடியவில்லை.. கை கால்கள் எல்லாம் செயலற்றுப் போயின.. இனி தனது தாயைக் காண முடியாதா.. சாகப் போகிறோமா என எண்ணும் போதே ஒரு பெரிய அலை ஒன்று அவளை அடித்தது.. தூரத்தில் இது எதுவும் தெரியாத சந்துருவும் அனுவும் நடனமாடிக் கொண்டிருந்தனர்..

" சந்துரு.. சந்துரு " என இவள் ஒலியெழுப்பினாள்.. ஆனால் அது அவனுக்கு கேட்கவேயில்லை.. இனி அவ்வளவு தான் என எண்ணும்போது தனது தோளைப் பற்றி யாரோ இழுப்பது போன்று தெரிந்தது.. அது வேறு யாருமில்லை . நீங்கள் நினைத்தது போன்று பிரசாந்த் தான்.
அவனைப் பார்த்ததும் நிம்மதியடைந்தவள் அவனது காலரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே மயங்கிவிட்டாள்.. அவளைக் கரைக்கு கொண்டு வந்த பின்பு தான் அவள் நீரில் மாட்டிக் கொண்டதே அனைவருக்கும் தெரியும்..

நாட்டுவைத்தியர் ஒருவர் வந்து உடனே முதலுதவி அளிக்க மெதுவாக கண் திறந்தாள்..

பயத்திலும் குளிரிலும் உடல் நடுங்கியது.. கமலா " உன் விளையாட்டுத் தனத்துக்கு அறிவே இல்லாம போயிடுச்சு.. சாதனா.. எதுக்குடி தண்ணில குதிச்ச " என்று மிரட்டினார் அழுது கொண்டே ..

ஆகாஷைக் காட்டிக் கொடுக்க மனமில்லாமல் மௌனமாகவே இருந்தாள்.. " வாயத் துறந்து சொல்லடி.. பிரசாந்த் தம்பி மட்டும் இந்நேரம் வரலினா உன் நிலைமை என்னவாகியிருக்கும் " என்று கூறும் போது தான் பிரசாந்தின் ஞாபகம் வந்தது..

இந்த வருடமும் கல்லூரியிலிருந்து நேரடியாக இப்போது தான் வந்திருந்தான்..சொல்லப் போனால் சாதனாவிற்கு பிரசாந்த் என்கிற கதாபாத்திரமே மறந்து போயிருந்தது..
யாருமே தன்னைக் கண்டுகொள்ளாத பொழுது இவன் எவ்வாறு கண்டுகொண்டான் என யோசிக்கலானாள்..

சாதனா அவனைத் தேட முகத்தில் கோபத்தை அடையாளமாகக் கொண்டு அவளைப் பார்த்தவாரே நின்றிருந்தான்.. தேங்க்ஷ் என்று அவள் வாயசைக்க அதற்கு அவன் பதிலளிக்கவே இல்லை..

" சரியான திமிர் பிடித்தவன் " என எண்ணிக் கொண்டாள்..

அடுத்த நாள் , ஒரு நாள் முழுதும் நீரிலே இருந்ததால் காய்ச்சல் வந்துவிட்டது.. கமலா நேத்திக் கடன் செலுத்தவதற்காக கோவிலுக்கு சென்றிருக்க, சாதனாவை பக்கத்து வீட்டு அத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.. தூக்கத்தில் இருந்தவள் பாத்திரம் கீழே விழுந்த சத்தம் கேட்க எழுந்து பார்க்கும் போது யாரோ ஒருவர் வீட்டிற்கு வெளியே போவதைப் பார்த்தாள்... டேபிளின் மீது இருந்த கூலிங்கிளாசை வைத்தே யாரென்று கண்டுகொண்டாள்.. ஆனால் இவன் எதற்காக திடீரென அக்கரை கொள்கிறான் என்று அப்போது அவளுக்குப் புரியவில்லை..

அடுத்து வந்த நாட்களில் அவன் வழக்கம் போல கல்லூரி விடுதிக்குச் சென்றுவிட அவளும் அதை மறந்தே போனாள்.. அவன்
வீட்டிற்கு வந்த பின்பும் அவனாக வந்து பேச மாட்டான்.. எப்போதாவது கமலாவை அழைப்பதற்காக வீட்டிற்கு வருவான் அவ்வளவு தான்..

அவ்வாறு ஒருநாள் அவன் வரும்போது சாதனா பொதுத்தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தாள்..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz