ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 3

Nivethamagathi

சாதனாவிற்கு வேலை செய்வது பிடிக்காமல் இல்லை.. இருப்பினும் அவளது சிறுவயதில் இந்த வீட்டில் ஏற்பட்ட அனுபவம் அவளை முழுதும் மாற்றியது..
கமலா செய்யும் வேலைக்கு அவர்கள் பணம் தருகிறார்கள்.. தான் ஏன் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் என்றும் இருக்கும்..

இருந்தாலும் இன்று தனது நண்பர்களுக்காக சமைக்க ஒத்துக் கொண்டாள்..

பின்புறம் திரும்பி பாத்திரத்தை எடுத்துக் கொண்டிருந்தவள் எதேச்சையாக திரும்ப தன் முன்னே யாரோ திடீரென்று நிற்பதைக் கண்டு பயந்து கையில் உள்ள பாத்திரத்தைக் கீழே போட்டாள்..

நான் என்ன பேயா.. உனக்கு கண்ணு தெரியல என்று அவன் அதட்டவும் ' பார்க்கவும் அப்படித்தான் தெரியுது ' எனத் தனக்குள்ளே புலம்பிக் கொண்டாள்...

என்ன சொன்ன சத்தமா சொல்லு .. என்றான்..

அவன் மீண்டும் மீண்டும் அதட்டவும் " இங்கப் பாருங்க.. நான் பாட்டுக்குத் தான் இருந்தேன்.. நீங்க தீடிருன்னு வந்து பயப்படுத்திட்டு .. என்னக் குறை சொல்லாதிங்க.. என்னை சமைக்க விடுங்க.. காலேஜ்கு டைம் ஆச்சு " என்று கோபமாகக் கூறி அவன் பதிலை எதிர்பார்க்காமல் தன் வேலையைத் துவங்கினாள்..

" உன்னோட மிரட்டல்க்கு எல்லாம் பயப்பட என்னை சந்துருனு நினைச்சியா " என்று உலறிவிட்டு கோபமாக வெளியேறினான். அவனது சம்பந்தமில்லாத பேச்சு இன்னும் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

அனைவரும் டைனிங்கில் வந்து அமர்ந்தனர்.. சாதனா உணவை டேபிளில் எடுத்து வைத்து விட்டு பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள்....

சந்துரு அவளை வம்பிழுக்க நினைத்து " சாதனா.. சட்னில உப்பே இல்ல.. இட்லி வேகவே இல்ல.. பாஸ்தாவா இல்ல இது இடியாப்பமானும் புரியல " என்று அடுக்கிக் கொண்டிருந்தான்..

" டேய் பொய் சொல்லாதடா .. இதையே குறை சொல்றியே இன்னைக்கு நைட் நீயும் நானும் தான் சமைக்கப் போறோம்.. அதை என்னப் பண்ணப் போற " என்றாள் அனு..

" வெவ்வவெவ்வ " என்று சந்துரு பழிப்புக் காட்ட , அனு அதற்கு பதில் பேச என இவர்களின் சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது.

இவர்களின் தொல்லை தாங்க முடியாத பிரசாந்த்,
சந்துருவை அதட்ட முடியாததால்
" அனு பேசாம சாப்பிடு " என்று பிரசாந்த் அனுவை மட்டும் மிரட்டவும் இருவரும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தனர்..

தான் திட்டியதால் சாப்பிட சங்கோஜப் படுவாள் என நினைத்து
" சாதனா நீயும் வந்து சாப்பிடு " என்று அழைத்தான் பிரசாந்த்..

இறுகிய முகத்துடன் வெளியே வந்த சாதனா " சரி நான் போய் சாப்பிட்டு வரேன் " என்று வெளியே செல்லத் தயாரானாள்..

அவள் செய்கையை புரியாமல் பார்க்கவும் " அண்ணா நீங்க சாப்பிடுங்க.. அவ அப்படிதான் எப்பவும் நம்ப வீட்ல சாப்பிட மாட்டாள் " என்றாள் அனு..

எதனால என்ற அவனது கேள்விக்கு " அவ சின்ன வயசிலிருந்தே அப்படித்தான்.. அவ்ளோ ஏன் நம்ப வீட்டுக்கே அடிக்கடி வர மாட்டாள்.. நம்ப அப்பாலாம் எவ்ளோ சொல்லிப் பார்த்துட்டாங்க..அவ கேட்க மாட்டிட்டா.. கேட்டா செல்ப் ரெஸ்பெக்ட்னு சொல்லுவா.. அதுனால நாங்களும் டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்னா " என்றாள் அனு..

" ஒஒ " என்று சொல்லி சந்துருவைப் பார்க்கவும் அவனது இடம் காலியாக இருந்தது..

பிரசாந்த் கிளம்பி வெளியே வர, சந்துரு சாதனாவின் வீட்டு வாசலில் தட்டோடு நின்று கொண்டிருந்தான்..

"ஏய் ப்ளீஷ்டி... என்னைப் பிச்சைக்காரனாட்டம் நிக்க வெச்சிருக்கியேடி.. " என்றுக் கெஞ்சிக் கொண்டிருந்தான்..

உள்ளே இருந்து
" சரி சரி.. போய் கிளம்பு.. உன்னை மன்னிச்சிட்டேன்.. " என்று சாதனா சொன்னவுடன் " என் தங்கக் குட்டி " என்று சொல்லிக் கொண்டே பிரசாந்தைக் கடந்து சென்றான்..

அடுத்த நாள் மாலையிலிருந்தே தனது ஆட்டத்தை ஆரம்பித்திருந்தாள் அனு..
எந்த ஆடை அணிவது என தனது அண்ணனையும் சந்துருவையும் டார்ச்சர் பண்ணிக் கொண்டிருந்தாள்..

சாதனா இன்னும் கல்லூரியில் இருந்து வரவில்லை..

" மச்சான் நாங்க வர லேட்டாகும். தயவுசெஞ்சு சாதனா வந்தா கொஞ்சம் பாத்துக்கோயேன் " என்றான் சந்துரு

" ஏன் அவ என்ன குழந்தையா " என்றான் ஏளனமாக..

இல்லை அவளுக்கு இருட்டுனா ரொம்ப பயம்.. அதான்..

அதென்ன பொண்ணுங்கன்னா இருட்டுக்கு பயந்து தான் ஆகனுமா என்ன ? என்னவோ நான் பார்த்துக்கிறேன்.. நீங்க நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க.. என்று வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்தான்..

அனு செல்லும்போது " அண்ணா.. சாதனா மேல எனக்கு கோபம் தான்..ஆனா அவ ரொம்ப நல்லவ.. எதும் திட்டிராதனா " என்று சொல்லிச் சென்றாள்..

மணி 7 ஆனது.. இன்னும் அவள் வரவில்லை .. அப்படியே தொலையட்டும் என்றும் விட்டுவிட முடியவில்லை.. பைக்கை எடுத்துக் கொண்டு தேடச் சென்றான்..

" என்ன பெண் இவள்.. வீட்டில் யாருமில்லை என்று தெரிந்தவுடன் எப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறாள் " என்று திட்டிக் கொண்டே தேடினான்..

தூரத்தில் அவளைக் கண்டும் கொண்டான்.. அவளின் வண்டி பஞ்சராகி நிற்க.. நான்கு தடியன்கள் அவளிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தனர்..

அவளோ சந்துருவிற்கு கால் பண்ண நாட் ரீச்சபிள் என்று வந்தது.. அனுவிற்கும் அதே நிலை தான்..கைகளை பிசைந்து கொண்டு அவள் நின்ற வேலையில் தான் பிரசாந்த் வந்து நின்றான்..

அவனைப் பார்த்ததும் ஒரு நிம்மதிப் பெருமூச்சை ஒன்று வீசினாள்..
சாதனா என்னப் பிரச்சனை என அவன் கேட்கவும் அவன் அடித்தால் எலும்பு கூட தேறாது என்பதை அவனது கட்டுமஸ்தான தேகத்தைப் பார்த்து உணர்ந்த அந்த ரவுடிகள் தப்பி ஓடப் பார்த்தனர்..

அதற்குள் அவர்கள் அனைவரையும் பிடித்து அவர்களது சட்டையால் பின்னால் கைகளைக் கட்டியபடி முட்டிபோட்டு அமரவைத்தான்..

அடுத்த சில நிமிடங்களில் போலிஸ் வந்துவிட, அவர்களைக் கைது செய்து இழுத்துச் சென்றனர்..

அவள் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து அவளது வண்டியை அருகிலுள்ள கடையில் விட்டுவிட்டு அவள் முன்னே விரல்களை சொடக்கினான்..
அதில் தெளிந்தவளாய் " ரொம்ப நன்றி " என்றாள்..

அதற்கு அவன் எதுவும் கூறாமல் " வண்டியில் ஏறு " என்றான்..

அவள் தயங்கவும் " இப்ப ஏறப்போறியா.. உன்னை விட்டுட்டு போகவா " என்று கோபமாக சொன்னான்..

" சாரி " என்று கூறிவிட்டு ஏறி அமர்ந்தாள்..

'' அவுங்க தான் தொல்லை பண்றாங்கனு தெரியுதுல.. 108க்கோ 100க்கோ கால் பண்ண வேண்டியது தான ? " என்றான்..

இல்லை.. அதுனால சந்துருக்குத் தான் பிரச்சனையாகும்னு சும்மா விட்டுட்டேன்...

என்ன உலற.. புரியும் படி சொல்லு" என்றான் .

அதுவந்து அவுங்க எல்லாரும் சந்துருவப்பழி வாங்கதான் அப்படி நடந்துகிட்டாங்க..

அதனைக் கேட்டதும் அவன் சடன் பிரேக் போட்டு நிறுத்தவும் அவன் மீதே மோதி நின்றாள்..

" சந்துருவ பழிவாங்க உன்னை எதுக்கு தொல்லை பண்ணனும் " என்றான் புரியாமல்..

" அது.. நேத்து சந்துரு மினிஸ்டர் பையன அடிச்சிட்டான்.. அவன் தான்" என அவள் முழுதும் கூறி முடிப்பதற்குள் " இன்னொரு வண்டியில் இருந்து யாரோ ஒரு ரவுடி அவளது துப்பட்டாவைப் பிடித்து இழுத்தான்..

அவள் சாலைப் பின் பண்ணியிருந்ததால் சாலை இழுத்த வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தாள்..

அவள் கீழே விழுந்த வேகத்தில் தலையில் அடிப்பட்டு இரத்தம் வரத் துவங்கியது..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz