ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 4

Nivethamagathi

காயம் வெளிப்புறமாக மட்டுமே இருக்க , மருத்துவர் இரண்டு நாள் ஓய்வு எடுத்தாலே போதும் என்று கூறி அனுப்பி விட்டார்..

அவளைத் தனியாக விடவும் மனமில்லை.. அதேவேளை ஒரு பெண்ணின் அறையில் தனியாக இருக்கவும் மனம் இடங்கொடுக்கவில்லை..அதனால் ஹாலில் ஷோபாவில் அவளைப் படுக்கவைத்து விட்டு அருகிலுள்ள நாற்காலியில் கால் நீட்டி அமர்ந்திருந்தான்..

சந்துருவும் அனுவும் பார்ட்டி முடித்து வர 2 மணி ஆனது..தூக்கக் கலக்கத்தில் வந்த இருவரும் ஹாலில் இவர்களைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியாகினர்..

சந்துரு பதற்றமாக சாதனாவின் அருகில் சென்று அவள் தலையைத் தன் மடியில் ஏந்தினான்..

" என்னாச்சுடி.. என்னடி தலையில இவ்ளோ பெரியக் கட்டு.. எல்லாம் என் தப்பு தான்.. உன்னை நான் தனியா விட்ருக்க கூடாது..இனி உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன்டி " எனப் புலம்ப ஆரம்பித்தான்..

" அண்ணா சாதனாக்கு என்னாச்சு " என்ற அனுவிடம் நடந்ததைக் கூறினான் பிரசாந்த்.

மெதுவாக கண்ணைத் திறந்த சாதனா " டேய் லூசு.. அழுவாதடா.. நான் பாரு நல்லாத் தான் இருக்கேன் " என சிரிக்க முடியாமல் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

என்னால தானடி உனக்கு இப்படி ஆச்சு.. என்று அவன் கூறவும் " என்கிட்ட அந்தப் பொறுக்கி தப்பா நடந்தனால தான நீ அவன அடிச்ச.. விடுடா பார்த்துக்கலாம் " என்றாள் கூலாக..

" சாதனா வா நாம காலைல இதப்பத்தி பேசிக்கலாம்.. மொதல்ல போய் தூங்கலாம் வா " என்று அழைத்தாள் அனு..

அவர்கள் இருவரும் உள்ளே சென்றபிறகு " ரொம்ப தேங்க்ஸ் மச்சான்.. சாதனாவ பார்த்துக்கிட்டதுக்கு " என்றான் சந்துரு

அதுவிடு.சாதனாவுக்கும் மினிஸ்டர் பையனுக்கும் என்ன பிரச்சனை என்றான் ..

அதுவந்து அவன் சாதனாவ ரொம்ப நாளா லவ் பண்ண சொல்லித் தொல்லை பண்ணிட்டு இருந்திருக்கான்.. அவ எங்கிட்ட இத்தனை நாள் சொல்லவே இல்ல..நேத்து தான் அந்தப் பொறுக்கிய அடிச்சேன்.. அதுனால தான் என அவன் முடிப்பதற்குள்..

அதுக்குனு அவன அடிப்பியா.. இதை வேறமாறி ஹேண்டில் பண்ணிருக்கலாம்ல என்றான் பிரசாந்த்

ஏன் மச்சான் இதே நிலைமைல அனு இருந்தாலும் நீ இப்படிதான் சொல்லுவிங்களா ..

அதற்கு அவன் தயங்கவும் அந்த இடத்துல யாரா இருந்தாலும் இப்படித்தான் நடந்திருப்பேன்.. எனக்கு ஏழைப் பணக்காரன்னு வித்தியாசம்லாம் இல்ல.. மினிஸ்டர் பையன்னா நான் சும்மா இருக்கனுமா என்ன ?என்றான் சந்துரு கோபமாக..

அவன் பேசுவதைக் கூட கவனிக்காமல் கையில் போனை எடுத்து யாருக்கோ கால் செய்து விட்டு இவன்புறம் திரும்பினான்..

" இனி அந்த ராகுல்னால எந்தப் புரோப்ளமும் வராது.. இனி யார்மேலயும் எடுத்த உடனே கைய வெக்காத..நம்பனால எப்பவும் அவளுக்கு காவல் இருக்க முடியாது சரியா.. அது அந்தப் பொண்ணுக்கு பின்னாடி பிரச்சனைல முடியும். என்றான் அதிகாரமாக..

சந்துரு சரியென்று தலையாட்டவும் " காலைல சீக்கிரம் எழுந்து நீதான் சமைக்கனும்.. தூங்குபோ " என்று கூறிவிட்டு அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்..

ஆனால் சந்துருவிற்கோ இன்னும் ஆத்திரம் குறையவில்லை.. பிரசாந்தை நம்பி அமைதியாக விட்டுவிடவும் முடியவில்லை..
டென்சனில் சோபாவிலே தூங்கிப் போனான்..

அடுத்தநாள் சாதனாவிற்கு கஞ்சி வைத்து விட்டு அவளை எழுப்ப சென்றான்..

சாதனாவின் மேல் அனு கையையும் காலையும் தூக்கிப் போட்டுக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்..

அவன் மெதுவாக சென்று அவளது காதைத் திருகவும் " ஏன் சந்துரு இப்படி கனவுல வந்தாக்கூட பாசமா பேசமாட்டிங்குற.. ஒன்னு திட்ற..இல்ல அடிக்கிறபோடா... உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் " என்று புலம்பிக் கொண்டிருந்தாள்..

அதைக் கேட்டு அவன் அதிர்ச்சியாகி வெளியே சென்று விட்டான்..வீணாக அவள் மனதில் ஆசையை விதைத்துவிட்டோமோ எனத் தன்னையே நொந்து கொண்டான்..

யாரும் எழுமுன்னரே பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்..

பிரசாந்த் இ்ந்த மூன்று நாட்களுக்கு மட்டும் ஒரு சமையலாளை நியமித்திருந்தான்..

அனு கெஞ்சிக் கூத்தாடி சாதனாவிற்கு சாதத்தை ஊட்டிக் கொண்டிருந்தாள்.. அவளது அன்பினை சாதனாவால் உதாசீனம் செய்ய முடியவில்லை..

அனு கீழே இறங்கி வந்ததும் " அனு எப்படி உன்னால மட்டும் கோபத்தையும் அன்பையும் ஒரே ஆள் மேல காட்ட முடியுது.. " என்றான் பிரசாந்த் அவள் தலையை நீவியபடி

" டேய் அண்ணா .. என்னை என்னமோ வில்லிமாறி நினைச்சியா.. எனக்கு சாதனாவோட சந்துரு க்ளோசா இருக்கிறது பிடிக்கல.. அவ்ளோதான் மத்தபடி அவளும் என் பிரண்ட் தான் " என்றாள் அனு

" அப்படினா சந்துரு அவள விரும்பினாக்கூட இப்படித்தான் நடந்துப்பியா " என்றதுக்கு அவன் தலையில் கொட்டி " அவன் இப்பவும் விரும்பிக் கிட்டு தான் இருக்கான் " என்றாள் அனு கேசுவலாக..

அவன் அதிர்ச்சியாக அவளைப் பார்க்கவும் " விரும்புறான் காதலியா இல்ல.. தோழியா .. இப்ப புரியுதா.. அவுங்க எப்பவும் பிரண்ட்ஸ் தான்.. ஆனா என்னால தான் அவன பிரண்டாக்கூட நெருங்க முடியல " என்று தன் போக்கில் புலம்பிக் கொண்டே சென்றாள்..

பிரசாந்தால் தனது தங்கைபடும் பாட்டை காண இயலாமல் இன்று எப்படியாவது சந்துருவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்..

சந்துருவோ இனி ஹாஷ்டலிலே தங்கிக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்தான்..

சாதனா , காலையிலிருந்து சந்துருவைப் பார்க்காமல் எதையோ இழந்ததைப் போல உணர ஆரம்பித்தாள்...

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz