மொழி 2
சாதனாவிற்கு தன் மேலே கோபம் வந்தது.. அந்நியரின் கை தன் மேல் படுவதற்கு தானே காரணமாக இருந்ததை எண்ணி நொந்து போனாள்..
அவள் திரும்பி சந்துருவைப் பார்க்க.. அவனோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான்..
அவன் தலையில் தட்டி என்னவென்று கேட்டாள்..
" இல்ல.. திடீரென்று சிங்கம் வாலன்டீரா மூக்க நுழைக்குதேன்னு யோசிக்கிறேன் " என்றான் சந்துரு..
" அதான் டா எனக்கும் சந்தேகமா இருக்கு " என்றாள் சாதனா..
" அனு இதப்பத்தி நீ என்ன நினைக்கிற " என்று சந்துரு வினவ.. " உங்க ரெண்டு பேருக்கும் மூக்கு கொஞ்சம் பொடப்பா இருக்குல.. அதான் ஒரு இன்ச் கட் பண்ணலாம்னு நினைக்கிறேன் " என்று கோபமாக சொல்லிவிட்டு சென்றாள்..
" சாதனா நான் ஒண்ணு சொல்லவா " என்றான் சந்துரு தயங்கியபடி.. அவள் தலையாட்டவும் " எனக்கென்னமோ இந்த லைலா மேல அந்த மஜ்னுக்கு காதல் வந்தமாறி தெரியுது " என்றான்..
அவள் புரியாதது போல பார்க்கவும்... " நடிக்காதடி .. உண்மையாவே உனக்கு நான் சொல்றது புரியலயா " என்றான்..
சிறிது நேர யோசனைக்குப் பிறகு "இந்த மாறி எங்கிட்ட பேசுற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திடுச்சுனா நீ நம்ம நட்ப இழக்கவும் தயாரா இருக்கனு நல்லா புரிஞ்சிக்கிட்டேன் " என்று சொல்லிவிட்டு தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள்..
அங்கே அனு சந்துருவின் புகைப்படத்தை வைத்து அழுது கொண்டிருந்தாள்..
" என்னை உனக்கு கடைசி வரைக்கும் பிடிக்காமலே போயிடுமா.. ஒருவேளை நானும் உங்கோட டாக்டர்க்கு படிச்சிருந்தா என்னை உனக்கும் பிடிச்சிருக்கும்ல " எனப் புலம்பிக் கொண்டிருந்தாள்...
சாதனாவிற்கு அனுவைப் பார்க்க பாவமாக இருந்தது.. அவளை இன்று வரை சந்துரு புரிந்து கொள்ளாமலே இருக்கின்றானே.. அனுவிற்காக தானே பேசிப் பார்க்கலாம் என முடிவெடுத்தாள்..
அடுத்த நாள் இரவே அவனிடம் பேச ஆரம்பித்தாள்..
" சந்துரு அனுவப் பத்தி நீ என்ன நினைக்கிற " என்றாள் தயங்கியபடி..
நான் இதுல என்ன இருக்கு.. உன்னை மாறி அவளும் என் பிரண்ட் தான் என்றான் வேண்டா வெறுப்பாக..
அது என அவள் இழுக்கவும் ... சாது உன்னோட பர்சனல்ல நான் தலையிடாத மாறி என்னோட பர்சனல்ல நீயும் தலையிடாத என்றான் வானத்திலுள்ள நிலவினை வெறித்தபடி..
அவன் பேசியதிலிருந்தே தான் கூற வந்ததை அவன் புரிந்து கொண்டான் என்பதை உணர்ந்தாள்.. அதிலிருந்து அந்தப் பேச்சை அத்துடன் விட்டிருந்தாள்..
அவள் சிறிது முயன்று இருந்தால் அவன் மனதிலுள்ளதை அறிந்து இருப்பாள்..ஆனால் அதற்கு முன்னரே
கமலா இருவரையும் உள்ளே அழைத்தார்..
சாதனா வருடத்திற்கு இருமுறை மட்டுமே சாரதா இல்லத்திற்குள் செல்வாள் என்பது கமலாவிற்கும் தெரியும் . இருப்பினும் வேதவள்ளி அழைத்ததால் வேறு வழியின்றி உள்ளே சென்றாள்..
அரண்மனையை ஒத்த அமைப்புடைய அழகான கம்பீரமான கட்டட அமைப்பு.. இருப்பினும் அதை அவள் என்றுமே இரசித்ததில்லை..
அனைவரும் வந்ததை உறுதி செய்த பிறகு..
விஸ்வநாதன் " இங்கப் பாருங்க... நம்ப குலதெய்வம் கோயில்ல விசேசம்.. பெரியவுங்க எல்லோரும் நாளைக்கே கிளம்புறோம்.. நீங்க 4 நாள் கழிச்சு வந்து சேருங்க " என்றார்..
சந்திருவும் அனுவும் ஒரு வாரம் ஜாலியா இருக்கலாம் என எண்ணி ஹைபை போட்டுக் கொண்டனர்..
சாதனா இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதால் அமைதியாக இருந்தாள்..
சுந்தர மூர்த்தியோ " சாதனா நீயும் தான் அங்க வரனும்... புரியுதா " என்றார்
அவள் தயங்கவும் விசுவின் மனைவி இலட்சுமி " உங்க அம்மாவும் எங்களோட தான் வராங்க.. அதனால நீயும் வர " என்றார் அன்புக் கட்டளையாக..
அதைக் கேட்டவுடன் " என்னது அவுங்களும் உங்களோடனா.. நாங்க சாப்பாட்டுக்கு என்ன பண்றது " என்றாள் அனு அதிர்ச்சியாக..
அதற்கு வேதவள்ளியார் " ஏன் ஏழு கழுத வயசாச்சு.. உனக்கு சமைக்கத் தெரியாதா.. உனக்குதான் உங்கண்ணா சப்போர்ட்க்கு வருவானே.. அவனையே சமச்சு தரச் சொல்லு " என்று கூறி இதுவரை அமைதியாக அமர்ந்திருந்த பிரசாந்தை வம்புக்கு இழுத்தார்..
" பாட்டி " என அவன் முறைக்கவும்.." டேய் போடா.. உன் தங்கச்சிய சொன்னா உனக்கு கோபம் வருதா... நான் சொன்னது சொன்னதுதான்.. இந்த நாலு நாள் நீங்க தான் சமைச்சு சாப்பிடனும்.." என்றார் முடிவாக..
மல்லிகா " அம்மாடி சாதனா.. இந்த ரெண்டு ஜந்துக்களையும் நம்பி வீட்ட விட்டுட்டுெபோக முடியாது.. நீயும் உன் திங்க்ஸ் எடுத்துட்டு வந்து இங்க தங்கிக்கோ.. கமலாவும் இல்ல.. நீ மட்டும் தனியா இருந்தா சரியா வராது " என்றார் சிரித்துக் கொண்டு..
கமலா சாதனாவிற்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது என்பதால் " அதெல்லாம் வேண்டாம் மா " என்றார்..
" என்னப் பேசற கமலா.. வயசுப் பொண்ண எப்படி தனியா விடறது " என சுந்தரமூர்த்தி கண்டித்தார்..
வேறு வழியின்றி கமலாவிற்காக சாதனா சம்மதித்தாள்..
அடுத்த நாள் அதிகாலையில் அனைவரும் சென்றுவிட வீடே வெறிச்சோடி இருந்தது..
பிரசாந்த் எழுந்து தனக்கும் தன் தங்கைக்கும் காபியைத் தயாரித்துக் கொண்டு அவளை எழுப்ப உள்ளே சென்றான்..
அதற்கு முன்னரே சந்துரு அவளை எழுப்பி வீட்டை சுத்தம் செய்ய பணித்துக் கொண்டிருந்தான்.. அவளும் முகத்தை சுளித்துக் கொண்டே செய்து கொண்டிருந்தாள்...
" அடியேய்.. என் கால்க்கு அடில பாரு குப்பைக் கடக்குது... ஒழுங்கா கூட்டு " என உத்தரவு இ்ட்டுக் கொண்டிருந்தான்.
" ப்ளீஸ்டா.. அட்லீஸ்ட் காபி குடிச்சிட்டாவது வரேன்டா " எனக் கெஞ்சவும் " நாளைக்கு பார்ட்டிக்கு போனும்னா..இதப் பண்ணி தான் ஆகனும் " என்றான்..
இருவரின் பள்ளித் தோழனின் பிறந்த நாள் விழா என்பதால் சாதனா வரமாட்டாள் என்பதால் இருவரும் ஒன்றாக சென்று வருவதற்கு நல்ல வாய்ப்பு .. அதனால் தான் காலையிலேயே அடிமை வேலை செய்து கொண்டிருக்கிறாள் அனு..
அவளின் நிலையை எண்ணி வருத்தம் அடைந்தாலும் இதில் தான் தலையிடுவது சரிவராது என்பதால் அமைதியாக சென்று விட்டான்..
சந்துரு சாதனாவிடம் தயவு செய்து அனுவை சமையலறை பக்கம் விட்டுவிடாதே..என்றுக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் தனக்குத் தெரிந்த சில உணவுகளை மட்டும் சமைக்கத் தயாரானாள்..
காபியைக் குடித்து விட்டு கப்பை வைப்பதற்காக வந்த பிரசாந்த் அவள் உள்ளே இருப்பதை கவனிக்கவில்லை..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz