மொழி 25
அவளை அவமானப்படுத்தியும் உயிரைப் போக்க முயற்சித்தும் அதை மனதில் கொள்ளாது தான் சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் தன்னைப் பார்க்க வந்தது மட்டுமில்லாமல் மன்னிக்கும்படியான சிறிய தவறை அவன் செய்யவில்லை எனத் தெரிந்தும் மன்னித்துவிட்டேன் என்று கூறியதாலும் அவனது குற்றவுணர்ச்சி இன்னும் அவனை பாடாய்படுத்தியது..
' அண்ணா ..அண்ணா 'என்று எப்போதும் தன் பின்னாடியே சுற்றியவள் இன்று வாய் பேச முடியாமல், தான் பேச நினைப்பதை மாற்றானிடம் சொல்லி பேசுகிறாள்.. அதற்கும் காரணம் நான் தானே என எண்ணும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது.
" தனாம்மா " என்று அவன் ஆழ்ந்த குரலில் அழைக்கவும், அதுவரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கண்களில் வழியும் கண்ணீரைப் பார்த்ததும் அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் வெளியே சென்றுவிட்டாள்.
" பிரசாந்த் தனாவ இனி இங்கலாம் கூட்டிவராத.. இந்தக் கேவலமான இடத்துல அவ கால் படக்கூடாது.. எனக்கு இப்ப அவ என்னை மன்னிச்சிட்டானு நம்ப முடியல.. நான் பண்ண தப்ப எந்தப் பொண்ணும் மன்னிக்க மாட்டா.. அப்படியிருந்தும் அவ என்னை மன்னிச்சிருக்கானா அவ என்மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்கானு என்னால புரிஞ்சிக்க முடியுது.. ஆனா அதுக்கு நான் தகுதியில்ல" என்று தலையலடித்துக் கொண்டு அழுபவனை ஓங்கி அரைய எண்ணியவன் அதைக் கட்டுப் படுத்திக் கொண்டு " போதும் ஆகாஷ்.. இனி நடந்தத யாராலும் மாத்த முடியாது.. இனியாவாது திருந்தி இரு " என்று வேண்டா வெறுப்பாகக் கூறிவிட்டு வெளியே வந்தான்..
அவன் வெளியே வந்ததும் சாதனாவைத் தேடினான். சாதனா காரின் உள்ளே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவன் ஆறுதலாக தோளைத் தொட, வெடுக்கென அதைத் தட்டிவிட்டவள் அவனிடம் கோபமாக முகத்தைக் காண்பித்தாள்.
வீட்டிலிருந்து வரும்போது புன்னகையுடன் இருந்தவள் இப்போது முள்ளென முகத்தைக் காண்பிக்க காரணம் என்னவோ எனப் புரியாமல் குழம்பினான்.
" சாதனா ஆகாஷ நினைச்சு பீல் பண்றியா " என்று அவன் அக்கரையாக வினவ அதைப் பொருட்படுத்தாதவள் கண்கள் மூடி அமர்ந்து கொண்டாள்.
அவளது உணர்வுகளை மூடிமறைக்கும் வித்தையை யாரிடம்தான் கற்றுக் கொண்டாளோ என்று சளித்துக் கொண்டு காரைச் செலுத்தினான்.
அவனும் எவ்வளவு நேரம்தான் பொறுமையாக இருப்பது.. அவனும் மனிதன் தானே ..ஆகாஷைக் கூட மன்னித்தவள் என்னை வெறுக்கக் காரணம் என்ன? அப்படி நான் என்ன அவ்வளவு பெரிய தீங்கொன்றும்
செய்யவில்லையே.. என நினைத்தவன்,
இனியும் பொறுக்க முடியாது " அப்ப நீ காலைல என்னைப் பார்த்தி சிரிச்சது இங்க நான் உங்கோட வரனும்னு தானா.. " என்று கோபமாகக் கேட்க.. அதையும் கண்டு கொள்ளாதவள் தூங்குவதைப் போல பாவனை செய்தாள்.
இத்தனை நாட்களாக யாரிடமும் தன் கோபத்தைக் காட்டாதவன் இன்று எரிமலையாய் வெடித்தான்.
காரின் வேகத்தை அதிகப்படுத்தினான். அதை உணர்ந்த சாதனா கீழே விழாமல் இருக்க இருக்கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்..
" அழுத்தக்காரி.. மெதுவா போனாவது சொல்றாளா.. திமிர் புடிச்சவ " என எண்ணியவன் காரின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான்.
வண்டியை வேகமாக ஓட்டியவன் வேகமாக ஒரு மரத்தில் சென்று இடித்தான்.
இடித்த வேகத்தில் முன்புற விளக்குகள் உடைந்து நொருங்க, அதில் தன்னிலையறிந்தவன் திரும்பி சாதனாவைப் பார்த்தான்.. அவள் கொலைவெறியுடன் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்..
' சுத்தம் சும்மாவே மாரியாத்தா டான்ஸ் ஆடுவா.. இன்னைக்கு ருத்ரதாண்டவம் தான் ' என தலையிலடித்துக் கொண்டவன் " உனக்கு எதும் ஆகலியே " என்றான்..
அவளது கண்களுக்கு எரிக்கும் சக்தியிருந்தால் அவன் இந்நேரம் பாதி எரிந்திருப்பான்.. வேகமாக கதவைத் திறந்து கொண்டு முன்புறம் வந்தவள் ஓங்கி அவனது கன்னத்தில் அறைந்தாள். இது அவன் வாங்கிய இரண்டாவது காதல்பரிசு.. இப்போதைக்கு அவனுக்கு இது தேவையென்பதால் அதைப் பத்திரப் படுத்திக் கொண்டான்.. மறுக்கவில்லை..
சாதனா மீண்டும் கையை ஓங்க அதில் பின்வாங்கி தன் முகத்தினை மறைத்துக் கொண்டான். அவனது கையை தனது ஒரு கையால் முகத்திலிருந்து பிரித்து எடுத்தவள் இன்னொரு கையால் பஞ்சைக் கொண்டு அவனது நெற்றியை பட்டும்படாமல் தொட்டு எடுத்தாள்.. அவள் கையிலிருந்த காட்டன் சிவப்பு நிறமாக மாறியிருப்பதை வைத்துத்தான் அவனது தலையில் அடிபட்டிருக்கிறது என்பதை உணர்ந்தான்.
அவளது கோபம் தன்மீது கொண்ட அக்கரையினால்தான் என்பதை உணர்ந்தவன் மனதில் மெலிதாக நிம்மதி பரவியது.
மருத்துவராக அவளது தொழிலை செய்துகொண்டிருந்தவளை இரசித்தவன்
' என்மேல இருக்குற காதலை எப்படி வெளிய கொண்டுவரேனு பாருடி ' என்று தனக்குள்ளே கூறியவன்,
வேண்டுமென்றே " எனக்கு ரொம்ப வலிக்குது சாதனா.. தலை சுத்தற மாறியிருக்கு " என்று கூறிவிட்டு தலையைப் பிடித்துக் கொண்டே அவள் தோள் மீது சாய்ந்தான்.
கண்களை மூடியிருந்தவன் என்னடா இன்னும் எந்த ரியாக்சனையும் காணோம் என்று ஒற்றைக் கண்ணை மட்டும் மெதுவாக திறந்துப் பார்க்க முயலும்போதே சில்லென்று குளிர் உடல் எங்கும் பரவியது..
பதறியடித்துக் கொண்டு எழுந்தவன் அப்போது தான் உணர்ந்தான் காருக்குள்ளே மழை வந்ததை.. அவன் சாதனாவைப் பார்க்க அவள் கையில் 2 லிட்டர் வாட்டர்கேன் காலியாக இருந்தது..
இவளை வைத்துக் கொண்டு என்ன பிளான் போட்டாலும் நமக்குத் தான் ஆப்பு வரும் என்பதை தாமதமாக உணர்ந்தவன் வேறு எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தான்.
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz