ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 26

Nivethamagathi

பிரசாந்தின் கார் வந்தவுடனே சந்துரு ஆவலாக அருகில் வந்து நின்றான்..அவனுக்கு தனது தோழியின் காதல் பயண அனுபவங்களைத் தெரிந்து கொள்ள ஆவல்.. மனதுக்குள் ஏதோதோ கற்பனைகளோடு ஆர்வமாக வரவேற்க காத்திருந்தான்

தலையில் சின்ன பேன்ட்டெய்டுடன் தொப்பலாக நனைந்திருந்த பிரசாந்த் காரை விட்டு இறங்கியவுடன் சந்துருவினால் சிரிப்பினைக் கட்டுப்படுத்த முடியவில்லை..

" என்ன மச்சான் அடிக்குற வெயிலுக்கு காருக்குள்ள ஷவர் செட் பண்ணிட்டிங்களா.. " என நக்கலாக கேட்க, மறுபக்கம் இறங்கிய சாதனா அவனது மூக்கில் நேராக ஒரு குத்துவிட்டுச் சென்றாள்..

பிரசாந்தின் தோள்மீது கைப்போட்ட சந்துரு " மச்சான் பாத்திங்களா.. உங்களை கலாய்ச்சதும் என்னை அடிச்சிட்டுப் போரா.. அவ்ளோ லவ்வா
.. நடத்துங்க நடத்துங்க " என்று சப்புக் கொட்டினான்..

பிரசாந்தோ தனது உண்மை நிலையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டான்.. அவன் கையைத் தட்டிவிட்டவன் " லவ்வாம் லவ்வு.. அவள வெச்சிட்டு அடிதடி தான் பண்ண முடியும்.. அதுலயும் நான் அடி மட்டும் தான் வாங்க முடியும் போடா.. " என்று கூறிவிட்டு சென்றான்.

பிரசாந்த் உள்ளே செல்லும் போது பெரியவர்கள் எதையோ மும்மரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவன் நிலையைப் பார்த்து பதறிய லட்சுமி அவன் அருகில் வர, அவனோ ஒரே பார்வையிலேயே அவரை நிறுத்தினான்.

வேதவள்ளி " பிரசாந்த் என்னாச்சுப்பா " என்று கேட்க, " ஒண்ணுமில்ல பாட்டி .. சின்னது தான் விடுங்க " என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் அவனது அறைக்குச் சென்று விட்டான்..

பிரசாந்த் தங்களை இன்னும் மன்னிக்கத் தயாராக இல்லையென அவர்களுக்குப் புரிந்தது..ஆரம்பத்திலேயே அவன் இவர்களிடம் ஒதுங்கியே இருந்ததால் அவனை நோக்கி இவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவனுக்கு எரிச்சலையேத் தந்தது.

அனு தயங்கியவாரேஅவனது அறைக்குச் சென்றாள். அவன் அலுவலகத்திற்குச் செல்ல அவசரமாகத் தயாராகிக் கொண்டிருந்தான்..

" அண்ணா தலையில என்ன காயம்.. வண்டியேன் உடைஞ்சிருக்கு.. " என்று மெதுவாகக் கேட்டாள்.. " இப்ப பதில் சொல்ல நேரமில்ல அனும்மா.. அந்த ரெண்டு வெட்டி டாக்டரும் வீட்லதான இருக்காங்க அவங்ககிட்டயே கேட்டுக்கோ " என்று கூறி விட்டு அவசரமாக வெளியேறினான்.

கோபம் கொண்ட அனு சாதனாவிடம் சென்றாள். அங்கே சந்துருவும் சாதனாவும் சிரித்துக் கொண்டிருந்தனர்..
" சாதனா நீ பண்றது உனக்கே நல்லாயிருக்கா.. போறப்ப ரெண்டு பேரும் நல்லாத்தானப் போனிங்க.. ஆனா ஏன் அண்ணா ரொம்ப டென்சனா இருக்கான்.. அப்படி நீங்ப ரெண்டு பேரும் எங்க போனீங்க.. " என்று கோபமாகவே கேட்டாள்.

சாதனா அவளையே வெறித்துப் பார்க்க, சந்துரு " இப்ப எதுக்கு நீ சாதனா மேல கோபப்படற.. உங்கண்ணா டென்சனா இருந்தா அதுக்கு இவ என்ன பண்ணுவா .. உங்கண்ணாவே அமைதியாப் போறப்ப உனக்கென்னடி பிரச்சனை" என்று பரிந்து பேசினான்.

அவனது விளக்கத்தில் அனு எரிச்சலாக " என்னடா நீங்க ரெண்டு பேரும் பேசி வெச்சு திட்டம் போட்டா எங்களுக்கு எதுவும் தெரியாதுனு நினைக்கறீங்களா.. எங்கண்ணா பொறுமையா இருந்தா என்ன வேணா பண்ணுவீங்களா.. அவன் ப்லீங்ஸோட விளையாடுறீங்கில்ல.. உங்கள சும்மா விடமாட்டேன்.. " என்று வீராப்பாக சபதம் செய்தவளின் தலையில் ஓங்கி நறுக்கென கொட்டினான் சந்துரு..
.
.
.
.
.

அலுவலகத்திற்குச் சென்ற பிரசாந்த் தால் எதிலும் கவனம் செலுத்தமுடியவில்லை.. வாழ்க்கையே வெறுத்துப் போனதைப் போல உணர்ந்தான். யாரையும் நம்பமுடியாமலும் தவித்தான்.மேசையில் தலை வைத்து
அப்படியே படுத்தான்..

தலையில் அடிபட்டதாலும் ஈரத்துடன் நீண்ட நேரம் இருந்ததாலும் காய்ச்சல் வந்தது.. திடீரென கண்கள் இருள ஆரம்பித்தது.. சுதாரித்துக் கொண்டவன் எழ முயற்சிக்கும் போது கால்கள் பின்னுவதைப் போல உணர்ந்தான்.. உடலின் மொத்த பலமும் வடிந்து அப்படியேக் கீழே விழுந்தான்.. நேற்று அவள் ஆகாஷைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் கோபத்தில் மதிய உணவையும் இரவு உணவையும் தவிர்த்தது இப்போது வேலையைக் காட்டியது.

பிரசாந்த் மெதுவாக கண்ணைத் திறந்து பார்க்கும்போது தான் அவன் மருத்துவமனையில் இருப்பதைக் கண்டு கொண்டான். அவனைச் சுற்றிலும் அவனது குடும்பத்தினர் கவலை தேய்ந்த முகத்துடன் படுக்க இடமில்லாமல் நாற்காலியில் அமர்ந்தவாரே உறங்கிக் கொண்டிருந்தனர்.. அவன் எழுந்ததை லட்சுமி பார்த்துவிட, " பிரசாந்த் இப்ப எப்படி இருக்குப்பா.. " என்று ஆதரவாக அவனது கையைத் தடவினார்..

அவரது கூற்றில் தூக்கம் கலைந்த மற்றவர்களும் பதற்றத்தில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றனர். ஆரம்பத்தில் இந்த சின்ன விசயத்திற்காக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று சற்று கோபப்பட்டாலும் அவர்களது கண்ணீர் அவன் மனதை மாற்றியது..

கமலா உட்பட அனைவரும் அங்கு இருக்க, ஆனால் சாதனா இல்லாதது வருத்தத்தைத் தந்தது..
" அண்ணா அந்த துரோகிங்க ரெண்டு பேரும் வரலினு யோசிக்காத.. நான் தான் அவங்கள இந்தப் பக்கமே வரக் கூடாதுனு திட்டியனுப்பிட்டேன்.. இனி அதுங்களா நாமளானு பார்த்துடலாம் .. சரியா " என்று கூறியவாரே அவனது அருகில் வந்து அமர்ந்தாள் அனு..

அங்கே சாதனாவும் சந்துருவும் குட்டிப்போட்ட பூனையைப் போல குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தனர்..

தாமதத்திற்கு மன்னிக்கவும்..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz