மொழி 24
அடுத்த நாள் காலை பிரச்சினைகளுடனே துவங்கியது.. காலை எழுந்ததும் மொபைல் டேட்டா நெட்வொர்க்கை ஆன் செய்ததும் ' க்ளிங் கிளிங் ' என்ற ஒலி விடாமல் ஒலிக்க அது அவனுக்கு தலைவலியை ஏற்படுத்தியது..அதை எடுத்துப் பார்த்தவன் முகத்தில் கோபத்திற்கு பதில் சிரிப்பே வந்தது..
காரணம் அந்த அனைத்து குறுஞ்செய்தியையும் அனுப்பியது தனது முட்டாள் காதலி தானென்று..
இது அவனுக்கு அவள் அனுப்பிய முதல் மெசேஜ்.. நேற்று அவள் மீது கொண்ட கோபத்தை முற்றிலுமாக மறந்து போயிருந்தவன் ஆர்வமாக அதனை ஓப்பன் செய்தான்.. நேற்று அவள் காகிதத்தில் எழுதியிருந்ததை இப்போது குறுஞ்செய்தியில் அனுப்பியிருந்தாள்..
கோபமாக ஆபிஸிற்கு வெளியே கிளம்பிவந்தவன் , சாதனா அவனது காரின் மீது சாய்ந்தவாறு நின்றிருந்தாள்.மஞ்சள் நிற புடவையில் தேவதையாகவே ஒளிர்ந்தாள்.என்றும் அவனைப் பார்த்தால் முறைப்பாள் இல்லை முகத்தைத் திருப்பிக் கொள்வாள். ஆனால் இன்றோ அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்துக் கொண்டே இருந்தாள்.
அவள் அழகில் மெய்மறந்திருந்தவனை கமலாவின் குரல் கலைத்தது. " தம்பி நீங்க எங்கோ வெளியே போகனும்னு சொன்னிங்களாமே.. ரெண்டு பேரும் பத்திரமாப் போயிட்டு வாங்க .. நீங்க இப்படி போறது தப்புதான்.. ஆனா நீங்க கேட்டு என்னால இல்லைனு சொல்ல முடியல.. அதான்பா..சீக்கிரமா வந்திடுங்க" என்றார்
அக்கரையாக.
பிரசாந்த் அவரிடம் பொய் சொல்ல முடியாமல் திணற, சாதனாவோ குற்றவுணர்வில் தலையை குனிந்து கொண்டாள்.
சாதனாவிற்கு முன்பக்க கதவினைத் திறந்து விட்டவனை முறைத்துவிட்டு பின்புறமாக ஏறிக் கொண்டாள். அதில் கடுப்பானவன் " நீ செய்யறது எதும் சரியில்ல சாதனா.. ஆனா உன்னோட மனதிருப்திக்காக இதை செய்யறேன்.. ஆனா அங்க எதும் நடந்துச்சுனா நான் மனுசனாவே இருக்க மாட்டேன் " என்றான்.
வேகமாக காரினைச் செலுத்தியவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சாதனா.. அவளுக்குத் தெரியாமலே அதைக் கண்டவன் அவளது கண்களில் வழியும் காதலையும் உணர்ந்தான்..
இன்று அவள் என்னிடம் முகத்தைக் கூட சுழிக்கவில்லையே.. என்னைப் புரிந்து கொண்டாளா இல்லை எனது பிரம்மையா எனக் குழம்பினான்..
உயிராக நேசித்தாலும் அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லையே.. என வாய்விட்டே புலம்பியவன் " சாதனா நீ என்னை லவ் பண்ற தான" என்று அவளைப் பார்த்து கேட்டான்.. ஆழ்ந்த யோசனையில் இருந்தவள் அவனது திடீர் கேள்வியில் தன்னிலை மறந்து ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.. பின்பு நாக்கைக் கடித்தவள் எதும் தெரியாதது போல தனது அடையாளச் சின்னமான கோபத்தை வரவைத்துக் கொண்டு சன்னலின்புறம் திரும்பிக் கொண்டாள்.
லேசாகச் சிரித்தவன் இதற்கு மேலே எதும் கேட்க தோன்றாமல் சாலையின்மீது தனது கவனத்தைச் செலுத்தினான்..
அரை மணி நேரம் கழித்து வண்டியை நிறுத்தியவன் அவள் இறங்குவதற்காக கதவினைத் திறந்து விட்டான். தாங்கள் வந்த இடத்தை உற்றுப் பார்த்தவள் முகம் சற்றுக் கலவரமடைய, அதைப் புரிந்து கொண்டவன் ஆறுதலாக அவன் கையை நீட்டினான். அவளும் அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் தனது கரத்தைக் கொடுத்தாள்.
வாசலிலுள்ள காவலர்களிடம் அனுமதிக் கடிதத்தைக் கொடுத்தவனை சிறைக்காவலர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர்.
அவன் கரங்களைப் பற்றியவாரே உள்ளே சென்றவள் அங்கே சிறைக் கதவிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஆகாஷைப் பார்த்தவள் அவனருகே சென்றாள்.
அண்ணா என்று வாயசைக்க.. அந்தக் குரல்வளை குரல் எழுப்ப முடியாமல் இருக்க அதை எண்ணியவள் கண்களில் கண்ணீர் குளமென நிரம்பியது. ஆகாஷும் தன் தவறை முழுவதுமாக உணர்ந்திருந்தான்.. சிறுவயதில் தன்னுடன் சேர்ந்து சுத்திய தங்கை. மூச்சுக்கு 300 தடவை அண்ணா அண்ணா என்று கூறிக் கொண்டே இருப்பவள் இன்று இவ்வாறு இருக்க தான்தானே காரணமென்று கூனிக்குறுகினான்..
" என்னை மன்னிச்சிடுனு சொல்லக்கூட எனக்கு தகுதியில்ல தனாம்மா.. நான் பாவி.. அப்பா ஷ்தானத்தில இருந்து உன்னை பாதுகாக்க வேண்டிய நானே உன் மானத்தை வாங்கனும்னு நினைச்சிட்டேனே.. அந்த குமார் பையன் பேச்சைக் கேட்டு என்னென்னமோ பண்ணிட்டேன்.. " என்று கதற ஆரம்பித்தான்.
அருகிலிருந்த பிரசாந்த்திடம் பேசு என்று ஜாடை செய்தவளை முறைத்தவன் " ஆகாஷ்.. நடந்தது நடந்து போச்சு.. இனி அதை யாரும் மாத்த முடியாது.. இதை அதோட விட்ரு... நீ அப்படி செய்ய காரணம் நான் தானே.. என்னாலதான அப்படி செஞ்ச.. ஆனா ஒன்னு தெரிஞ்சிக்கோ .. நான் எப்பவும் உன்னை தப்பா நினைச்சதுல.. நீ என்னைத் தப்பா நினைக்கக் காரணம் உன் காதல நான் பிரிச்சதுதான.. ஆனா அது உண்மைக் கிடையாது மேனகாக்கும் உனக்கும் நான் நல்லது பண்ணனும்னு தான் நினைச்சேன்.. ஆனா அவ உன்னை விட்டு போய்டுவானு நினைக்கவேயில்ல.
எனக்கும் காதலோட வலி புரியும்.. ஆனா நான் என்னைக்கும் உன்னை மாறி நடந்திருக்க மாட்டேன்.
நீ சாதனா மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்கேனு எனக்குத் தெரியும்..
.. அந்தப் பாசத்தாலதான் நாங்க நீ மன்னிக்க முடியாத தப்புப் பண்ணாலும் இங்க வந்திருக்கோம்.
உனக்கு இதெலாம் புரியுமானுத் தெரியல.. சாதனா உன்னை மன்னிச்சிட்டேனு சொல்லச் சொன்னா.. ஆனா நான் மன்னிக்கல..ஒருவேளை நீ உண்மையா திருந்திட்டினா ப்யூச்சர்ல மன்னிக்கிறேன்.. இனியாவது இங்க ஒழுங்கா சாப்பிடு " என்றான் இறுகிய குரலில்
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz