மொழி 23
பிரசாந்திற்கு நடப்பதெலாம் கனவெனத் தோன்றியது.. நீண்ட நாட்களுக்குப் பிறகு அனு சந்துருவுடன் சிரித்துப் பேசிக் கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அதை யாரும் கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். சந்துருவின் சிரித்த முகம் அவன் அனுவை மன்னித்து விட்டான் என்று கூறியது..
இன்று கம்பெனியில் முக்கியமான மீட்டிங் இருந்ததால் அதற்கு தயார் செய்து கொண்டிருந்தவனை அதிதியின் செருமல் சத்தம் நிஜஉலகத்திற்கு கொண்டு வந்தது..
அவள் கையில் கொண்டு வந்த லக்கேஜ் அவள் வீட்டை விட்டு செல்கிறாள் என்று தெளிவாக எடுத்துக் கூறியது.. அவள் கண்களில் இருக்கும் கண்ணீர்த் துளிகளை அவள் மறைக்க முயற்சித்தாலும் அவன் கண்டுகொண்டான்.
" அதிதி என்னாச்சு.. எதுக்கு இப்ப அழுகுற.. " என்று அவன் பதறியடித்துக் கொண்டு எழுந்து அவள் அருகே சென்று கேட்டான்.. " ஏ லூசு எனக்கு எதுமில்ல.. இன்னும் எத்தனை நாள் தான் இங்கேயே இருக்கறது.. நான் வந்த வேலையும் முடிஞ்சிருச்சுல. ஃபீல் பண்ணாத.. உங்க கல்யாணத்துக்கு நீ கூப்பிடினாலும் வந்து விடுவேன்.." என்று அதிதி சிரித்துக் கொண்டே சமாளித்தாலும் அவளது குரல் அதனை சோகமாகவே வெளிக்காட்டியது..
" இன்னும் கொஞ்ச நாள் " என அவனிழுக்கவும் " இல்லடா.. அப்பா அங்க தனியா கஷ்டப்படறாங்க.. போய் தான் ஆகனும்.. " என்றாள். " ஆனா ஏன் அழுகுற அதிதி .. யாராவது எதும் சொன்னாங்களா " என்ற அவனது கேள்விக்கு " ச்சீச்சி அப்படிலாம் எதுவுமில்லடா.. உன்னை..., இந்தக் குடும்பத்தை விட்டுப் போக ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. அவ்ளோ தான்.. சரி சரி .. ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு.. சும்மா இங்கேயே வெட்டியா இருக்காம சாதனாவ கரெக்ட் பண்ற வேலையையும் பாருடா .. டேக் கேர் " என்று கூறி விட்டுச் சென்றாள்.
இதற்கு மேல் இருந்தால் எப்படியும் வெடித்து அழுது விடுவோம் என அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள். அவள் சென்றது தனது பாதிபலம் இழந்ததைப் போல உணர்ந்தான்.
என்ன தான் அவனது குடும்பம் அவனிடம் சகஜமாகப் பழகினாலும் மீண்டும் எதாவது சந்தர்ப்பத்தில் தன் அன்பை மீண்டும் அவமானப்படுத்தி விடுவார்களோ எனப் பயந்தான். அதனால் சற்று தள்ளியே நின்றான்.அவனுக்கு உறுதுணையாக இருந்தது அதிதி மட்டுமே.. இப்போது அவளும் செல்கிறாள் என்றவுடன் வெறுமையை உணர்நதான்.
இங்கே அவர்கள் என்றால் அங்கோ சாதனா.. அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.. தன்னைப் பற்றி யாராவது தவறாகக் கூறியிருப்பார்களோ அதனால்தான் அவ்வாறு நடந்து கொள்கிறாளோ.. என்று தனக்குள்ளே எண்ணியவாரே வீட்டை விட்டு வெளியே வந்தான்.
சாதனா தோட்டத்தில் அமர்ந்து எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவள் அருகே தயங்கியவாரே சென்றான்.
வேண்டுமென்றே அவள் அருகே சென்று அமர்ந்தவன் அவளின் தோளின் மேல் கையைப்போட்டு செல்பி ஒன்றை எடுத்தான். அவள் தடுப்பாள் இல்லை சண்டைக்கு வருவாள் என எதிர்பார்த்தவனுக்கோ ஏமாற்றம்தான்.. கண்களில் கண்ணீர் தேங்க அமைதியாக எழுந்து சென்றாள்..
அவளது கண்ணீரைப் பார்த்ததும் மனம் தாங்காது அவளது வலது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு " உனக்கு என்னப் பிரச்சினை சாதனா.. நான் ஏதும் தப்பு பண்ணிட்டனா.. அப்படி எதாவது இருந்தால் சொல்லு.. அதைத் திருத்திக்க டிரைப் பண்றேன்.. இல்லை என்னைப் பிடிக்கலைனா சொல்லு, இந்தக் கல்யாணத்தை நிறுத்திட்டு இந்த ஊரை விட்டே போயிடறேன்.. ஏன் இப்படி உனையும் வருத்திட்டு எனையும் சாகடிக்கற.. என்னம்மா ஆச்சு " என்றான் வருத்தமாக..
அவனது கண்களை உற்றுப் பார்த்தவள் அதில் என்ன கண்டாளோ தெரியவில்லை..அவனது கையை மெதுவாக விளக்கிவிட்டு அவளது வீட்டிற்குள் சென்றாள்.. சென்ற வேகத்திலே கையில் சிறு காகிதத்துடன் வந்தாள்.. அதை வாங்கிப் படித்தவனது கோபம் மலையென உயர்ந்தது.. அந்தக் காகிதத்தை கசக்கிக் கீழே போட்டவன் " நீ என்ன செஞ்சாலும் நான் அமைதியா இருக்கேனு என்னை அடிமைனு நினைச்சியா.. உன் லிமிட் எதுனு தெரிஞ்சு நடந்துக்கோ.. இந்த மாதிரி இனி எதாவது வேலை செஞ்சேனு வெச்சுக்கோ நான் மனுசனா இருக்க மாட்டேன் " என்று கோபமாக சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டான்..
அவளிடம் பேசச் சென்றது தனது தவறுதான் எனத் தன்னையேத் திட்டிக் கொண்டவன் மின்னல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.. முக்கியமான மீட்டிங் என்பதையும் மறந்து தனது பாட்டிற்கு வண்டியைச் செலுத்தியவன் தனது பிஏவின் அழைப்பில் சுயநினைவை அடைந்தான்.. இயந்திரம் போல தனது வேலையைச் செய்தவனது மனதில் அவ்வப்போது சாதனாவின் நினைவு வந்தாலும் அவளது முட்டாள்த்தனத்தை எண்ணி இப்போது ஆத்திரமே வந்தது..
இரவு வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்தவனுக்காக வாசலிலேக் காத்திருந்தான் சந்துரு..
' இவன் வேற கூஜா தூக்கிட்டேப் பின்னாடி வந்திடுவான் ' என மனதில் கருமிக் கொண்டே " என்ன சந்துரு " என்றான்..
பிரசாந்தை முறைத்துப் பார்த்தவன் " சாதனா நாளைக்கு உங்களை வந்து பார்க்கச் சொன்னா " என்றான் மொட்டையாக..
பின்பு அவனே " அவ எப்பவும் தப்பான செயலை செய்ய மாட்டா..அதுனால கோபப் படறத கொறச்சிட்டு அவ சொன்னத மட்டும் செய்யுங்க.. மச்சான்.. அவ பீல் பண்ணா உங்களை சும்மா விடமாட்டேன் .. " என்று கூறிவிட்டு நகர்ந்தான்.
' அவ என்ன கேட்டானு தெரிஞ்சா நீ தான்டா அவள மொதல்ல அடிப்ப ' எனப் புலம்பியவன் , இன்று அவளது நோக்கம் புரிந்ததும்
என்ன ஆனாலும் தான் அவளுடன் வெளியே செல்லக் கூடாது என முடிவை எடுத்தான்.
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz