ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 22

Nivethamagathi

சந்துருவைத் தேடி வெளியே வந்த பிரசாந்த் அங்கே அவனது அனைத்து குடும்பத்தினரும் சந்துரு உட்பட சாதனாவின் வீட்டிற்குள் அமர்ந்திருப்பதைக் கண்டான். சந்துரு முகத்தில் எள்ளளவும் சிரிப்பில்லை..

" என்ன மாப்பிள்ளை சார்.. அதுக்குள்ள அவசரமா.. இங்க வந்து உக்காருங்க " என்று அதிதி அருகிலிருந்த நாற்காலியைக் காண்பிக்க வேறுவழியின்றி அருகில் அமர்ந்தான்.

" என்ன துணை மாப்பிள்ளை சத்ததையே காணோம்.. உங்க பிரண்ட் நிச்சயதார்த்துல இப்படி உர்ருனு இருந்தா என்ன பண்றதாம்.. " என்று அனு சந்துருவை வம்புக்கிழுக்க.. அவன் விட்டால் அவளை முறைத்தே கொன்றுவிடுவான் என்பது போல வெறுப்பாகப் பார்த்தான்.. அவள் அதை பார்த்ததும் ' ஹிக்கும். இதுக்கு மட்டும் குறைச்சலில்லை ' என்பது போல உதட்டைச் சுழித்தாள்..

அடுத்து அய்யர் வந்துவிட நிச்சயம் இனிதாக முடிந்தது.. சாதனாவும் சிரித்த முகமாகவே இருந்தாள்.. மோதிரம் போடும்போது மட்டும் அவனை எரிப்பது போலப் பார்த்து வைத்தாள்.. அவனுக்கு ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் மறுபுறம் அவளை எப்படியும் சமாதனப்படுத்தி விடலாம், இனி அவள் தன்னை விட்டு எங்கேயும் போக முடியாது, தனது காதல் விரைவில் நிறைவேறிவிடும் என மகிழ்ச்சியில் திரிந்தான்..

சாதனா அவனை முறைத்துப் பார்த்தாலும் அதை பெரிது படுத்தாமல் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே இருந்தான். இது அவளுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது..

சந்துருவிடம் அவன் பேசப் போகும் முன்பே " சாதனாவிற்கு உங்களை விட சரியான துணை கிடைக்காது.. அவளுக்கு இனி எந்த கெடுதலும் வராம பத்திரமா பார்த்துக்கோங்க.. " என்று  அவன் அருகே வந்து சொன்னான் சந்துரு.

உனக்கு இதுல சம்மதமா என்ற பிரசாந்தின் கேள்விக்கு சந்துரு விழுந்து விழுந்து சிரித்தான்.. " உங்க பேமிலில யாருக்கும் மண்டைல மசாலாவே கிடையாதா " என்று வயிற்றில் கைவைத்துக் கொண்டே சிரித்தான்..

பிரசாந்த் வழக்கம்போல முறைக்கவும் " பின்ன என்ன மச்சான்.. உங்க அம்மா என்னடானா நீங்க பீல் பண்றீங்க என்ற ஒரு காரணத்துனால உடனே உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சாங்க.. அதுக்கேட்டவுடனே உங்க அப்பாவும் ஒரே நைட்ல கல்யாணத்துக்கு நாளே குறிச்சிட்டாங்க.. நீங்க என்னடானா உங்க கல்யாணத்துக்கு எங்கிட்ட சம்மதம் கேட்கிறீங்க " என்றான்.. பின்பு எதையோ யோசித்தவனாக " ஓ இந்த லிஸ்ட்ல உங்க செல்லத் தங்கச்சிய விட்டுட்டனே.. மூளையில்லா முட்டாள் குரங்கோட ஜெராக்ஸ் காபிக்கூட இல்ல.. ஒரிஜினலே தான்..அவளையெலாம் லூசுனு சொன்னாக்கூட லூசு கூட கோபிச்சுக்கும் " என்று அவன் பெரிய உரையை ஆற்றி முடிக்க அதைக் கேட்க பொறுமையில்லாத பிரசாந்த் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தான்.. அவனுக்கு பதிலாக
கையில் பெரிய கட்டையோடு அனு கோபத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தாள்..

அவளை அந்த நிலையில் பார்த்ததும் ஒரு நிமிடம் வயிற்றில் புளியைக் கரைத்தாலும் சமாளித்துக் கொண்டு " வாங்க அத்தை " என்று அவளின் பின்புறம் கையசைத்தான்.

அவள் திரும்பிப் பார்க்கவும் தப்பித்தோம் பிழைத்தோம் என அந்த இடத்தை விட்டு நகர முயன்றான்.. ஆனால் அதற்குள் சுதாகரித்த அனு அவன் சட்டையை பின்னிருந்து இழுத்துப்பிடித்து "ஏன்டா நாயே ஏதோ நான் தப்பு பண்ணனால பொறுமையாப் போனா எனக்கு பைத்தியம்னு சொல்லுவியாடா.. பரதேசி.. உன் கை கால உடைச்சி வீல் சேர்ல உன்னை அலைய விட்டாத என்னோட அருமை உனக்குப் புரியும் " என்று அவனது கைகளிலும் கால்களிலும் அடிப்பது போல பாவனை செய்தாள்..

அவனோ அவள் அடிக்க மாட்டாள் தைரியத்தில் " இப்ப விடப் போறியா இல்லையா " என வேண்டுமென்றே கோபமாகக் கூற... அவனது திடீர் கோபத்தில் பயந்து கட்டையை அவன் காலில் போட்டுவிட்டாள்.. அவன் வலி தாங்காமல் அலற, அப்போது அந்தப் பக்கம் மல்லிகா வந்து சேர்ந்தார்

" அனு என் பையன என்ன பண்ணி வெச்ச, அவந்தான் உன்னை வெறுக்கிறான்ல.. ஏன் நைநைனு சும்மா பின்னாடியே சுத்தற.. சாதனா பிரசாந்த் கல்யாணத்தோட உனக்கும் எதாவது பையனப் பார்த்து கட்டி வெச்சிடனும்.. ச்சே சந்துரு நீ வாப்பா " என்று கோபமாக சொன்னதுடன் அவனின் கைப்பிடித்து இழுத்துச் சென்றார்.

தனது அத்தை அவளை இதுவரை கோபமாகப் பார்த்தது கூட இல்லை. ஆனால் இந்த திடீர்மாற்றம் புரியாமல் தவித்தாள். கண்களில் தானாக கண்ணீர் மடமடவென்று வந்துவிட அதைத் துடைக்கவும் மறந்து அப்படியே நடந்து சென்றாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சந்துரு தனது தாயின் கையை எடுத்து விட்டு விட்டு
அவள் பின்னே சென்றான்.

"ஏய் அனு நில்லு.. எதுக்கு இப்ப அழுகுற" என்று அவள் கையைப் பிடித்தான்.. அதை தட்டிவிட்டவள் " ஆமா நான் எதுக்கு அழனும்.. அத்தை உண்மைய தான சொன்னாங்க.அப்படி தான சந்துரு..  இனி உன் பின்னாடி சுத்தல போதுமா" என்றாள் அழுகையை மறைத்தபடி..

அவனும் விடாமல் " அப்படியே போட்டனு வெச்சுக்கோ.. எங்கம்மா திட்னா நீ போய்டுவியா.. உனக்குனு சொந்தமா மூளையில்லையா.. அப்படிலாம் உன்னை விட முடியாது.. இனி எங்கோட பேசாம மட்டும் இருந்து பாரு .. அப்ரோ இருக்கு உனக்கு " என்று கோபமாக கூறிவிட்டு நகர்ந்தான்..

அவன் சென்ற பிறகு தான் அவன் என்ன கூறுனான் என அவள் மண்டையில் உரைத்தது. அவள் மகிழ்ச்சியில் " சந்துரு இப்ப என்ன சொன்ன " என கத்திக் கொண்டே அவன் பின் ஓட, அங்கே மறைந்திருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த மல்லிகாவும் சாதனாவும் ஹைபை போட்டுக் கொண்டனர்..

ஆனால் அடுத்த நாள்..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz