ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 21

Nivethamagathi

இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரசாந்தின் தாயார் லட்சுமி கோவமாக வெளியே வந்தார்.

" பிரசாந்த் நீ காரணம் இல்லைனாலும் ஒரு வகைல அவ பேச்சு இழக்க உன் காதல் தான் காரணமா இருந்திருக்கு. மறுபடியும் எதாவது பிரச்சனை நடந்துச்சுனா கமலா முகத்துல நம்பனால முழிக்க முடியாதுடா" என்றார் கோபமாக
 
தனது குடும்பத்தில் தன் உணர்வுக்கு எப்போதும் மரியாதை இருக்காது  என்ற எண்ணத்தால்
" அம்மா அவ நல்லதுக்கு தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்.. ஆனா என்னைக்கு நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணிருக்கிங்க. எல்லாரும் இருந்தும் அநாதையா நான் இருக்கேன்மா.. ப்ளீஸ் இது என்னோட வாழ்க்கை இதுல தலையிடாதிங்க " என்றான் தன் தாய் முன்னே கடிந்து பேச முடியாத இயலாமையோடு

லட்சுமி அவனை சமாதனப்படுத்த வரவும் அதைத் தடுத்த அதிதி " ஆன்ட்டி விடுங்க, அவன் ஒன்னும் தப்பான எண்ணத்துல விரும்பலையே, கல்யாணம் பண்ணிக்கறேனு தான சொல்றான்.. இப்ப உங்களுக்கு ஒருவேளை அவ ஏழைங்கறது தா பிரச்சனையா இல்ல ஊமைனு யோசிக்கிறீங்களா " என அவள் கேட்கவும் அவர் ஒரு நிமிடம் விக்கித்துப் போனார்.

" அதிதி என்ன பேசிட்டு இருக்க.. " என பிரசாந்த் அவளை அதட்டவும் அதற்குள் அந்த இடத்தை விட்டு அகன்றார் லட்சுமி..

அடுத்த நாள் காலையில் பிரசாந்த் அவசரமாக ஆபிஸிற்கு கிளம்பி  கீழே வரும்போது வீட்டிலுள்ள அனைவரும் உற்சாகத்துடன் பண்டிகைக்குத் தயாராகிக் கொண்டிருப்பது போல மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அவன் வந்ததைக் கண்ட அதிதியும் அனுவும் அவன் இரு கைகளையும் ஆளுக்கொன்றாய் பிடித்துக் கொண்டு பூஜை அறைக்கு அழைத்துச் சென்றனர். வேதவள்ளி அவனுக்கு குங்குமம் வைத்துவிட்ட பின்பு " எல்லாரும் கிளம்பலாமா " என்றார்..

அனைவரும் எழுந்து வெளியே வந்தனர். " அனு இங்க என்ன நடக்குதுனு சொல்றியா " என்றான் எரிச்சலுடன்.

" எல்லாம் நல்லவிசயம் தான் பேசாம வா" என அதிதி மிரட்ட தன் கோபத்தை அவளிடம் காட்டி அவள் கையை உதறிவிட்டான்.. " இவன் திருந்த மாட்டான் அனு.. இவன் திருந்தவே மாட்டான்.. போயும் போயும் உனக்கு அப்பேர்ப்பட்ட பொண்ணா.. வா நாம அவளுக்கு வேற ஒரு நல்ல பையனா பார்க்கலாம் " என அதிதி சப்புக் கொட்ட..

" என்ன உலரறிங்க.. " என அவன் கத்தவும் , அவன் அருகே வந்த விசு " தம்பி இன்னைக்கு உனக்கும் சாதனாக்கும் நிச்சயம்.. அதுக்குதான் நாம இப்ப போறோம் . சந்தோசமா " என்றார்.

அவனுக்கு ஒரு நிமிடம் தன் காதில் விழுந்தது உண்மைதானா என சந்தேகத்தில் ஆழ்ந்தான்.
" என்ன மாப்பிள்ளை சார் பகல்லயே டிரிம்சா " என அதிதி கிண்டல் பண்ண சுயநினைவுக்கு வந்தவன்,
" யாரக் கேட்டு இதை முடிவு பண்ணிங்க..உங்களுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு.. கல்யாணத்துக்கு அதுக்குள்ள என்ன அவசரம். அவ இன்னும் படிக்கனும்.. அவ கனவை நிறைவாக்கனும்.  அதை எல்லாத்த விட அவளுக்கு  என்னை இப்ப  சுத்தமா பிடிக்காது.. விருப்பம் இல்லாத ஒரு பொண்ணை என்னால கல்யாணம் பண்ண முடியாது " எனக் கத்தினான்..

வேதவள்ளியார் " சாதனாக்கு உன்னை பிடிக்காதுனு யார் சொன்னா.. அவ இதுக்கு சம்மதிச்சிட்டாப்பா " என்றார்.  இதை நம்ப அவன் மனம் ஒத்துக்கொள்ளவில்லை..

" அதுமட்டுமில்லாம கல்யாணம் இப்ப இல்ல.. ஆறு மாசத்துக்கு பிறகு தான்..
நேத்து லட்சுமி வந்து எங்ககிட்ட பேசுனப்பவே ஜாதகத்த பார்த்தேன்.. உனக்கு இந்த வருடம் கல்யாணம் நடக்கலினா அடுத்து ஆறு வருசம் கழிச்சு தான் நடக்குமா.. அதான் இன்னைக்கு நாள் நல்லா இருக்குனு நிச்சயத்த வெச்சுக்க ஜோசியர் சொல்லிட்டாரு.. " என்றார் விசு

அவனால் இதைக் கேட்டு மகிழ்ச்சியடைய முடியவில்லை. நேற்றுதான் சவால் விட்டு வந்தோம். இன்று நிச்சயம் என்றால் தான் சவாலில் ஜெயிப்பதற்காகத் தான் இவ்வாறு நடந்து கொள்கிறேன் என்று எண்ணி விடுவாளோ என வருந்தினான்.. உண்மையில் அவள் திருமணத்திற்கு சம்மதித்திற்குக் காரணம்தான் என்ன ? என யோசிக்கலானான்..
யாரிடமும் எதுவும் சொல்லாமல் நேராக சாதனாவின் வீட்டிற்குச் சென்றான்.

அங்கே சாதனாவிற்கு கமலா அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அவள் கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது.. அது இப்பவோ அப்பவோ கீழே விழுந்து விடும் என்ற நிலையில் இருந்தது..

கமலா அவனைப் பார்த்தவுடன் புன்னகைக்க " ஆன்ட்டி உங்க பொண்ணுக்கிட்ட தனியா பேசனும் " என்றான்.. அவரும் சாதனவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்றார்.

அவனைப் பார்த்ததும் அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவளைப் பார்த்ததும் நேற்று அவள் அறைந்தது அவனுக்கு நினைவு வந்தது.
" சாதனா என்ன நடந்துச்சு. எங்க வீட்ல கட்டாயப்படுத்துனாங்களா.. இல்ல உங்க அம்மா எதாவது சொன்னாங்களா.. எது இருந்தாலும் தயங்காம சொல்லு..நான் இதை நிறுத்துறேன்.. " என்று அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான்..

அவள் அதற்கு ஒன்றுமே பதிலளிக்கவில்லை.. அவன் பலமுறைக் கேட்டும் அவள் அமைதியாகவே இருந்தது அவனது கோபத்தை அதிகப்படுத்தியது..
அவளது இரு தோள்களையும் அழுத்தமாகத் தன் கைகளால் பிடித்து உலுக்கியவாரே " உன் மனசுல என்னடி நினைச்சிட்டு இருக்க .. வாயைத்  தொறந்து சொன்னா முத்தா கொட்டிடும் " என்று கோபமாகக் கூறினான். அவன் வாயைத் திறந்து பேசு என்று கேட்டதும் அவள் கண்களிலிருந்து இவ்வளவு நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த அந்தக் கண்ணீர் கீழே வடிந்தது..
அவன் கண்ணீரைக் கண்ட பின்பு தன்னிலை அறிந்தவன் " அய்யோ சாரி சாதனா.. நான் அந்த அர்த்தத்துல சொல்ல வர்ல.. நீ  பதில் சொல்லாததால அப்படி பேசிட்டேன் " என தன் தவற்றை நியாயப்படுத்தப் பார்த்தான்.

ஆனால் அவள்  அவனைக் கவனியாது கமலா பாதியில் விட்டுச்சென்ற தன் கூந்தலை பின்ன ஆரம்பித்தாள்.அவளது முகம் இதுவரை அவன் பார்த்திடாத எதோ ஒரு முகபாவனையைத் தந்தது.. அது என்னவென்று அவனுக்கு சரியாகப் புலப்படவில்லை..
அவளின் இந்த திடீர் மாற்றம் எதனால் என்றும் அவனுக்கு புரியவில்லை. அப்போது தான் வீட்டிலும் சரி இங்கேயும் சரி சந்துரு இல்லாதது குழப்பத்தைத் தந்தது.. இப்போதைக்கு சந்துரு மட்டுமே அவனுக்கு உதவ முடியும் என அவனைத் தேட ஆரம்பித்தான்.

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz