மொழி 20
அதிதி உங்க அப்பா லைன்ல என்று பிரசாந்த் அதிதியிடம் போனைக் கொடுத்தான்.. அது பொய்யென எண்ணி அலட்சியமாக வாங்கியவள் அது உண்மையாக இருக்க பயந்து கொண்டே பேசினாள்.. அவள் பேசும்போதே அவளைக் கைப்பிடித்து அவளை தனது அறைக்கு இழுத்துச் சென்றான்.. ( அதிதியின் தந்தை மிகவும் கண்டிப்பாவர்.. அதும் கைப்பேசி அழைப்பை ஏற்க சிறிது தாமதமானாலும் தன் பிள்ளைக்கு எதாவது ஆபத்து என்றெண்ணிக் கொள்வார். அதனால் பயந்த அதிதி அமைதியாக அவனுடன் சென்றாள்..)
போனை வைத்த அதிதி அவனது முறைப்பைக் கண்டு உண்மையில் அதிர்ந்து போனாள்.. வேறுவழியின்றி அவனிடம் சாதனாவுடனான நட்பைப் பற்றிக் கூறினாள்.. சாதனா தான் பேசினால் மனமாறலாம் என்றும் கூறினாள்.. ஆனால் அதை அவன் விரும்பவில்லை.
தனது காதலை தானே முயன்று அடைய வேண்டும் என எண்ணினான்..
தன் நிலையை தனது குடும்பத்தாரே எண்ணி வருந்தாத போது அவள் அதிதியை வரவழைத்து தனது சோகத்தைத் தீர்க்க துணிந்தவளுக்கு தன் மீது கண்டிப்பாக அன்பும் காதலும் உண்டு என நினைத்தான்.
சாதனாவிடமே நேராக பேசலாம் என எண்ணி அவளது வீட்டிற்குச் சென்றான்.. அவனைப் பார்த்த யாரும் காதலைச் சொல்ல சென்றவன் என என்ன மாட்டார்கள்.. ஏதோ சண்டைக்குத் தான் செல்கிறான் என எண்ணும் அளவுக்கு இருந்தது அவனது நடவடிக்கை..
" சாதனா சாதனா " என்று வாசலிலே நின்று கொண்டு உரக்கக் கத்தினான்..அவன் எதற்கு அவ்வாறு கத்துகிறான் என அவனுக்கும் தெரியவில்லை.
அவள் கதவினைத் திறந்து என்ன என்பது போல பார்க்கவும் " வீட்டுக்கு வந்தவங்கள உள்ள வரச் சொல்ல மாட்டீங்களா " என்றான்..
அவளும் முறைத்துக் கொண்டே உள்ளே செல்ல வழி விட்டாள்.. வீட்டிற்குள் சென்று அறையைச் சுற்றிப் பார்த்தவன் " குடிக்க தண்ணீர் கூட கேட்டாதா தருவீங்களா மிஸ்.சாதனா " என்று அதிகாரமாகக் கேட்டான்.. அவன் செய்வது அவனுக்கே கொஞ்சம் ஓவராகத் தான் தெரிந்தது.. ஆனாலும் பொறுமையாகப் பேசினால் தான் அம்மணி வெளியே துரத்தி விடுவாளே.. அதனால் வேண்டுமென்றே கோபமாகப் பேசினான்..
சாதனா மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.. அவளைப் பார்த்துக் கொண்டே ஒரே மடக்கில் குடித்தவன் தம்ளரை அவள் கைகளைப் பிடித்து " மோருக்கு நன்றி " என்றுக் கூறி திணித்தான்.. அவள் முறைத்துக் கொண்டு தான் இருக்கிறாள் எனத் தெரிந்தும் அதைக் காணாமல் இருப்பது போல் நடித்தான்..
சாதனா கோபமாக அந்த டம்ளரை உள்ளே சென்று வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே செல்லத் தயாரானாள்.. அதற்குள் அவள் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்தியவன் " உங்கிட்ட பேசனும் சாதனா " என்றான்..
அவள் அலட்சியமாகத் தலையைத் திருப்பவும் " சாதனா நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பல.. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்.. உனக்கு இதுல சம்மதமா " என்றான்..
சில விநாடிகள் அவன் விழிகளில் எதையோ தேடியவள் இல்லை என தலையை ஆட்டினாள்..
" நீ பொய் பேச மாட்டேனு எனக்குத் தெரியும்.. அப்ரோ ஏன் இப்ப மட்டும் உன் மனசில இருக்கிறத மறைக்கிற..உன் விருப்பம் இல்லாம நம்மக் கல்யாணம் நடக்காது.. ஆனால்
அது இன்னும் ஆறு மாசத்துல நடந்துரும் " என்றான்.. இவன் முடிவாக என்ன சொல்ல வருகிறான் எப்படியாயினும் கல்யாணம் நடந்தே தீரும் என்றல்லவா மிரட்டுகிறான்..
இவன் சொல்வதெற்கெலாம் தலையாட்ட வேண்டுமா.. எங்களுக்கும் சுயவெறுப்பு விருப்பம் என்று இருக்கக் கூடாதா.. கோபத்தில் கொந்தளித்தாள்..
" சீக்கிரம் உன் முடிவ சொல்லு சாதனா .. நாம ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் சந்தோசமா இருப்போம்.. உன் சம்மதத்துல தான் என்னோட உன் அம்மாவோட நம்ம சுத்தியிருக்கவுங்க சந்தோசமும் அடங்கியிருக்கு.. நான் உன்னைக் கட்டாயப்படுத்தல.. ஆனால் எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடு.. நான் செஞ்சத் தப்ப திருத்திக்கிறேன்.. " என்று அவள் இரு கையையும் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு பொறுமையாகச் சொல்லி முடித்தான்..
அதுவரைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் கைகளைத் தட்டிவிட்டு கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.. அவன் அதிர்ச்சியாக பார்க்கவும் , தனது ஆட்காட்டி விரலை ஜாக்கிரதை என்பது போல அவன் முன் காட்டினாள்.. இதுவரை பொறுமையாக இருந்தவன் கோபம் தலைக்கேற அவளை ஓங்கி அடிக்க கையை உயர்த்தியவன் பின்பு அதை செய்யாமல் தன் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.
" நானா உன்கிட்ட வந்து கெஞ்சறனால தான நீ இவ்ளோ திமிரா நடந்துக்கிற.. உன்னை எப்படிக் கல்யாணம் பண்றனு மட்டும் பாரு " என்று அவள் முன் சவாலாகப் பேசினான்.. பின்னால் அவன் வாழ்க்கையே இந்த சவாலால் தான் தலைகீழாக மாறப் போகிறது எனத் தெரிந்திருந்தால் அவன் அவ்வாறு கூறியிருக்க மாட்டான்..
மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்கமாக அதிதி நடந்துகொண்டிருந்தாள்.. பிரசாந்த் எதுவும் நடக்காதது போல கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தான்..
" பன்றதெலாம் பண்ணிட்டு எப்படி ஒன்னும் தெரியாத அப்பாவி மாறி முகத்தை வெச்சிருக்க.. நான் தான் போய் பேசறேனு சொன்னேன்ல.. அதுக்குள்ள உன்னை எவன்டா போய் சவால் விடச் சொன்னது.. " எனக் கேவலமாகத திட்டித் தீர்த்தாள்..
" நான் என்ன பண்றது அதிதி அவ முன்னாடி நின்னா என்ன பேசறதுனே தெரிய மாட்டிங்குது.. அதான் எதோ உலறிட்டேன் " என்றான் அப்பாவியாக
" வாயத் தொறந்தா கொன்றுவேன்.. சாதனாக்கு பதிலா நீ ஊமையா இருந்திருந்தாக்கூட உன் லவ் ஓகே ஆகியிருக்கும்.. உன்னை " என்று அவள் கழுத்த நெறிக்கப் போகவும்
அவள் கைகளைத் தட்டிவிட்டு " இப்ப நான் என்னப் பண்ணட்டும்டி " என்று சலிப்பாகக் கேட்கவும் சிறிது நேரம் யோசித்தவள் " உன் சைடு ரொம்ப வீக்கா இருக்கு.. மொதல்ல குரூப் பார்ம் பண்ணுவோம்..அப்ரோ களத்துல இறங்குவோம்.. டீலா " என்று கை நீட்டினாள்.. அவனும் டீல் என்றுகூறிச் சிரித்தான்..
இவர்கள் உரையாடலை இரு செவிகள் கோபத்துடன் கேட்டுக் கொண்டிருந்தது..
சாதனா கோபத்தின் உச்சியில் இருந்தாள்..அவன் உருக்கமாக தன் காதலைச் சொல்லி இருந்தால் இந்நேரம் அவள் மனமாறி அவன் காதலை ஏற்றுக் கொண்டிருப்பாளோ என்னவோ... அவன் திமிராக பேசியது அவளது வரட்டு பிடிவாதத்தை இன்னும் பலப்படுத்தியது..
சவால் என்றால் அவளுக்கும் பிடிக்கும் தான்.. அதுவும் இது அவள் தன்மானம் சம்மந்தப்பட்ட சவால் .. இதில் வென்றே ஆகவேண்டும் என்று உறுதியேற்றாள்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz