மொழி 17
பிரசாந்த் உள்ளே சென்றான்.. அங்கே மொத்த குடும்பமும் அவனைப் பார்த்து அருகில் வந்தது.. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் வீட்டின் வேலையாளை அழைத்து அதிதி தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சொன்னான்.
விசு " பிரசாந்த் " என்று அழைக்க அவன் திரும்பிப் பார்த்தான்.. அந்தப் பார்வையில் அவர்கள் மீது அவன் கொண்ட வருத்தம் தெரிந்தது
வேதவள்ளியார் ஆதரவாக அவன் அருகில் வந்து நிற்க, அவரிடம் " இங்கப் பாருங்க பாட்டிம்மா.. நான் யாரையும் குறை சொல்லல.. கோபமும் படல.. ஆனால் என்னை நீங்க எப்பவும் புரிஞ்சிக்க மாட்டீங்கிறீங்கனு வருத்தம் தான்.. அதுவும் நிரந்தரம் இல்ல.. என் மேல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு .. இதை பெரிசு பண்ணாதீங்க " என்று புன்னகையுடன் கூறினான்..
மேலும் " அதிதி இங்க வந்து கொஞ்ச நாளுக்கு இருப்பா.. அவள பத்திரமா பார்த்துக்கோங்க.. " என்று கூறி படியேறினான்.. விசு பேச வருவதை உணர்ந்தும் லாவகமாக பேச்சை மாற்றி விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்..
பால்கனியில் நின்று பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்தான் சந்துரு.. அவனது முதுகுக்குப் பின் நின்றுகொண்டு வளையலாலும் கொலுசினாலும் அவனது கவனத்தைப் பெறுவதற்காக ஒலியெழுப்பிக் கொண்டிருந்தாள்.. அவன் ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது அனுவிற்கு தெரியவில்லை .இவன் வேண்டுமென்றே தன்னைத் தவிக்க விடுகிறான் என்று உள்ளுக்குள்ளே கருவிக் கொண்டே அவனது தோளைத் தொட்டாள்.. அவன் அவளது கையை வேகமாகத் தட்டிவிடவும் பால்கனியில் வைத்திருந்த ரோஜாச் செடியில் பட்டது.. காயம் பெரிது இல்லையென்றாலும் முள்பட்டு இரத்தம் வரத் துவங்கியது.. அனுவிற்கு அவன் பேசாமல் இருப்பதை விட இதுஒன்றும் பெரிய வலியைத் தரவில்லை.. அதனால் கத்தவும் இல்லை..
" சந்துரு என்னை மன்னிக்கவே மாட்டியா.. உன் சந்தோசத்துக்காக நான் எடுக்குற எல்லா முடிவும் தப்பா போகுது .. நான் என்னடா பண்ண முடியும்.. நான் லூசுன்னு உனக்கு முன்னவே தெரியும் தானா.. அப்ரோ ஏன்டா கோவிச்சுக்குற.. " என்று தலையைக் குனிந்து கொண்டே வருத்தமும் இல்லாமல் அதே சமயம் மகிழ்ச்சியும் இல்லாமல் கூறினாள்..
அவளது அப்பாவியான முகபாவத்தை பார்க்க பாவமாக இருந்தாலும் வேறு ஒருவனை மணக்க சம்மதித்ததை இன்னும் மன்னிக்க முடியவில்லை.
அப்போது தான் அவளது கையிலிருந்து வடிந்து கொண்டிருந்த இரத்தத்தைப் பார்த்தான்.
அவனால் தான் ஆனது என அவன் அறிந்திருக்கவில்லை
"ஏன்டி உனக்கு அறிவே இல்லையா.. உன் மூளைய மியூசியத்துல வெச்சிட்டியா.. எவ்ளோ ரத்தம் " என்றவாறு அவளது கையைப் பிடித்தான்..
" என்னை முதல்ல மன்னிச்சிட்டேனு சொல்லு.. " என்று அவளது கையை இழுத்துக் கொண்டாள்.. அவனது கோபம் தலைக்கு ஏறினாலும் " மன்னிச்சிட்டேன் .. வா உள்ள போலாம் " என்று அவளை இழுத்தான்.
நிஜமாவா சந்துரு.. இனி எங்கிட்ட எப்பவும் போல பேசுவியா.. 😕😳
பேசறேன்.. வா அனு..
எப்பவும் போல என் பக்கத்துல உக்காந்து ஒண்ணா சாப்டுவியா..😲😕
ம்ம் சாப்பிடறேன்..
எவ்ரி சன்டே ஷாப்பிங் கூட்டிப் போவியா😕
போறேன்.. என் பொறுமைய சோதிக்காத வந்துரு..அனு..😠😠
டெய்லியும் லவ் யூ சொல்வியா 😒😂
அவன் திருப்பி சொல்லுவான் என்று எதிர்பார்த்து அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்..
அவன் முறைத்துப் பார்க்கவும்.. " கை ரொம்ப வலிக்குது.. நான் ஆசயா வெச்ச என் ரோஜாச் செடியே என்னை பழி வாங்கிருச்சு.. " என்று கண்ணைத் தேய்த்தாள்..
அவன் தன்னையே நொந்துகொண்டு அவளை விடாப்பிடியாக இழுத்துச் சென்று காயத்திற்கு சிகிச்சையளிக்க ஆரம்பித்தான்.
அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் " இப்படி நீ என் கூடயே இருப்பனா நான் எவ்ளோ வலிய வேணா தாங்கிக்குவேன்டா " என்றாள் உணர்ச்சி ததும்பும் குரலில்
அவன் தனது பணியை செவ்வனே முடித்துவிட்டு " மாமாக்கிட்ட சொல்லி உன்னோட டிவி கனெக்சன கட் பண்ணனும்.. சினிமாவா பார்த்து கெட்டுப் போயி ஒரே டயலாக்க அடிச்சிட்டு இருக்க.. " என்று கூறி வாயில் பேண்டெய்டை ஒட்டிவிட்டுச் சென்றான்..
கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள் சாதனா.. " சாதனா என்னாச்சு ஏன் இப்படி இருக்க " என்று ஆதரவாக அவளது தலையை தடவினார் கமலா..
எதுவுமில்லை என்று என்று தலையை ஆட்டியவள், தனது தாயின் மடியில் தலை வைத்தாள்.. கல்லூரியல் நடத்தும் பாடத்தைக் கூட விடாமல் ஒப்பிப்பவள் இன்று அமைதியாக இருப்பது தாங்க முடியவில்லை என்றாலும் நிதர்சனத்தை உணர்ந்து அவளை இந்த துயரிலிருந்து வெளிக் கொணர முயற்சி செய்தார் .
சாதனாவும் சளைத்தவள் இல்லையே.. தனது தாயை சரிசெய்ய கரும்பலகையில் எழுதுவது மௌன மொழியை கற்பிப்பது என அவரை தொந்தரவு செய்து கொண்டே இருப்பாள்..
அவள் மடியில் படுத்தவாரே தூங்கிப் போனாள்.. வாசலில் யாரோ அழைப்பது போன்று தோன்ற வெளியே சென்று பார்த்தார் கமலா..
அங்கே கையில் பூச்செண்டுடன் பிரசாந்த் நின்று கொண்டிருந்தான்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz