ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 16

Nivethamagathi

சாதனாவிற்கு நடந்த விபத்து முதல் தற்போது நடந்த அனுவின் பெண்பார்க்கும் படலம் வரையிலும் அனைத்தையும் கூறி முடித்தவன்
" எனக்கு எங்க வீட்டுக்குப் போகவே பிடிக்கல அதிதி.. பேசாம மும்பை பிரான்ச்சுக்கு போகலாம்னு நினைக்கிறேன்.. ஆனா சாதனாவ விட்டு போகவும் முடியல.. அப்டியே பைத்தியம் பிடிக்கற மாறி இருக்கு " என்றான் சோகமாக பிரசாந்த் ..

அவனின் சோகம் புரிந்து " சாதனாகிட்ட நான் பேசறேன்டா.. நீ அவள எவ்ளோ விரும்புறனு நான் புரிய வைக்கிறேன் " என்று கூறி அவனது தோளில் கை வைத்தாள்..

அவளுக்கு புன்னகையை பரிசளித்தவன் " என்னோட அம்மா அப்பாவே என்ன புரிஞ்சிக்கல.. சாதனா மட்டும் புரிஞ்சிக்கப் போறாளா.. "

" ஐடியா.. நான் உங்க வீட்டுக்கு வரேன்.. எப்படியாவது என்னை அங்க ஒரு வாரம் தங்க வெச்சிரு.. அப்ரோ இந்த அதிதியோட திறமைய பாரு.. " அவன் முறைக்கவும் " பிளீஷ் ப்ளீஸ் என் செல்லம்ல " என்று அவன் தாடையைப் பிடித்துக் கெஞ்சினாள்..

" இப்ப தான என் நிலைமைய சொன்ன .. பைத்தியம் " என்று அவன் கோபமாக அதட்டவும்
" இப்படி முகத்த வெச்சா எந்தப் பொண்ணுக்கு தான் பிடிக்கும்.. நீங்க பெரிய இவங்க.. நீங்க சொன்னவுடனே
அவ வந்து ஒத்துக்கனுமா. கொஞ்சமாச்சு ஹார்ட் வொர்க் பண்ணனும் Mr.சிடுமூஞ்சி" என்று அவள் கூறவும் சிரித்துவிட்டான்..

" ரொம்ப தேங்க்ஸ் அதிதி "

தேங்க்ஸ நீயே வெச்சுக்கோ.. ஒருவேளை சாதனா ஓகே சொல்லிட்டா நீ எனக்கு என்ன பண்ணுவ

என்ன வேணும் உனக்கு

நான் வேற எதுவும் எதிர் பார்க்க மாட்டேன்பா.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ.. அது மட்டும் போதும் என்றாள் அசால்டாக..

உன்னை என்று அவன் அடிக்க கையோங்கவும் " போடா... உனக்கு சாதனாவே ஓவர்.. இதுல நான் வேறயா.. வெவ்வவெவ்வ " என்று பழிப்புக் காட்டி விட்டு கார் கதவினைத் திறந்து கொண்டு வெளியே ஓடினாள்..

அவளைப் பிடிக்க அவனும் இறங்க, " டேய் வேணாம்.. அப்ரோ உன்னைக் கட்டிக்க மாட்டேன் " என்று அவனைப் பார்தத்தவாரே பின்னோக்கி நடந்தாள்..

" லூசு நீயா வந்துட்டா சின்ன பனிஸ்மென்ட் தான் " என்று அவளிடம் நெருங்க. அவள் பின்னோக்கி நகர்ந்து கொண்டே சென்று யாரையோ இடித்து கீழே விழுந்து விட்டாள்..

அவளே சுதாரித்து எழுந்துவிட்டு " ஏம்மா உனக்கு கண்ணு தெரியல.. வாய்ல என்னை கொழுக்கட்டையா வெச்சிருக்க " என்று கத்த ஆரம்பித்தாள்.. " பிரசாந்த் இங்க வந்து என்னனு கேளு " என்று அவனை துணைக்கு அழைக்க

அவளைத் திட்டிக் கொண்டே வந்தவன் எதிரில் இருந்த ஆளைக் கண்டு உறைந்து நின்றான்.. அவன் எதிரே நிற்பது சாற்சாத் சாதனாவே.. அவள் முகத்திலே வழக்கம் போல எந்தவொரு உணர்ச்சியும் தெரியவில்லை..

சாதனா பிரசாந்தைப் பார்ப்பதை கண்ட அதிதி " ஹோய் என்னம்மா.. முன்னப்பின்ன பசங்களையே பார்த்தில்லையா.. போமா. "என்று அதட்டினாள்..

பிரசாந்த் அதிர்ச்சியால் உறைந்திருக்க சாதனா அவனிடம் ஒற்றைப் பார்வையை வீசிவிட்டு கடந்து சென்றாள்..

அவள் சென்ற பிறகு " மச்சி நீயொன்னும் பீல் பண்ணாத.. பொண்ணு கொஞ்சம் நல்லார்ந்தால.. அதான் கொஞ்சம் சேப்டிக்காக தி்ட்டிடேன்.. சாதனாவையே என்னால சமாளிக்க முடியல இதுல இவ வேறயா.. நீ வொர்ரி பண்ணாத " என்றாள் அவன் தோளின் மேல் கை போட்டபடி..

சாதனா ஒருதரம் திரும்பிப் பார்க்க அதிதியை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றான்..

அவன் தள்ளி நின்றாலும் அதிதி வேண்டும் என்றே உரசி நின்றாள்..

அதிதி.. இப்ப என்ன உனக்கு பிரச்சனை

அவ தான் பிரச்சனை.. " போற போக்கில் ஒரு லுக்க விட்டுத்தான் உன்னை செஞ்சுட்டாளே.. உன்னை செஞ்சுட்டாளே " என்று பாடிவிட்டு பாத்தியா உன் ஆள நான் எப்படி கண்டுபிடிச்சனு.. அதான் கொஞ்சம் வெறுப்பேத்தி பார்த்தேன்.. பட் நோ ரெஸ்பான்ஸ்.. உன் பாடு திண்டாட்டம் தான்...

அவதானு எப்படி கண்டுபிடிச்ச

சோ ஈசி .. அதான் இந்த சிடுமூஞ்சிக்கு ஏத்த சிடுமூஞ்சியா இருக்காளே அப்படித்தான்.. என்று கூறி சிரிக்க ஆரம்பித்தாள்..

அதிதி..😠😠

இஇஇ.. அதான் தெரியுதே.. நீ அவளப் பார்த்த உடனே ஷாக்கடிச்ச காக்கா மாறி விரைச்சிக்கிட்டு நின்னத.. அதான் சாக்க குறைக்க கோபத்த ஏத்துனேன்..

அதிதி..😠

டேய் சும்மா.. என் பேரையே ஏலம் விடாத.. வாவா வீட்ல போய் அங்க என்ன ரியாக்சனு பார்க்கலாம்.. கமான் மச்சி..

அவனும் அவள் பண்ணிய கலாட்டாவில் தன் கவலையை மறந்து சிரித்துக் கொண்டே வண்டியில் ஏறினான்..

அதிதி..
நண்பர்கள் அதிகம் இல்லாத பிரசாந்தின் மிக முக்கிய தோழி.. அவனைப் பற்றி முழுதும் தெரிந்தவள்.. கொஞ்சம் வாய் அதிகம்.. அதனாலே அவனிடம் அடிக்கடி வாங்கிக் கட்டிக் கொள்வாள்.. ஒருமுறை பிரசாந்திடம் தனது காதலைத் தெரிவிக்க, அவன் சாதனாவை விரும்புவதாக கூறவும் அத்துடன் அப்பேச்சை விட்டுவிட்டாள்..

அவனது தொடர் வெளியூர் பயணத்தைப் பற்றி அறிந்ததும் எதுவோ ஒன்று சரியில்லை என்பதை அறிந்து அவனுக்காக டெல்லியை விட்டு வந்திருக்கிறாள்...

பிரசாந்தின் கார் வீட்டிற்குள் நுழைந்ததும், அனு அவனைக் கட்டிக் கொண்டு மன்னிப்புக் கேட்டாள்.. அவன் கோபம் குறையவில்லை என்றாலும் அனுவினை மீண்டும் வருத்த மனமில்லாமல் மன்னித்துவிட்டான்..

அவளது உதட்டில் இருந்த காயத்தினைப் பார்த்து என்னவென்று கேட்டான்.. அவள் திருதிருவென்று முழிக்கவும், " நான் தான் அடிச்சேன்.. இப்ப என்ன அதுக்கு " என்று சந்துரு திமிராக சொல்ல

அனு எங்கு இவர்களுக்குள் சண்டை வந்துவிடமோ என்று பயப்பட, " சூப்பர் " என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் பிரசாந்த்..

அனு இதைக் கேட்டு கோபம் அடைய , சந்துரு ஏளனமாக அவளைப் பார்த்து சிரித்துவிட்டுச் சென்றான்..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz