ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 18

Nivethamagathi

கமலா அவனைப் பார்த்ததும் சற்று முகம் சுழிக்க, இவனது முகமும் சோகத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

" என்ன வேணும் தம்பி "

" ஆன்ட்டி சாதனா " என்று அவன் தயங்கவும் " அவ இப்பதான் நிம்மதியா இருக்கா.. இதக் கெடுத்துடாத " என்றார் முகத்தில் அடித்தபடி..

" நீங்க என்மேல கோபமா இருக்கறது எனக்கு புரியுதுங்க ஆன்ட்டி.. ஆனா என் நிலைமையும் புரிஞ்சிக்க டிரை பண்ணுங்க.. சாதனாவ நான் என் மனைவியாத் தான் எல்லாருக்கும் தெரியப் படுத்தனும்னு நினைச்சேன்.. காதலியா இல்ல.. மத்தவங்க மாறி எனக்கும் பின்னாடியே போய் காதல் சொல்லி தொல்லை பண்றதுல்ல விருப்பம் இல்ல.. அவ படிப்பு முடிஞ்ச பிறகு தான் இதைப் பத்தி உங்ககிட்ட பேசனும்னு நினைச்சிருந்தேன்.. ஆனா அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு.. இன்னும் எவ்ளோ வருசம் ஆனாலும் நான் சாதனாக்காக காத்துட்டிருப்பேன்.. அதுக்கு உங்க சம்மதம் வேணும்..

நான் சிடுமூஞ்சி தான்.. அதிகமா சிரிச்சுப் பேச தெரியாதுதான்..ஆனால் சாதனாக்காக எல்லாத்தையும் நான் மாத்திப்பேன்.. இதுல உங்களுக்கு சம்மதம்னு சொல்லுங்க " என்றான் பணிவாக

அவனது பேச்சில் சற்று ஆடித்தான் போனாலும் " இல்லப்பா.. உங்க குடும்பம் எங்களுக்கு எவ்ளோ நல்லது செஞ்சிருக்கு.. அவுங்களுக்கு என்னால துரோகம் பண்ண முடியாது " என்றார்

சாதனா மாறி பொண்ணு கிடைக்க நாங்க கொடுத்து வெச்சிருக்கனும் .. நீங்க உங்க முடிவ மட்டும் சொல்லுங்க

உங்க குடும்பமும் சாதனாவும் சம்மதிச்சா இதுல எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல.. ஆனா என் பொண்ணப் பத்தி யாராச்சும் குறை சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்..

நான் பார்த்துக்கிறேன் ஆன்டி என்றவன் இது சாதனாக்காக நான் வாங்கிட்டு வந்தது அத்தை
என்று ரோஜாச் செண்டைக் கொடுத்தான்..

அவரும் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டார்..

எதையோ சாதித்த சந்தோசத்தில் பிரசாந்த் நடந்து போக யாரோ மீது இடித்து விட்டான்..

" சாரி சாரி " என்றுவாறு யாரென்று பார்க்கவும் அங்கே சந்துரு தான் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்..

என்ன மச்சான் பகல் கனவா.. அந்தக் கனவு பலிக்காது என்றான் ஏளனமாக

கனவை நினைவாக்கியே காட்டுவேன் சந்துரு உன்னோட சம்மதத்தோட.. என்று அவனை அர்த்தப் பார்வையோடு உறுதியாக கூறினான்..

உங்க ஆசைய நிறைவேத்திறனு ஒரு பொண்ணோட கனவ அழிச்சிறாதிங்க..

என் கனவே அந்தப் பொண்ணாயிருக்க அவளோட கனவும் என் கனவு தான் சந்துரு என்று புன்னகையுடன் அவன் கூற

அதில் எரிச்சல் அடைந்தவனாய்
அவ இப்பதான் நார்மலா இருக்கா.. மீண்டும் அவள மூலைல உக்கார வெச்சிராதிங்க என்று சொல்லும் போது வார்த்தையில் அதிகமான வெறுப்பு தெரிந்தது..

அவன் வார்த்தைகள் இவனைத் தாக்கினாலும் ,
என்னால ஏற்பட்ட இழப்ப நானே சரிசெய்யனும்னு நினைக்கிறேன் .. இதுல எந்தத் தப்பும் இல்லையே.. என்றான் விடாப்பிடியாக

அண்ணனும் தங்கைக்கும் எப்பவும் மூளையே இருக்காத என்று கோபமாக சந்துரு கூறவும்

காதலுக்கு மூளை தேவையில்லை .. அன்பு போதும் என்று கூறும்போதே வாசலில் அதிதியின் கார் வந்து நிற்க அவளை வரவேற்க சென்று விட்டான் பிரசாந்த்

சாதனாவிற்கு விபத்து நடந்ததிலிருந்தே பிரசாந்த் சந்துரு எதிரிகளைப் போல நடந்து கொண்டிருக்கிறார்கள்..
பிரசாந்தை சந்துருக்கு பிடிக்காது என்றில்லை.. இருப்பினும் சாதனாவிற்கு வரும் வாழ்க்கைத் துணை சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.. அவனது முன் கோபத்தால் சாதனாவினை வருத்த நேரிடுமோ எனப் பயந்தான்.. அதனாலே பிரசாந்தின் காதலின் ஆழத்தை உணரவே இவ்வாறு நடந்து கொள்கிறான்..

அதிதிக்கு அம்மா இல்லை.. அப்பா மட்டுமே.. பிசினஸில் அவர் பிசியாக இருக்க அதிதி அவருக்கு துணையாக இருந்து வந்தாள்.. நண்பர்களை பிரசாந்த் வீட்டிற்கு அழைத்து வந்ததில்லை.. அதிதியின் வரவு அனைவருக்கும் ஆச்சரியமே..அவளது வரவு சாரதா இல்லத்திற்கு நல்வரவாக இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தாலும் இறைவன் என்ன நினைக்கிறானோ !!!

A/N : sathanava kanlaye kamika maatingrenu yarum ennai thittathinga. 😕 😕.. Inivarum kalangalil avale athigama irupal.. Prasanth patriya avalin ennaththai patriyum avalin mana mozhiyagave ariyalaamm.. 😍😇

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz