மொழி 13
மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது சந்துரு எதேச்சையாக முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோவினை இடித்து விட்டான்..
அந்த ஆட்டோவில் உள்ளவர்கள் கோபத்துடன் இறங்கி வந்தார்கள்.. சாதனா அப்போது தான் அவர்களை கவனித்தாள்.. முன்பொரு நாள் சாதனாவின் துப்பட்டாவைப் பிடித்து இழுத்த கீழே விழ வைத்த அதே ரௌடிகள் என்பதை..
பயத்தில் சந்துருவின் தோளினை அழுந்தப் பற்றினாள்.. சந்துருவினை நோக்கி கோபமாக திட்டிக் கொண்டே வந்தவர்கள் பின்னால் சாதனாவைப் பார்த்ததும் நடுங்கிப் போனார்கள்..
அவர்கள் சாதனாவைப் பார்த்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்த சந்துரு " டேய் என்னங்கடா வேணும் உங்களுக்கு " என்று எகிறினான்..
அவர்களில் ஒருவன் " மேடம் சார்கிட்ட சொல்லிடாதிங்க.. தம்பி நீங்களும் தான்.. வண்டிக்கு எவ்ளோ பணம்னாலும் தந்திடரோம்பா.. ராகுல் தம்பிக்கு இதுல எந்த தொடர்பும் இல்ல" என்று கனிவாகப் பேசனான்.
" யாருய்யா நீங்க " - சந்துரு
தம்பி ப்ளீஸ்பா .. நாங்கப் போயிரோம் என்று பயந்து ஆட்டோவினில் ஏறி காற்றாகப் பறந்தனர்..
சரியான லூசுங்களா இருப்பாங்க போல என்று சொல்லிக் கொண்டே வண்டியை எடுத்தான் சந்துரு..
சாதனாவிற்கு இப்போதுதான் உண்மை புரிந்தது.. அன்று ராகுல் வந்து தன்னிடம் மன்னிப்புக் கேட்டது சந்துருவினால் அல்ல.. பிரசாந்தினால் என்று..
தன்னால் தானே தனது மொத்தக் குடும்பத்தையும் பிரிந்து கஷ்டப்படுகிறார்.. கடவுளே இந்தப் பிரச்சனையை சீக்கிரம் தீர்த்துவிடு..
என்று தனக்குள்ளே வேண்டிக்கொண்டாள்.. சாதனாவிற்கு பிரசாந்தின் மீது கோபம் இல்லை.. அதே சமயம் காதலும் இல்லை..
அமெரிக்காவாலிருந்த பிரசாந்திற்கு 24 மணி நேரமும் சாதனாவின் நினைவு தான்..
தன்னுடன் அவள் இருந்த நிமிடங்களை நினைவுமாலையாகக் கோர்த்து தனக்குள் பொக்கிஷமாக்கிக் கொண்டான்..
அந்த விபத்து நடைபெற்ற நாள் தான் தனது காதலை தெரிவிக்கலாம் என்று பகல் கனவு கண்டிருந்தான்.. ஆனால் விதி அவனுக்கு சதி செய்ததே..
என்ன ஆனாலும் சரியென்று இந்த முறை வீட்டிற்கு செல்லும்போது தனது திருமணத்தைப் பற்றி பேச வேண்டும் .இனியும் சாதனாவைப் பிரிந்து தன்னால் இருக்க முடியாது என்று தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தான்..
அவன் அவனது திருமணத்தைப் பற்றி நினைக்க, சாரதா இல்லத்தில் உள்ளவர்களோ அனுவின் திருமணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.. இன்னும் இரண்டு மாதத்தில் படிப்பு முடிவதால் மேற்கொண்டு என்ன செய்கிறாய் என்பதற்கு திருமணம் என்று ஒற்றை வரியில் பதிலளித்தாள் அனு..
அவள் பதில் அவளுக்குமே ஆச்சரியம் என்றாலும் சந்துருவிற்கு இதுவே முழு நிம்மதியைத் தரும் என்பதால் இந்த முடிவை எடுத்தாள்..
சந்துருவிடம் இது குறித்து பேசும் போது தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று கூறிவிட்டான்..இது அனுவிற்கு இன்னும் தெளிவைக் கொடுத்தது..
அனு தோட்டத்தில் அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்தாள். சாதனா அருகில் வந்து அமர்ந்தாள்..
சாதனா இந்தா நீயும் கட்டு .. நாளைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வராங்கள.. அதுக்குத்தான் .. என்று தன் வேலையைத் தொடர்ந்தாள்..
அவள் கைப்பற்றி "இதில் உனக்கு சம்மதமா " என்று சைகையில் கேட்டாள்..
அவளுக்கு ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு " சாதனா .. எனக்கு இதுல முழு சம்மதம்..யாரும் என்னைக் கட்டாயப்படுத்தல.. இனியும் நான் யாருக்கும் தொந்தரவா இருக்க விரும்பல. அன்னைக்கு ஆகாஷ் அந்த போட்டோவ காமிக்கும்போது நான் சந்தேகப்படல.. மாறா சந்தோசம் தான் பட்டேன்.. நீங்க ரெண்டு பேருமே நல்லவங்க.. விரும்புறதுல என்ன தப்புனு.. " சாதனா முறைக்கவும்
" ஆனா நான் அப்படி நினைச்சது தப்புதான்.. அந்த தப்புக்கான தண்டனையை அனுபவிக்கனும்ல.. அதுக்குதான் இந்த கல்யாணம்.. நான் எப்பவுமே நினைப்பேன்.. சந்துருக்கு நான் தகுதியானவளான்னு.. எனக்கு அந்த தகுதியில்ல சாதனா.. அவனப் புரிஞ்சிக்கிட்ட மாறி நல்லப் பொண்ணு அவனுக்கு கண்டிப்பா கிடைக்கும்..
அதில்லாம வீட்ல எல்லாரும் சோகமா இருக்காங்க.. என் கல்யாணத்துல இந்த சோகத்த மறந்துடுவாங்கல.." என்று சிரித்த முகத்துடன் கூறிவிட்டு
எழுந்து சென்றாள்..
அனுவிற்கு தன்னால் ஆறுதல் சொல்ல முடியாமல் போனதால் முதன்முறை தனக்கு குரல் இல்லையே என்று மிகவும் வருந்தினாள்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz