ZingTruyen.Xyz

காதலின் மொழி (முடிவுற்றது)

மொழி 12

Nivethamagathi

சிறு வயதுக் காயத்திற்கு இவ்வளவு பெரிய பழி உணர்வு எவ்விதம் தோன்றியது எனும் அளவிற்கு ஆகாஷின் செயல் இருந்தது.

6 மாதங்களுக்குப் பிறகு, சாரதா இல்லத்தில் இயல்பு வாழக்கை துவங்கியது.. ஆனால் முன்பு இருந்த உற்சாகம் இப்போது இல்லை.. பிரசாந்த் வழுக்கட்டாயமாகத் தன்னை வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபடுத்திக் கொண்டான்..

அந்த சம்பவத்திலிருந்து சந்துரு அனுவிடம் பேசுவதைத் தவிர்த்து விட்டான்.. முன்பு அனுவின் காதலை ஏற்க முடியாமல் போனதுக்கு அவன் கொண்ட காரணம் இப்போது தேவையில்லாமல் போனது. இருப்பினும் அன்று அனு தன்னை நம்பாமல் ஆகாஷை நம்பியது அவனால் இன்னும் தாங்கிக் கொள்ள முடியவில்லை ..
மன்னிக்க இது ஒன்றும் சிறிய குற்றமில்லையே.. இத்தனை நாள் இவர்கள் நட்பில் அனு கொண்ட நம்பிக்கை அவனை பிரமிக்கச் செய்திருக்கிறது.. ஆனால் அன்றோ தனக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய நேரத்தில் தவிக்க விட்டதை எண்ணி தனது காதலை விடவும் தயாரானான்..

நெற்றியில் சாதனாவிற்கு ஏற்பட்ட சிறுக்காயத்தினை எண்ணி பயந்து கோவிலில் விரதம் இருந்து வீட்டிற்கு திரும்பிய அன்றிலிருந்து தெய்வத்தின் மீது இருந்த நம்பிக்கையை இழந்தார் கமலா.

இவையனைத்துக்கும் காரணமான ஆகாஷோ சிறைச்சாலையில் குற்றவுணர்வில் செத்துக் கொண்டிருந்தான்.. தன்னை முழுதும் நம்பிய ஒரு அப்பாவி ஜீவனை தனது எதிரிக்காக பழி வாங்கியதை எண்ணி தினமும் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான்..
ஆனால் அவனுக்கு இந்த வேதனை மட்டும் போதுமா என்ன ?

இனி:

எப்பொழுதும் போல கல்லூரிக்கு விரைவாக கிளம்பி சாதனாவின் வீட்டிற்கு முன்பே கத்திக் கொண்டிருந்தான் சந்துரு..

" ஏய் என்னடி பண்ற.. இன்னைக்கு கான்பெரன்ஸ் இருக்கு வா " என்று கூறி பைக்கை முறுக்கிக் கொண்டே கத்தினான்..

முகத்தில் எப்போதும் இருக்கும் குட்டிப் புன்னகையுடன் கையில் சாப்பாட்டுத் தட்டுடன் வந்து சேர்ந்தாள் சாதனா ..
😇😇😇
" நீ சாப்பிட்டாயா " என்று கண்களாலே கேட்டவள், அவன் இல்லையென்று தலையாட்டவும் அவனுக்கும் இரண்டு வாய் சாப்பாட்டை உள்ளே திணித்தாள்..

சாப்பிட்டுவிட்டு சந்துருவின் பைக்கிலே ஒன்றாகவே கல்லூரிக்குச் சென்றனர்.. அன்றிலிருந்து சந்துரு யாரையும் நம்புவதில்லை.. சாதனாவைத் தனியாக விட்டால் அவளுக்கு எதாவது ஆகிடுமோ என்று பயந்து யார் தங்களை என்ன சொன்னாலும் பரவாயில்லையென்று,
எப்போதும் அவளுடனே இருப்பான்..
கமலாவும் அதற்கு உறுதுணையாக இருந்தார்..
அன்று மறுஜென்மம் எடுத்து வந்தது சாதனா மட்டுமல்ல கமலாவும் தானே..

கல்லூரியில் கருத்தரங்கம் துவங்கியது.. சந்துரு தன்னுடைய பிரசன்டேசனை முடித்துவிட்டு சாதனாவின் அருகில் அமர்ந்தான்..

சிறிது நேரத்தில் சாதனாவின் பெயரை அழைக்க, அப்போதும் சந்துருவே எழுந்து சென்று தொகுத்து வழங்கினான்.. சாதனா அவன் அருகே சிறு புன்னகையுடன் கணினியை இயக்கிக் கொண்டிருந்தாள்..

ஆம்.. சாதனாவினால் இனி பேச முடியாது.. கழுத்தில் பட்ட கத்தி அவளது குரல்வளையை முழுதும் காயப்படுத்திவிட்டது.
சாதனா 100% தனது பேசும் திறமையை இழந்து விட்டாள்..

தனக்கு இவ்வாறு நேர்ந்ததை எண்ணி வருத்தப்பட்டாலும் கமலாவிற்காக தன்னை சகஜமாகக் காட்டிக் கொண்டாள்..
ஆனால் சாரதா இல்லத்திலுள்ளவர்களோ தங்களது கண்முன்னே நடந்தும் அதைத் தடுக்கமுடியவில்லையே என்ற குற்றவுணர்வில் நொந்து போயினர்..

பிரசாந்த் மீது குற்றம் எதுவும் இதில் இல்லையென்றாலும் ஆகாஷின் செயலுக்கு நீதான் காரணம்.. முன்கூட்டியே நீ சாதனாவை விரும்புவதாகக் கூறியிருந்தால் அல்லது ஆகாஷின் தவறான மறைமுக நடவடிக்கைகளைப் பற்றிக் கூறியிருந்தால் சாதனா இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டாள் என்று ஒட்டுமொத்த பழியையும் அவன்மேலே தூக்கிப் போட்டனர்.

பிரசாந்தோ தனது காதலையும் இழந்தது மட்டுமில்லாமல் தனது குடும்பத்தையும் இழந்து தனித்து விடப்பட்டான்.. அந்த தனிமை ஒன்றும் அவனுக்கு புதிதில்லை.. ஆனால் இதை மற்றவர் அதும் உற்றவர்கள் கொடுக்கும் போது அதனைத் தாங்க முடியாமல் தவித்தான்.. அவனும் மனிதன் தானே..

எல்லாவற்றையும் விட சாதனா தனது கண்முன்னே பேச முடியாது , ஜாடையில் பேசுவதை பார்க்கும் போது தன்னால் தானே இவ்வாறு நடந்தது என்று எண்ணும் போது தற்கொலை கூட பரவாயில்லை என்று கூட நினைத்துவிட்டான்..

அவனது காதலைக் கூறி சம்மதம் வாங்கும் நிலையில் அவனும் இல்லை .. அதை அனுமதிக்கும் நிலையில் சாதனாவும் இல்லை

அவளை மேலும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகத் தான் இந்த வெளிநாட்டுப் பயணம் எல்லாம்..
ஆனால் அதுவே அவன் வாழ்வுக்கு வினையாகும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை..

அனுவோ தனக்குத் தானே தண்டனைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. சந்துருவே வந்து காதலை சொன்னாலும் இனி அதை ஏற்கக் கூடாது, அவனுக்கு தான் தகுதியற்றவள் என்பதில் உறுதியாக இருந்தாள்..
அதனால் தான் சந்துரு கல்லூரிக்குச் சென்ற பிறகே தனது அறையை விட்டு வெளியே வருவாள்.. அவன் வீட்டிற்குள் இருந்தால் தோட்டத்திற்குள் புகுந்து கொள்வாள்..

இவர்கள் அனைவரது பிரச்சனையையும் விரைவில் தீர்க்க டெல்லியிலிருந்து ஒரு ஜீவன் வந்து இறங்கியது..

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz