மொழி 14
அவள் ஒரு அழுத்தக்காரி , தன் காதலை அவள் எளிதில் ஏற்றுக் கொள்ளவும் மாட்டாள் என்று தெரிந்திருந்தாலும் காதலில் களம் காண மகிழ்ச்சியுடன் தாய் நாட்டிற்குத் திரும்பினான் பிரசாந்த்
வீட்டிற்கு செல்லும் வழியில் அவளுக்கு மிகவும் பிடித்த வெள்ளை ரோஜாக்களையும் வாங்கிச் சென்றான்.. வீட்டிற்குள் மகிழ்ச்சியுடன் சென்ற அவனுக்கோ அதிர்ச்சி..
அனுவைப் பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது.. தனது தங்கையின் திருமணத்தைப் பற்றிக் கூட தன்னிடம் யாரும் கூறவில்லை என்று கோபம் தலைக்கேற உள்ளே நுழைந்தான்..
அவன் அனைவரையும் முறைத்துப் பார்க்க, அவர்களோ அவனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. சந்துரு யாருடனோ போனில் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்தான்..
அவன் நேரிடையாக அனுவைப் பார்க்கச் சென்றான்.. அனு மகிழ்ச்சியாக தயாராகிக் கொண்டிருந்தாள்..
எல்லாரும் வெளிய போங்க.. நான் அனுக்கிட்ட பேசனும் என்று அவன் சொன்னவுடன்அனைவரும் வெளியேறினர்..
அனு அவனைப் பார்க்க முடியாமல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அனு.. இப்ப இங்க என்ன நடக்குது..
உனக்கென்ன பைத்தியமா.. வெளிய வா நான் எல்லார்கிட்டயும் பேசி புரிய வைக்கிறேன்..என்று அவள் கைப்பிடித்து இழுத்தான்..
அண்ணா புரியாம பேசாத.. இது தான் எல்லாத்துக்கும் நல்லது புரிதா.. மாப்பிள்ளைக் கூட எனக்கு ஓகே தான்.. என்றாள் சிரித்தபடி..
அவனுக்கு கோபத்தில் அவளை என்ன செய்வதென்றே தெரியவில்லை .. தனது தங்கையின் வாழ்வு திசைமாறிப் போவதை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தான்..
" அண்ணா உன் கோபம் எனக்கு புரியுது.. நாம நினைச்சது எல்லாமே நடக்கனும்னு எந்த அவசியமும் இல்ல.. "
முட்டாள் மாதிரி பேசாத .. இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு எல்லாம் சரியாகிடும்.. அதுக்குள்ள அவசரப்படாத..
.
.
.
அவன் எவ்வளவு சொல்லியும் இவள் மாறுவதாகத் தெரியவில்லை..
உடனே அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்..
" பிரசாந்த் என்ன இது.. ஏன் இப்படி நடந்துக்கிற " என்றார் விசு கோபமாக
" இங்க இருக்கிற எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. இந்த சம்பந்தம் எங்களுக்கு வேண்டாம் " என்றான்
அந்த இடத்தில் சற்று நேரம் சலசலப்பு தொடர அதைக் கலைத்தது விஷ்வாவின் குரல்..
" மச்சி இப்ப உங்களுக்கு என்ன பிராபளம்.. இவ்ளோ நேரம் நல்லாத்தானப் போயிட்டு இருந்துச்சு..திடீர்னு வந்து இப்படி சொன்னா என்ன அர்த்தம்.. நாங்களா இங்க வரல.. உங்க அப்பா சொல்லி தான் வந்தோம்... எனக்கு இந்தப் பொண்ணு தான் புடிச்சிருக்கு .. " என்றான் திமிராக..
" தம்பி இருப்பா.. நான் பேசறேன் " என்று கூறிய விசு " அனு இவங்கோட சேர்ந்து நீயும் என் குடும்ப மானத்த வாங்கறியா "என்றார்..
" அப்பா இவனப் பார்த்தாலே நல்லவன் மாறி தெரியல.. இவனயா நம்ம அனுவுக்கு கல்யாணம் பண்ணப் போறிங்க.. இவன் அனுவுக்கு வேணாம்பா.. அனு இந்த அண்ணன் உனக்கு நல்லதுதான் பண்ணுவனு நீ நம்புனா இதுல சம்மதம் இல்லைனு சொல்லு" என்று பிரசாந்த் கூற
தற்போது தந்தைபுறம் நிற்பதா.. இல்லை தனக்காக பரிந்து பேசும் அண்ணனின் புறம் நிற்பதா என புரியாமல் தவித்தாள்.. இப்போதாவது சந்துரு எதாவது சொல்ல மாட்டானா என்று அவனைப் பார்த்தாள்..
அவன் எந்தவொரு கலக்கமும் இல்லாமல் நின்றது அவளை இன்னும் காயப்படுத்தியது..
விஷ்வாவை ஒருதரம் பார்த்தாள்.. அவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்..
" அனு வாயத் தொறந்து எதாவது சொல்லுடி " என்று அதட்டினார் லட்சுமி..
"அவகிட்ட எதுக்கு ஆன்ட்டி கேக்கறீங்க.. அவ என் போட்டாே பார்த்து ஓகே சொல்லிதான நாங்க வந்தோம் " என்று விஷ்வா கூறுவதைக் கேட்டு அனுவிற்கு இன்னும் பயம் அதிகரித்தது.. மனதை கல்லாக்கிக் கொண்டு " எனக்கு இதுல சம்மதம் " என்றாள்..
பிரசாந்த் " அனு ப்ளீஸ்டா நான் இருக்கேன் " என்று கூறுவதற்குள் விசு அவனது கண்ணத்தில் ஓங்கியறைந்தார்..
பிரசாந்த் அப்படியே உறைந்து நிற்க " சம்பந்தி நீங்க வாங்க இனி ஆகவேண்டியத பார்க்கலாம் " என்று விஷ்வாவின் தந்தை கூறினார்.. விஷ்வாவோ அவனை ஏளனமாகப் பார்த்தான்..
அந்த நேரத்தில் தனது அலைபேசி அழைக்க அதை எடுத்துப் பார்த்தவன் கண்கள் அகல விரிந்தன.. அது சந்துருவின் நம்பர் தான்.. அவன் அதை அட்டன்ட் செய்தவுடன்
" கொஞ்ச நேரம் அமைதியா இருங்க மச்சான்.. போலிஸ் இப்ப வந்திடுவாங்க " என்று கூறினான்..
அவன் புரியாமல் விழிக்கவும் " இந்த விஸ்வா ஏற்கனவே திருமணம் ஆனவன் என்றும் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி ஒரு பெண்ணை துடிக்க துடிக்க கொன்றிருக்கிறான் என்றும் அவனை போலிஸ் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையையும் கூறினான்..
இதைக் கேட்டவுடன் அவனுக்கு கோபம் தலைக்கு ஏற தனது தந்தைக்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த விஷ்வாவினை பிடித்து இழுத்து அடிக்கத் தொடங்கினான்.. உடனே போலிஸ் வந்து அவன் செய்த குற்றங்களைக் கூறி அவனையும் அவன் பொய்யாக ஏற்பாடு செய்திருந்த குடும்பத்தையும் கைது செய்து இழுத்துச் சென்றனர்..
அவசரத்தில் தவறான ஒருவனை தேர்ந்தெடுத்ததை எண்ணி மொத்த குடும்பமும் தலை குனிந்தது.. பிரசாந்த் கோபத்தில் காரினை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற அடுத்த நொடி சந்துரு பேச ஆரம்பித்தான்.
" நீங்களா திருந்தவே மாட்டீங்களா.. உங்க கிட்ட தெரியாமத்தான் கேட்கிறேன்.. மச்சான் அப்படி என்ன தப்பு பண்ணாருன்னு அவர்கூட யாரும் பேச மாட்டிங்கறீங்க.. அன்னைக்கு நடந்தது ஒரு விபத்து.. அதுக்குப் போய்.... ச்சே " என்று கூறி தலையில் கை வைத்தவன் அனுவிடம் திரும்பி " உனக்கென்ன தியாகினு நினைப்போ.. அப்படியே அறைஞ்சனு வெச்சுக்கோ " என்று அவளை அடிக்க கையை ஓங்கினான்..
அவள் கண்ணிமைக்காமல் அவனையே பார்க்கவும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஓங்கி பளாரென்று ஒன்று வைத்தான்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz