மொழி 11
" என்னாச்சுப்பா " என்று விசு அவனிடம் வினவ " அப்பா இந்தக் கிராமத்துல யாரோ ஒருத்தன் வேணும்னே சந்துருக்கிட்ட ஆரஞ்சு ஜூசுன்னு எதையோ கொடுத்திருக்கான்.. அதை அந்த லூசும் வாங்கிக் குடிச்சிருச்சு..
அந்த லூசுக்கு நல்லா போதையேறுன அப்ரோம், நாம எல்லாரும் அனுவுக்கு இன்னொரு தருதலையோட நிச்சயம் பண்ணப்போறோம்னு நல்லா ஏத்திவிட்ருச்சு..
அவன் என்னமோ போதைல அனுக்கிட்ட வந்து ஏதாவது உலறி தகராறு பண்ணுவான்னு நினைச்சாங்க.. ஆனா இவன் பிரண்ட பார்த்த உடனே தன்னோட சோகத்தை இவகிட்ட கொட்டிட்டு மயங்கிட்டான்.. இந்த அம்மா மயக்கமடைய காரணம் ஆனவன் எவனோ அவங்கிட்டயே போனப் பண்ணி கூப்டிருக்கு.. இந்த மயக்கத்த நல்லா யூஷ் பண்ணி அவன் நினைச்சத அடைய, தங்கை மாறி பாசமா பார்த்திக்கிட்டு இருக்கிற பொண்ணோட பேரு கெட்டாலும் பரவாலைனு கேவலமான ஒரு பொய்ய அளந்து விட்ருக்கான்..
இன்னொரு பொம்பளப் பொறுக்கி, மயக்கம்போடும் போது கரெக்டா பார்த்து போட்டா எடுத்துருக்கான்..அதை இந்த வீணாப் போனவன்கூட டீலிங் பேசிருக்கான்.. ரெண்டு கூட்டுக் களவாணிங்களும் சேர்ந்து என்ன சொன்னாலும் இந்த முட்டாள் குடும்பம் நம்பும்னு நினைச்சிட்டாங்க.. என்று கூறி ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு
" இது பொய்னு சொல்றவங்க யாருன்னு சொல்லுங்க.. அவுங்களுக்கு மட்டும் தனியா ஆதாரத்தைக் காட்றேன் " என்று புன்னகையுடன் கூறினான்..
அனைவரும் அமைதியாக இருக்க " நான் ஏன் கேட்டனா.. நம்ப பசங்க மேல நமக்கு எவ்ளோ நம்பிக்கை இருக்குனு அவுங்களும் தெரிஞ்சிக்கனும்ல " என்று சாதனாவையும் சந்துருவையும் பார்த்துக் கொண்டே கூறினான்..
அவர்களுக்கும் இப்போது தான் உயிரே வந்தது..
ஆகாஷ் " என்ன பிரசாந்த் இதெலாம் நம்பற மாறியா இருக்கு... " என்றான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல..
அவனைப் பார்த்து ஒரு ஏளனப் புன்னகையை வீசிவிட்டு " ஆகாஷ் உனக்கு பக்கத்து ஊர் கஞ்சா சேகர தெரியுமா.. அவன் வீட்டுக்குத் தான் இப்ப போயிட்டு வரேன்.. நீ அவன் வீட்டுல உன் பர்ஸ விட்டுட்டு வந்திட்டியாமா.. உங்கிட்ட கொடுக்கச்சொன்னான்..
அதுல அவனுக்கு சேர வேண்டிய 10000 எடுத்துட்டானாம்.. இந்தா " என்று நீட்டினான்..
ஆகாஷிற்கு வேர்த்துக் கொட்டியது..
அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல கையோடு அவனை அழைத்தும் வந்தான்..
அடுத்து சாதனாவின் மொபைலை வாங்கி அதில் 5.15க்கு ஆகாஸிடம் 2 நிமிடம் போன் பேசியதை எடுத்துக் காண்பித்தான்..
சாதனா இது தனக்கு தோன்றாததை எண்ணி தலையைத் தட்டிக் கொண்டாள்..
" இதுவே போதும்னு நினைக்கிறேன்.இப்படி இத்தனை நாளா நடிச்சு வாங்கி வெச்சிருந்த பேரை அநியாயமா கெடுத்திட்டியே .. இப்ப சொல்லு ஆகாஸ் ஜெயிலுக்குப் போலாமா " என்க
" என் பையன் நல்லவன் " என்று கல்யாணி பேசத் தொடங்கும் முன் வேதவள்ளியார் ஓங்கி அறைந்தார்..
ஆகாஷ் அவமானத்தில் கூனிக்குறுகிப் போனான்..
" இதெல்லாம் பொய்னு எங்களுக்கு எப்பவோ தெரியும்.. என் பையன பத்தி எனக்குத தெரியாதா.. நீ எவ்ளோ தூரம்தான் போவன்னு தான் பார்த்தோம் " என்று மல்லிகா சிரித்துக் கொண்டே கூறினார்
சாதனா ஆகாஷின் அருகே வந்து ஓங்கி அறைந்தாள்.. " உங்களை எவ்ளோ உயர்வா நினைச்சேன் தெரியுமா.. ஏன் இப்படி பண்ணீங்க... அனுவுக்காக இப்படி என் வாழ்க்கைய அழிக்க நினைச்சிட்டிங்களே " என்று அவன் சட்டைக் காலரைப் பிடித்து உலுக்கினாள்..
அவள் கதறலில் மனம் உருகினாலும்
ஏளனச் சிரிப்பை உதிர்த்து
" நான் அனுவ அடையனும்னு பண்ணனு நினைச்சியா.. இல்லவே இல்ல.. இதோ இங்க நிக்கிறானே இவன பழி வாங்கத்தான் அப்படி பண்ணேன் " எனக் கூறும் போது மொத்தக் குடும்பத்தோடு பிரசாந்த்தும் அதிர்ச்சியானான்..
ஏனெனில் அவன் கைக்காட்டியது அவனைத்தான்..
சாதனா புரியாமல் பார்க்க " இதோ இவன் தான் என்னோட எதிரி .. அவனுக்குப் பிடிச்ச எதையும் அவன் அடையக் கூடாதுனு நினைச்சேன்.. அவன் உன்னைப் பார்க்கிற பார்வையிலேப் புரிஞ்சிட்டேன் உன்னை அவன் விரும்புறானு.. அதான் உன்னை அசிங்கப் படு்த்தனும்னு இப்படி பண்ணேன்.ஆனா அது நடக்கல.. அவன வாழ்நாள் முழுவதும் துடிதுடிக்க வைக்கபோறேன்." என்று கூறி அனைவரையும் ஆச்சர்ய படுத்தியது மட்டுமில்லாமல் சாதனாவின் கழுத்தில் கத்தியை வைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தை அறுத்துவிட்டான்..
Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz