ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

8.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

கண்ணாடித் தடுப்பு வழியே
பாஹேஷ்வரிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த அறையின் நிலைமையும் ரஞ்சித்தின் தலைக்கட்டை பார்த்ததுமே அவர்களுக்கு தற்போதைய நிலையை எடுத்துரைத்தது.. தாங்கள் உயிருடன் இருந்தும் தன் தாயினை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டேன் என்று உதயனும் வளர்ப்பு மகன் விசாகனும் தங்களையே நொந்து கொண்டனர்.

வாசு தன் மனைவியின் நிலையைக் கண்டு அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.உங்களை நினைத்தே அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என்றே விசாகன் அவரிடம் கூறியிருந்தான்.

அவர்களைக் கண்ட இரஞ்சித் கதவை திறந்து வெளியே வந்து மீண்டும் அந்தக் கதவை பூட்டிவிட்டு
" விசாகா.. நல்ல வேளை அவர கூட்டிட்டு வந்த.. அவுங்க டிரீட்மென்ட்க்கு ஒத்துழைப்பே தர மாட்டீங்கறாங்க.. மயக்க ஊசி போடக்கூட பக்கத்துல விட மாட்டீங்கறாங்க.. சார்.. அவுங்க கிட்ட நீங்க ஏதாச்சும் பேச்சு கொடுங்க.. அவுங்கள பேச வைங்க சார்.. அப்பதான் அவுங்க கோபம் கொறஞ்சு நார்மல் ஆவாங்க "

விசாகன் " ப்ளீஸ் அத்தைக்கிட்ட பேசுங்க.. உங்க கோபம் பிடிவாதத்த விட்டுக் கொடுத்து இந்த ஒரு உதவிய பண்ணுங்க. என்னால அவுங்கள அப்டி பார்க்க முடியல "
எனக் கெஞ்ச, அவனருகில் உதயனும் பார்வையால் அதைத்தான் வேண்டிக் கொண்டிருந்தான். ஆனால் அவரோ வாயைத் திறக்கமால் விசாகனையும் கதவு வழியே  பாஹீயையும்தான் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார்.

" வாசு சார் ப்ளீஸ் பேசுங்க.உங்க குரல்ல கேட்டா அவுங்க எப்படி ரியாக்ட் பண்றாங்கனு வெச்சுத்தான் எந்தமாதிரி டீரிட்மென்ட் பண்ணனும்னு டிசைட் பண்ண முடியும் "

" நான் அவுங்கிட்ட பேசறேன் .. ஆனா"

" ஆனா என்னனு சொல்லுங்க "

" நீயும் உதயனும் கொஞ்சம் வெளிய போங்க"

" இல்ல.. எங்கம்மாவ உங்களை நம்பி தனியா விடமாட்டேன்"

" அப்போ என்னால பேச முடியாது "

" அப்போ இந்த நிலைல கூட உங்களோட பிடிவாதம் தான் முக்கியமா.. என் அம்மா உங்களைப் போயி காதலிச்சு கல்யாணம் பண்ணாங்கனு நினைச்சா அசிங்கமா இருக்கு "

" உதயா.. நீ பொறுமையா இரு..நான் பேசறேன்.இவ்வளவு தூரம் வந்தும் ஏன் அடம்பிடிக்கிறீங்க.. "

" நான் தான் நீங்க வெளியே போனா பேசறேன்னு சொல்றேனே.. அப்போ யார் பிடிவாதம் பிடிக்கிறாங்க "

" விசாகா.. எனக்கு இவர் பேச பேச கொலைவெறியே வருது.. டாக்டர் எங்கம்மாவ குணப்படுத்த வேற வழியே இல்லையா "

" உதயன் உங்க நிலை புரியுது..அவுங்கள மாத்திரை மருந்தால குணப்படுத்த முடியாது. இது மனசு சம்மந்தப்பட்ட வியாதி.. நீங்க தாமதிக்கற ஒவ்வொரு நொடியும்  சைக்கோ ஸ்டேஜ்க்கு அவுங்கள சீக்கிரமா கொண்டு போகும்.. உங்கப்பா..சாரி.. வாசு சார் சொல்றத கேட்கறதுதான் புத்திசாலித்தனம் "

விசாகனுக்கு கூட அவரைத் தனியாக விடுவதற்கு மனமில்லை.. வாசுவிற்கு  மட்டும் தன் மனைவி சிரமப்படுவதைப் பார்க்க ஆசையா என்ன . அவரை இந்த நிலையில் காண முடியாது தானே ஊரை விட்டுச் சென்றான்.
வாசு தன் கர்ஜனைக் குரலில் " விச்சு.. தயாவ கூட்டிட்டு ஹாஸ்பிடல்ல விட்டு வெளிய போ " என ஆணையிட விசாகனுக்கு அந்த விச்சு என்ற அழைப்பில் மனதுக்குள் என்னவென்று தொியாத உணர்வு ஆட்கொண்டது..

" நான் வெளிய போங்கனு சொன்னேன் " எனக் கத்த விசாகன் அவரைத் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே உதயனை வம்படியாக இழுத்துச் சென்றான்.

அவர்கள் இருவரும் சென்றதும் பாஹீயின் அறைக்குள் சென்றார்.
சன்னலினை வெறித்துப் பார்த்தவாரே நடு அறையில் நின்று கொண்டிருந்தார் பாஹீ..

" பாஹீ.. இங்கப்பாரு.. நான் யாருன்னு உனக்குத் தெரியுதா.. உன் வாசு வந்துட்டேன் பாரு " எனக் கைநீட்டி அழைக்க,

இதுவரை யார் பேசுவதும் காதில் விழாது சித்தபிரம்மை பிடித்ததுபோல நின்றிருந்தவர் வாசுவின் குரலில் சுயநினைவு அடைந்து வாசுவை ஏறிட்டார்.

உன் வாசு வந்துருக்கேன் பாஹீ என்று அவர் கூறி முடிக்குமுன்னரே தன் கையில் வைத்திருந்த கத்தரிக்கோலால் அவர் நெஞ்சைக் குத்த கையை ஓங்கியவாரே " நீ வாசு இல்ல.. ராஜியோட காதலன் தேவா.. என் வாசு இல்ல " எனக் கத்தி வாசுவைத் தாக்க முயற்சிக்க,அதனை தடுக்கும் திராணியற்று வாசு பார்த்துக் கொண்டிருக்க ரஞ்சித் அவரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோற்றுப்போக, நெஞ்சில் பட வேண்டிய கத்திரிக்கோல் தோள்பட்டையில் இறங்கியது..

மனத்தின் வலியை விட காயத்தின் வலி பெரிதாகத் தெரியவில்லை..
அவரது வெள்ளைச் சட்டை அவரது இரத்தத்தால் சிவப்பாக மாற ஆரம்பித்தது.

மறுபடியும் குத்த வந்த கையை தற்போது தாங்கிப் பிடித்தவர்
" பாஹீ.. நான் தான் வந்துட்டேன்னு சொல்றேன்.. நம்ப மாட்டியா "

" கையவிடு..நீ அந்த தேவா..ராஜியோட காதலன் "

" இல்ல.. நான் வாசு.. உன்னைக் காதலிச்சு கல்யாணம் பண்ண வாசு.. உம்புருசன்.. உங்கருப்புச் சட்டைக்காரன்.. வாசு.. கண்ணை நல்லா தொறந்து பாரு.. " என்றதும் ஈஸ்வரியின் முகத்தில் மின்னல் கீற்றென சின்ன புன்னகை வந்துபோனது.

" சார் இதே மாதிரி பேசுங்க " என ரஞ்சித் சைகை செய்துவிட்டு மயக்க ஊசியை தயார் செய்யத் துவங்கினான்.

" நீ.. நிஜமாவே வாசு தானா."

" ஆமாமா "

" அப்போ ராஜீயோட காத" அவர் வாயை மூடி " ஷூ.. நான் பாஹீயோட புருசன் மட்டுந்தான் " என்றார் காதலோடு..

" அப்போ அந்த ராஜியோட பொண்ண கொன்னுட்டீயா " என்று அவர் ஆவலாக கேட்டதும் இரஞ்சித்திற்குமே அவர் கேள்வி பீதியைக் கிளப்பியது.

தனக்குள் எழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்தி " இனி ராஜி பொண்ணோட எனக்கு எந்த சம்மந்தமும் இல்லமா... நாம மட்டும்தான் போதுமா" என்றதும் அவர் முகத்தில் அப்படி ஒரு நிம்மதியான சந்தோசம்..

" நீ நான் சொன்னத கேட்க இத்தனை வருசம் ஆச்சு.. ஆனா நீ சொன்ன ஒரு காரணத்துக்காக விச்சுவ ஒன்னுமே பண்ணாம வெச்சிருக்கேன் பார்த்தியா ..
இனிமே  உன்  விச்சுவுக்கும் என்னால எந்த ஆபத்தும் வராது.. அவன இனி எதும் பண்ண மாட்டேன் " என்று சத்தமாக கூறி சிரித்தவரின் சிரிப்பில் அப்படியொரு ஆங்காரம்.. இதனைக் கேட்டதும் இரஞ்சித் கையிலிருந்த ஊசியைக் கூட கீழே போட்டுவிட்டான். விசாகன் அவனது உயிர் நண்பனல்லவா.. அதிர்ச்சியாக வாசுவைப் பார்க்க, அவர் கண்களில் வெளியே சொல்ல முடியா துயரத்தோடு பாஹீயைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சத்தமாக சிரித்த பாஹீ சற்று நிதானத்திற்கு வந்து

" இல்ல நீ பொய் சொல்ற.. நீ அந்த ராஜியோட பொண்ண கொன்னுருக்க மாட்ட. ஏன்னா நீ அந்த ராஜியோட காதலன் தேவா.. அவளோட பொண்ண கொல்ல உனக்கு எப்படி மனசு வரும்.. நீ வாசு இல்ல " என அவர் கையை தட்டிவிட்டு மறுபடியும் காயப்பட்ட இடத்திலே இந்த முறை கத்திரியை அழுத்தமாக செறுகினார். அந்த சமயத்தைப பயன்படுத்தி இரஞ்சித் அவருக்கு மயக்க ஊசியை செலுத்திவிட்டான்.  மருந்தின் வீரியத்தில் அவர் மயங்கிவிட, அவரை கட்டலில் படுக்க வைத்துவிட்டு மறக்காமல் அவரது கைகளை கட்டலில் பொறுத்தியிருக்கும் கை விலங்கில் பூட்டிவிட்டான்.

செவிலியரை உடனடியாக அழைத்து வாசுவிற்கு முதலுதவி செய்ய உத்தரவிட்டு பின்பு, வாசுவை கேள்வியாக நோக்க,
" இங்க நடந்தது வெளிய தெரிஞ்சா நான் இத்தனை வருசம் ஓடி ஒளிஞ்சதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும் டாக்டர் சார்.. இந்த விசயம் "

" கண்டிப்பா விசாகனுக்கு சொல்ல மாட்டேன் சார்.. அவனுக்கு அவன் அத்தைய எந்தளவுக்கு பிடிக்கும்னு எனக்கும் தெரியும்.. இந்த உண்மைய அவனால தாங்க முடியாது.. நீங்க கவலைப்படாதீங்க.. அவுங்க மனசில இருக்கிறது இப்பத்தாான் வெளிய வர ஆரம்பிச்சிருக்கு.. அவுங்க சீக்கிரம் குணமாகிடுவாங்க.. சார்"

" ரொம்ப நன்றி டாக்டர் சார்"

" நன்றி நான் தான் சார் சொல்னும்.. விசாகனுக்காக எவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்துருக்கீங்க.. ஆனா சார் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கென்னமோ இவுங்க பழைய நிலைக்கு திரும்பாம இருக்கிறதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன் "

அவர் சொன்னதும் உண்மைதான்.. பாஹீ குணமானாலும் அவளுக்கு நல்ல எண்ணம் வரவேண்டுமே.. இன்னும் அவள் நடவாததை நடந்தது போல எண்ணிக் கொண்டு பைத்தியம் போல நடந்து கொண்டால் ஆபத்து அனைவருக்கும்தான்.. விரைவில் தனது வாழ்வில் உள்ள பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் முதலில் தன் நண்பனின் சாவில் உள்ள அவிழ்க்க முடியா மர்மத்தை கண்டறிய வேண்டும் என நினைத்துக் கொண்டார்.
அவருக்குத் தெரியவில்லை அதற்கான பதில் தனக்கு மிகவும் வேண்டியப்பட்டவர்களிடம் இருந்து எளிதில் கிடைத்துவிடும் என்று..

அங்கே மருத்துவமனைக்கு வெளியே உள்ள பூங்காவில் உதயன் விசாகனைத் திட்டிக் கொண்டிருந்தான்.

"நீ அவர பார்த்ததுல இருந்து நல்லா மாறிட்ட விசாகா.. எங்கோட சண்டை போடறப்ப கூட எனக்கு பெருசா தெரில..ஆனா அவர் என்ன சொன்னாலும் பூம் பூம்மாடு மாதிரி தலையாட்டிறீயே நீ என் நண்பன் தானானு சந்தேகமாக இருக்கு.. நீதானடா அவரப் பத்தி தப்பா சொன்ன..இப்போ நீயே இப்படி நடந்துக்கற.. அவர நம்பி அம்மாவ விட்டுட்டு வந்துருக்கியே"

" உதயா.. நீ சொல்றதும் உண்மைதான்.. ஆனா அதெல்லாம் அவர நேர்ல பாக்குற வரைதான்..
உனக்கு அவரப் பார்த்தா எதும் ஞாபகம் வரலியா..எனக்கு அவர பாக்கும்போது ஏதோ சின்ன வயசுல நடந்த நினைவுகள்ளாம் ஒன்னுவொன்னா ஞாபகம் வருதுடா. "

" என்னடா உளருற"

" ஆமாடா.. அவர் என்னை விச்சுன்னு கூப்டது.. அவரோட ஆழ்மனசுல  இருந்து கூப்டாருடா.. இதோ பாரு..அவர நினைக்கும்போது எப்படி உடம்பு சிலிர்க்குது"

" எனக்கும்  அந்தமாதிரி தான் தோனுது..அதும் ரோகிணி அவரோட பொண்ணுனு இல்லைன்னு தெரிஞ்சபிறகு அவர்மேல இருக்குற கோபம்கூட குறைஞ்சிருச்சுதான். ஆனா அம்மாவ தனியா விட்டுட்டு ஓடிப் போனத நினைக்கும்போது என்னால அவர வெறுக்காம இருக்க முடியலடா.."

அப்போது விசாகனுக்கு ஒரு விசயம் தோன்றியது
" டேய் நீ அத்தை சொன்னத கவனிச்யா.. ராஜியோட காதலன் தேவான்னு மட்டுந்தான் சொல்றாங்க..எந்த இடத்தலயும் கணவர்னு சொல்லல..அதேமாதிரி அவுரு அத்தைய ஏமாத்திட்டாங்கனோ..இல்ல ஏன் ரோகிணிய அவர் பொண்ணுனோ சொல்லல.. ஏன்னா அவுங்களுக்கு ரோகிணி அவரோட பொண்ணு இல்லனு முன்னையே தெரிஞ்சிருக்கும்."

" நீ சொல்றதும் சரிதான்.
.அப்படினா ஒருவேளை அவர் ராஜி சித்தி இறந்ததுக்கு பிறகு ரோகிணிய வளர்த்தற பொறுப்பை ஏத்திருப்பாரோ.அதனால தான் தனியா போயிருப்பாரா கூட இருக்கலாம்.. அய்யோ தலைய பிச்சிக்கற மாறி இருக்கு."

" அவரே  உண்மைய சொல்றேன்னு வந்தாரு.. நாமதான் சண்டை போட்டு அதையும் கேட்காம விட்டுட்டோம்"

" ஏன்டா.. இத்தனை வருசமா சொல்லாத உண்மைய இப்ப கேட்ட உடனேவா சொல்லி இருப்பாரு..இப்பவும் ஏதோ பொய்யதான் சொல்வாரு..அதான் சொல்ல வேணாணு சொல்லீட்டேன்"

அவர்கள் அங்கு பேசிக் கொண்டிருக்க, அவர்களை நோக்கி வந்தார் வாசுதேவன்.
ரஞ்சித் வாங்கித் தந்த முழுக்கை கருப்புநிற சட்டையால் அவர் கைக்காயம் மறைக்கப்பட்டிருந்தது..

விசாகன் அவரை பார்த்தபோதெல்லாம் வெள்ளைச்சட்டை மட்டுமே அணிந்திருக்க, இந்தக் கருப்புச் சட்டை அவன் கண்ணை உறுத்தியது..

இந்தமுறை கனிவோடு விச்சு என்று அவர் அழைக்கவும் அவனுக்குள் மீண்டும் பல ஞாபகங்கள்.. ஓடிச் சென்று அவரை அணைத்தவன் " சூப்பர்மேன் " என மெல்ல முணுமுணுத்தான்.
தனக்குள் இருக்கின்ற தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் காரணமானவன் விச்சுவின் இந்த சூப்பர்மேன்.இப்போதும் இரவில் வாசு பரிசளித்த சூப்பர்மேன் பொம்மை அவன் தலையணைக்கடியில் இருக்கும். அவனது சூப்பர்மேன் தனது பெற்றோரோடு கார் விபத்தில் இறந்துவிட்டார் என நினைத்து நினைத்து அழுத இரவுகள் ஆயிரம்.

தனது அத்தையின் கணவன் தான் சூப்பர்மேன் என்று நினைவு வைத்தவனுக்கு அவரைக் கண்டதும் ஏன் நினைவு வரவில்லை.. ஆறு வயதில்  ஜன்னி வந்ததில் மறைந்து போன ஞாபகங்கள் இவரைப் பார்த்ததும் வந்ததின் காரணம் என்ன..அப்படியானால்  அவனுக்கு ஜன்னி வரும் அளவிற்கு வரவைத்த நபர் பற்றியும் தெரிந்துவிட்டால் அவன் தாங்குவானா..

உதயன் அவர்களை புரியாமல் பார்த்திருக்க, விசாகன் " என்மேல சத்தியம் என்ன நடந்ததுன்னு உண்மைய சொல்லு.. நீ தான் என்னோட சூப்பர்மேன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு. ஆனா அப்போ நடந்த சண்டைய பத்தி எனக்குப் புரிஞ்சிக்ற அளவுக்கு எனக்கு வயசில்ல.. என்ன நடந்திச்சுன்னு சொல்லு.. "

" சொல்றேன் ..ஆனா சொல்ற உண்மைகள தாங்கிக்கிற அளவுக்கு உங்க மனச தேர்த்திக்கோங்க.உங்களுக்கும் உண்மைய தெரிஞ்சிக்ற வயசு வந்திடுச்சு." என்றவர் தனது கடந்தகாலத்தை எடுத்துரைக்க ஆரம்பித்தார்.

இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு.........

                                        தொடரும்..

என்னடா பிளாஸ்பேக்க  சொல்ல இந்த இழுஇழுக்றனு நினைக்க வேணாம்.. அடுத்த பதிவில் கண்டிப்பா சொல்லிடறேன்.

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz